Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
கிழக்கிலங்கையில் புலிகள் மீதான தாக்குதல்கள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/12/20041201170928chandrika.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மீது அண்மைக்காலமாக நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் முகமாக, ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நியமித்துள்ளார்.
அந்த அமைப்பின் உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்களுக்கு எந்த பயங்கரவாதக் குழு அல்லது வேறு சக்தி காரணம் என்று இந்த ஆணைக்குழு ஆராயும்.
இது தொடர்பாக இன்று ஜனாதிபதி செயலகத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
இரண்டு மேல் நீதிமன்ற நீதிபதிகள் இந்த ஆணைக்குழுவில் இடம்பெறுவார்கள்.
ஒருமாத காலத்துக்குள் இந்த ஆணைக்குழு தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும்.
கடந்த மாதம் விடுதலைப்புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளார் கௌசல்யன் கொலை செய்யப்பட்டதுடன், நேற்று திங்கட்கிழமை அந்த அமைப்பின் மூன்று பெண் உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
BBC தமிழோசை
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பின்றி இத்தாக்குதல் இடம்பெற்றிருக்க முடியாது: விடுதலைப் புலிகள்
கிளிநொச்சியிலிருந்து தனோஜன் செவ்வாய்க்கிழமை 01 மார்ச் 2005 21:18 ஈழம்
விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் குவேனி மற்றும் சசிமதிää அகநிலா ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் அறிக்கையொன்றை பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையை இங்கே தருகிறோம்:
28.01.2005 அன்று விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் குவேனி உள்ளிட்ட மூன்று பெண் போராளிகள்மீது ஆயுதக்குழுவினரால் நேற்றுமேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர்கள் மூவரும் படுகாயமடைந்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் குவேனி மற்றும் சசிமதிää அகநிலா ஆகியோர் நேற்று மாலை 6.00 மணியளவில் கொக்கட்டிச்சோலையிலிருந்து தங்கவேலாயுதபுரத்தை நோக்கி முச்சக்கர வண்டியொன்றில் சென்றுகொண்டிருந்தபோதுää தம்பிலுவில் சவக்காலைக்கண்மையில் வைத்து உந்துருளியில்வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர்கள் மூவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போராளிகள் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியை இடைமறித்துத் தாக்குதல் நடாத்திய நபர் அதன்பின்னர் அருகேயுள்ள படைமுகாமினுள் சென்றமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
யுத்தநிறுத்த உடன்படிக்கையின் விதிமுறைகளுக்கமைய இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிராயுதபாணிகளாக அரசியல் பணியிலீடுபட்டு வரும் எமது போராளிகள் மீது தாக்குதலை மேற்கொள்வது அப்பட்டமான யுத்தநிறுத்த மீறலாகும். இத்தாக்குதல் நடைபெற்ற வீதியில் விசேட அதிரடிப்படையினர் சகல வாகனங்களையும் சோதனையிட்டு வருவதால் அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பின்றி ஆயுதக்குழுவினர் இத்தாக்குதலை மேற்கொண்டிருக்க முடியாது.
படைத்தரப்பின் அநுசரணையுடனும் ஆதரவுடனும் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான தாக்குதல்கள் தடைப்பட்டுப் போயிருக்கும் சமாதான முயற்சிகளை மீள ஆரம்பிப்பதற்கும் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான நிவாரணம்ää புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் பெரும் பங்கம் விளைவிக்கும் என்பதுடன் 3 வருடகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கும் பாரதூரமான விளைவையே எற்படுத்தும் என நாம் அஞ்சுகிறோம்.
