Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
வடமராட்சியிலும் நேற்று சிங்கள இராணுவக் காடையன் வெறித்தனம்!
வடமராட்சி துன்னாலை கலிகைச்; சந்தியில் சிறீலங்காப் படைமுகாமைச்; சேர்ந்த படைச் சிப்பாய் ஒருவர் நேற்று நள்ளிரவு முகாமுக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் புகுந்துள்ளார்.
பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கும் நோக்கில் அவ்வீட்டிற்குள் படையினர் நுழைந்துள்ளார்.
இதனையடுத்து அவ்வீட்டின் குடும்பத்தலைவர் சத்தமிட்டு அயலவர்களின் உதவியுடன் படையினனை பிடிக்க முற்பட்டபோது சிப்பாய் தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து துன்னாலை மக்கள் சிறீலங்காப் படையினருக்கெதிராக இன்று காலை 6 மணியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படையினரின் முகாம் ஒன்றை ஆத்திரமடைந்த மக்கள் தீயிட்டு எரித்துள்ளதுடன் படைமுகாம் முன்பாக ரயர்களைப் போட்டு எரிய10ட்டி படையினரை வெளியேறுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் தற்போதும் தொடர்ந்த வண்ணம் உள்ளதால் அங்கு பதற்ற நிலை காணப்படுவதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மக்கள் படையினரை நோக்கி கற்களால் வீசி தாக்கி வருவதாகவும்ää பெருமளவான மக்கள் திரண்டு படையினருக்கெதிரான தமது எதிர்ப்பைக் காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது அங்கு பெருமளவான ஆயுதம் தாங்கிய சிறீலங்காப் படையினரும்இ சிறீலங்கா காவல்துறையினரும கலகம் அடக்கும் கவல்துறையினரும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுட்டபழம்
நன்றி புதினம்
....................................................................................................................
ஏ 9 வீதியில் இராணுவ வாகனம் ஒரு உந்துருளியில் மோதியதனால் மக்கள் வீதி மறியலில் ஈடுபட்டுள்ளதாக உலகத்தமிழர் இணையவானொலியில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
:x :x :x
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
படையினர் வாகனம் மோதி பொதுமகன் நிலை கவலைக்கிடம்@ மக்கள் எதிர்ப்பு போராட்டம்
யாழ். சாவகச்சேரிப் பகுதியில் சிறீலங்காப்படையினரின் வாகனம் மோதி பொதுமகன் ஒருவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து மக்களுக்கும் படையினருக்கும் இடையில் கடும் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஏ-9 பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது படையினரின் கனரக வாகனம் மோதியுள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொதுமகன் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் யாழ். போதனா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள் படையினருக்கு எதிராக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்வேளை படையினர் மக்கள் மீது கண்மூடித்தனமாக கண்ணீர்ப்புகைக் குண்டுத்தாக்குதல்கள் குண்டாந்தடித் தாக்குதல்கள் என்பவற்றை மேற்கொண்டனர்.
படையினரின் இச்செயற்பாட்டைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த மக்கள் படையினரின் முகாம்கள் மீது கற்களாலும் தடிகளாலும் எறிந்து தாக்குதல் நடத்தியதுடன் படையினரின் மூன்று காவலரண்களையும் எரித்து அழித்துள்ளனர்.
இவ்வேளையில் படையினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர். தற்போது அப்பகுதியில் பதட்ட நிலை தோன்றியுள்ளது.
இதனால் அவ்வீதியூடான போக்குவரத்துக்கள் உள்ளிட்ட சகல இயல்பு நிலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை காயமடைந்த நபரின் நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
.
