Malalai Wrote:Quote:காலத்தின் கோலத்தால்
பிரிவுகள் எமைத் தாக்கப்
பிரிந்திட்டோம்
காதற் சுமை தாங்கிகளாய்...!
புரிந்துணர்வுகள்
பிந்தித்தான் வந்தாலும்
பரிவுக்குரியவளாய்
நீ என்றும்
என்னவள்...!
இது கள்ளமல்ல
என் அருகிருப்பவளும்
அறியும் உண்மைதான்...!
காதலைக் கோட்டை விட்டுவிட்டு
காலத்தின் கோலம் என
காதலின் வலிமையை
காலத்தின் காலடியில் போட்ட
காதலனே - இன்று
துனைவியார் துணையிருக்க
மனம் கொள்ளை கொண்டவளை
உன்னவள் ஆக்க ஆசைப்படுகிறாயே
கள்ளம் இல்லாவிடினும்
காதலியும் கட்டியவளும்
சிந்து பைரவியாக
வாழவா?
(குருவி அண்ணா சும்மா சொன்னது இது அப்புறம் தங்கையை அடிச்சுப் போடாதிங்க....)
சிந்துவும் பைரவியும்
தென்னிந்திய சினிமாவின் எச்சம்
இவனும் அவளும்
மனிதாபிமானத்தின் மிச்சம்...!
கண் பேசக் காதல் கொண்டவள்
கண்ணெதிரே
அன்புக்காய் ஏங்கி வாழ
வழி மாறிப் போயினும்
அன்புக்காய் வந்தவள் கூட இருக்க....
மாசில்லா மனித அன்பால்
அவள் உள்ளம் தேற்றி
அவளுக்கும் ஓர் வாழ்வு
உலகில் உதயமாக
வழி காட்டுதல் தப்பா...???!
அதுவும்...
தெரிந்து செய்த தப்புக்காய் அன்றி
தெரியாமல் நடந்த விபத்துக்காய்...!
வழி தேடுவதும் காட்டுவதும்
அவள் உறவுக்காய் அல்ல
அவள் மேல் காட்டும் பரிவுக்காய்...!
மனிதாபிமானம் எனும்
மாசில்லா நிலை
மனித வாழ்வுக்காய் தந்த
உத்தரவுக்காய்...!
இந்த நிலை வளர வேண்டும்
மனமெங்கும் பெருக வேண்டும்
தப்புகள் பெருக்கவல்ல
விபத்துக்கள் தடுப்பதற்கு...!
அகிலத்தில்
காதலையும் கடந்த
மனித அன்பு பெருகி நிற்க...!
கடவுளாய் வந்தவன்
மனிதனுக்குக் காட்டியது என்ன
சிந்துவும் பைரவியும் கண்ட காமமா...??!
சிந்துவும் பைரவியும்
மனம் கொண்ட வெறியின் விளைவு...!
கடவுள் தூதனாய் தந்தது
அன்பின் விளைவு....!
மனிதாபிமானத்தின் உச்சம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>