Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் கொத்திப் பேய்
#1
<span style='font-size:23pt;line-height:100%'>மீண்டும் கொத்திப் பேய்
சொத்தி முருங்கில் ஏறுகிறது.</span>
<img src='http://www.tamilnation.org/images/fundamentalism/monk4s.gif' border='0' alt='user posted image'>

போலிச் சாமியின் காவி வேட்டி
சாயம் கரைகிறது.
குரங்கு போட்டிருந்த மனித முகமூடி
கழன்று விழுகிறது.
சமாதானச் சங்கின் சுருதி கலைகிறது
மீண்டும்....
''கொத்திப் பேய்''
சொத்தி முருங்கில் ஏறுகிறது.
இனி கத்தும்
கல்லால் எறிந்து சண்டைக்கிழுக்கும்.
வெள்ளைக் கொடிக்கு
கொள்ளைக் காரர்கள் குருதி பூசுகின்றனர்.
கொம்பு சீவிய ''சிங்கக்காளைகள்''
சண்டைக்குத் தயாராகிவிட்டனர்.
புலுமச்சிலந்திக்கும், நட்டுவக்காலிக்கும்
பிறந்த புடையன் பாம்பின்....
நச்சுப்பற்கள் நமக்குத் தெரிகிறது.
சாந்த சொரூபத்தின் சுயரூபம்.
''டிரகுலா'' பற்களுடன் கூடிய கோரமுகம்
''எல்லாம் முடிந்தது தன்னானே
இனித் திருக்கையும் நெய்யும் தின்னானே''
நல்ல பழமொழி நமக்கும்பொருந்தும்.
கூத்துகாரர் ஒப்பனையைக் கலைத்து
உண்மை முகத்தை உலகுக்குக் காட்டினர்.
நன்றி,
''ஒரு பொல்லாப்பும் இல்லை
எல்லாமும் எப்பவோ முடிந்த அலுவல்''
''தேரடிச்சாமி'' தீர்க்கதரிசி.
நாங்கள்
ஆராத்தித் தட்டில் குங்குமம் கரைத்து
வாசலுக்கழைத்து வரவேற்பளித்தோம்
வந்திறங்கிய விமானப் பல்லக்கில்
புலுதிபடிந்த போது கூட
முத்தத்தாற்தானே ஒத்தியெடுத்தோம்
உங்களுக்குபாதம் நோகுமென்று
பஞ்சினால் அல்லவா பாதை சமைத்தோம்.
தலைவன் எழுதிய''சமாதான ஓலையை''
வெள்ளைப் புறாக்கள் எடுத்து விரைந்தன.
தங்கையிடம் தமிழீழமா கேட்டோம்?
.இல்லையே
ஒற்றையடிப்பாதை ஒன்றையே கேட்டோம்
வயிற்றுப் பசிக்கு வலைவீசக் கேட்டோம்.
இறைத்துப் பயிர் செய்ய எரிபொருள் கேட்டோம்
சலுகைகளைக் கூடத் தரமறுப்பவர்களிடம்
உரிமைகளை எப்படி எதிர்பார்க்கலாம்?
தெற்கில் தேர்தல் திருவிழாவின் போது
''சின்னமேளம்'' சிரித்து கொண்டது
பக்கவாத்தியங்கள் ''பல்லவி'' வாசித்தன.
''சொர்ப்பனசுந்தரி'' யின் நயன பாஷையில்
பலருக்கு பழையது மறந்து போனது.
இன்று
உண்மை முகத்திலடிக்கும் போது
அம்மாவும், அம்மம்மாவும்
சும்மா என்பது தெரிய வந்தது
புத்தனுக்கு 'அரச நிழலில ஞானம் விடிந்தது்'
தமிழனுக்கு அனுபவ நிழலில்' அறிவு பிறந்தது.
இனி என்ன செய்வது?
எடுத்த காவடியை இறக்கியே தீரவேண்டும்
போர் என்றால் போர் என்றான். 'பழைய கிழவன் '.
பேச்சுவார்த்தை முறிந்தால்
போர் என்றான் 'புதிய கிறுக்கன்'
இது தமிழர் மீதானபோர் பிரகடனம்.
தமிழனே என்னடா செய்யப்போகிறாய்?
கழற்றி வைத்த போருடையை
எடுத்து மாட்டு...
வீரவாளுக்கு வேலை வந்துவிட்டது
கசாப்புகடை மேசையிற் கூட
கருணை பிறக்கலாம்
பேச்சுவார்த்தை மேசையில் மட்டும்
உரிமை கிடைக்காது
இது புதிய வேதம்.
அனுபவம் தந்த ஆய்வின் முடிவு.
மட்டகளப்பில் சுற்றிவளைப்பு
தலைநகரில் தமிழர் கைது
பொன்னாலைக் கடலில் போனவர் கைது
வவுனியாவில் புதிய கெடுபிடி.
என்ன இது?
கையெழுத்திட்ட ஒப்பந்தம் என்னாச்சு?
கண்காணிப்புக் குழுவின் கண்களில்
கறுப்புதுணியா கட்டியிருக்கிறது?
பெரிய அளவில் தொடர்கிறது தமிழர் வதை
எப்படி பொறுக்கலாம்?
புலிகள் பேச்சுக்குப் போனதை
இழிவாகக் கருதியா இந்தஎடுத்தெறிவு?
பலவீனப்பட்டதாலே தான் பணிவு
என்று நினைத்தா இந்த உதாசீனம்?
பிரபாகரனின் கவச குண்டலத்தை
எந்த 'குந்தி' யும் வந்து எடுத்து போகவில்லை
ஆயுதப்போரில் அலுப்புத்தட்டி
தந்ததை வாங்கித் தலைகுனிந்து கொள்ள
பிரபாகரன் 'அரபாத' இல்லையென்பதை
அலரிமாளிகைக்கு அறிவித்துகொள்கிறோம்
கரும்புலி அணியைக் கலைத்து விட்டோம் என்று
அவர்களுக்கு
கனவிற் சொன்ன கடவுள் யார்?
ஏறிமிதிக்கும் இளம்புலி வீரரை
வேறு வேலைக்கா விட்டுள்ளோம்?
மூச்சுகாற்றே நெருப்பு மூட்டும்
பெண்கள் படையணி
கண்ணுக்கு மைபூசியா காலத்தைக் கழிக்கிறது?
கடற் புலிகள் அரிசி ஏற்றிக் கொண்டு
அமெரிக்காவுக்கா போய்விட்டார்கள்?
இல்லையே?
போருக்குத் தயாராக
சீருடையிற்தானே திரிகின்றனர்.
தங்கச்சி தப்புகண்க்குப்போட்டுவிட்டாள்.
ரத்வத்தை குடிப்பதற்கு ரத்தமா தேவைப்படுகிறது?
அட பாவி மனுஷா!
முந்தியிருந்த மந்திரிக்ள் முணுமுணுப்பது
அனுருத்தவின் காதுகளை அடைவதில்லையா?
தங்கையே!
ஈழத்தமிழரை
உன் 'அப்பன்' அடக்க நினைத்த போது
காலி முகத்திடலில் சத்தியா கிரகம்.
தமிழரை
உன் 'ஆத்தாள்' அழிக்க புறப்பட்ட போது
துப்பாக்கிப் போர் வேர் பிடித்தது
இன்று உனக்கும் அந்த நினைப்புதானா?
எச்சரித்து கொள்கிறோம்
புயலடிக்கும்.
பூகம்பம் வெடிக்கும்
மின்னல் வெட்டி முழக்கம் பிறக்கும்.
பொங்கிப் பிரவாகிக்கும் போரட்ட நதியின்
கரையெங்கும்
நீங்கள் சருகாய் ஒதுங்குவீர்
சின்னக் காற்றுக்கே கிளை முறிந்து போக
தமிழன்
உன் வீட்டுகிணற்றடியில் உள்ள ஈரப்பலா அல்ல.
இது வைரப்பனைகள் வளர்ந்துள்ள பூமி
புயலை பார்த்து பனைகள் புன்னகைக்குமே தவிர
தலையைக் கவிழ்ந்து சரிந்து விழமாட்டாது
தங்கையே!
தமிழர் கரும்பனைகள் என்பதை
கண்ணில் படுமிடத்தில் குறித்துகொள்.
போர்க்களத்திலா சந்திக்க விரும்புகிறாய்?
என்ன செய்வது
சத்தியத்திற்க்காக நாங்கள் கத்தியை எடுக்கின்றோம்.
தர்மத்துக்காக நாங்கள்
விலைகொடுக்கப் புறப்படுகின்றோம்
தர்மம் வெல்லும்
சத்தியம் வெல்லும்.!

