03-08-2005, 02:36 PM
கொடிகாமத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் பணிமனைக்குள் சிறீலங்கா காவல்துறையினர் அத்துமீறி உள்நுழைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் பணிமனை சிறீலங்கா காவல் துறையினரால் சோதனைக்குள் உள்ளாக்கப்பட்டுள்ளது.
நேற்றுக் காலை 10.45 மணிக்கு விடுதலைப் புலிகளின் பணிமனையை முற்றுகையிட்ட சிறீலங்கா காவல்துறையினர் போர்நிறுத்த விதிகளுக்கு முரணாக பணிமனைக் கதவுகளை கட்டாயமாகத் திறந்து சோதனை செய்துள்ளனர்.
பணினையில் பொறுப்பாளர் இல்லாத சமயம் கடமையில் ஈடுபட்டிருந்த போராளிகளின் ஆட்சேபனையைக் கருத்தில் எடுக்காது பணிமனை பொறுப்பாளரது அறையையும் சோதனை செய்துள்ளனர். சிறீலங்கா காவல்துறையினரது இத்தகைய செயலை விடுதலைப் புலிகள் வன்மையாகக் கண்டித்ததுடன் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
நன்றி: பதிவு.