Mathivathanan Wrote:நன்றி அஜீவன் கருத்துக்கு நன்றி.. இருந்தாலும் இலங்கைத்தமிழில் பறையாமல் இருக்கிறீர்.. பறையுங்கோ என்பன பேச்சுவழக்கில் உள்ள சொல்லுத்தான். ஏன் வாவொலியிகூட என்ன பறையாமலிருக்கிறீர்கள் என இந்தியாவே பார்க்காத மட்டக்களப்புத் தமிழர் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். எடுத்தவுடன் பறையாமலிரு என நன்பர்கள் கூறியும் கேட்டிருக்கிறேன்.. எனவே அது இலங்கைப் பேச்சுத்தமிழ் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் சரளமாக உரையாடலில் இடம்பிடிக்கும் தமிழ்தானென்பதை உறுதியாகச் சொல்கிறேன்.. இதை முன்பு ஆரம்பகாலத்தில் வேறொரு தலைப்பின்கீழ் கருத்தாடியபோதும் குறிப்பிட்டிருந்தேன். நன்றி.
அன்பின் இளங்கோ மற்றும் மதிவதனனுக்கு ,
என் தாழ்மையான நன்றிகள்.
ஓரு முறை இரு முறையல்ல தொடர்ந்தே சினிமாவை சினிமாவாகப் பார்க்கத் தெரியாத கருத்துகளைப் பார்த்து வந்தேன்.
இது தொடராது என்றே ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் அது ஒரு பாரிய வைரசைப் போல பரவிக் கொண்டே வருவது ஆரோக்கியமானதல்ல என்று கருதியதால் பேச வேண்டிய இடத்தில் இனியும் மௌனம் சாதித்தல் நல்லதல்ல என்ற கருத்தில்தான்; எழுதத் தலைப்பட்டேன்.
இந்தியாவுக்கும் எமக்கும் கலாச்சார - மத - இன ஒற்றுமைகள் எத்தனையோ இருக்கின்றன. அதில் ஒன்றை மதிவதனன் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். தமிழுக்கும் மலையாளத்துக்கும் போல் சிங்களத்துக்கும் கன்னடத்துக்கும் இடையே பல வார்த்தை ஒன்றுமைகள் இருக்கின்றன. தமிழ்-சிங்கள மொழிகளில் போர்த்துகல் வார்த்தைகள் பல இடங்களில் கலந்து கிடக்கின்றன.(உம் :- மேசை, கதிரை, அல்மாரி , பொத்தான் . . . . . இப்படித் தொடர்கிறது.)
நாம் புலம் பெயர்ந்து இந்நாடுகளில் வாழ்வது போல இந்தியாவில் பல்லாயிரம் ஈழத்தமிழ் உறவுகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில அரசியல் வாதிகளைத் தவிர்த்து பொதுவான இந்திய தமிழர்கள் எமக்கு எதிரானவர்கள் அல்ல. நமது தவறான கருத்துகள் நமது ஆதரவாளர்களைக் கூட திசை மாற்றக் கூடிய அபாயத்தை ஏற்படுத்திவிடும்.
ஈழத்து அவலத்ததை எண்ணி என் நண்பன் ஆபாவாணண் என்ற திரைப்பட மாணவனின் தன் முதல் திரைப்படத்தில் (ஊமை விழிகள்) கண்ணீரோடு கலந்து எழுதிய,
தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்தால்
தாயின் கனவை மிதிக்கலாமா?
ஊயிரை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா ?
பாடலோடு நாங்கள் கலங்கி நின்ற அந்த நாட்கள் இதயத்தை ரணமாக்கக் கூடியது.
ஒரு சமயத்தில் தெரிந்தோ , தெரியாமலோ நடந்து விட்ட ஒரு துன்பியல் நிகழ்வு மறக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கமும் , அங்கலாய்ப்பும் மேலிடங்களில் இருக்கின்றன. எரியும் நெருப்பை அணைக்க பல பிரயத்தனங்கள் மேலிடங்கள் மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில்
இப்படியான கருத்துகள் எரியும் நெருப்புக்கு . . . . . . . .
வேண்டாம் . . . . .
நமது நாட்டில் 3 மொழிகள் வழக்கில் இருக்கின்றன.
1. தமிழ்
2. சிங்களம்
3.; ஆங்கிலம்.
நாம் வாழும் நாட்டில் இருக்கும் 3 மொழிகளையும் சரளமாக அல்லது ஓரளவு பேசக் கூடியவர்கள் எத்தனை பேர். . . . .?
ஆனால் நாம் வெளி நாடுகளுக்கு வந்து எத்தனை மொழிகளைக் கற்றுவிட்டோம். யோசித்தால் நம்பவே முடியாதது. ஆனால் உண்மை. மகிழ்ச்சியடைய வேண்டிய விடயம்.
ஆனால் நம் நாட்டில் வாழும் மற்றொரு இனத்தவரை சந்தித்தால் நம் நாட்டுக்கு உரிய மொழியில் பேச நம்மால் எத்தனை பேருக்கு முடிகிறது?
நாம் துணைக்கு வேறோர் இரவல் மொழியைதான் பயன்படுத்த வேண்டியுள்ளது. . .
நமக்கே இப்படியான பிரச்சனை இருக்கும் போது , இன்னுமொரு நாட்டு சினிமா படைப்பாளியை எப்படி குறை சொல்வது?
எம்மை நம்பி அவர்கள் சினிமாவைத் தயாரிப்பதேயில்லை.
அவர்களது முதல் குறி அவர்களது மக்கள்.
இரண்டாவது குறி தம் திரைப்படங்களை மொழி மாற்றம் செய்யக் கூடிய ஏனைய இந்திய மாநில , அதாவது தெலுங்கு , மலையாளம் , கன்னடம் . . . . போன்ற மக்கள் . . . .
இறுதிக் குறிதான் வெளிநாட்டு தமிழ் பேசும் மக்கள். . . . . .
சிறிது காலததுக்கு முன் ஈழத் தமிழர்கள் பற்றிய படங்களை தென் இந்திய சினிமா வல்லுனர்கள் உருவாக்கவில்லை ஆனால் நாங்கள்தான் அவர்களது திரைப்படங்களின் சர்வதேச விநியோக உரிமையாளர்களாக இருக்கிறோம் என்ற கருத்துகள் ஏகப்பட்ட ஊடகங்களில் பரவாலாக எழுதப்பட்டது.
ஆனால் எமது மக்கள் பிரச்சனையை வைத்து எடுக்கப்பட்ட எந்தவொரு தென் இந்தியப் படமும் வசூலில் வெற்றி பெறாமல் தோல்வையே தளுவியது: (கன்னத்தில் முத்தமிட்டாலும் இதில் அடக்கம்.)
கன்னத்தில் முத்தமிட்டால் , சர்வதேச விநியோக உரிமையை வாங்கிய ஐங்கரன் நிறுவனம், வாங்கிய பணத்தை பெற முடியாமல் நஷ்டமடைந்தது.
ஏன் இலங்கைப் பிரச்சனையை வைத்து லண்டன் தமிழர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட இன் த நேம் ஒவ் புத்தாவை எத்தனை ஈழத் தமிழர்கள் பார்த்தார்கள்? எவராவது லண்டன் தவிர்த்து ஏனைய நாடுகளில் திரையிட முயன்றார்களா? ? ?
இன்னும் வரும். . . . . .
அன்புடன்
அஜீவன்