Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
புலத்தில் சிறுவர்மரணங்கள் அதிகமாக நடப்பதனை அவதானிக்கலாம் குழந்தை பிறந்த சில நாட்களிலோ அல்லது 3 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளே இதில் அடங்குகின்றனர் காரணங்களை ஆராய்ந்தால் சிறிய பிரச்சனைகளாகதான் இருக்கும் இங்கு குழந்தை பிறந்ததும் இறந்தால் வைத்தியர்கள் குழந்தை கருவில் சரியாக வளரவில்லை குறைபாட்டுடன் வளர்ந்துள்ளது இறந்து விட்டது என்று சாதாரணமாக கூறிவடுவார்கள் எம்மவரும் அதை கேட்டு விட்டு சிலநாட்கள் அழுது போட்டு பின்னர் தங்கள் வேலையை பார்க்க போய் விடுவார்கள். எங்கே என்ன பிரச்சனை என ஆராய்வதோ அல்லது அதற்கான சட்ட நடவடீக்கை எடுக்க முன்வருவதோ இல்லை. காரணம் என்னவெனறால் தாய் தந்தையரிற்கு போதிய மொழியறிவு இல்லையென்பதே உதாரணமாக ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில் இருப்பவர்களை தவிர மற்றைய நாடுகளில் இருப்பவர்களே இந்த பிரச்சனைக்கு அதிகம் முகம் கொடுக்கின்றனர்.கர்பிணி தாய் 3 மாதங்களின் பின்னர் ஒவ்வொரு மாதமும் பெண்கள் சம்பந்தபட்ட விசேட வைத்தியரிடம் ஆலோசனையும் பரிசோதனையும் செய்தல் அவசியம் அவரிற்கோ கணவரிற்கோ மொழி தெரியாவிட்டால் வெட்கம்காரணமாக கர்ப்பம் சம்பந்த பட்ட விடயங்களில் வேறு மொழி தெரிந்த ஒருவரின் உதவியை நாடுவதும் இல்லை வைத்தியர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி விட்டு அவர் என்ன ஆலோசனை சொன்னார் என்பது தெரியாமல் போவதும் குழந்தை அல்லது கருவிலிருக்கும் சிசு மரணத்திற்கு காரணமாகிறது.மற்றையது சிறுவர்களிற்கு சாதாரணமாக வருகின்ற அலர்ச்சி வருத்தங்களிற்கும் மற்ற வருத்தங்களிற்கும்வைத்தியர்களின் ஆலோசனையை நாடுவதோ அல்லது அவர்களின் ஆலோசனைi சரிவர கடைப்பிடிக்காமல் எல்லா வருத்தத்திற்கும் பெரியவர்களை போல விக்ஸ் தடவி விட்டு பின்னர் வருத்தம் முற்றிஏதாவது ஆனபின்னர் அழுது புலம்புலதில் எந்த பிரயோசனமும் இல்லை எப்பொழுதும் குழந்தைகள விடயத்தில் வைத்தியரை நாடும்போது அவர்களிற்கு மொழி பிரச்சனையானால் நன்றாக மொழி தெரிந்த ஒருவரின் உதவியுடன் நாடுவது நல்லது
; ;
Posts: 150
Threads: 40
Joined: Jan 2005
Reputation:
0
நிச்சயமாக சியாம். எம்மவர்கள் பலர் அனுபவிக்கின்ற பெரும் பிரச்சனை இது.ஆனால் எம்மவர்களிடம் இருக்கும் பழக்கத்தை நினைக்கும் போது வேதனை தான் மிஞ்சுகின்றது. கடந்த வருடம் தமிழர்இல்லம் எனும் அமைப்பு சுவிஸ்அரசின் உதவியை பெற்று பெண்களுக்கான பிரத்தியேக வகுப்பை ஒழுங்கு செய்திருந்தார்கள். பெண் உடற்கூற்றியல் நிபுணர்கள் மொழிபெயர்ப்பு உதவியுடன் முற்றிலும் பெண்களே பங்குபற்றும் இவ்வகுப்பிற்கு சில பேரையாவது அனுப்பி வைக்கலாம் என நான் முயற்சி செய்தேன். மிஞ்சியது ஏமாற்றம் தான்.ஏதோ எங்கள் அழைப்பிற்காக பங்குபற்றிய சிலருடன் கடந்த வருடம் அந்த வகுப்பு நடைபெற்றது. இவ்வாண்டில் அவ்வமைப்பே அந்த உதவியை நிராகரித்து விட்டதாம். காரணம் அரச உதவியை பெற்ற பின்னர் வகுப்புகளுக்கு எம்மவர்கள் ஒழுங்காக வராவிடின் அரசு அந்த அமைப்பை சந்தேகிக்கலாம் என்பதால். ஒரு அரச உதவி பெறுவது இந்த நாட்டில் எவ்வளவு சிரமம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவ்வாறு கிடைத்ததை பயன்படுத்த எம்மவர்களுக்கு முடியவில்லை. ஆனால் மலிவுவிற்பனை என்றால் அயல்வீட்டு பகைமறந்து அவர்களில் காரில் இடம் கேட்டு ஏறிவரும் எம்மவர்களை என்னவென்பது????
