02-23-2005, 05:30 AM
இந்த இரண்டையுமே எழுதியது நான் இல்லை. என் கணணிக்கும் எப்போதே சேமித்த வைத்தது. (சில சமயம் யாழிலிருந்து தான் எடுத்தேனோ தெரியவில்லை)
பிற் குறிப்பு 1: இதனை எழுதியவர் யாரோ அவருக்கு நன்றி.
பிற்குறிப்பு 2: முதலாம் மற்றும் இரண்டாவது காதல்கள் என்ற தலைப்பு ஒருவித வர்த்தக நோக்கம் கருதிய விளம்பர பாணியிலான தலைப்பு. அதன் மூலத் தலைப்பு எது என்று தெரியவில்லை.
அடுத்த காட்சியே உன்னுடன்
என் இறுதிக் காட்சியாய்
இறுதியாய்...
வேண்டாம் என்று மறுத்த என்
மனதுடன் போராடி இறுதியாய்
உனக்கொரு வார்த்தை சொல்ல
சம்மதம் பெற்றேன்
என் வார்த்தைகள் உன்னைத்
தொந்தரவு செய்யாவண்ணம்
உன் நினைவுகள் இனி என்னைத்
தொந்தரவு செய்யாவண்ணம்
வேறொரு உயிரில் உயிர்
வைக்க இன்று முதல் முயல்கிறேன்.
-----------------------------------
ஒருமுறைதான் காதல் அரும்புமென
உள்ளம் நினைத்திருந்தது
முகமறியா முதற்காதலின் முறிவால்
உறவொன்றின் இணைப்பை ஏற்க
உள்ளம் மறுத்திருந்தது
விருப்பு வெறுப்பற்ற மைதானத்தில்
விளையாடச்சொன்னது
இன்னும் பல உணர்வுளால்
தூசி படிந்து இரண்டு வருடங்களாய்
பூட்டியிருந்த இதயத்திற்குள் - இன்று
உன்னால் குடிபூரல்
கோலாகலமாய் நடக்கின்றது - ஆனால்
இம்முறை மௌனமே என்
முதல் வாhத்தையாகியது
என் ஆன்மாவின் உணர்வுகள்
என் விருப்பத்தை உனக்கு
வெளிப்படுத்தும்வரை உன்
கள்ளமற்ற உள்ளம் மட்டும்
என் கண்களுக்குத் தெரியட்டும்
மெனமே என் மொழியாக இருக்கட்டும்
என் உணர்வின் அலைகள் உன்னை
நெருங்குவதற்குள் நீ என்னிடமிருந்து
விலகிவிட்டால் என் விருப்பு மௌனமாய்
என்னுள்ளே சாகட்டும்
உறவு ஒன்று புதிதாய் உருவாகும்
உருவங்கள் உணராமலும் கருத்தரிக்கும்
வேறெவரும் உரிமைபெற உள்ளம் மறுக்கும்
எமக்கு மட்டும் சொந்தமானது
என்றெண்ணி மனம் பெருமிதம் கொள்ளும்
எமைவிட்டு பிரிந்து செல்லும் நிலைவரின்
ஏன் ? என்று பலவகை வினாக்கள் எழும்
விடைகளை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கும்
விதி என்று வெளி வார்தை பேசும்
கோபம் வராமல் பொய்யாய்
கோப வார்த்தை பரிமாறும்
உள்ளம் அழும்
மீண்டும் விதி என்று வெளிவார்த்தை பேசி
தனக்குத்தானே மனம் ஆறுதல் சொல்லும்
முதற் காதலின் வெறுமை இதயத்தின்
ஓரத்தில் தேங்கிக்கிடக்க உலக
மேடையில் வாழக்கைத் தொடரின்
அடுத்த காட்சி அரங்கேறும
பிற் குறிப்பு 1: இதனை எழுதியவர் யாரோ அவருக்கு நன்றி.
பிற்குறிப்பு 2: முதலாம் மற்றும் இரண்டாவது காதல்கள் என்ற தலைப்பு ஒருவித வர்த்தக நோக்கம் கருதிய விளம்பர பாணியிலான தலைப்பு. அதன் மூலத் தலைப்பு எது என்று தெரியவில்லை.
அடுத்த காட்சியே உன்னுடன்
என் இறுதிக் காட்சியாய்
இறுதியாய்...
வேண்டாம் என்று மறுத்த என்
மனதுடன் போராடி இறுதியாய்
உனக்கொரு வார்த்தை சொல்ல
சம்மதம் பெற்றேன்
என் வார்த்தைகள் உன்னைத்
தொந்தரவு செய்யாவண்ணம்
உன் நினைவுகள் இனி என்னைத்
தொந்தரவு செய்யாவண்ணம்
வேறொரு உயிரில் உயிர்
வைக்க இன்று முதல் முயல்கிறேன்.
-----------------------------------
ஒருமுறைதான் காதல் அரும்புமென
உள்ளம் நினைத்திருந்தது
முகமறியா முதற்காதலின் முறிவால்
உறவொன்றின் இணைப்பை ஏற்க
உள்ளம் மறுத்திருந்தது
விருப்பு வெறுப்பற்ற மைதானத்தில்
விளையாடச்சொன்னது
இன்னும் பல உணர்வுளால்
தூசி படிந்து இரண்டு வருடங்களாய்
பூட்டியிருந்த இதயத்திற்குள் - இன்று
உன்னால் குடிபூரல்
கோலாகலமாய் நடக்கின்றது - ஆனால்
இம்முறை மௌனமே என்
முதல் வாhத்தையாகியது
என் ஆன்மாவின் உணர்வுகள்
என் விருப்பத்தை உனக்கு
வெளிப்படுத்தும்வரை உன்
கள்ளமற்ற உள்ளம் மட்டும்
என் கண்களுக்குத் தெரியட்டும்
மெனமே என் மொழியாக இருக்கட்டும்
என் உணர்வின் அலைகள் உன்னை
நெருங்குவதற்குள் நீ என்னிடமிருந்து
விலகிவிட்டால் என் விருப்பு மௌனமாய்
என்னுள்ளே சாகட்டும்
உறவு ஒன்று புதிதாய் உருவாகும்
உருவங்கள் உணராமலும் கருத்தரிக்கும்
வேறெவரும் உரிமைபெற உள்ளம் மறுக்கும்
எமக்கு மட்டும் சொந்தமானது
என்றெண்ணி மனம் பெருமிதம் கொள்ளும்
எமைவிட்டு பிரிந்து செல்லும் நிலைவரின்
ஏன் ? என்று பலவகை வினாக்கள் எழும்
விடைகளை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கும்
விதி என்று வெளி வார்தை பேசும்
கோபம் வராமல் பொய்யாய்
கோப வார்த்தை பரிமாறும்
உள்ளம் அழும்
மீண்டும் விதி என்று வெளிவார்த்தை பேசி
தனக்குத்தானே மனம் ஆறுதல் சொல்லும்
முதற் காதலின் வெறுமை இதயத்தின்
ஓரத்தில் தேங்கிக்கிடக்க உலக
மேடையில் வாழக்கைத் தொடரின்
அடுத்த காட்சி அரங்கேறும
..


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->