03-14-2005, 07:57 AM
<b>ஈழத் தாலாட்டு!</b>
தென்னிலங்கைச் சீமையிலே
செந்தமிழன் காணியிலே
என்னுயிரே! இன்னமுதே!
ஏனழுதாய், கண்ணே!...
பாடுகடல் சூழ்ந்திருக்க,
பட்டுமணல் பாய்விரிக்க,
ஏடுகொள்ளும் என்தமிழே!
ஏனழுதாய், கண்ணே!...
ஏழுகடல் வென்றெடுத்த
எங்கள்தமிழ் மாமணியே!
யாழ்உறங்கும் பூமியிலே
யாரடித்தார், கண்ணே!...
தேன் ஈயும் தேனீயும்
தேனடையில் தூங்கையிலே
யானீன்ற யாழிசையே,
யாரடித்தார், கண்ணே!...
செந்தமிழார் சிந்தைதனைச்
செப்பனிடும் சேய்வடிவே!
அந்தமிலாப் பொன்னழகே!
ஆரிரரோ, கண்ணே!...
தௌ;ளுதமிழ்ச் சித்திரமே!
தேன்மழலைப் பாசுரமே!
அள்ளியுனை நானணைத்தேன்:
ஆரிரரோ, கண்ணே!...
வாரியுனைக் கையணைக்க,
வண்ணமுலை பால்கொடுக்க,
காரிருளும் கண்விழிக்க,
கண்ணுறங்கு, கண்ணே!...
உச்சிமுதல் பாதம்வரை
உன்னழகோ தீர்த்தக் கரை!
கச்சிதமாய் என்மடியில்
கண்ணுறங்கு, கண்ணே!...
தூயகுலம் பெற்றெடுத்த
தும்பையிதழ்ப் பூவனமே!
நீயழுதால் யார்துயில்வார்?
நித்திரை கொள், கண்ணே!...
நாளையொரு வேளைவரும்:
நல்லதமிழ்க் காவலரும்
ஆளவரும் காலம்வரும்:
ஆறுதல் கொள், கண்ணே!...
சிற்றினத்தார் வஞ்சகமும்
சிங்களத்தார் நாடகமும்
சற்றொருநாள் சாகசம்தான்:
சஞ்சலம் ஏன், கண்ணே?...
காலமெல்லாம் காத்துவந்த
கன்னித் தமிழ்க் கோயிலுக்குள்
காலனைப் போல் கள்வன் வந்தான்:
காரணம் ஏன், கண்ணே?...
எங்கிருந்தோ வந்தவரும்
இங்கிருக்கும் வஞ்சகரும்
தந்திருக்கும் வெங்கொடுமை
தாங்குவதோ, கண்ணே?...
செங்குருதி நெய்சொரிந்து
செய்வதொரு வேள்விதனைக்
கண்களில்யாம் ஏந்திநின்றோம்:
கண்ணுறங்கு, கண்ணே!...
ஈட்டிமுனைக் கூர்மைதனை
ஈட்டிவரும் நம்மவரைக்
காட்டினும்ஓர் சேனையில்லை:
காண்கிலையோ, கண்ணே?...
ஞாலமெங்கும் வீரத்திலே
நம்மவர்போல் யாருமில்லை!
சீலமிகு செய்தி இது:
கேட்டிலையோ, கண்ணே?...
கூர்த்தமதி போர்த்தி நிற்கும்
கொள்ளையெழில் யாழ்மறவன்
பார்த்திடுவான் (இ)ரண்டில் ஒன்று:
பள்ளி கொள்வாய், கண்ணே!...
தம்பியர்தம் தானைகளும்
தானைகளின் தளபதியும்
தம் பணிகள் தான்முடிப்பார்..
தாலேலோ, கண்ணே!...
வீரர்குலம் தோற்பதில்லை!
வெற்றியொன்றும் தூரமில்லை!
நேரம் வரும்: நிச்சயமே!
நீயுறங்கு, கண்ணே!...
ஈழமெனும் செம்பரிதி
எம்மவர்க்கே - இது உறுதி!
காலமகள் கண்திறப்பாள்:
கண்ணுறங்கு, கண்ணே!...