.
.!!
Posts: 536
Threads: 19
Joined: Jan 2004
Reputation:
0
இதற்கு வேறு சில காரணங்களும் எனது பார்வையில்.
கல்வி முழுமையடைய முன்னரே, பக்குவமடையா வயதில் மணமுடித்து தாய்மை அடைதல். கல்விமுழுமை அடையும் பட்சத்தில் அவர்களுக்கு பக்குவமும் வந்தடைந்துவிடும்.
அடுத்து பொருளாதாரம். இன்றைய தலைமுறையினரில் அதிகமானோர் "புலத்தில்" கல்வி முழுமைபெறாமல், திருமணமாகி வேலை வாய்ப்பின்றி இருப்பவர்களே. இதனால் தாய்மை அடைந்த பெண் போசாக்கு நிறைந்த உணவினையோ, வைத்தியரிடம் அடிக்கடி சென்று உடல் நிலை கவனிப்பதற்கு பொருளாதாரம் இடம் கொடுப்பதில்லை!!!
:: ::
-
!
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
நீங்கள் கூறுவதும் உண்மையே தயா நான் முன்பு பாரீசிலிருந்தபோது பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளராக சட்டப்படி இருந்தேன் அப்போது இப்படியான பல அனுபவங்கள் எனக்குண்டுஒவ்வொருவரும் ஏதாவது அலுவலிற்கு கூப்பிடுவார்கள் எல்லாம் இலவசமாகவே செய்து வந்தேன் அப்போதுதான் எனக்கு ஒரு யேசனை தோன்றியது என்னை உதவிக்கு அழைப்பவர் எல்லோருக்கும் ஒரு வரின் வீட்டில் வைத்து முக்கிய தேவைகளிற்கான விடயங்களை பிரெஞ்சு மொழியில் சொல்லி கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன் ஆரம்பத்தில் சிலர் வந்தார்கள் பின் எவரும் வரவில்லை ஒருவர் சீட்டு கூறும் நாள் என்பார் மற்றவர் பிறந்தநாள் என்று சாட்டு கூற நானும் அவர்கள் தலைவிதியை நொந்தபடி விட்டு விட்டேன்
; ;
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
<!--QuoteBegin-Kurumpan+-->QUOTE(Kurumpan)<!--QuoteEBegin-->இதற்கு வேறு சில காரணங்களும் எனது பார்வையில்.
கல்வி முழுமையடைய முன்னரே, பக்குவமடையா வயதில் மணமுடித்து தாய்மை அடைதல். கல்விமுழுமை அடையும் பட்சத்தில் அவர்களுக்கு பக்குவமும் வந்தடைந்துவிடும்.
அடுத்து பொருளாதாரம். இன்றைய தலைமுறையினரில் அதிகமானோர் \"புலத்தில்\" கல்வி முழுமைபெறாமல், திருமணமாகி வேலை வாய்ப்பின்றி இருப்பவர்களே. இதனால் தாய்மை அடைந்த பெண் போசாக்கு நிறைந்த உணவினையோ, வைத்தியரிடம் அடிக்கடி சென்று உடல் நிலை கவனிப்பதற்கு பொருளாதாரம் இடம் கொடுப்பதில்லை!!!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->வைத்தியரிடம் அடிக்கடி சென்று கர்பிணிகள் உடல்நலம் கவனிக்க பொருளாதாரம் ஏதும் தடையல்ல இலவசமாக செய்ய பல வழிகள் உள்ளன அதைவிட இங்கு பொருளாதார பிரச்சனை என்பது ஏற்று கொள்ளகூடிய ஒன்றல்ல
; ;
Posts: 396
Threads: 53
Joined: Jan 2005
Reputation:
0
புலத்தில் இப்படி நடப்பதற்கு மிகவும் திட்டமிட்டு அரசாங்கம் பெரும் தொகையான பணத்தை செலவு செய்கிறது.மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பாலுணர்வுகளை ஊட்டி கலாசாரத்தை சீரழிக்கிறார்கள்.போதைப் பொருட்களை தாரளமாக(இலவசம்)சந்தைப்படுத்துகிறார்கள்.முக்கியமாக மக்களை அகதிகளாக்கி சிறு சிறு முகாம்களுக்குள் பெரிய குடும்பத்தை முடக்கிவைத்துள்ளார்கள்.எனவே பெரிய திட்டமிட்டுதான் எமது இனத்தை அழிக்கிறார்கள்.இவை எல்லாவற்றுக்கும் முற்று புள்ளி வைத்தால் புலத்திலும் குளு குளுவென திடகாத்திரமான குழந்தைகள் நிச்சயம் பிறக்கும்.