யுத்தநிறுத்த காலப்பகுதியில் பல பொறுப்பாளர்களையும் போராளிகளையும் இவ்வாறான துரோகத்தனமான தாக்குதல்களால் இழந்தும்கூட பொறுமைகாத்துவரும் தமிழ் மக்களையும்; விடுதலைப்புலிகளையும் சீண்டும் நடவடிக்கையாகவே இவ்வாறான சம்பவங்கள் அமைகின்றன. இவற்றினால் ஏற்படப்போகும் விளைவுகள் தொடர்பாக இலங்கைப்போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவானது தனது அவதானிப்பையும் அறிக்கையையும் வெளியுலகிற்குத் தெரியப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
காயமடைந்த இரு பெண் போராளிகள் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றம்
கல்முனை நிருபர் செவ்வாய்க்கிழமை 01 மார்ச் 2005 22:37 ஈழம்
அம்பாறை மாவட்டம் தம்பட்டையில் நேற்று மாலை இடம்பெற்ற இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பெண் போராளிகளில் இருவர் இன்றிரவு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றிற்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் குவேனிää துணை அரசியல்துறை பொறுப்பாளர் சசிமதி ஆகியோரே குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
அடுத்த பெண் போராளியான அகநிலா ஹெலிகொப்டரில் இட நெருக்கடி காரணமாக தொடர்ந்தும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இலங்கை நேரப்படி இரவு 8.30 மணிக்கு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மைதானத்தில் தரையிறங்கிய ஹெலிகொப்டரில் இவர்கள் அம்பாறை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தயார் நிலையிலிருந்த சிறியரக விமானமொன்றில் கொழும்பு ரத்மலானை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.
பின்னர் அங்கிருந்து அம்புலன்ஸ் வண்டி மூலம் குறிப்பிட்ட தனியார் வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள்.
இந்த பயணத்தின் போது இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு பிரதிநிதியொருவரும் சென்றிருந்தார்.
இதேவேளை இப்படியான சமப்வங்களை தொடர்ந்தும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் நாயகம் புலித்தேவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விசேட அதிரடிப்படையின் ப10ரண கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இந்த சம்பவம் இடம் பெற்றிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
பெண் போராளிகள் மீதான சூட்டுச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது
கல்முனை நிருபர் செவ்வாய்க்கிழமை 01 மார்ச் 2005 22:37 ஈழம்
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் குவேனி உட்பட 3 பெண் பாராளிகள் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பெரிய கல்லாற்றைச் சேர்ந்த பிரதீபன் எனப்படும் ஜோண்சன் ஜெயகாந்தன் (வயது 28) என தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகளினால் தெரிவிக்கப்பட்ட தகவலொன்றின் பேரில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி சுனாமி அகதி முகாமில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினரால் இவர் கைது செய்யப்பட்டு கல்முனை பொலிசில் ஒப்படைக்கப்பட்டார்.
தற்போது இந்நபர் மேலதிக விசாரணைக்காக திருக்கோவில் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலக்கப்பட்ட இவர் சில காலம் ராசிக் குழுவில் இணைந்து செயல்பட்டதாகக் கூறப்படுகின்றது.
Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
துப்பாக்கிச்; சூடு நடத்தியதில் சிங்களப் படைக்கு ஒத்துழைப்பு உண்டு: காயமடைந்த குவேனி உறுதியிட்டு கூறுகிறார்!
தங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்; சூடு சிறீலங்கா விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்புடனேயே நடந்துள்ளதாக இந்த சம்பவத்தில் காயமடைந்த விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் குவேனி மற்றும் போராளி அகநிலா ஆகியோர் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் குவேனி கூறியுள்ளதாவது:
சம்பவ தினம் அக்கரைபற்று விசேட அதிரடிப்படை இராணுவ முகாம் வழியாக பயணம் செய்தபோது வழமையான பதிவுகள் அங்கு இடம்பெறவில்லை.
இந்த முகாமை கடந்து சென்ற சமயம் சற்றுத் தொலைவில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அந்த இடத்தில் காணப்பட்ட நபர் ஒருவர் எங்களை உற்று நோக்கினார். அவரை நாங்கள் கடந்து சிறிது தூரம் சென்றபோது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்நது வந்த அவர் எமது ஆட்டேவை வழிமறித்து நிறுத்தச்; சொன்னார்.
சாரதி நிறுத்தாமல் சென்ற சமயம் கைத்துப்பாக்கியை காட்டியதையடுத்து பயத்தின் நிமித்தம் சாரதி ஆட்டோவை விட்டு குதித்து ஓடினார்.
துப்பாக்கிதாரி எங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். காயமடைந்த எங்களை யாரோ வைத்தியசாலையில் கொண்டுசென்று அனுமதித்தனர்.
முகாமிலிருந்து 200 மீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்தப்பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புகள் இல்லாது விட்டாலும் விசேட அதிரடிப் படையினரின் முகாம் இருக்கின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது.
