08-29-2003, 09:05 PM
'உப்பில் உறைந்த உதிரங்கள்||
- திரை விமர்சனம் -
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மற்றுமொரு வரலாற்றுப் பதிவு“உப்பில் உறைந்த உதிரங்கள்|ஷ திரைக்காவியம். நம்மவரின் மற்றுமொரு இயல்பு குன்றாப் படைப்பு இது.
யாழ் கிளாளிக் கடலேரிப்பகுதியில் இராணுவ ஆக்கிரமிப்பால் அல்லல் பட்டிருந்த மக்களை மேலும் அழித் தொழிக்க கொண்டுவரப்பட்ட நீரூற்று விசைப்படகொன்றை கைப்பற்ற எடுக்கப்பட்ட முயற்சிகளின் நில வரலாற்றின் பதிவுதான் இந்த வீரகாவியம்.
இராணுவத்தின் அராஜக அழிப்புகளால் கடலை நம்பிவந்த மீனவரும் கடல்வழியால் சென்ற பொதுமக்களும் இவ்விசைப்படகின் துணையோடு கொன்று குவிக்கப்பட்டு வந்தனர்.
இவ்வாறாக தன் உறவை இழந்த ஒரு இளம் பெண் கண்களுள் தன் தாய் மண்ணை மீட்கத் துடிக்கும் அக்கினியாய் ஆவேசம் கொழுந்து விட்டு எரிகிறது. நிலவோடும் மலரோடும் பேசிக்களிக்கும் மெல்லியலாள் கனவுகளில் வெஞ்சினப் பகை ஒடிக்கும் வேகம் புலப்படுகிறது. விதைக்கப்பட்ட வீரம் விருட்சமாய் வளர்கிறது.
இத்திரைக்காவியம் ஒரு பெண் போராளியை மையப்படுத்தியிருப்பினும் சொல்ல வந்தது அதுவல்ல. கிளாலி நீர்ப்பரப்பில் நங ;கூரமிடப்பட்டிருந்த எதிரியின் விசைப்படகை கைப்பற்றும் போராட்டத்தின் பின்னால் அமைந்துள்ள அர்ப்பணிப்புகளையும் சிக்கல்களையும் சுட்டிக்காட்டுவதோடு வெற்றிச் சரித்திரமாக்கிய வீரனின் வரலாறுகளையும் பதிவு செய்வதாகவே இத்திரைப்படம் அமைந்துள்ளது.
26.02.1998இல் இவ்வெற்றிகர தாக்குதல் வீர காவியம் படைத்தது. இது எம்மை குது}கலித்த செய்தி. அந்த செய்தி எம்மை வந்தடைய தம் இன்னுயிரை ஈய்ந்த அந்த மாவீரர் அர்ப்பணிப்புகள், அவர்கள் பெயர்கள்.... இவற்றை நாம் என்றுமே அறிய முயல்வதில்லை. எம்தேசத்திற்கும், அந்த காற்று வெளிக்கும், அந்த கடலலைக்கும் மட்டுமே தெரிந்த அவர்கள் தியாகங்கள் திரை ஓவியமாக சித்தரிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க ஒரு விடயமே. ஆனால் அந்த உன்னதமான உயிர்தியாகங்கள் செய்த உண்மையான நாயகர்களின் சரிதங்கள் அறிந்து கொள்வதில் தமிழர் ஆகிய நாம் ஆர்வம் காட்டுகிறோமா?
கற்பனைப் பாத்திரங்களுக்காய் திரையரங்குகளில் பணத்தையும் கொட்டிவிட்டு கண்ணீரை சிந்திவிட்டு வருகின்றோம். எம் கண்முன்னே வீரகாவியங்கள் படைத்த வீரரின் வரலாறுகளை எண்ணி ஒரு துளி கண்ணீர் விட தயங்குகின்றோம். பரவாயில்லை. இயன்ற பங்களிப்பையேனும் ஆற்ற வேண்டாமா? இது போன்ற வரலாற்றுப் பதிவுகளில் முகமறியாத வரலாற்று நாயர்களை வாழும் காலத்திலேயே தரிசிப்பது நாம் செய்த அதி;ட்டமாக மட்டுமே இருக்க முடியும். எனின் மேலும் பதிவுகள் தொடர ஊக்குவிப்பும், பங்களிப்பும் உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்களால் இக்கலைப்டைப்புகளை வளர்த்திட ஆற்றப்படுவது அவசியம்.
