Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சினிச் செய்திகள்...
#41
<img src='http://thatstamil.com/images11/cinema/kausa8-400.jpg' border='0' alt='user posted image'>

நேற்றுவரை விஜய்க்கு ஜோடியாக நடித்து வந்த கன்னட நடிகை கெளசல்யா இன்று முதல் அண்ணியாக நடிக்கவுள்ளாராம்.... சினிமாவில நடிகர்கள் என்றும் மார்கண்டேயர்களோ....!

தகவல்..தற்ஸ் தமிழ் டொட் கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#42
<img src='http://www.thatstamil.com/images12/cinema/surya-jo2-300.jpg' border='0' alt='user posted image'>

தமிழர் கலாசார பற்றுக் கொண்ட முன்னாள் நடிகர் சிவகுமாரின் மகன் நடிகர் சூரியாவுக்கும் நடிகை ஜோதிகாவுக்கும் இடையே காதல் திருமணம் நடை பெற சூரியாவின் பெற்றோர் நிபந்தனையுடன் கூடிய சம்மதம் தந்துள்ளதாக இச்செய்தியை வெளியிட்ட தற்ஸ் தமிழ் டொட் கொம் கூறுகிறது...
அதென்ன நிபந்தனை தெரியுமா...ஜோதிகா எக்காலத்திலும் திருமணத்தின் பின் தமிழ் கலாசாரத்தையே பின்பற்ற வேண்டும் என்பதுதானாம்...
அதற்கு முன்னோடியாக நடிகர் மாதவனின் காதல் மனைவி சதாவிடம் ஜோதிகா தமிழ் சமையலில் இருந்து சகலதும் கற்று வருகிறாராம்....!

நல்ல கலாசாரக் குடும்பமப்பா...என்றாலும் தமது சொந்த கலாசாரத்தைக் கட்டிக்காக்க எண்ணும் தமிழர் என்ற வகையில் சிவகுமாரையும் சூரியாவையும் பாராட்டலாம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#43
kuruvikal Wrote:<img src='http://www.thatstamil.com/images12/cinema/surya-jo2-300.jpg' border='0' alt='user posted image'>

தமிழர் கலாசார பற்றுக் கொண்ட முன்னாள் நடிகர் சிவகுமாரின் மகன் நடிகர் சூரியாவுக்கும் நடிகை ஜோதிகாவுக்கும் இடையே காதல் திருமணம் நடை பெற சூரியாவின் பெற்றோர் நிபந்தனையுடன் கூடிய சம்மதம் தந்துள்ளதாக இச்செய்தியை வெளியிட்ட தற்ஸ் தமிழ் டொட் கொம் கூறுகிறது...
அதென்ன நிபந்தனை தெரியுமா...ஜோதிகா எக்காலத்திலும் திருமணத்தின் பின் தமிழ் கலாசாரத்தையே பின்பற்ற வேண்டும் என்பதுதானாம்...
அதற்கு முன்னோடியாக நடிகர் மாதவனின் காதல் மனைவி சதாவிடம் ஜோதிகா தமிழ் சமையலில் இருந்து சகலதும் கற்று வருகிறாராம்....!

நல்ல கலாசாரக் குடும்பமப்பா...என்றாலும் தமது சொந்த கலாசாரத்தைக் கட்டிக்காக்க எண்ணும் தமிழர் என்ற வகையில் சிவகுமாரையும் சூரியாவையும் பாராட்டலாம்....!
Truth 'll prevail
Reply
#44
மனசார வாழ்த்தலாமே..சூரியனின் ஜோதியாக ஜொலிக்க எனது ஆசிகள்.
Truth 'll prevail
Reply
#45
[quote=Mullai]அந்த தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்

எங்கள் பிரச்சினையைத் திரைப்படமாக்கி விருதுகளை அவர்கள் பெறும்போது, எங்களது கலைஞர் ஒருவரின் ஆதங்கம் வந்து நெஞ்சில் மோதுகின்றது
[quote=AJeevan]சுவிசின் திரைப்பட விழாவில் 5 விருதுகளைப் பெறும் போது Swiss மக்களுடன் சேர்ந்து கரவொலி செய்யவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ முடியாது தனித்து நின்று குமுறிய என் இதயத்துக்கு.........

ஒரு மனிதன் தன் வெற்றியில் மகிழ்வதை விட, இன்னொருவருவருக்கு கிடைக்கும் வெற்றியைப் பார்த்து மகிழ்வதில் கிடைக்கும் இன்பம் அலாதியானது.
அதன் சுவையே தனி.....................
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

தாய் தன்னை விட தன் குழந்தையின் மகிழ்சியில்தான் களிப்புறுகிறாள்...........
அதன் பெயர் தாய்மை.