புதுவை இரத்தினதுரை

(தாயகக்கவிஞரின் உணர்வின் வரிகள் தொடரும்........)

இக்கவிதை பற்றிய உங்கள் மதிப்பீட்டிற்கு இங்கே சொடுக்குங்கள்!
Reply
#2
புலிகள் பேச்சுக்குப் போனதை
இழிவாகக் கருதியா இந்தஎடுத்தெறிவு?
பலவீனப்பட்டதாலே தான் பணிவு
என்று நினைத்தா இந்த உதாசீனம்?
பிரபாகரனின் கவச குண்டலத்தை
எந்த 'குந்தி' யும் வந்து எடுத்து போகவில்லை
ஆயுதப்போரில் அலுப்புத்தட்டி
தந்ததை வாங்கித் தலைகுனிந்து கொள்ள
பிரபாகரன் 'அரபாத' இல்லையென்பதை
அலரிமாளிகைக்கு அறிவித்துகொள்கிறோம்
கரும்புலி அணியைக் கலைத்து விட்டோம் என்று
அவர்களுக்கு
கனவிற் சொன்ன கடவுள் யார்?
ஏறிமிதிக்கும் இளம்புலி வீரரை
வேறு வேலைக்கா விட்டுள்ளோம்?
மூச்சுகாற்றே நெருப்பு மூட்டும்
பெண்கள் படையணி
கண்ணுக்கு மைபூசியா காலத்தைக் கழிக்கிறது?
கடற் புலிகள் அரிசி ஏற்றிக் கொண்டு
அமெரிக்காவுக்கா போய்விட்டார்கள்?
இல்லையே?
போருக்குத் தயாராக
சீருடையிற்தானே திரிகின்றனர்.
தங்கச்சி தப்புகண்க்குப்போட்டுவிட்டாள்

அனைத்து வரிகளுமே கனல் கக்கும் எரிமலைகள்
மேற்சொன்னவை தெற்கு போட்ட தப்புக்கணக்கை
பிட்டுக்காட்டுகின்றது. தவறான கணக்கு போட்டு அழியப்போகும்
ஒரு இனத்தை என்ன சொல்லி காப்பாற்ற முடியும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#3
இணைப்புக்கு நன்றி ஹரியண்ணா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வியாசனின் வரிகள் நன்று
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
இணைப்புக்கு நன்று மன்னா..
[b][size=18]
Reply
#5
நன்றி மன்னா..
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)