சுட்டபழம்
நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
யாழ் குடாநாட்டில் இராணுவத்தினர்- பொதுமக்கள் மத்தியில் மீண்டும் முறுகல்
முன்னர் இடம்பெற்ற சம்பவம் ஒன்று
யாழ் குடாநாட்டில் சாவகச்சேரியில் இராணுவ ட்ரக் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 45 வயதுடைய சின்னத்தம்பி மனோகரன் என்பவர் படுகாயமடைந்து யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வாகன விபத்து நடந்ததும், இராணுவ ட்ரக் வண்டியை ஓட்டிவந்த இராணுவ சிப்பாய் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்வதற்கு முன்னர், விபத்தில் சம்பந்தப்பட்ட ட்ரக் வண்டியை அங்கு வந்த இராணுவத்தினர் தமது முகாமுக்குக் கொண்டு செல்ல முயன்றதாகவும், அங்கு கூடிய பொதுமக்கள் அதனைத் தடுக்க முற்பட்டபோது, இராணுவத்தினர் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும், இதனால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் இராணுவத்தினர் மீது கல்வீச்சு நடத்தி, வீதிகளில் டயர்களை எரித்து வாகனப் போக்குவரத்தைத் தடைசெய்ததுடன், அருகில் உள்ள இராணுவ காவலரண் ஒன்றையும் தாக்கியதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து அங்கு விரைந்த மேலதிக இராணுவத்தினரும், பொலிஸாரும் நிலைமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்காக கண்ணீர்ப்புகைப் பிரயோகம், தடியடியும் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தினர் பொதுமக்கள் மீது நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் பொதுமகன் ஒருவர் காயமடைந்ததாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
வாகன விபத்தில் சம்பந்தப்பட்ட இராணுவ சிப்பாயை உடனடியாகக் கைது செய்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீதியில் திரண்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போதிலும், விபத்தில் சம்பந்தப்பட்ட ட்ரக் வண்டியை இராணுவத்தினர் தமது முகாமுக்குக் கொண்டு சென்றுவிட்டதாகத் கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தையடுத்து, சாவகச்சேரி ஊடான வாகனப்போக்குவரத்து சிலமணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தது.
கடைகளும் இழுத்து மூடப்பட்டன.
வாகன விபத்து தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதியளித்ததையடுத்து, இப்போது அங்கு அமைதி ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை வடமராட்சி துன்னாலை- கலிகை பகுதியில் இராணுவத்தினர் என சந்தேகிக்கப்படும் 5 பேர் தீய நோக்கத்துடன் நேற்று நள்ளிரவு வீடு ஒன்றினுள் புகுவதற்கு முயன்றதாகவும், அவர்களின் முயற்சி வெற்றயளிக்காத நிலையில் அவர்களில் ஒருவர் அருகில் உள்ள இராணுவ முகாமுக்குள் சென்றதாகவும் ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, இன்று காலை 11 மணியளவில் கலிகைச் சந்தியில் கூடிய பொதுமக்கள் வீதியில் டயர்களை எரித்து போக்குவரத்தைத் தடைசெய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
கலிகை சந்தியில் அமைந்துள்ள சிறிய இராணுவ முகாமிலிருந்து சுமார் 50 யார் தொலைவில் உள்ள வீட்டிற்குள்ளேயே சந்தேக நபர்கள் உட்புக முயன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த பொலிஸாரும், இராணுவ அதிகாரிகளும் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அங்கு நிலைமை அமைதியடைந்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய 15 இலங்கைத் தமிழ் அகதிகள் நேற்று நள்ளிரவு தலைமன்னார் கடற்பரப்பில் மணற்திட்டு ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த 15 பேருடன், அகதியைப் போன்று வந்த ஒருவரிடம் சுமார் ஒன்றரை கிலோ நிறையுள்ள ஹெரோயின் போதைப் பொருள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த 16 பேரும் இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
ஹெரோயின் கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படுபவரை வரும் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட மன்னார் மாவட்ட நீதிபதி, இடம்பெயர்ந்து சென்று தாயகம் திரும்பியவர்கள் 15 பேரையும் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிவில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
BBC Tamil News
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
மீளமைக்கப்பட்ட படையினரின் நிலைகள் மீது பொதுமக்கள் தாக்குதல்!