அன்றைய தினம் எமது கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து பட்டிருப்பு பாலம் வழியாக இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நாங்கள் நுழைந்த சமயம் கூட வழமையான பதிவுகள் அங்கு இடம்பெறவில்லை. வெற்றுத் தாளிலேயே பதியப்பட்டது.
இதனையெல்லாம் நோகக்கும் போது சிறீலங்கா படையினரின் ஆதரவுடன் தான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்பதை திட்டவட்டமாக அறியக்கூடியதாக உள்ளது என்றார் அவர்.
போராளி அகநிலா இந்த சம்பவம் தொடர்பாக கூறுகையில்ää
துப்பாக்கிதாரி மோட்டார் சைக்கிளில் தொங்கிக் கொண்டிருந்த சொப்பிங் பைக்குள் இருந்து கைத்துப்பாக்கியை எடுத்து தங்கள்மீது சுட்டதாக கூறினார்.
அந்நபர் சிவப்பு கோட்டு சேர்ட் அணிந்திருந்தார். உடல் பருத்த கறுப்பு நிற மனிதர் என்றும் அகநிலா கூறினார்.
சுட்டபழம்
நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
பெண் போராளிகளை சுட்ட சந்தேக நபர் கல்முனைப் பொலிஸாரிடம் ஒப்படைப்பு
புலிகள் அமைப்புகளிலிருந்து விலகி ராசிக் குழுவில் இணைந்தவர்
அம்பாறை தம்பிலுவில் மயானத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ராசிக் குழுவைச் சேர்ந்த பிரதீபன் என்பவர் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் கொக்கட்டிச் சோலையிலிருந்து திருக்கோவில் நோக்கி ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டிருந்த மட்டு.- அம்பாறை மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் குவேனி, துணை அரசியல்துறைப் பொறுப்பாளர் சசிமதி மற்றும் அகநிலா ஆகியோர் மீது தம்பிலுவில் மயானத்திற்கு முன்பாக வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
`மொபெட்' மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் ஒருவரே இவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
தாக்குதலை நடத்திவிட்டு இருவரும் `மொபெட்'டில் தப்பிச் செல்ல முயன்றபோது, ஆட்டோவின் பின்னால் வந்த கல்முனை அரசியல்துறைப் பொறுப்பாளர் ரஞ்சன் உட்பட ஐந்து போராளிகள் இவர்களை வழிமறிக்க முற்பட்ட போது, தாக்குதல் நடத்திய துப்பாக்கி தாரி துப்பாக்கியை காட்டி இவர்களை மிரட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இவ்வேளையில் துப்பாக்கிதாரியை புலிகள் நன்கு அவதானித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றுக் காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிதாரி மற்றொருவருடன் தனது `மொபெட்' மோட்டார் சைக்கிளில் கல்முனை ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார்.
இவ்வேளையில் கல்முனை அரசியல்துறைப் பொறுப்பாளர் இவரை அடையாளம் கண்டு, ஏனைய போராளிகளிடம் அவரைக் காட்டி அவரை நோக்கி ஓடிச் சென்ற போது, நிலைமையை உணர்ந்த அந்த துப்பாக்கிதாரி அப்பகுதியில் நின்ற விஷேட அதிரடிப் படையினரிடம் ஓடிச் சென்று அடைக்கலம் தேடிக் கொண்டார்.
அவ்விடத்திற்குச் சென்ற புலிகள், ஆஸ்பத்திரியில் நோட்டம் பார்த்து காயமடைந்தவர்களை தாக்கும் நோக்கிலேயே அவர் வந்ததாகவும் இவரே தங்கள் போராளிகள் மீது தம்பிலுவிலில் தாக்குதல் நடத்தியதாகவும் கூறி அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர்.
எனினும், அதற்கு அதிரடி படையினர் மறுப்புத் தெரிவித்ததுடன், திருக்கோவில் பகுதியிலேயே தாக்குதல் சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதி பொலிஸாரிடமே விசாரணைக்காக அவரை ஒப்படைப்போமெனக் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கும், கல்முனைப் பொலிஸாருக்கும் இதுபற்றி புலிகள் அறிவித்ததுடன் புலிகளும் அவ்விடத்திலேயே நீண்ட நேரம் காத்திருந்தனர்.