¦¾¡.ݨºÁ¢ì§¸ø (tsmina2000@yahoo.com)
தென்னிலங்கைச் சீமையிலே
செந்தமிழன் காணியிலே
என்னுயிரே! இன்னமுதே!
ஏனழுதாய், கண்ணே!...
பாடுகடல் சூழ்ந்திருக்க,
பட்டுமணல் பாய்விரிக்க,
ஏடுகொள்ளும் என்தமிழே!
ஏனழுதாய், கண்ணே!...
ஏழுகடல் வென்றெடுத்த
எங்கள்தமிழ் மாமணியே!
யாழ்உறங்கும் பூமியிலே
யாரடித்தார், கண்ணே!...
தேன் ஈயும் தேனீயும்
தேனடையில் தூங்கையிலே
யானீன்ற யாழிசையே,
யாரடித்தார், கண்ணே!...
செந்தமிழார் சிந்தைதனைச்
செப்பனிடும் சேய்வடிவே!
அந்தமிலாப் பொன்னழகே!
ஆரிரரோ, கண்ணே!...
தௌ;ளுதமிழ்ச் சித்திரமே!
தேன்மழலைப் பாசுரமே!
அள்ளியுனை நானணைத்தேன்:
ஆரிரரோ, கண்ணே!...
வாரியுனைக் கையணைக்க,
வண்ணமுலை பால்கொடுக்க,
காரிருளும் கண்விழிக்க,
கண்ணுறங்கு, கண்ணே!...
உச்சிமுதல் பாதம்வரை
உன்னழகோ தீர்த்தக் கரை!
கச்சிதமாய் என்மடியில்
கண்ணுறங்கு, கண்ணே!...
தூயகுலம் பெற்றெடுத்த
தும்பையிதழ்ப் பூவனமே!
நீயழுதால் யார்துயில்வார்?
நித்திரை கொள், கண்ணே!...
நாளையொரு வேளைவரும்:
நல்லதமிழ்க் காவலரும்
ஆளவரும் காலம்வரும்:
ஆறுதல் கொள், கண்ணே!...
சிற்றினத்தார் வஞ்சகமும்
சிங்களத்தார் நாடகமும்
சற்றொருநாள் சாகசம்தான்:
சஞ்சலம் ஏன், கண்ணே?...
காலமெல்லாம் காத்துவந்த
கன்னித் தமிழ்க் கோயிலுக்குள்
காலனைப் போல் கள்வன் வந்தான்:
காரணம் ஏன், கண்ணே?...
எங்கிருந்தோ வந்தவரும்
இங்கிருக்கும் வஞ்சகரும்
தந்திருக்கும் வெங்கொடுமை
தாங்குவதோ, கண்ணே?...
செங்குருதி நெய்சொரிந்து
செய்வதொரு வேள்விதனைக்
கண்களில்யாம் ஏந்திநின்றோம்:
கண்ணுறங்கு, கண்ணே!...
ஈட்டிமுனைக் கூர்மைதனை
ஈட்டிவரும் நம்மவரைக்
காட்டினும்ஓர் சேனையில்லை:
காண்கிலையோ, கண்ணே?...
ஞாலமெங்கும் வீரத்திலே
நம்மவர்போல் யாருமில்லை!
சீலமிகு செய்தி இது:
கேட்டிலையோ, கண்ணே?...
கூர்த்தமதி போர்த்தி நிற்கும்
கொள்ளையெழில் யாழ்மறவன்
பார்த்திடுவான் (இ)ரண்டில் ஒன்று:
பள்ளி கொள்வாய், கண்ணே!...
தம்பியர்தம் தானைகளும்
தானைகளின் தளபதியும்
தம் பணிகள் தான்முடிப்பார்..
தாலேலோ, கண்ணே!...
வீரர்குலம் தோற்பதில்லை!
வெற்றியொன்றும் தூரமில்லை!
நேரம் வரும்: நிச்சயமே!
நீயுறங்கு, கண்ணே!...
ஈழமெனும் செம்பரிதி
எம்மவர்க்கே - இது உறுதி!
காலமகள் கண்திறப்பாள்:
கண்ணுறங்கு, கண்ணே!...
¦¾¡.ݨºÁ¢ì§¸ø (tsmina2000@yahoo.com)


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->