நேற்று சாவகச்சேரி நகர்ப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொதுமகன் ஒருவர் மீது சிறீலங்காப் படையினரின் கனரக வாகனம் மோதி படுகாயமடைந்திருந்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் முறுகல்நிலை வலுப்பெற்றது.
இதன்போது மக்கள் மீது படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுத்தாக்குதல் குண்டாந்தடிப்பிரயோகம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து மக்கள் படையினரின் மீது கற்களை வீசித்தாக்குதலை நடத்தியதுடன் படையினரின் முகாம்களையும் எரித்தழித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று பெருமளவான படையினரையும் பொலிசாரையும் அப்பகுதியில் குவித்து அவர்களின் பாதுகாப்புடன் எரியூட்டப்பட்ட படைநிலைகளை புனரமைத்திருந்தனர்.
இந்நடவடிக்கை நேற்றிரவு படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இன்று அப்பகுதியில் மீளவும் திரண்டிருந்த பொதுமக்கள் புனரமைக்கப்பட்ட படையினரின் படைநிலைகளை மீளவும் அடித்து நொருக்கியதுடன்
சாவகச்சேரி நகருக்கான பிரதான வீதிகளில் மறியல் போட்டு படையினரையும் அவர்களின் வாகனங்களையும் அவ்வீதிகளினூடாகப் பயணிக்கத் தடைவிதித்தனர். இருப்பினும் ஏ-9 வீதியூடான மக்கள் போக்குவரத்து தொடர்ந்து இடம்பெறுகின்றது.
இந்நிலையில் அவ் வீதியில் பயணித்த அரச பேரூந்து ஒன்றும் தாக்குலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளையில் சமரச நிலையை ஏற்படுத்தும் நோக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் படைத்தரப்பிற்கும் இடையிலான சந்திப்பொன்று தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
தொடர்கிறது மக்கள் போராட்டம்!
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/03/sla_garrison_1203_02_38874_200.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/03/sla_garrison_1203_01_38869_200.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/03/sla_garrison_1203_04_38883_200.jpg' border='0' alt='user posted image'>
<b>Crowds block Sri Lanka army garrisons in Chavakachcheri</b>
[TamilNet, March 12, 2005 06:06 GMT]
Crowds blocked Sri Lanka army (SLA) camps in Chavakachcheri with burning tires and logs Saturday in protest against the military for tear gassing and damaging property in the northern peninsula’s second largest town. Protestors stopped military traffic on the A9 highway through Chavakachcheri. Some set fire to two military sentry points in the town. Troubles erupted in this key town when a civilian was hit and wounded by a speeding Sri Lanka army vehicle Friday afternoon. SLA troops and Police tear gassed to disperse a crowd that tried to set fire to the vehicle. Two civilians were wounded Saturday afternoon when riot Police charged a restive crowd in Chavakachcheri.
Rioting crowds threw stones at army camps in the town as talks to resolve the issue failed. A crowd that tried to storm a paramilitary group's camp in the town was stopped by riot Police squads. Another group of protestors threw on the Police tear gas cannisters which they picked up before explosion. Rioters milled about in the town although Police and army units fired in the air and tear gassed crowds.
The injured men, Mr. Kandasamy Kumarakuruparan, 25, of Mirusuvil and Mr. Selvarasah Ahilan, 31, of Kachchai Road were admitted to hospital.
Protestors blocked the main entrance of the SLA’s main garrison in Chavakachcheri at Post Office Road Junction. One group of civilians prevented the army from moving out of its camp on Kachchai Road while another blocked the road to the SLA’s Thanangkilappu high security zone.
Chavakachcheri residents allege that Police and military attacked civilians and damaged property during protests over the accident Friday.
Nordic truce monitors, the Liberation Tigers and Sri Lanka Police are trying to resolve the problem peacefully, sources in Chavakachcheri said.