இப்படைப்பு கடற்புலிகள் ஆதரவுடன் நிதர்சனம் மகளிர் பிரிவின் தயாரிப்பில் உருவானது. குயிலினி, நிமலா ஆகிய பெண்கலைஞர்களின் பிரதியாக்கமான இச்சரிதத்தை குயிலினி இயக்கியிருந்தார். இப்படைப்பின் பின்நின்ற கலைக்குழாம் வெறும் கலைஞர்கள் மட்டுமல்ல களத்தின் பொய்கை கரையாதலால் காட்சிகள் மிக இயல்பாகவும் தத்துரூபமாகவும் இருந்தன.
..சினிமாக்களில் வருவதுபோல் இவை கற்பனை அல்ல என்ற உண்மை உறுத்துகிறது. விழியோரத் தவிப்பைத் தவிர்க்க முடியவில்லை.
பொருளாதார hPதியாகவும், தொழில்நுட்பாPதியாகவும் பின்னடைந்திருக்கும் எம் தாயகத்தின் படைப்பாயிருந்தாலும் களமுனைக்காட்சிகள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.
முல்லை வாழ் மக்களின் அளப்பரிய பங்களிப்பையும் இங்கே பாராட்ட வேண்டும்.
நம் தேசத்தின் ஒரு திரைப்படத்தை ஒரு பெண் இயக்குனர் மிகச் சிறப்பாக இயக்கியுள்ளமை ஒரு பெண் என்ற வகையில் என்னையும் பெருமைகொள்ள வைக்கிறது.
இத்திரைப்படத்தின் மிக மிக அழகான காட்சியாக“கடலோரப் பூவாக அழகாக புூத்தாள்....|| என்ற பாடல் காட்சி அமைந்திருந்தது. உணர்வுகளை மீட்டிச் சென்ற இசைப்பிரியனின் இசையில் உயிரை உருக்கும் குரலோடு எஸ்.சி. சாந்தன் இந்தப் பாடலை பாடியிருந்தார். இந்தப் பாடலின் உயிர் வரிகளின் சொந்தக்காரர் வேறு யாருமல்ல, களத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயா அவர்கள் தான். உயிர்நாதத்தை மீட்டிய அந்தக் காட்சித் தொகுப்பு அதி அற்புதம். அலைகளின் துளிகளில் கூட கவிதை சேர்ந்திருந்த கமராக்களினைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
படத்தொகுப்பைத் திருத்தமாகச் செய்திருந்தார் வெண்ணிலா. படத்தின் ஆரம்பக் காட்சி போராளிகள் மருத்துவமனையில் இருந்து ஆரம்பிக்கின்றது.
சுதாமதி என்ற போராளி கடல்யுத்தத்தில் கையில் குண்டடிபட்ட நிலையில் தனியொருத்தியாக கரைமீண்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். கடந்த காலங்கள் அவள் கண்களுக்குள் வந்து போகின்றன. தன் யௌவனத்தை சிதைத்துத் தன்னை தீர்க்கமான போராளியாக்கிய நினைவு வடுக்களை தடவிப் பார்க்கிறாள். தன் வெறிதீர்க்கும் போராட்டத்தின் முதல்கட்ட செயன்முறையில் தோற்றுவிட்டதை எண்ணி கலங்கித் தவிக்கிறாள். தன்னோடு வந்து உயிர்நீத்த சகபோராளிகளை எண்ணிக் கலங்குகிறாள். கதையின் மூலக்கருவுக்குள் நுளைகின்ற அறிமுகக் காட்சிதான் சுதாமதி தாதியான ஒரு பெண்ணிடம் கதை கூறும் நிகழ்வு. நடந்தவை அவள் கண்களுள் காட்சியாக விரிய கிளாளிக்கடலில் தொடர்கிறது சாட்சி. அற்பதமான இயக்கம்.
இத்திரைப்படத்தின் ஒரு குறை காட்சிகளின் நீளம். இதை இனிவரும் காலத்தில் கவனத்தில் கொள்வர் என நம்புகிறேன். போராளிகளின் படைப்பாதலால் போரியல்கலைகளை தத்ரூபமாக்கி போராளிகளின் கடின பணியை மக்களுக்கு உணர்த்த காட்சிகளின் நீளத்தை குறித்து கவனத்தில் கொள்ள வில்லை போலும். விசைப்படகை கைப்பற்றும் தாக்குதலின் ஒவ்வொரு கட்ட நடவடிக்கைகளும் சற்று மேலதிக விபரங்களுடன் கலையம்சத்திலிருந்து விலகி யதார்த்த நிதர்சனத்துள் படத்தை இட்டுச் செல்கிறது. இது குறையா? நிறையா? என்பது பார்வையாளர் சம்பந்தப்பட்டது. தென்னிந்திய திரைப்படங்களின் அழகியலம்சங்களுக்கு பழக்கப்பட்டவர்க்கு குறையாகத் தோன்றலாம். சோரவும் வைக்கலாம். தாயகப் போரின் போராட்ட நிகழ்வுகளை அறிந்து கொள்ளத் துடிக்கும் தாயகப்பற்றுள்ளோருக்கு ஆர்வமூட்டலாம். எது எவ்வாறாயினும் இது நிஜத்தின் நிதர்சனம் என்பது மறுக்க முடியாத ஒன்று. மதிக்கப்பட வேண்டிய ஒன்றும் கூட.
