03-11-2005, 03:25 PM
மாயாவி
'பிதாமகனி'ல் உதிரி பூந்தியாய் இருக்கும் சூர்யா கேரக்டரை ஒன்று திரட்டி மாயாவியாய் லட்டு பிடித்திருக்கிறார் இயக்குனர் சிங்கப்புலி.
வெளிநாட்டு பயணிகளை சிரிக்க சிரிக்க மகாபலிபுரத்தை ரசிக்க வைக்கும் டூரிஸ்ட் கைடான சூர்யா அதன்மூலம் வரும் வருமானம் போதவில்லையென்றால் சின்ன சின்ன 'கைவரிசை'யும் காட்டுவதில் கெட்டிக்காரர்.
சங்கிலி முருகனிடம் வாங்கிய தண்டலை கட்டமுடியாத தெண்டமாக இருப்பது பற்றி கவலைப்படும் சூர்யாவுக்கு "ஆம்லேட் போடணும்னா முட்டையை உடைச்சுதான் ஆகணும்" என்று கூட்டாளி சத்யனின் சூப்பர் தத்துவம் மண்டையில் ப்ளாஷாகி நடிகை ஜோதிகா வீட்டில் புகுந்து திருட முயல போலீஸிடம் மாட்டுகிறார்.
போலீஸிடம் மாட்டவைத்த கடுப்பில் இருக்கும் சூர்யா, ஜோதிகாவுக்கு டார்ச்சர் மேல் டார்ச்சர் கொடுக்கிறார். தலைவலி தாங்கமுடியாத ஜோதிகா தன் மேனேஜர் மூலமாக சூர்யா மேல் மீண்டும் பொய் புகார் செய்கிறார். மூன்று மாதம் 'மாமியார்' வீட்டுக்கு போய் திரும்பும் சூர்யா இந்த முறை கொஞ்சம் விபரீதமாகவே யோசனை செய்து ஜோதிகாவை கடத்தி செல்ல, அடுத்தடுத்து என்ன நிகழ்கிறது என்பதே கதை.
<img src='http://cinesouth.com/images/new/11032005-TRV0image2.jpg' border='0' alt='user posted image'>
சந்திரபாபு ஸ்டைலில் ஆரம்ப பாடல் காட்சியில் தரிசனம் தரும் சூர்யா சுருள் முடி, பென்சில் மீசை, சர்க்கஸ் கோமாளி போன்ற உடையில் படத்தின் பன்னிரெண்டு ரீல்கள்வரை பொட்டலம் பொட்டலமாய் காமெடி பக்கோடாவை கொடுத்து ரசிகர்களை கொறிக்க வைக்க, வாயெல்லாம் பல்லாக படம் பார்ப்பவர்கள் பாராட்டுவதை பார்க்க முடிகிறது.
"லாக்கப்பில் இருந்தபடி இனுசுபெட்டரே நாங்க யாரு தெரியுமா? ஜோதிகா பேரவை தலைவராக்கும். எங்கள வெளியில விடலேன்னா நாடே கொந்தளிக்கும். ஒழுங்கா கேஸ சிபிஐக்கு மாத்திடுங்க" என 'உள்ளே' போன வருத்தம் கொஞ்சமும் இன்றி இன்ஸ்பெக்டரை கலாய்க்கும்போது காது செவிடாகும் அளவிற்கு கைதட்டல் சப்தம்.
திருடபோன வீட்டில் ஜோதிகாவை பார்த்துவிட்டு 'மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது..' பாடலை பாடியபடி குஷி ஸ்டைலில் ஒரு ஆட்டம் போடும்போது திருஷ்டி சுற்றி போடுமளவிற்கு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அஜித், விஜய்யின் காற்று சூர்யா மேலும் அடித்துவிட்டது போலும். பஞ்ச் டயலாக் பரமசிவமாக மாறி 'எனக்கு யாரும் போட்டி இல்லை நானும் யாருக்கும் போட்டி இல்லை; நான் பிளாஸ்டிக் மாதிரி. அழியவும் மாட்டேன் என்னை யாரும் அழிக்கவும் முடியாது' என சந்தடி சாக்கில் பொறிந்து தள்ளுவது ஏன் என்று புரியவில்லை.
ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்ததே காமெடியாகிவிட்டதை சத்யன் உணர்ந்து கொண்டதாலோ என்னவோ நிஜமாகவே காமெடி கேரக்டர் பண்ண ஆரம்பித்திருக்கிறார். சூர்யாவின் காமெடி கச்சேரிக்கு பக்காவான பக்கவாத்தியமாகி பாராட்டு பெறுகிறார்.
நிஜ கேரக்டரில் (நடிகையாக), ரியல் வாய்ஸில் ஜோதிகா வித்தியாசப்பட்டிருக்கிறார். ஆனாலும் கடத்தப்பட்ட இடத்தில் முகத்தை அஷ்ட கோணலாக்கி அழுது புலம்பும்போது கஷ்டக்காலம்தான். ஒரு காட்சியில் "ஜோதிகா மேடம் நீங்க ஓவர் ஆக்டிங் பண்ணுவதாக ஊர்ல பல பேர் சொல்றாங்க" என சத்யன் பேசும் டயலாக்கூட இந்தப் படத்தை பொறுத்தவரை ஜோதிகாவுக்கு நிஜமாகவே பொருந்துகிறது.
<img src='http://cinesouth.com/images/new/11032005-TRV0image1.jpg' border='0' alt='user posted image'>
கை, வாய் கோணியபடி வரும் சிகப்பி கேரக்டர் கல்யாண வீட்டில் கருப்பு தோரணம் கட்டியது போல தேவையில்லாத திணிப்பு. ஊனமுள்ள கேரக்டரை காட்டி சென்டிமெண்டில் ஜமாய்த்துவிடலாம் என்று இயக்குனர் போட்ட கணக்கு, சோகத்திற்கே ஊனம் வந்த மாதிரி உறுத்தலாக இருக்கிறது.
தேவிஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசை காமெடி காட்சிகளுக்கு ரொம்பவே கைக்கொடுத்திருக்கிறது. புஷ்பவனம் குப்புசாமி குரலில் 'காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற....' பாடல் தியேட்டரில் இளசுகளை டப்பாங்குத்து ஆடவைக்கிறது.
விரல்விட்டு எண்ணக்கூடிய லொகேஷன்கள் என்றாலும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் காமிரா வித்தையில் கண்களுக்கு விதவிதமான விருந்து. வீட்டிற்குள் லைட்டெல்லாம் ஆஃப்பாகி கேரக்டர்கள் ஷேடோவாக தெரிவதை ரசிக்கமுடிகிறது.
முன்பாதியில் காமெடியில் பயணிக்கும் கதை இரண்டாம் பாதியில் ட்ராக் மாறி ரசனையை தடம் புரள வைக்கிறது. முழுக்க நனைந்தபின் முக்காடு போட்டதுபோல் உள்ளது இயக்குனர் சிங்கப்புலியின் க்ளைமாக்ஸ்.
'மாயாவி' க்ளைமாக்ஸில் கொட்டாவி.
நன்றி சினிசௌத்.கொம்
திருத்தப்பட்டுள்ளது யாழினி