ஆசிரியர்கள் தன் மாணவர்களின் வெற்றியில்தான் களிப்புறுகிறார்கள்.
அதன் பெயர் ஆசான். (இறைவன்)

நம்மால் முடிந்தது.......................
பார்த்து மகிழ்வது,.....................
வாழ்த்தாவது சொல்வது..................
Reply
#46
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்பட விருதின் பின் என்னுடன் வேலை செய்யும் மலையாள நண்பர் ஒருவர் அந்த திரைப்படம் பார்க்க எண்ணி எடுத்துப்பார்த்தார். பார்த்தபின் அவரின் விமர்சனம் எனக்கு சற்று வேதனையாகத்தான் இருந்தது

ஈழத்து மக்களின் உணர்வுகளை ஈழத்துமக்களின் துயரங்களை அவர்களிற்காக குருதி சிந்திய வீரர்களின் விலையினை இந்தி சினிமா என்றுதான் உணரப்போகின்றது என்றார். ஏனென்றால் இங்கு சில விடயங்களில் அவரால் ஜீரணிக்க முடியவில்லையாம். குறிப்பாக அந்த கால் இயலாதவரின் தற்கொலைத்தாக்குதல். மற்றும் மாங்குளம் தாக்குதல்.

குறிப்பு
அவர் பல தடவைகள் வியாபாரவிடயமாக இலங்கைக்கு சென்றுவந்த நண்பர். பத்திரிகைகள் வாசிப்பதில் மிகவும் ஆர்வமுடையவர். என்னுடன் இருந்து பல பொழுதுகளில் விடுதுலைப்புலிகளில் ஓளி நாடாவும் பார்ப்பவர். எனவே அவரிற்கு எமது வலி உணரமுடிகின்றது.
ஆனால் தமிழனாகப்பிறந்தஇந்திய சினிமா தயாரிப்பாளர்களிற்கு............???????????????????????
[b] ?
Reply
#47
[u][b]ஏன் இந்தக் குழப்பம் ????????

அன்பின் பரணிக்கு,

நமக்குள், சினிமாவை ரசிப்பதிலும் பார்ப்பதிலும் ஒரு பெரிய பிரச்சனை நமக்குள் இருப்பதாகதாகவே நம்மவர் கருத்துகளைப் பார்க்கும் போது எனக்குள் எண்ணத் தோன்றுகிறது.

இதை ஒரு குறை என்று சொல்வதை விட ஒரு நோயாகவே கருத வேண்டியிருக்கிறது.

நம்மால், சினிமாவையும், யதார்த்தத்தையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அறிவு வளரவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அதனால்தான் நாம் குமுறுகிறோம் அல்லது குழம்பிப் போய் விடுகிறோம்.

வளர்ந்த நாடுகளில் வாழும் பார்வையாளர்கள் அல்லது சினிமாவை ரசிக்கத் தெரிந்தவர்கள்: ஏனைய நாடுகளிலும், சமூகங்களிலும் எடுக்கப்படும் திரைப்படங்களை ஒரு கலைப் படைப்பாக அல்லது இன்னுமொரு சம்பவத்தின் ஒரு தாக்கத்தின் காரணமாக உருவாகிய ஒரு திரைப்படமாகத்தான் பார்க்கிறார்கள்.
அதை 100 சதவீதத்தில் உண்மையாக நடக்கும் ஒரு சம்பவமாக கருதுவதோ , கணக்கில் எடுத்துக் கொள்வதோ இல்லை.

கன்னத்தில் முத்தமிட்டால் ஒரு பொழுது போக்கு சினிமாவேயன்றி யதார்த்த சினிமாவே அல்ல.
சில்வெஸ்டர் ஸ்டெலோனின் படங்களில் தெரிவது போல் வியட்நாமியரையோ
அல்லது
ஜேம்ஸ்பொன்ட் படங்களில் தெரிவது போல் ரஸ்யர்களையோ மேற் குறிப்பிட்டவர்கள் வென்றதாக சரித்திரமேயில்லை.

காந்தி திரைப்படத்தை எடுத்தவர்கள் இந்தியர்கள் அல்ல. ஆனால் ஒரு சிலர் அத்திரைப்படம் உருவாவதை ஆரம்பத்தில் எதிர்த்தார்கள். ஆனால் அத்திரைப்படம் வழி காந்தி என்ற மாபெரும் தியாகியை புதிய உலகம் தெரிந்து கொண்டது. பல விருதுகள் கிடைத்தது.
காந்தி சினிமாவை உருவாக்கியவர்கள் மட்டுமல்ல இந்தியர்களே (எதிர்த்தவர்களும்) பெருமிதம் அடைந்தார்கள்....................

சினிமா என்பது ஒரு கனவுப் பட்டறை.
கனவையும், நிஜத்தையும் வேறுபடுத்தக் கூடிய அறிவும் ஆற்றலும் நமக்கு இருக்கிறதென்றே நினைக்கிறேன்.