நண்பகலளவில் அங்கு வந்த கண்காணிப்புக் குழுவினர், துப்பாக்கித் தாரியென புலிகளால் அடையாளம் காட்டப்பட்ட மட்டக்களப்பு , கல்லாறைச் சேர்ந்த பிரதீபன் என்ற இந்த இளைஞர் பற்றிய விபரங்களை பெற்றதுடன் அவரை புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிலையில், பிற்பகலளவில் பிரதீபன் கல்முனைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர், திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
யார் இவர்?
கல்லாறு பிரதீபன் (31 வயது) 92 முதல் 98 ஆம் ஆண்டு வரை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர். இவரது சில மோசமான நடவடிக்கைகளால் இவர் அமைப்பிலிருந்து நீக்கப்பட, 98 லேயே ராசிக்குழுவுடன் இணைந்துக் கொண்டார்.
அதேநேரம், மட்டக்களப்பு பற்பொடித் தொழிற்சாலை இராணுவ முகாமிலுள்ள புலனாய்வுப் பிரிவினருடனேயே இவர் செயற்பட்டு வந்தார்.
இவ்வேளையிலேயே இவர் திங்கட்கிழமை இரவு இந்தத் தாக்குதலை நடத்தியதாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கண்காணிப்புக் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
--------------------------------------------------------------------------------
சுட்டது தினகுரல்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
விசாரணைக் குழு ஒரு கண்துடைப்பு - புலிகள்
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/07/20040711164059_40370067_thamilselvan_ap203ix.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மீது அண்மைக்காலமாக நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் முகமாக ஆணைக்குழு ஒன்றை இலங்கை ஜனாதிபதி நியமித்திருப்பது வெறும் கண்துடைப்பு என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இப்படிப்பட்ட குழுக்களை அமைப்பதில் தமக்கு நம்பிக்கையில்லை என்று தமிழோசையிடம் பேசுகையில் தெரிவித்த விடுதலைப் புலிகள் அரசியல்துறை பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன், ஆணைக்குழுக்களாலும் விசாரணைகளாலும் நீதி கிடைக்கும் என்று தாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
இலங்கையில் இப்படி விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவை பலன் தராது போனதற்கு போதிய வரலாறு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யன் படுகொலை உள்ளிட்டு பல கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் இலங்கைப் படையினரும் அவர்களோடு இணைந்து பணியாற்றும் ஆயுதக் குழுக்களும்தான் என்று தாங்கள் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தும் அரசு இதுவரை அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை என்று அவர் சாடினார்.
விடுதலைப் புலிகள் மீது ஒரு நிழல் யுத்தத்தை மேற்கொள்ளும் விதமாக அரசு நடந்துகொள்வது குறித்து போர்நிறுத்தக் கண்காணிப்பாளர்களுக்கும் நோர்வே அனுசரணையாளர்களுக்கும் தமது அதிருப்தியினை விளங்கப்படுத்தியிருப்பதாக தமிழ்செல்வன் கூறினார்.
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/03/20050302140506woundedtiger_uthayakumar203.gif' border='0' alt='user posted image'>
சிகிச்சைக்குச் செல்லும் காயமடைந்த பெண் புலிகளில் ஒருவர்
BBC Thamiloosai
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
திருப்பியடிக்கும் வரை இப்படி சொறிந்து கொண்டிருப்பார்கள்......1
<b> </b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பெண் போராளிகளைச் சுட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவு
அம்பாறை தம்பிலுவில் பகுதியில் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகக் கூறப்படும் கல்லாறைச் சேர்ந்த பிரதீபன் என்பவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
தற்போது கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவரை அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு கொண்டு வருவதில் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதாகக் கூறிய பொலிஸார், இவர் தொடர்பாக நேற்று மாவட்ட நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, பிரதீபனை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ரி.எல்.ஏ.மனாப் உத்தரவிட்டார்.
தம்பிலுவில் மயானத்திற்கு முன்பாக திங்கட்கிழமை மாலை இவரே பெண் போராளிகள் மூவர் மீதும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அதேநேரம், மறுநாள் காலை இவர் கல்முனை ஆஸ்பத்திரி பக்கம் நோட்டமிட வந்த போது புலிகளால் அடையாளம் காணப்பட்டார்.
புலிகள் தன்னை பிடித்து விடுவார்களென்ற அச்சத்தில் இவர் உடனடியாக அப்பகுதியில் நின்ற விஷேட அதிரடிப் படையினரிடம் அடைக்கலம் பெற்றார்.
