Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
போராளிகள் படைப்பு
அனலின் தகிப்பு
கடுங்கோடை காலம்
உப்பு வெளிக்காற்று வந்து
மேனி உரசிச்செல்லும் நேரம்
கந்தை உடையுடன்
காவலரண் மேட்டினிலே
காலை, மாலையென கண்ணயர
நேரமின்றி - எம்
கடமைதனை உணர்ந்து நின்ற தருணத்தில்
என் பாசமிகு அம்மாவிற்கு
மடல் ஒன்று வரைகின்றேன்.
உடலில்லா பேனாவால்
உணவு வந்ததாளின்
ஒரு பகுதி வெற்றிடத்தில் - என்
உறவிற்கு எழுதும் முதற் கடிதம்
அது தான்.
'பகையுடன் விளையாடும்
உன் பிள்ளை நான் அம்மா' - என்று
பத்துவரி எழுதி முடித்திருப்பேன்.
திடுமென வேட்டொலிகள்
கேட்டதிசை பார்க்குமுன்னே
என்னோடு களமாடும்
இன்னுயிர்த்தோழன்
மடிந்து விட்டான்.
மீண்டும் காவலரண் சண்டை
தொடர்கிறது.
சற்றுச் சில நாளில் மீண்டும்
எழுதுகிறேன்!
வார்த்தைகளில் வருவது தான்
வரிவடிவமாகிறது - என்
தோழனின் நினைவும் கூட....
-நா. கானகன
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
வசந்தம் வரும்
அந்த மரங்கள்
இன்னும் பட்டுப்போகவில்லை
இப்போதும் அதன் வேர்கள்
பச்சையாகவே உள்ளது
இப்போது அதற்கு
இலையுதிர் காலம்.
தளிர்களை இழந்து
தனிமரமாயே நிற்கிறது
ஆனாலும் அது
பட்டுப்போகவில்லை
நாளையொரு வேளை
காலம் மாறும்
இலையுதிர்ந்த மரங்களில்
துளிர் பிறக்கும்
ஆனந்தமாய்க் கூத்தாடி
காற்றில் மலர் சிந்தும்,
அந்த மரங்கள் இன்னும்
பட்டுவிடவில்லை
இப்போது அவைக்கு
இலையுதிர்காலம்
-ஈரத்தீ
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நல்வாழ்வு
இதுவரை காலமும்
நான் நீரேதுமற்ற
பாலைவனத்திலே உலவிவந்தேன்
கொடிய வெப்பம் என்னுடலை
வருத்தி வந்தது - அங்கு
களைப்பாற நிழலில்லை
தாகம் தீர்க்க நீரில்லை
எங்கும் பரந்த வெட்டைவெளி - அதில்
வாழ்ந்த எனக்கு
அந்த வாழ்க்கை சலிப்புூட்டியது.
அதைவிட்டு வெளிவர எண்ணி
சுற்றும் முற்றும் பார்த்தேன்.
தூரத்தே பச்சைப் பசேலென்ற
புல்வெளி தெரிந்தது.
அதைநோக்கி என்கால்கள்
விரைந்து சென்றன.
மெத்த மகிழ்ச்சி
நன்றாக நீரருந்தி தாகம் தீர்த்தேன்.
இப்போ
பாலைவன வாழ்க்கை கழிந்துவிட்டது
பசுமையான வெளியிலே
என் வாழ்க்கை கழிகிறது.
யோ.புரட்சி
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
எழுக தமிழா எழுக!
அடிமைத் தளையினுள்
அடங்காத் தமிழனே!
சுதந்திரத்தின் சுவையை
சுகித்து இன்புற வருக!
புதியசரிதம் படைக்கும்
உன் வீரக்கரங்களை
இனியும் புறக்கணிக்காதே!
கோழைச்சேற்றில் புதையுண்ட
உன் காளைக்கால்களின்
வேகத்தைக் கூட்டு
விரைவாக
மிகவிரைவாக
விடியும் திசைநோக்கி; உன்
பயணத்தைத் தொடக்கு.
நீ! கோழைக்குப் பிள்ளையல்ல
வீரப்பரம்பரையின் விழுது.
வெற்றிக்கொடி பல தாங்கிய
வீரமறவர்கள் தவழ்ந்த
மண்ணில் துளிர்த்த கொழுந்து.
இனியும் தணியாது
எழுக தமிழா எழுக!