உதாரணமாக:-
கனவில் நான் சாவதைக் காண்கிறேன்.எழுந்து பார்த்தால் நான் உயிரோடு இருப்பதை உணரமுடிகிறது.
(கிள்ளிப் பார்த்துக் கொண்டேன் என்கிறார்கள்.)

இதுதான் சினிமா...........

உண்மையில் நான் சாவதைப் பார்க்க முடியாது.
ஆனால் சாகப் போவதை உணர முடியும்.

இதுதான் நிஜம்............நிஜம்..........நிஜம்.........

கனவை ஏன் நிஜமாக்க நாம் முயல வேண்டும்.

இது ஒரு தேவையற்ற முயற்சி மட்டுமல்ல.
எதிர்காலத்தில் எமது எதிர்கால சமூகம் ஒரு திரைப் படத்தை உருவாக்கும் எண்ணத்தை நினைத்தே பார்க்க முடியாமல் போகும் ஒரு அபாயமும் , விபரீதமும் உருவாக வாய்ப்புகள் (ஏற்கனவே உள்ளது.) அதிகரித்துவிடும். அப்படியான ஒரு நிலை உருவானால் ?....

மலயாளத்தில் எடுக்கப்பட்ட செம்மீன் யதார்த்தமான ஒரு படம். அங்கே குறையிருந்தால் பிரச்சனைதான்.
இயக்குனர் பாலுமகேந்திராவின் வீடு, சந்தியாராகம் போன்ற படங்களும் யதார்த்தமான படங்கள்.
(இங்கே சிறு சிறு தவறுகள் நேர்ந்தால் குறையேயல்ல.)
சினிமாவுக்காக: ரசிகனைக் கட்டிப் போட சில சினிமா யுத்திகளை சில வேளைகளில் படைப்பாளி செய்யவே வேண்டியிருக்கிறது.

ஆனால் இந்தியன் , முதல்வன்.............(இப்படி எத்தனையை எழுதுவது??????????? ) போன்றவை யதார்த்தத்துக்கு புறம்பான கனவின் உச்ச கட்ட ஆசைகளை காட்டும் கானல் படங்கள்.

பம்பாய்,ரோஜா,நாயகன், கன்னத்தில் முத்தமிட்டால்.........................போன்ற பல படங்கள் எங்கோ பார்த்த அல்லது வாசித்த அல்லது தெரிந்து கொண்ட ஒரு கதைக் கருவை மனதில் வைத்துக் கொண்டு உருவாகும் மற்றுமொரு வகை (தாக்கங்களின் வெளிப்பாடுகளான) திரைப்படங்கள்.

இதை ஏன் நிஜம் என்று பெரிது படுத்த வேண்டும்.

இப்படியான கருத்து செய்தியாக அல்லது Documantary டொக்கியுமன்றிப் படமாக (ஆவணப்படம்) வந்திருந்தால் கொதிப்பதில் நிச்சயம் நியாயம் இருக்கிறது.

போராட்ட வீடியோக்களையும் திரைப்படத்தையும் தயவுடன் இணைத்துப் பார்க்காதீர்கள்.
அது வேறு இது வேறு.
இங்கே உறுதியாக இருங்கள்.

இப்படியான எண்ணங்களுக்கு நாம் முடிவு கட்ட வேண்டும் : தெளிவு பெற வேண்டும்.

இல்லாவிட்டால் நடிகன்-நடிகை போல் கணவன்-மனைவி அமைய வேண்டுமென கனவு வாழ்கை வாழ்ந்து , வாழ்வை இருளுக்குள் தள்ளிக் கொண்டவர்கள் போன்ற நிலைக்குத் தள்ளப் படுவோம்.

அந்த மலையாள நண்பருக்கு சொல்லுங்கள் : 10 முதல் 100 பேரைத் தாக்கி விட்டு அநாயாசமாக சட்டை மடிப்பு சுருங்காமல் வரும் சினிமா வீரர்களை உண்மையென்று எப்படி நம்ப முடியுமோ அது போல்தான் இதுவும் என்று.

முன்னைய மலையாளத் திரைப்பட உலகமல்ல
இப்போது இருப்பது.
அங்கும் அதே பல்லவி தொடங்கிவிட்டது. . . . .

மு.கு:கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் படுக்கையறைக் கண்ணாடி முன், கட்டிப் புரண்டு காதல் லீலையில்... ஈடுபட்டவாறு
இளம் ஜோடிகள் பேசிவது கூட ஈழத் தமிழ் அல்ல, அது பாலக்காட்டு மலையாளத் தமிழ் என்று பறையும்... [/color]

மனசிலாயோ என்ட வல்லிய குட்டிக்கு?

அன்புடன்
உங்கள்
அஜீவன்
Reply
#48
அஜீவன் ஒரு கலைஞன் மட்டுமல்ல
நல்ல ஒரு பகுத்தறிவாளனும் கூட என்பதை உங்கள் எழுத்துக்களிலிருந்து தெரிந்து கொள்ளமுடிகிறது.