பின்னர் இவர் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதும் தெரிந்ததே.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
குவேனியைச்சுட்டவர்; முன்னாள் இராணுவ உளவாளி: படை வட்டாரங்கள் தகவல்
தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டு. அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் குவேனி உட்பட மூன்று பெண் போராளிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் முன்னாள் இராணுவ உளவாளியாக செயற்பட்டதுடன் தற்போது கருணா குழுவில் இணைந்து செயற்படுவதாகவும் இராணுவ தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
மேற்படி புலிகளின் போராளிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த நபரின் உண்மையான பெயர் ஜோன்சன் ஜெயகாந்தன் என்றும் இவர் கடந்த காலங்களில் இராணுவத்தினருக்கு உளவுத்தகவல்களை வழங்கி பல்வேறு வகைகளில் செயற்பட்டார் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இது குறித்து இராணுவ வட்டாரங்கள் மேலும் தகவல் தருகையில்
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஜெயகாந்தன் வெளிநாடு ஒன்றில் சிறிதுகாலம் தங்கியிருந்து விட்டு கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி இலங்கை திரும்பி கருணா குழுவில் இணைந்து கொண்டார்.
சம்பவ தினமான கடந்த திங்கட்கிழமை மாலை குவேனி குழுவினர் மீது தம்பிலுவில் பகுதியில் வைத்து இவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். அதேவேளை இவரை இனங்கண்டு கொண்ட விடுதலைப் புலிகள் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
ஜெயகாந்தனோ புலிகளின் பிடியிலிருந்து ஒருவாறு தப்பி கல்முனை கார் மேல் பாத்திமா தேசிய பாடசாலையில் அமைந்துள்ள ஆழிப்பேரலை நலன்புரி நிலையத்துக்குள் புகுந்து அங்கு கடமையிலிருந்த அதிரடிப்படையினரிடம் தன்னை கொலை செய்யும் பொருட்டு விடுதலைப்புலிகள் துரத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை அங்கு வந்த புலிகள் உறுப்பினர்கள் இவரே குவேனி குழுவினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த நபர் எனவும் அதையறிந்து தாங்கள் பின் தொடர்ந்து வந்த வேளை இங்கு வந்து புகுந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக கல்முனை மற்றும் திருக்கோவில் பொலிஸாருக்கு அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர். பின்னர் அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார் என தெரிவித்தனர்.
சுட்டபழம்
நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
:twisted: :twisted: :twisted:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
குவேனியை சுட்டவர் கைது என்றவுடன் நல்ல விடயத்தை செய்திருக்கிறார்களே அதிரடிபடை என்றுபார்த்தால் நம்மவர்கள் தான் பிடித்து கொடுத்திருக்கிறார்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
என்ன ஈழப்பிரியன் எந்த உலகத்தில் வாழ்கிறீர் சுட்டவர் தெரியாத்தனமாக மாட்டுப்பட்டுவிட்டார். உடனடியாக இராணுவம் முன்னாள் என்ற அடைமொழியை பாவித்துவிட்டார்கள். இப்ப இராணுவத்துக்கு உள்ள ஒரு பிரச்சனை அவரை எப்படி தப்புவிப்பது என்பதுதான்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அரசே பொறுப்பு!
அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகளைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி அடைந்துள்ளது. ஆயினும் தோல்வியில் முடிவடைந்தது என்பதற்காக இவற்றை ஓரம் தள்ளி விடவோ ஒதுக்கி விடவோ முடியாது.
ஏனெனில் அரசியலில் ஈடுபட்டுள்ள விடுதலைப்புலிகளின் மீது மேற்கொள்ளப்படும் இத்தாக்குதல்கள் யுத்த நிறுத்த உடன்பாட்டையே கேள்விக் குறியாக்கும் வகையில் பாரதூ}ரமான விளைவுகளுக்கு விரைவில் இட்டுச் செல்லக் கூடியவை.
ஏனெனில் சூழ்நிலை எப்பொழுதும் ஒரே மாதிரியானதாக இருக்கும் என்றோää தொடர்ந்தும் பொறுமை கடைப்பிடிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதோ மடமை.