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
யாழ். சாவகச்;சேரிப்பகுதியில் சிறீலங்காப் படைää காவல்த்துறையினரின் அடாவடித்தனத்தின் தொடர்ச்;சியாக இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய விபத்துச்; சம்பவத்தினைத் தொடர்ந்து சாவகச்;சேரிப்பகுதியில் மக்களுக்கும்ää படையினருக்கும் இடையிலான முறுகல்நிலை இன்றுவரை நீடித்தது.
நேற்று பிற்பகல் முதல் ஏ-9 வீதியூடான போக்குவரத்துக்கள் அனைத்தும் மக்களால் மறிக்கப்பட்டு படையினருக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்பட்டது. அத்துடன் மக்களின் உடைமைகளைச்; சேதப்படுத்திய படையினர் மக்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இந்த மக்கள் கிளர்ச்;சியின்போது சிங்களப் படையினரின் படை அரண்கள் மக்களால் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் படையினரால் இரவு மீளமைக்கப்பட்ட படைநிலைகளை இன்று காலை மக்கள் அடித்து நொறுக்கியதுடன் படையினரின் வாகனப் போக்குவரத்துக்களையும் துண்டித்திருந்தனர்.
இந்நிலையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு இளைஞர்களை ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் நின்றிருந்த சிறீலங்கா காவல்த்துறையினர் மிரட்டி அவர்களை அச்;சுறுதியுள்ளனர்.
இதனை அடுத்து ஆத்திரமடைந்த ஏனைய மக்கள் அப்பகுதிக்குச்; சென்று ஈ.பி.டி.பி அலுவலகம் மீது கல்லெறித்தாக்குதல் நடத்தியதுடன்ää அவர்களின் முன் காவலரணையும் எரித்தழித்துள்ளனர்.
இதன் தொடர்ச்;சியாக மக்கள் நின்றிருந்த பகுதிகளில் படையினர் துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதல் நடத்தியதுடன்ää மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களையும் மேற்கொண்டனர்.
இச்;சம்பவத்தின்போது அகிலன் என்ற இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் அப்பகுதிகளில் நின்றிருந்த மக்களில் ஐந்து இளைஞர்களை படையினர் கைது செய்து சென்றுள்ளனர்.
இவர்களை மீட்கும் நடவடிக்கையில் தென்மராட்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்பாக சாவகச்;சேரிப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும்ää சிறீலங்கா காவல்த்துறையினருக்கும்ää வர்த்தகசங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் முத்தரப்புச்; சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று சாவகச்;சேரிப்பகுதி விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த போதிலும்ää சந்தை இயங்கியது.
இந்தப் பதட்ட நிலை நாளையும் தொடரக்கூடும் என்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மக்களில் சிலர் தெரிவிக்கின்றனர்.
நன்றி புதினம்
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
பலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகள் செய்வதுபோல் எமது நாட்டிலும் மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறவேண்டும். ஆக்கிரமிப்புக்குட்பட்ட வாழ்வு தொடர்ந்தால் சுதந்திரத்தின் பெறுமதி என்னவென்பது தெரியாமலே போய்விடும்.
<b> . .</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
:? :? :evil: :evil:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/03/sla_troubles_jaffna_01.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<img src='http://img215.exs.cx/img215/576/slatroublesjaffna053ll.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img83.exs.cx/img83/2071/slatroublesjaffna063le.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,650
Threads: 35
Joined: Feb 2005
Reputation:
0
:evil: :evil: :evil: :evil:
" "
" "
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
:twisted: :twisted: :twisted: :twisted: :evil:
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]
Posts: 76
Threads: 4
Joined: Mar 2005
Reputation:
0
மக்களின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை கூட சில இணையத்தளங்கள் தூண்டுதலினால் மேற்கொள்ளப்படுவதாக கூறுவது மிகவும் வேதனைக்கு உரிய விடையமாகும்
...............
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
வளர்ச்சியடைந்த எமது போராட்டம் மீண்டும்..........................?
<b> </b>