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
Reply
#49
நன்றி அஜீவன் கருத்துக்கு நன்றி.. இருந்தாலும் இலங்கைத்தமிழில் பறையாமல் இருக்கிறீர்.. பறையுங்கோ என்பன பேச்சுவழக்கில் உள்ள சொல்லுத்தான். ஏன் வாவொலியிகூட என்ன பறையாமலிருக்கிறீர்கள் என இந்தியாவே பார்க்காத மட்டக்களப்புத் தமிழர் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். எடுத்தவுடன் பறையாமலிரு என நன்பர்கள் கூறியும் கேட்டிருக்கிறேன்.. எனவே அது இலங்கைப் பேச்சுத்தமிழ் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் சரளமாக உரையாடலில் இடம்பிடிக்கும் தமிழ்தானென்பதை உறுதியாகச் சொல்கிறேன்.. இதை முன்பு ஆரம்பகாலத்தில் வேறொரு தலைப்பின்கீழ் கருத்தாடியபோதும் குறிப்பிட்டிருந்தேன். நன்றி.
Truth 'll prevail
Reply
#50
Mathivathanan Wrote:நன்றி அஜீவன் கருத்துக்கு நன்றி.. இருந்தாலும் இலங்கைத்தமிழில் பறையாமல் இருக்கிறீர்.. பறையுங்கோ என்பன பேச்சுவழக்கில் உள்ள சொல்லுத்தான். ஏன் வாவொலியிகூட என்ன பறையாமலிருக்கிறீர்கள் என இந்தியாவே பார்க்காத மட்டக்களப்புத் தமிழர் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். எடுத்தவுடன் பறையாமலிரு என நன்பர்கள் கூறியும் கேட்டிருக்கிறேன்.. எனவே அது இலங்கைப் பேச்சுத்தமிழ் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் சரளமாக உரையாடலில் இடம்பிடிக்கும் தமிழ்தானென்பதை உறுதியாகச் சொல்கிறேன்.. இதை முன்பு ஆரம்பகாலத்தில் வேறொரு தலைப்பின்கீழ் கருத்தாடியபோதும் குறிப்பிட்டிருந்தேன். நன்றி.


அன்பின் இளங்கோ மற்றும் மதிவதனனுக்கு ,

என் தாழ்மையான நன்றிகள்.

ஓரு முறை இரு முறையல்ல தொடர்ந்தே சினிமாவை சினிமாவாகப் பார்க்கத் தெரியாத கருத்துகளைப் பார்த்து வந்தேன்.
இது தொடராது என்றே ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் அது ஒரு பாரிய வைரசைப் போல பரவிக் கொண்டே வருவது ஆரோக்கியமானதல்ல என்று கருதியதால் பேச வேண்டிய இடத்தில் இனியும் மௌனம் சாதித்தல் நல்லதல்ல என்ற கருத்தில்தான்; எழுதத் தலைப்பட்டேன்.

இந்தியாவுக்கும் எமக்கும் கலாச்சார - மத - இன ஒற்றுமைகள் எத்தனையோ இருக்கின்றன. அதில் ஒன்றை மதிவதனன் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். தமிழுக்கும் மலையாளத்துக்கும் போல் சிங்களத்துக்கும் கன்னடத்துக்கும் இடையே பல வார்த்தை ஒன்றுமைகள் இருக்கின்றன. தமிழ்-சிங்கள மொழிகளில் போர்த்துகல் வார்த்தைகள் பல இடங்களில் கலந்து கிடக்கின்றன.(உம் :- மேசை, கதிரை, அல்மாரி , பொத்தான் . . . . . இப்படித் தொடர்கிறது.)

நாம் புலம் பெயர்ந்து இந்நாடுகளில் வாழ்வது போல இந்தியாவில் பல்லாயிரம் ஈழத்தமிழ் உறவுகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில அரசியல் வாதிகளைத் தவிர்த்து பொதுவான இந்திய தமிழர்கள் எமக்கு எதிரானவர்கள் அல்ல. நமது தவறான கருத்துகள் நமது ஆதரவாளர்களைக் கூட திசை மாற்றக் கூடிய அபாயத்தை ஏற்படுத்திவிடும்.

ஈழத்து அவலத்ததை எண்ணி என் நண்பன் ஆபாவாணண் என்ற திரைப்பட மாணவனின் தன் முதல் திரைப்படத்தில் (ஊமை விழிகள்) கண்ணீரோடு கலந்து எழுதிய,

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்தால்
தாயின் கனவை மிதிக்கலாமா?
ஊயிரை இழந்தோம்
உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா ?

பாடலோடு நாங்கள் கலங்கி நின்ற அந்த நாட்கள் இதயத்தை ரணமாக்கக் கூடியது.