இதுதான் உன் விடிவுகாலம்.
-க. வாமக்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
சாகடிக்கப்படும் மனிதம்
மனிதத்தை வணங்காதே
கழுகுகளின் அரங்கில்
கோரப் பற்களால்
குதறப்படுகிறது மனிதம்
புூப்போன்ற மென்மையான
இதயங்கொண்ட
அந்தப் புூவுடல்கள்
வேல்கொண்டு பாய்ச்சி
கிழித் தெறியப்படுகிறது
நீசர்களால்!
பிண்டங்களாக சிதறிய
தசைத் துண்டங்களை
காவிய கழுகொன்று
வாசலில் நின்று
எக்காளம் இடுகிறது
ஏ (வல்) பிசாசே
கூரையைப் பிடுங்கி வாயிலிடும்
உன் பழக்க தோசத்தால்
கபடமற்ற இதயங்களைக்
கசக்கிப் பிழிகின்றாய்
மானிட வாழ்வியலுக்காகத்
துடிக்கும்
தீர்க்க தரிசிகளின்
நேரிய தேடல்களுக்கு
ஆப்பு வைக்கின்றாய்
அகரத்தை அறியமுற்படும்
ஏழைகளுக்கு அவர்கள்
வரப்பிரசாதம்
ஆனால்லு}!
ஏவல் பிசாசுகளுக்கோ
நாராசம்.
-அருள்செம்புூரணன
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
வீரக் குழந்தைகள்; என் பேரன்
சுண்டங்காய்ப் பயல்
சுட்டித்தனம்
வயது ஏழுதான்.
வார்த்தை ஆடலில்
வயதை மீறிடும்
வந்து மடியில் குந்தியிருந்து
வயிற்றைத்தடவினான்
வால்பேத்தை
முல்லை விரித்தான்.
எழுந்து எங்கோ ஓடினான்
திரும்பி வந்தான்
அவன் கையில் அவனது துப்பாக்கி
சுடத்தெரியுமா?
மீண்டும் ஏளனப் பார்வை சுட்டான்;
என் மெய் சிலிர்த்தது.
இவர்கள் வீரக் குழந்தைகள்
நாங்கள்?
வெட்கத்தால் முகம் சிவக்க
எழுந்தேன்
என் கால்கள் நடந்தன.
புதியதும் பழையதும்
புரட்சிக்குத் தயார்
விடுதலையின் தூரம் குறுகிவிட்டது
என் மனம் உறுதி பெற்றது
கால்கள் பயிற்சிக் களம் நோக்கி நகர்ந்தன.
- முருகு பாரிமகன
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இன்னுமிரு நிமிடங்கள்
என்னினமே
உங்களுக்கு
அதோ போகின்றாளே
அவளைப் புரிகின்றதா?
தன்னை உருக்கியிந்தத்
தாயகத்துக்காய் தந்துவிட
தயாராகிப் போகின்றாள்.
உங்களுக்காய் கசிந்துருகும்
இதயத்தோடணைத்துக்
குண்டுகட்டிப் போகின்றாள்
தன்னுயிர்பிடுங்கித் தந்துவிடும்
தற்துணிவு பெற்றே - அந்தத்
தமிழ்மகள் போகின்றாள் -
வெடிமுழங்க
மேனியது
பிய்த்துதறிப் பகையழித்து
வென்றுவிடப் போகின்றாள் -
என்னினமே!
உங்களுக்காய்
அவள் காற்றோடு கலப்பதற்கு
இன்னுமிரு நிமிடங்கள் -
-தர்மேந்தினி
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அவனின் நினைவுடன்
நேற்றைய பொழுதுகளை
ஒரு தரம் நீட்டுகிறேன்
கூட நின்று கும்மாளமடித்து
ஒன்றாகக் கூடி
அன்றாடி மகிழ்ந்து
பகைவீடு எரிக்கையிலே
விதையாகிப் போன தோழனின் நினைவுகள்
என் முன்னே விரிகின்றன.
மனதில்
பெரும் சோகம்
இருப்பினும் நான் சோரவில்லை
என் கையினைப் பார்க்கின்றேன்
ஓலு}லு}
இது வீரச்சாவடைந்த
என் தோழனின் துப்பாக்கி
அவனது நினைவோடும்
அவன்லு}.