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Posts: 150
Threads: 40
Joined: Jan 2005
Reputation:
0
ஈழப்பிரியன் நீங்கள் சொல்வது புரியவில்லை. நீங்கள் எந்த அரசாங்கத்தை சொல்கின்றீர்கள்? விளக்க முடியுமா?
.
.!!
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
ஈழப்பிரியன் கூற வருவது விழங்கவில்லை :roll: :roll:
; ;
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
நான் நினைக்கிறேன் அவர் இலங்கையை சொல்கிறார் என்று.
நண்பர்களே எனக்கு ஒன்றை தெளிவு படுத்துங்கள்..எனக்கு தமிழறிவு பெரிதாக இல்லை..
புலம் என்றால் என்ன புலம் பெயர்ந்த நாடு என்றால் என்ன?
ஏன் கேட்கிறேன் என்றால்நீங்கள் இங்கு புலத்தில் உள்ள சிறுவர்கள் என்று
தானே எழுதியுள்ளீகள்? அப்படியானால் இங்கு புலம் என குறிப்பிடுவது வெளிநாடுகளையா? அப்படியானால் புலம் பெயர்ந்த நாடுகள் என்றால் என்ன?உண்மையில் விளங்கவில்லை. :roll: :roll:
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->நான் நினைக்கிறேன் அவர் இலங்கையை சொல்கிறார் என்று.
நண்பர்களே எனக்கு ஒன்றை தெளிவு படுத்துங்கள்..எனக்கு தமிழறிவு பெரிதாக இல்லை..
புலம் என்றால் என்ன புலம் பெயர்ந்த நாடு என்றால் என்ன?
ஏன் கேட்கிறேன் என்றால்நீங்கள் இங்கு புலத்தில் உள்ள சிறுவர்கள் என்று
தானே எழுதியுள்ளீகள்? அப்படியானால் இங்கு புலம் என குறிப்பிடுவது வெளிநாடுகளையா? அப்படியானால் புலம் பெயர்ந்த நாடுகள் என்றால் என்ன?உண்மையில் விளங்கவில்லை. :roll: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
என்ன வசிசுதா புலம்பீட்டு இருக்கிறியள்..
புலம் என்றால் இடம் என பொருள் படும் என நினைக்கிறேன்... பொறுங்கோ சியாம் அண்ணா வந்து வடிவா சொல்வார்....
[b][size=18]
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->நான் நினைக்கிறேன் அவர் இலங்கையை சொல்கிறார் என்று.
நண்பர்களே எனக்கு ஒன்றை தெளிவு படுத்துங்கள்..எனக்கு தமிழறிவு பெரிதாக இல்லை..
புலம் என்றால் என்ன புலம் பெயர்ந்த நாடு என்றால் என்ன?
ஏன் கேட்கிறேன் என்றால்நீங்கள் இங்கு புலத்தில் உள்ள சிறுவர்கள் என்று
தானே எழுதியுள்ளீகள்? அப்படியானால் இங்கு புலம் என குறிப்பிடுவது வெளிநாடுகளையா? அப்படியானால் புலம் பெயர்ந்த நாடுகள் என்றால் என்ன?உண்மையில் விளங்கவில்லை. :roll: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->வசிசுதா எமதுசொந்த மண்ணை தவிர மற்றைய நாடுகளில் எங்கெல்லாம் அகதிகளாக வாழ்கிறோமோ அதையெல்லாம் புலம்பெயர்ந்த நாடுகள்(எமதுநிலம் தவிர்ந்த மற்றைய நிலங்கள் புலம்)என்று கூறுவது வழமை அதைத்தான் நான் சுருக்கமாக புலம் என்றேன் அதை விட நான் விளக்கமாக கூறியுள்ளேன் ஆங்கிலம் பேசும் நாடுகளை தவிர்ந்த மற்றைய நாடுகளில் தான் இந்த பிரச்சனை அதிகம் என்று( கவிதன் கவனிக்கவும்)ஏனெனில் எம்மவர்க்கு ஆங்கிலஅறிவு அடிப்படையாக உள்ளதால் அவர்கள் ஆங்கிலம் பேசும் நாடுகாளில் இலகுவாக ஆங்கிலத்தை கற்று கொள் முடிகிறது.எனக்கு தெரிந்து ஓரு 4 வருடத்தில் பிரான்ஸ் சுவிஸ் யேர்மனில் 7 சிறுவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் இப்படியானால் எனக்கு தெரியாமல் எத்தனைபோர்????
; ;
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
புலம் என்றால் இடம் அல்லது திக்கு(திசை) என பொருள்படும் இடத்தை விட்டு பெயர்ந்தவர் புலம் பெயர்ந்தவர் என்பது வழமை இப்போ எமது நிலம் ஒரு போர்க்களமாக இருப்பதால் (களம் )எழுத்து எதுகைமோனைக்காய் நாமிருக்கும் இடம் புலமாகிவிட்டது அதாவது களம் புலம்( இப்போது கருத்து மாறிவிட்டது) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
உங்கள் விளக்கத்திற்கு நன்றி ஷியாம்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>