ஒரு சமயத்தில் தெரிந்தோ , தெரியாமலோ நடந்து விட்ட ஒரு துன்பியல் நிகழ்வு மறக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கமும் , அங்கலாய்ப்பும் மேலிடங்களில் இருக்கின்றன. எரியும் நெருப்பை அணைக்க பல பிரயத்தனங்கள் மேலிடங்கள் மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில்
இப்படியான கருத்துகள் எரியும் நெருப்புக்கு . . . . . . . .
வேண்டாம் . . . . .

நமது நாட்டில் 3 மொழிகள் வழக்கில் இருக்கின்றன.
1. தமிழ்
2. சிங்களம்
3.; ஆங்கிலம்.
நாம் வாழும் நாட்டில் இருக்கும் 3 மொழிகளையும் சரளமாக அல்லது ஓரளவு பேசக் கூடியவர்கள் எத்தனை பேர். . . . .?

ஆனால் நாம் வெளி நாடுகளுக்கு வந்து எத்தனை மொழிகளைக் கற்றுவிட்டோம். யோசித்தால் நம்பவே முடியாதது. ஆனால் உண்மை. மகிழ்ச்சியடைய வேண்டிய விடயம்.

ஆனால் நம் நாட்டில் வாழும் மற்றொரு இனத்தவரை சந்தித்தால் நம் நாட்டுக்கு உரிய மொழியில் பேச நம்மால் எத்தனை பேருக்கு முடிகிறது?
நாம் துணைக்கு வேறோர் இரவல் மொழியைதான் பயன்படுத்த வேண்டியுள்ளது. . .

நமக்கே இப்படியான பிரச்சனை இருக்கும் போது , இன்னுமொரு நாட்டு சினிமா படைப்பாளியை எப்படி குறை சொல்வது?

எம்மை நம்பி அவர்கள் சினிமாவைத் தயாரிப்பதேயில்லை.
அவர்களது முதல் குறி அவர்களது மக்கள்.
இரண்டாவது குறி தம் திரைப்படங்களை மொழி மாற்றம் செய்யக் கூடிய ஏனைய இந்திய மாநில , அதாவது தெலுங்கு , மலையாளம் , கன்னடம் . . . . போன்ற மக்கள் . . . .

இறுதிக் குறிதான் வெளிநாட்டு தமிழ் பேசும் மக்கள். . . . . .

சிறிது காலததுக்கு முன் ஈழத் தமிழர்கள் பற்றிய படங்களை தென் இந்திய சினிமா வல்லுனர்கள் உருவாக்கவில்லை ஆனால் நாங்கள்தான் அவர்களது திரைப்படங்களின் சர்வதேச விநியோக உரிமையாளர்களாக இருக்கிறோம் என்ற கருத்துகள் ஏகப்பட்ட ஊடகங்களில் பரவாலாக எழுதப்பட்டது.

ஆனால் எமது மக்கள் பிரச்சனையை வைத்து எடுக்கப்பட்ட எந்தவொரு தென் இந்தியப் படமும் வசூலில் வெற்றி பெறாமல் தோல்வையே தளுவியது: (கன்னத்தில் முத்தமிட்டாலும் இதில் அடக்கம்.)

கன்னத்தில் முத்தமிட்டால் , சர்வதேச விநியோக உரிமையை வாங்கிய ஐங்கரன் நிறுவனம், வாங்கிய பணத்தை பெற முடியாமல் நஷ்டமடைந்தது.

ஏன் இலங்கைப் பிரச்சனையை வைத்து லண்டன் தமிழர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட இன் த நேம் ஒவ் புத்தாவை எத்தனை ஈழத் தமிழர்கள் பார்த்தார்கள்? எவராவது லண்டன் தவிர்த்து ஏனைய நாடுகளில் திரையிட முயன்றார்களா? ? ?

இன்னும் வரும். . . . . .

அன்புடன்
அஜீவன்
Reply
#51
இப்படத்தில் தமிழகத்துக்குப் புதுமுகம் ஆந்திர வரவு சுருதிராஜ் (ஆண்ணல்ல பெண்) நடிக்கிறாராம்....!

<img src='http://thatstamil.com/images12/cinema/sruthiraj3-325.jpg' border='0' alt='user posted image'>

காதல் டொட் கொம் இப்படி ஒரு படம்...நெடுநாளாக தாயாராகிவருகிறது இன்னும் வெளி வரவில்லை ...வாழ்வில் வரும் முதல் காதலை எவ்வளவுதான் காதல்கள் பின் வந்தாலும் மறக்க முடியாதாம்...இப்படிச் சொல்கிறதாம் படக்கதை....!
அது இருக்கட்டும் இதிலென்ன கிடக்க என்றுதானே கேட்கிறீர்கள்....ஆம் இப்படத்தை தயாரிப்பவர் இலங்கைச் சேர்ந்த லண்டன் வாழ் செல்வேல் எனும் புதிய தயாளிப்பாளராம்....அப்போ பாலுமகேந்திராவுக்குப் பின்னர் தமிழகத் திரையுலகில் நுழையும் முக்கிய புள்ளியோ.. புதியவரோ....! வாழ்த்துக்கள்...நீங்களாவது யதார்த்தத்தைக் காட்டுவீர்களோ பார்ப்போம்...அல்லது வியாபாரம் தான் கொடிகட்டுமோ....பொறுத்திருந்து பார்ப்போமே....!