விட்டுச் சென்ற துப்பாக்கியோடும்
தாயக நினைவுகளோடும் என்
பாதங்களைத் தூக்கி வைக்கிறேன்
பகை வீட்டை நோக்கி
- யோ.புரட்சி
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
சோகம்
மனத்தினுள்
வைத்துக் கட்டிவிட்டு
முகத்தினால் வெளிப்படுத்தும்
மாயாஜாலம்!
தோளை விட்டிறங்க மறுக்கும்
சிறு குழந்தை
உதடுகளில் மலரும்
சிரிப்பு மலர்களைப் பறித்தெடுக்கும்
இயற்கையின் கரம்!
இயற்கை
மனிதனோடு ஆடும் விளையாட்டு!
வாழ்க்கைப் பயணத்தில்
சிலர் வலிந்து போட்டுக்கொள்ளும்
நித்திரைக் குளிகை!
இன்பத்தின்
ஒப்பற்ற அளவுகோல்!
அப்பாவிகளுக்கு
அடக்குமுறையாளர்
அளித்த பரிசு!
-த.நிலவன்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாயவளை மீட்கவென்று
கரிப்பு மணிகளின் விளை நிலத்தினுள்
புதையுண்டு போன - எம்
கண்ணின் மணிகளே
வந்து விட்டோம் உங்கள்
மீட்பர்கள் நாங்கள்
காத்திருக்கிறோம் நாம்
உம்மருகில் அம்மணியின் வசமுள்ள
எம் பொன்மணிகளைச் சிறைமீட்க
காத்திருக்கின்றோம் உம்மருகில்
அன்றொருநாள் எம்முடன்
இதே வீதியால் நீங்களும் நடந்தீர்கள்
இன்று உங்கள் புதைகுழிகளின் அருகே
மீண்டும் நடக்கிறோம் -
சிங்களத்துப் பேய்களின்
சிதைவுகளின் மேல் நின்று - எம்
தாயவளைச் சிறை மீட்போமென்று.
-உலகமங்கை
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
ஊனுண்ணும்
சுடலை முனி
ஒதுக்கமான ஊர்ச்சுடலைக்கும்
அப்பாலே எங்கேயோ
உறங்கிக் கிடந்த முனி எழுந்துவிட்டது
விரித்த தலை காற்றில் பறக்க
அகலத்திறந்த வாய்லு}.
உள்ளே உடைந்த எலும்புகள்
நசிந்த சதைகள்லு}
கழுத்தைப் பிடித்துத் தூக்கி
வாயிலிட்டுச் சுவைக்க
விரித்த கரத்துடன் வருகிறது
பிணவாடை வீச
ஊருள் வருகிறது உணவிற்காய்.
சிலர் உடுக்கடித்துப் பாடி
பொங்கலிட வேண்டுமாம்
முயல்கின்றனர் ஆயினுமது வருகிறது.
சிலர் தடுத்தனர் தடுத்தவர் மீதேறியும்
கடந்து வருகிறது.
வேகம் மட்டும் குறைகிறது
என்ன செய்யலாம்?
ஊரெல்லாம் கூடி குழறி ஓடுகிறது.
நான்லு}? ஓ! ஒருவழி
என் மூளையிற் திறக்கிறது.
எனது பேனாவுடல் முனியின் வாயுள்
புகுந்துலு} தொண்டையைக்கிழித்து
குடலைக் குத்திப்பிரித்துலு}
கதை முடியும் நான்லு}.?
அநேகமாய் மீளமாட்டேன்
ஓடிப்போன ஊர் மீளும்.
- கை-சரவணன்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
உணர்வுத் தீ
அடங்கிக் கிடந்த என்னுள்
நான் அறியாமலேயே
உட்புகுந்தது உணர்வுத் தீ
நிமிர்ந்தேன் - நினைவுகளில்
நெருப்பை அணிந்தேன்
தாயகக் கனவு
என் கண்களெங்கும்
படர்ந்து நிறைந்தது
புதுவேகத்தோடு பயணித்தேன்
இலட்சியப் பாதை
தியாகத்தின் உச்ச மனிதர்களால்
செப்பனிடப்பட்டிருந்தது.
இரத்தக் கறைகள்
பாதை நீட்சியெங்கும்
பரவிக்கிடந்தன.