மட்டக்களப்பில் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்படப் போராளிகள் மற்றும் மாமனிதர் சந்திரநேரு போன்றவர்களின் படுகொலைகளின்; பின்பும் விடுதலைப்புலிகள் பொறுமையுடன் யுத்த நிறுத்தத்தைப் பேணி வருகின்றனர். அமைதி காக்கின்றனர் என்பதினால் அரசாங்கம் தப்புக் கணக்கு போட்டுள்ளது போலத் தெரிகின்றது. அதாவது புலிகள் பலவீனப்பட்டு விட்டார்கள் எனக் கருதுவது போல் உள்ளது.
இதன் வெளிப்பாடே மட்டு- அம்பாறை மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் குவேனிää துணைப் பொறுப்பாளர் சசிமதி மற்றும் போராளி அகநிலா ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் இது அரசாங்கத்தின் தப்புக் கணக்கு என்பது மட்டுமல்ல. அரசாங்கமே இதற்கான விலையையும் கொடுக்க வேண்டிவரும் என்பதையும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
இப் படுகொலையைச் செய்தவர்கள் யார் என்ற கேள்விக்குப் பதில் தேடுகையில் கண்டுபிடிக்கப்பட வேண்டிய ஒரே ஒரு விடயம். இத் தாக்குதலை நடத்தியவரின் பெயர்ää விலாசம் என்பன மட்டுமே. இதற்கு அப்பால் எதுவுமே கண்டு பிடிக்கவோää தேடப்பட வேண்டியஅவசியமோ இல்லை.
ஏனெனில் இத் தாக்குதல்களுக்கு முழுப் பொறுப்பும் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கமே ஆகும். அரசாங்கம் இத்தகைய தாக்குதலுக்கு அங்கீகாரம் அளித்தால் போதும்ää செய்து முடிப்பவர்கள் எல்லாம் சிறிலங்காப் புலனாய்வுத் துறையினரும்ää இராணுவத் தரப்பினருமே ஆகும்.
அரச படைகளுடன் எந்தவொரு தமிழ்ஆயுதக் குழுவும் இணைந்து செயற்படவில்லை. எந்த ஆயுதக் குழுவிற்கும் அரசாங்கம் ஆயுதங்களை விநியோகம் செய்யவோää பாதுகாப்பு அளிக்கவோ இல்லையெனச் சனாதிபதி சந்திரிகாவோ அன்றி அவருடைய அரசாங்கத் தரப்போ கூறிக் கொள்ளலாம். ஆனால் உண்மை நிலை அவ்வாறானதாக இல்லை என்பதைப் பல நிகழ்வுகள் ஏற்கனவே நிருபித்துள்ளன.
தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு அரசாங்கம் ஆயுதங்களை வழங்குவதென்பதும்ää அவர்களைப் பராமரித்து வருவதென்பதும்ää இதற்குப் பிரதியீடாக இவ் ஆயுதக் குழுக்கள் தமிழ்த் தேசியத்தைக் குலைக்கும்ஃபலவீனப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதும் விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செயற்படுவதும் நீடித்து வரும் நிகழ்வுகளாகும். இத்தகைய ஆயுதக் குழுக்களில் ஒரு பகுதியினர் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையினருடன் இணைந்து செயற்பட்டமை கூட கடந்த காலத்தில் வெளிவந்த விடயங்களாகும்.
ஆனால் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவோ துணைப்படை எதுவும் இல்லை. ஆயுதப் படைகளின் உதவியுடன் செயற்படும் ஆயுதக் குழுக்களும் இல்லை எனத் தெரிவிப்பது சிறுபிள்ளைத்தனமானது. சனாதிபதி சந்திரிகா பொய் கூறுவது புதிதல்லத்தான். ஆனால் உலகறிந்த உண்மையொன்றைத் தனது பொய்களால் மறைத்து விடலாம் என்று சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எண்ணுவது தான் மடமையாகும்.
இது தவிர இத்தகைய படுகொலைகள்ää படுகொலை முயற்சிகள் யாவும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே நடைபெற்றுள்ளன. இதன் காரணமாகப் இப் படுகொலைகளுக்கு இராணுவமே முழுப் பொறுப்பேற்க வேண்டும். இதில் இராணுவம் ஈடுபடவில்லை என்றோää இராணுவத்திற்கு சம்பந்தம் இல்லை என்றோ மறுப்பதில் அர்த்தமில்லை.