தகவல் தற்ஸ் தமிழ் டொட் கொம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#52
Mathivathanan Wrote:[quote=AJeevan]
அன்பின் இளங்கோ மற்றும் மதிவதனனுக்கு ,

என் தாழ்மையான நன்றிகள்.

இந்தியாவுக்கும் எமக்கும் கலாச்சார - மத - இன ஒற்றுமைகள் எத்தனையோ இருக்கின்றன. அதில் ஒன்றை மதிவதனன் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். தமிழுக்கும் மலையாளத்துக்கும் போல் சிங்களத்துக்கும் கன்னடத்துக்கும் இடையே பல வார்த்தை ஒன்றுமைகள் இருக்கின்றன. தமிழ்-சிங்கள மொழிகளில் போர்த்துகல் வார்த்தைகள் பல இடங்களில் கலந்து கிடக்கின்றன.(உம் :- மேசை, கதிரை, அல்மாரி , பொத்தான் . . . . . இப்படித் தொடர்கிறது.)

ஆனால் நாம் வெளி நாடுகளுக்கு வந்து எத்தனை மொழிகளைக் கற்றுவிட்டோம். யோசித்தால் நம்பவே முடியாதது. ஆனால் உண்மை. மகிழ்ச்சியடைய வேண்டிய விடயம்.
நன்றி அஜீவன் ஒரு விடயத்தை மட்டும் தொட்டிருப்பதாகக் கூறியுள்ளீர்கள். இந்தியாவுக்கும் ஈழத்தமிழருக்கும் உள்ள தொடர்பை.. குறிப்பாக கேரளாவுக்கும் தமிழுக்கும் உள்ள தெடர்புபற்றி எழுதியபோது \"றோ\" என்ற பட்டமும் கிடைத்த து}ற்றல்களும் உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.. அதை விடுவோம்.. 87 ஆண்டுவரை அரவணைத்து அப்பன் அம்மா மாமன் மாமி எனக் கொண்டாடியவர்கள் ஏன் தற்போது து}ற்றுகிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.. ஒருமொழி படிப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்தவர்கள் பலமொழி படிப்பதை பாராட்டி சந்தர்ப்பவாதிகளாக செயற்படுவதையும் உங்களுக்கு நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.. அதையும் விடுவோம்.. போத்துகேயர் மாத்திரமல்ல ஒல்லாந்தர் ஆங்கிலேயரிடமிருந்தும் பலவற்றை எடுத்தும் கொடுத்தும் உள்ளோம்.. அதனால் எடுத்த சொற்களை தமிழல்ல என நீக்கியவுடன் சரித்திரம் அழிந்துவிடுமா..? புதிய சரித்திரம் எழுதுவதனால் பழைய சரித்திரம் மறைந்துவிடுமா..? நமது ஆதிகால வரலாறுப் புத்தகங்கள் பலவும் பலஇடங்களில் இருக்கின்றன.. அவை எப்போதும் உண்மை வரலாறு என்று வந்து பறைசாற்றிக்கொண்டிருக்கும்.. இந்தியத் தமிழருக்கு ஒருபாடமாக அமையும் என்பது எனது நம்பிக்கை.. நன்றி வணக்கம்.
Truth 'll prevail
Reply
#53
நன்றி திரு.அஜீவன்
தங்கள் அன்பான விளக்கமான கருத்துக்களிற்கு மிக மிக நன்றி.

சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று உணரமுடிந்தாலும் எமது தேசத்தின் வலியினை எவராலும் கற்பனையால் செதுக்கமுடியாது. அதை அனுபவித்தால்தான் முடியும் என்பதை இந்திய சினிமா உணரவேண்டும்.

மொழியை பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். நன்றி
உண்மைதான் இலங்கையில் இருந்தபோது தனித்தமிழிலேயே பழகிவந்தோம். தாய்நிலம்விட்டுப்பிரிந்தும் அன்னிய மொழி எனக்கருதி சிங்கள மொழியை கற்க மறுத்தோம். ஆங்கிலத்தை கட்டாய மொழி என அரவணைத்தோம். இன்று இங்கு மலையாளம் கிந்தி என அறியாத மொழிகளை அரவணைக்கின்றோம்.
[b] ?
Reply
#54
Mathivathanan Wrote:[quote=Mathivathanan]