பயண வழியில்
இன்னும் பல தோழர்கள்
ஒளி கொண்ட ஒரு பெரு மனிதன்
வழி நெடுகிலும்
எம்மை அழைத்துச் செல்கின்றார்.
இலக்கை அடைந்துவிடும் நம்பிக்கை
எமக்குள் வலுவாய் இருக்கின்றது.
செ. இராணிமைந்தன்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
கதை கூறுமிவர்
பள்ளி வாத்தி சொன்னதும்
ஞாபகமாய் என் நெஞ்சில் நிறைந்தது
காலை எழும்பு பாடம்படி
இன்று நான் அதை நினைக்கையில்
மனம் புல்லரித்தது
இன்று நான் காலையில் விழித்ததும்
சுடுதவன் கரமெடுத்து
தோழிற் சுமையுடன்
தொலை தூரம் நடக்கிறேன்
வால் மறையா அம்புலி
வடிவாய் எமைப் பார்த்தது
கையசைத்து நான் விடைபெற
கண்சிமிட்டாது நின்றது.
முகிலுடன் ஓடியே நான்
போகும் திசை தேடிவந்தது
இக்கதை கூறி
வெடிசுமந்தா னொருவீரன்
இப்பவும் நான்
அண்ணாந்து பார்க்கின்றேன்
வானத்து வெளியை
அதனுடன் நிலவை அதன் எழிலை
வாயிருந்தால் கூறிவிடும்
அந்த வாசமலர் போனதிசை
நேசமுடன் நாளை வந்து
கூறிவிடு நிலவே!
அவர்களே எங்களின்
இதயத்துக் கோயில்கள்
இ. தில்லைவெற்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
சின்னவர் வாழ்விற்காய்
நோக்கியபடியிரு!
இயற்கை செயற்கைகளின்
தாக்கங்கள்
உன்மேல் விழலாம்
தளராதேலு}
உறுதியுடன்
நோக்கியபடியிரு!
களைக்கும்
மனவழுத்தம் ஏற்படும்
தளர்ந்துவிடாதேலு}
பலவுயிர்கள் தத்தளிக்கும்
அதையெண்ணி
தொடர்ந்தும்
நோக்கியபடியிரு!
தூரம் குறுகியது
உளமுடைந்தால்
மீள எழுவது கடினம்
அந்தம் நெருங்கும் வரை
உன் பின்னவர் வாழ்விற்காய்
அசையாமல்
நோக்கியபடியிரு!
நா. கானகன்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
வெற்றியை நோக்கி
அடிக்கின்ற அலைவீச்சில்
அணைந்தது அக்கினிச்சுவாலை
அலைகின்றார் - அன்னியர்கள்
அகதியாய் அன்றெம்மை ஆக்கியவர்
அவதியாய் இன்றெங்கே ஓடுகிறார்.
ஓயாது அடிக்கின்ற
ஓயாத அலையினால்
பிடிபட்டுப்போன - எம்
வெட்ட வெளி நிலத்தில்
பட்டபனை மரத்தை - தன்
பாட்டன் நட்டான் - என்று
என்பாட்டன் சொன்னான்.
எத்தனை மனித
விதைநட்டு பெற்றோம்
இந்த வெற்றி - இதற்காய்
விதையாகிப் போன
வீழாக் கரங்களுக்கு
விழாக் காலம் இது - வீரரே
வீணாகிப் போகவில்லை உம் வாழ்வு
வீழ்ந்துவிடவில்லை உம் துவக்கு - அது
வீழ்த்தி வீழ்த்தி எதிரியை வீழ்த்தி
வீறுநடை போடுகிறது வெற்றியை நோக்கி
த. அகிலன்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அழியாமல்
அழியா நினைவுடன்
அனலாகிப் போனாய் - நண்பா!
அதனால் என் மனம்
அவதிப்படுகின்றது!
அன்பின் அதிபதியாய்- என்னை
அரவணைத்தாய்
அன்னியனை விரட்டிவிட
அடிபணியாதுதிடம் புூண்டாய்
அன்னியன் உனைக்கண்டு
அவதிப்பட்டான் நண்பா!
