Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளின் குற்றச்சாட்டுக்கு ஜனாதிபதி சந்திரிகா பதில்
#1
துணைப்படை ஏதும் இல்லை!
புலிகளின் குற்றச்சாட்டுக்கு
ஜனாதிபதி சந்திரிகா பதில்


இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கும் துணைப்படை என்று எதுவும் இல்லை என்று கூறுகிறார் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. நேற்று முன்தினம் தம்மைச் சந்தித்துப் பேசிய நோர்வேயின் விசேட சமாதான ஆலோசகர் எரிக் சொல்யஹய்மிடமே அவர் இந்தக் கருத்தை வலியுறுத்திக் கூறினார்.

தமது மட்டு.- அம்பாறை மாவட்ட அரசியல் துறை முன்னாள் பொறுப்பாளர் உட்பட 4 போராளிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கொல்லப்பட்டதற்கு இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் ஆயுதக் குழுக்களே காரணம் என்று புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையி லேயே ஜனாதிபதி இந்தக் கருத்தைத் தெரிவித் துள்ளார்.
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண உதவி களை சமமாகப் பங்கிடுவது மற்றும் உதவித் திட்டங்கçe நடைமுறைப்படுத்துவது தொடர் பான விடயத்தில் புலிகளுடன் சேர்ந்து செயற் படுவதற்கான ஏற்பாடு ஒன்றை (பொதுக் கட்ட மைப்பு) அரசு மேற்கொண்டு வருகின்றது என் றும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நோர்வே விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்யஹய்ம், ஜனாதிபதியை நேற்று முன் தினம் இரவு அவரது உத்தியோகபூர்வ மாளிகை யில் சந்தித்துப் பேசினார். அப்போதே ஜனா திபதி மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
ஜனாதிபதி - சொல்யஹய்ம் சந்திப்புக் குறித்து ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
இந்தமாத ஆரம்பத்தில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தைச் சந்தித் துத் தாம் பேசிய விடயங்கள் குறித்தும், கடந்த 22ஆம் திகதி கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வ னைச் சந்தித்துத் தாம் பேசிய விடயங்கள் குறித்தும் சொல்யஹய்ம் ஜனாதிபதிக்கு விளக் கினார்.
புரிந்துணர்வு உடன்படிக்கையின் சரத்து 1.8 இல் கூறப்பட்டுள்ளதன்படி இராணுவத் துணைப்படையினரின் ஆயுதங்கள் களையப் படாதது குறித்தும், தமது மட்டு.-அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்தவரான கெளசல்யனின் கொலை குறித் தும் தமிழ்ச்செல்வன் தெரிவித்த விடயங்களை சொல்யஹய்ம் ஜனாதிபதியிடம் கூறினார். ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணிகளுக் கான பொதுக்கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான புலிகளின் கருத்துக்களையும் அவர் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தார்.
கெளசல்யன் மற்றும் ஐவரின் படுகொலையை இந்தச் சந்திப்பில் ஜனாதிபதி கடுமையாகக் கண்டித்தார். அதேசமயம் இராணுவத்தினரு டன் சேர்ந்து துணைப்படைகள் இயங்குகின்றன எனக் கூறப்படும் குற்றச்சாட்டை ஐனாதிபதி அடியோடு மறுத்தார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தின் 3 ஆம் ஆண்டு நிறைவு வேளையில், கிளாலியில் புலிகளின் தாக்குதலில் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டும் மற்றொருவர் காயமடைந்தும் உள்ளமை குறித்த தனது கவலையை ஜனாதிபதி சொல்யஹய் மிடம் வெளியிட்டார்.
இந்தச் சந்திப்பில் சொல்யஹய்முடன் நோர் வேத் தூதுவர் ஹன்ஸ் பிரட்ஸ்கர் மற்றும் தூத ரக அதிகாரிகள் கலந்துகொண்டனர். அரசுத் தரப்பில் சமாதானச் செயலகப் பணிப்பாளர் ஜெயந்த தனபால மற்றும் வெளிவிவகார அமைச்சு செயலர் பாலிக்கார ஆகியோர் கலந்துகொண்ட னர்.இதேவேளை,நேற்றுமுன்தினம் இரவு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வையும் சந்தித்து இன்றைய அரசியல் நிலை குறித்து சொல்ஹய்ம் பேசினார்.

உதயன்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)