Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்முகம் எங்கு தேடுவேன் - மீரா -
#1
காதலே காதலே என் தேசிய கீதமா?
காதலா காதலா - என்
காதல் உனக்கு சிலுவையா?

அன்னை மடி சுகத்தை நிதமும்
உன்னிடம் தேடித் தவித்தேன்
ஆதரவாய் உந்தன் தோளிலே
எந்தன் முகம் படர தவித்தேன்

கவிதையாய் நிறைத்த காதல்
காற்றிலே கலந்தது என்ன?
கடல் தாண்டியே கண்ணீரில் - நான்
வாழ்வதே தீர்வானதோ???

மனதும் மனதும் பேசிய காலம்
மௌனம் கூட அர்த்தமே
முகவரிகள் உறவெனவாக - உன்
காதல் சுயம் தான் தொலைந்ததே!

நீளமான இரவுகளில்
நீயில்லாத வெறுமை உணர்ந்தேன்
கண்ணீரெனும் தீர்த்தத்திலே -என்
காதல் துடுப்பில்லாப் படகாவதோ???

இறுகிப் போன உந்தன் மனதில்
என்முகம் எங்கு தேடுவேன்
இயந்திர வாழ்க்கை தன்னிலே - என்னை
நானும் தொலைத்து நிற்கிறேன்

திக்கு ஒன்றாய் சிதறிக் கசிந்த - எந்தன்
கவிதை உன்னைச் சேருமா
நாளையெந்தன் கல்லறை தனிலே
என் காதல் உனக்கென பூவாகுமோ.....?????????

- மீரா -
.
.!!
Reply
#2
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இறுகிப் போன உந்தன் மனதில்  
என்முகம் எங்கு தேடுவேன்  
இயந்திர வாழ்க்கை தன்னிலே - என்னை  
நானும் தொலைத்து நிற்கிறேன்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கவி வரிகள் நன்றாய் இருக்கிறது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
உங்களுக்கு என் நன்றிகள் ஜிப்ரான் கவிதை பொதுவாக எழுதப்பட்டிருப்பதால் யாரையும் சாடுவதாக இல்லாமல் இருக்கிறது. இவ்வளவு திறமைகளை வெளிக்கொணர உதவும் யாழ்களத்திற்கு என் நன்றி.
தொடருங்கள் உங்கள் கவிதைகளை காத்திருப்பேன் அவற்றிற்காக <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#4
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
திக்கு ஒன்றாய் சிதறிக் கசிந்த - எந்தன்  
கவிதை உன்னைச் சேருமா  
நாளையெந்தன் கல்லறை தனிலே  
என் காதல் உனக்கென பூவாகுமோ.....?????????  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்று நன்று தொடருங்கள் ஜிப்ரான் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)