அவனை அழித்திட ஓயாத
அலையாய்
அலைமதில் அனலானாய்
எனினும் உன்
அடிப்பாதம் தொடர்வோம்
நண்பா
அழியா உன் நினைவுடன்
அயராது தொடரும் எம்
போராட்டம்
எல்லாளன்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
வடக்கு நெடுஞ்சாலையில் மேளக் கச்சேரி
கேட்குது கேட்குது
சங்கூதிக் கேட்குது
கேட்குது கேட்குது
மத்தளம் அடிச்சுக் கேட்குது
வருகுது வருகுது
'பெரகர' வருகுது
நெடுஞ்சாலை வழியாய்
'புனிதம்' வருகுது
சம வாழ்வென்று கூறி
புனிதம் வருகுது
வருகுது வருகுது
இனவாதப் புனிதம் வருகுது
எம் தேசத்தின்
தெற்கு, மேற்கு
நெடுஞ்சாலை சுற்றி
வருகுது வருகுது.
வடக்கு நெடுஞ்சாலை வழி
நடக்குது நடக்குது
மேளக்கச்சேரி
விமர்சையாய் நடக்குது
மேல் நோக்கிச் செல்கின்ற
அவுட்டுவெடி, கொட்டுவெடி
மூலைவெடி, கப்பல்வெடி
சீறுவாணம், சக்கரவாணம்
சீறுது சீறுது
'பெரகரா புனிதம்'
இருப்பிற்கு வருமுன்
எம் இருப்பிற்காய்
சீறும் சீறும்
எல்லாமே சீறும்!
-வளநாடன
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தவிப்பு
அழகு நிலாவில் கை வைத்தேன்
இனிமையான சூடு இருந்தது
அந்தச் சூட்டில் ஒரு உணர்வு!
பாலூட்டி வளர்த்த அன்னையின் சுகம் இருந்தது
என் அன்புக்கினிய அம்மாவைக் கண்டு
எட்டு வருடங்கள் போய்க் கழிந்தன
எப்போது காண்பேன் என்ற தவிப்பு
என்னுள் ஆழமாய் வேர்விடுகிறது
இந்தப் பாழாய் அழியும் உலகில்
என்னைப் போல எத்தனை பேரம்மா
பக்கத்தில் உடன் பிறப்பும் இல்லை
ஆறுதலுக்கு வேறு உதவியும் இல்லை
குண்டுமழை பொழிகிறான் எதிரி
இம்மண்ணில் வாழ உறுதி வேண்டும்!
இம் மண்ணில் வாழ உறுதி வேண்டும்!!
-க. சங்கீதன்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
உனது அரங்கேற்றம்
உனக்கு நடக்கத் தெரியவில்லை
சிரிக்கத் தெரியவில்லை
அகத்தின் கடுகடுப்பை,
புறத்தால் மறைக்கத் தெரியவில்லை
எப்படி அவர்கள் பிடியிலிருந்து,
தப்பப் போகிறாய்.
உனது முகத்திலிருந்து
ஒரு புன்முறுவலை வெளியிடு
இல்லாவிடில் தொலைவாய் நீ.
என்றோ ஒருநாள்
காணாதோர் பட்டியலில்
உனது பெயரும் வரக்கூடும்
எனவே உந்தனது
உணர்ச்சிகளை மறைத்து வைத்து
சாதுவாய் இருக்கக் கற்றுக்கொள்.
காலம் கனியும் வரையும்
காத்திருப்பாய்!
-செல்வ சதீசன
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நான் ஒரு கரும்புலி
என்னுள் நான்
நடமாடும் எரிமலையாக
பொங்குகிறேன்லு}.
புயலின் மையம் போல்
என்னுள் கரும்புலிக் கனவுகள்
முகிழ்கின்றன.
என் எதிரே
நகரும் எதிரியின்
கடற்கலன்கள் விசையோடு
போகின்றன - அவை
என் இலட்சிய தாகத்தை
அதிகரிப்பதாய் உணர்கிறேன்.
தாவிடும் அலைகளின்
பொங்கிடும் நீரிலே
நான் புரள வேண்டும்
வெப்ப மூச்சோடு
நான் சுவாசிக்கும்
ஈழக் காற்றில்
விஸப் புகையோடு செல்லும்
பகைக் கலன்கள் துகளாகிட வேண்டும்.
எம் தென்றலில்
தூய்மை புலர்ந்திட.
நான் கரும்புலியாய் புக வேண்டும்
அனல் கக்கும்
என் விழிகளும்
பொங்கிப் பிரவகித்து ஓடும்
என் குருதியும்
என் மக்களிற்காய்
சிதறிட வேண்டும்.
-அலையிசை