முதற்கட்ட உளவு முயற்சியின் போது படையினரால் சுற்றி வளைக்கப்ட்டு விசைப்படகிலேயே போராளிகள் உடலங்கள் கிழக்கப்பட்டு உப்புநீரில் உதிரம் கரையும் காட்சி நெஞ்சை பிடுங்குகிறது. சினிமாக்களில் வருவதுபோல் இவை கற்பனை அல்ல என்ற உண்மை உறுத்துகிறது. விழியோரத் தவிப்பைத் தவிர்க்க முடியவில்லை.
அடுத்த கட்டமான நான்கு போராளிகளின் நீருக்கடியில் சென்று பார்க்கும் உளவுக் காட்சியில் நிஜத்தின் துளிகளை கொட்டிடாமல் சொட்டவிடும் இயக்குனரின் தாகம் புரிகிறது.
தொடர்ந்து வேவின் தகவலடிப்படையில் பயிற்சி எடுக்கும் பதினைந்து புலிகளின் வீரசாகச வித்தைகள் மயிர்க்கூச்செறிகின்றன. சிரிப்புகளில் உள்ளம் நனைகிறது. பயிற்சியின் போது களவாய் து}ங்குவது சிரிக்க வைக்கிறது.ஷஷ டொல்பின்கள்|| கடல்நீரில் வரிசை குலையாமல் கரணமடித்த காட்சி இன்றும் கண்களுக்குள் நிழலாக வருகிறது. அக்கடினமான அந்தச் சண்டைப் பயிற்சிகளை தொகுத்த கோகுலனுக்கு என் பாராட்டுக்கள்.
முதற்கட்ட யுத்ததத்தில் பங்கேற்ற கடல் கொமாண்டோக்களுள் உயிர் மீண்டு கரைசேர்ந்த சுதாமதி கூறிய தகவலின் அடிப்படையில் இரண்டாம் கட்ட யுத்தம்; திட்டமிடப்பட்டு ஆற்றப்பட்டு வெற்றியும் ஈட்டப்படுகிறது. இந்த யுத்தக் காட்சியின்போது ஆசன விளிம்பில் அமர்ந்த நாம் வெற்றியின் களிப்பில் ஆசுவாசமாக மூச்சு விடுகின்றோம்.அந்த கடல்யுத்தத்தை அருகிலிருந்து பார்த்தது போன்ற உணர்வு. இந்தப் படைப்பினைச் சாத்தியமாக்கிய கலைக்குழாமிற்குப் பாராட்டுக்கள்.
இது போன்று வாழ்ந்த மாவீரரின் வரலாற்று சரித்திரங்கள் இனிமேலும் கலைப்படைப்புக்கு பதியப்பட வேண்டும். எழுதப்படாத உணர்வுகளையும், உயிர்களையும் இனிமேலும் சேர்த்திழக்க நிதர்சனம் வெளியீட்டுப் பிரிவினர் முன்வர வேண்டும். எம்மவர் திரையுலக வளர்ச்சிக்கு புதிய பரிணாமத்தை அமைத்து கொடுப்பது புலம்பெயர்ந்த வாழும் ஒரு தேசிய மக்களான எமது கைகளிலேயே உள்ளது. இக்கரைகளிலிருந்து அக்கரை நோக்கி எம் கரங்கள் நீளட்டும். தென்னிந்திய திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் அமிழ்ந்து கிடக்கும் எம்மவர் கவனத்தை அப்படைப்புகள் திருப்பிடும் நாள் து}ரத்திலில்லை. அழகியலம்சங்களையும் சேர்த்து நிஜசரிதங்கள் நினைவுச் சின்னங்களாக்க படைப்பாளிகள் முன்வர வேண்டும்.
உப்பில் உறைந்த உதிரங்களள் வெறும் கதைகள் அல்ல மறந்துவிட்டு செல்ல. மறவர் சரிதங்கள் சந்ததிதோறும் காவப்பட வேண்டும். இதுபோன்ற பல்லாயிரம் சரிதங்களால் எழுதப்பட்டதுதான் தமிழர் வரலாறு. இதை எழுதிய ஒவ்வொரு மறவரும் தனித்தனி வரலாறுகள். அந்த வரலாறுகள் உலகறியச் செய்யக் காலப்பதிவுகளைத் தொடர்ந்து படைப்பது படைப்பாளிகளின் கடனும் காலத்தின் தேவையுமாகும்.