ஆனால் நாம் வெளி நாடுகளுக்கு வந்து எத்தனை மொழிகளைக் கற்றுவிட்டோம். யோசித்தால் நம்பவே முடியாதது. ஆனால் உண்மை. மகிழ்ச்சியடைய வேண்டிய விடயம்.
நன்றி அஜீவன் ஒரு விடயத்தை மட்டும் தொட்டிருப்பதாகக் கூறியுள்ளீர்கள். இந்தியாவுக்கும் ஈழத்தமிழருக்கும் உள்ள தொடர்பை.. குறிப்பாக கேரளாவுக்கும் தமிழுக்கும் உள்ள தெடர்புபற்றி எழுதியபோது \"றோ\" என்ற பட்டமும் கிடைத்த து}ற்றல்களும் உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.. அதை விடுவோம்.. 87 ஆண்டுவரை அரவணைத்து அப்பன் அம்மா மாமன் மாமி எனக் கொண்டாடியவர்கள் ஏன் தற்போது து}ற்றுகிறார்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.. ஒருமொழி படிப்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்தவர்கள் பலமொழி படிப்பதை பாராட்டி சந்தர்ப்பவாதிகளாக செயற்படுவதையும் உங்களுக்கு நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.. அதையும் விடுவோம்.. போத்துகேயர் மாத்திரமல்ல ஒல்லாந்தர் ஆங்கிலேயரிடமிருந்தும் பலவற்றை எடுத்தும் கொடுத்தும் உள்ளோம்.. அதனால் எடுத்த சொற்களை தமிழல்ல என நீக்கியவுடன் சரித்திரம் அழிந்துவிடுமா..? புதிய சரித்திரம் எழுதுவதனால் பழைய சரித்திரம் மறைந்துவிடுமா..? நமது ஆதிகால வரலாறுப் புத்தகங்கள் பலவும் பலஇடங்களில் இருக்கின்றன.. அவை எப்போதும் உண்மை வரலாறு என்று வந்து பறைசாற்றிக்கொண்டிருக்கும்.. இந்தியத் தமிழருக்கு ஒருபாடமாக அமையும் என்பது எனது நம்பிக்கை.. நன்றி வணக்கம்.

அன்பின் மதிவதனனுக்கு

உங்கள் ஆதங்கத்தையும் வேதனையையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பல சமங்களில் பலருக்கு உண்மைகள் புரிவதுமில்லை, ஜீரணமாவதுமில்லை. அத்தோடு அவர்கள் தெளிவு பெற்றுக் கொள்ள முயல்வதுமில்லை. இதனால்தான் நாமும் , நமது சமுதாயமும் தொடர்ந்தும் பின் தங்கிவிடுகிறோம். சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத போது கோபப் படுகிறோம். அல்லது கேள்வி கேட்டவனையே எதிரியாகப் பார்க்கிறோம். இது நமது இயலாமையே தவிர , விவேகமல்ல.

இது காலம் காலமாக உலக வரலாற்றில் நடந்து வரும் ஒரு சோக நிகழ்வு.

கலிலேயோ உலகம் உருண்டை என்று சொன்ன போதும், சாக்கிரடீஸ் இளைஞர்களுக்கு பகுத்தறிவை ஊட்டிய போதும். . . . .
(இப்படி எத்தனை மேதைகள்????????. . . . . ) அவர்களுக்கு கிடைத்த பட்டம் , பரிசு என்ன?
பைத்தியக்காரன் என்பதும், மரண தண்டனையும்தான். . . . . . .

எனவே உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்தும் களத்தில் பவனி வர வேண்டும். அதுவே என் எதிர்பார்ப்பு, வேண்டுகோள். . . . . அரசியலை சினிமாவுக்குள் புகுத்துவது என் எண்ணமல்ல. . . . . . நான் கலைஞனாகவே வாழ ஆசைப்படுகிறேன். 1983 க்கு பிறகு வாழ்ந்த நாட்டை விட்டு வந்து . . . . . . நன்றாக அனுபவப்பட்டவன். . . . . . . . . . .
தாய் மண்ணின் கனவை மட்டும் மௌனமாக சுமப்பவன். . . . .

தாய்க்கு மட்டும்தான் பிரசவ வேதனை சரியாகத் தெரியும். பிரசவத்தை பார்த்து விட்டு பிரசவ வேதனை பற்றி சொல்பவர்கள், கூப்பாடு போடுபவர்கள், போலி சாமியார்களுக்கு சமம்.

ஊரில் இருக்கும் போது இல்லாத ஒரு உணர்வு நாடு விட்டு நாடு வந்த பிறகு பலருக்கு ஏற்பட்டு விடுகிறது. அது அங்கே தன் கடமையை செய்யாமல் விட்டு வந்த அவர்களது குற்ற உணர்வுகளின் தாக்கம்.
இதற்காக தெரியாததையும் , தேவையற்றவற்றையும் உளரக் கூடாது. அது மாபெரும் ஆபத்து.

மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையே ஒரே ஒரு வேறுபாடுதான் இருக்கிறது.