ஆயுதக் குழுக்களோää துணைப்படைப் பிரிவுகளோ இராணுவத்துடன் இல்லையெனில் தாக்குதல்களை மேற்கொள்பவர்கள் இராணுவத்தினர் என்பதாகிவிடும். ஏனெனில் தாக்குதல்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் என்பது மாத்திரமல்ல ஆயுதப் படைத்தரப்பின் முகாம்களுக்கு அண்மையாகவும்ää இராணுவக் காவலரண்களுக்கு இடையிலும் நடைபெறுவதே வழமையாகியுள்ளது.
ஆகையினால் இத் தாக்குதல்களை இராணுவத்தினரின் பலத்துடன் இயங்கும் துணைப்படைக் குழுக்கள் அன்றி இராணுவத்தினரே மேற்; கொள்ளுதல் வேண்டும். இதில் யார் தாக்குதலை மேற்கொண்டாலும் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். அது மாத்திரமல்ல இத்தாக்குதலின் எதிர் விளைவுகளுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் இவை இரண்டையும் போதிப்பவர்களாகவும்ää அவர்களின் ஆதரவவைப் பெற்றுக் கொள்பவர்களாகவும் ஆட்சியாளர்களே உள்ளனர்.
நன்றி: ஈழநாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஜனாதிபதி ஆணைக்குழுக்களால் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்பது வெறும் கானல் நீர் ஈழவேந்தன் எம்.பி. காட்டமான அறிக்கை
ஜனாதிபதி அமைக்கும் ஆணைக்குழுக்க ளால் தமிழ்மக்களுக்கு நியாயம் கிடைப்பது என்பது கண்துடைப்பு மட்டுமல்ல வெறும் கானல் நீர் போன்றது. - இவ்வாறு அறிக்கை ஒன்றில் தெரிவித்தி ருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க. ஈழ வேந்தன்
கிழக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் கள் மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் தொடர் பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனா திபதி நியமித்திருக்கும் ஆணைக்குழு தொடர் பாகவே ஈழவேந்தன் இந்த அறிக்கையை விடுத் திருக்கின்றார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரி வித்ததற்கமைய ஜனாதிபதி ஆணைக்குழு வெறும் கண்துடைப்பே. ஆனால் எம்மைப் பொறுத் தவரையில் ஜனாதிபதி அமைத்துள்ள ஆணைக் குழு கண்துடைப்பு மட்டுமல்ல வெறும் கானல் நீராகவும் விளங்குகின்றது.
ஈழத்தமிழ் மக்களுக்கு அரசினால் அநியா யங்கள் நடைபெறுகின்றதை எதிர்த்து நாம் குரலெழுப்புகின்ற போது காலப்போக்கில் அப் பிரச்சினையை நாம் மறக்கச் செய்கின்ற முறை யில் அரசு ஆணைக்குழுக்களை அமைப்பது வழக்கம். செல்வி கிரு~hந்தி குமாரசாமியை பாலி யல் வல்லுறவுக்கு ஆளாக்கிய வெறிகொண்ட சிங்கள இராணுவம் அவளையும் அவளின் தாயையும் தம்பியையும்ää துணைக்கு வந்த பக்கத்து வீட்டு இளைஞனையும் சாகடித்த போது தமிழ் மக்களிடம் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்கு வதற்கு சந்திரிகா கையாண்ட தந்திரம் ஆணைக் குழு அமைத்ததேயாகும். ஆண்டுகள் உருண் டோடிய நிலையிலும் கிரு~hந்திக்கு ஏற்பட்ட கொடிய நிகழ்வையொட்டியும் அவளும் அவள் சார்ந்த உறவினரும் சாகடிக்கப்பட்ட நிலையிலும் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு என்ன முடிவை எடுத்தது? நீதிமன்றம் என்ன தீர்ப்பினை வழங்கியது?
1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழா ராட்சி மாநாட்டில் ஒன்பது தமிழ் உயிர்கள் மாய்க் கப்பட்டன. மக்களிடையே கிளர்ச்சி எழுந்த போது ஆட்சியில் இருந்த சந்திரிகாவின் தாயார் சிறிமாவும் சன்சோனி விசாரணைக் குழுவை நியமித்தார். ஆனால் நடந்தது என்ன?
நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அனைத் தும் உருப்படியாக எத்தகைய ஆய்வையும் நடத்தவில்லை. மாறாக தூங்கி வழிந்தன.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக எத்தகைய ஆக்க பூர்வமான தீர்ப்பினை ஆணைக் குழுக்கள் வழங்கியுள்ளன? இன்று போர் நிறுத்த ஆணைக்குழுவும் விழிப்போடு எதனை யும் செய்யமுடியாது தத்தளிக்கின்ற காட்சியை நாம் காண்கின்றோம். எனவே தான் கிழக்கு மாகாண அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் மற்றும் அவரோடு செயற்பட்ட போராளி களையும் சாகடிப்பதற்கு காரணமாய் இருந்த சந்திரிகா அரசு இப்பொழுது மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் குவேனியையும் மற்றும் அவரோடு இணைத்து அகநிலா சசிமதி ஆகி யோரையும் துப்பாக்கிச் சூட்டினால் சாகடிக்க முனைந்து தோல்வி கண்ட நிலையில் தமிழ் மக்களிடம் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பைத் திசை திருப்புகின்ற முறையில் ஆணைக்குழு அமைக் கப்போவதாக குடியரசுத் தலைவர் கூறும் கூற்று அவரின் குதர்க்க வாதத்தை எடுத்துக் காட்டு கின்றது.
சிங்கள அரசு குள்ளநரிக் கூட்டமாக விளங்கி எமை ஏமாற்ற முயலலாம். ஆனால்ää தொடர்ந்து ஏமாற்றுவதற்கு நாம் கருங்காகங்களுமல்ல ஏமாளிக் கூட்டமுமல்ல. - இவ்வாறு தெரிவிக் கப்பட்டுள்ளது
Uthayan
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பயண அறிவுறுத்தலை புலிகள் அலட்சியப்படுத்துவதாக படைத்தரப்பு குற்றச்சாட்டு
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பயணம் மேற்கொள்ளும் புலி உறுப்பினர்கள் படையினருக்கு அறிவித்து அவர்களது பாதுகாப்புடனேயே பயணம் மேற்கொள்ள வேண்டுமென பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளபோதிலும், புலிகள் அவ்வறிவுறுத்தலை தொடர்ந்தும் புறக்கணித்து வருவதாக படையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மட்டக்களப்பில் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற புலிகள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதுகாப்பமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் திருக்கோவில் பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணஞ் செய்துகொண்டிருந்த 3 பெண் போராளிகளை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற இனந்தெரியாத நபரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அப்போராளிகள் காயமடைந்துள்ளனர். கடுமையான காயங்களுக்குள்ளாகியிருந்த அவர்கள் விசேட அதிரடிப்படையினரால் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விமான மூலம் கொழும்பிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாட்டின்படி இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுள் விஜயம் செய்யும் புலி உறுப்பினர்கள் படையினருடன் தொடர்புகொண்டு தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ளவேண்டும்.
ஆனால், அண்மைக் காலத்தில் இந்த இணக்கப்பாட்டைப் புலிகள் பலமுறை மீறியுள்ளனர். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் புலிகளுக்குப் பலமுறை அறிவுறுத்தியுள்ளார். இவ்வறிவுறுத்தல்கள் புறக்கணிக்கப்பட்டதன் விளைவாக பலமுறை அனர்த்தங்கள் நிகழ்ந்துள்ளன. அண்மைய சம்பவமாக கௌசல்யன் மற்றும் முன்னாள் எம்.பி.சந்திரநேரு ஆகியோரின் படுகொலைச் சம்பவங்கள் அமைந்துள்ளன. இச்சம்பவத்தின் பின்னரும், பாதுகாப்புப் படையினர் விடுதலைப் புலிகளின் பயணத்திற்குப் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
ஆனால், விடுதலைப் புலிகள் பாதுகாப்புப் படையினரின் இவ்வறிவுறுத்தலை தொடர்ந்தும் உதாசீனம் செய்துவருகின்றனர். கடந்தவாரம் இராணுவத்திற்கு அறிவிக்காது படையினரின் பாதுகாப்பின்றி புலித்தேவன் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அண்மையில்கூட பாதுகாப்புப்படையினரின் அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்து படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் பயணஞ் செய்துகொண்டிருந்த புலிப் போராளிகள் மீது இனந்தெரியாத ஆயுததாரி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பெண் போராளிகள் காயமடைந்துள்ளனர்.
தற்போது அந்த 3 போராளிகளும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>