மனிதனுக்கும் பசியெக்கும் : மிருகத்துக்கும் பசியெக்கும்,
மனிதனுக்கும் தாகமெடுக்கும் : மிருகத்துக்கும் தாகமெடுக்கும்,
மனிதனுக்கும் தூக்கம் வரும் : மிருகத்துக்கும் தூக்கம் வரும்,
மனிதனுக்கும் வேதனையை உணரலாம் : மிருகத்துக்கும் வேதனையை உணரலாம்,
மனிதனுக்கும் அன்பு செய்ய முடியும் : மிருகத்துக்கும் அன்பு செய்ய முடியும்.

ஆனால் மிருகத்தால் ஒரு விடயத்தை தீர்மானிக்க, முடிவை எடுக்க, முடியாது.

மனிதனால் மட்டுமே ஒரு விடயத்தை நல்லதா? கெட்டதா?,
நம்மால் இதை செய்ய முடியுமா? முடியாதா? என்ற முடிவை எடுக்கக் கூடிய சக்தியும் அறிவும் உண்டு.

அப்படியில்லதோர் . . . . . . அவர்களாகவே முடிவெடுக்கட்டும். . .

உங்கள்,
அஜீவன்
Reply
#55
Karavai Paranee Wrote:சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று உணரமுடிந்தாலும் எமது தேசத்தின் வலியினை எவராலும் கற்பனையால் செதுக்கமுடியாது. அதை அனுபவித்தால்தான் முடியும் என்பதை இந்திய சினிமா உணரவேண்டும்.

மீண்டும் கருத்துகளை தொடர்ந்ததற்கு நன்றி அன்பான பரணிக்கு,


சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று உணரமுடிந்தாலும் எமது தேசத்தின் வலியினை எவராலும் கற்பனையால் செதுக்கமுடியாது. அதை அனுபவித்தால்தான் முடியும் என்பதை இந்திய சினிமா உணரவேண்டும்."
[u]எனும் உங்கள் ஆதங்கத்தில் பதில் இருக்கிறது.
எனது பிரச்சனை , அடுத்தவன் பிரச்சனையல்ல.

யார் பக்கத்தில இருந்தாலும் தாய்தான் பிள்ளை பெற வேண்டும். பிரசவ வேதனையை அனுபவிக்க வேண்டும்.அதை யாராலும் நிச்சயம் உணர முடியாது.

நீங்கள் தற்போது வாழும் .....ய்ன் நாட்டுக்கும் , சுற்றியுள்ள அரபு நாடுகளுக்கும் இடையே எத்தனையோ ஒரே மொழி (அரபு) பேசும் நாடுகள் இருக்கின்றன.
அவர்களது நாட்டுப் பிரச்சனைகளை பற்றி கொஞ்சமாவது உங்களுக்கும் தெரிந்திருக்குமென்று நான் நம்புகிறேன்.

அதை ஒப்பிட்டுப் பாருங்கள் உங்களுக்கு விடை கிடைக்கும்.

அப்படியும் கிடைக்காவிட்டால்

தாய்க்கும் , தாரத்துக்கும் உள்ள வித்தியசாசத்தை ஒப்பிடுங்கள்.

இது அது மாதிரித்தான் சார்...................

உங்கள்,
அஜீவன்
Reply
#56
அன்பான பதிலுக்கு நன்றி திரு.அஜீவன்

உண்மைதான் எனது பிரச்சினை எனக்கு மட்டும்தான்.

நன்றி தங்கள் விளக்கத்துடனான பதிலிற்கு

தாய்க்கும் தாரத்திற்கும் உள்ள வித்தியாசங்கள்...........ஒப்பிட்டுத்தான் பார்க்கவேண்டும். காலம் இருக்கின்றது.
சரி இன்னுமொரு விடயம்

மலையாள சினிமாவிலும் நல்ல தரமான நடைமுறைவாழ்வுடன் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. அவற்றில் எந்தவித மிகைப்படுத்தலோ எந்தவித சினிமாத்தனமோ காணப்படவில்லை. ஆனால் அதே திரைப்படம் தமிழில் வெளிவருமானால் அங்கு வியாபார நோக்கத்தை கருத்தில் வைத்து கற்பனைகளை விரிவாக்கி சிதைத்து விடுகின்றார்கள்.

உண்மையில் இன்றுவரை நான் எத்தனையோ திரைப்படங்கள் பார்த்துவிட்டேன் ( உங்களது தயாரிப்பில் வெளியான குறும்படங்கள் பார்க்க கிடைக்கவில்லை. எனவே அவற்றை விலக்கி) இன்றுவரை எனக்குள் மீண்டுமொரு தடவை பார்க்க கிடைக்குமா என்ற ஏக்கத்தை விளைவிக்கும் படம் எம்மவர்களால் தயாரிக்கப்பட்ட "காற்றுக்கென்ன வேலி "படம்தான். அதேபோல் ராதிகா விக்ரம் நடிப்பில் வெளியான "சிறகுகள்" என்ற படம். இது முழுக்க முழுக்க வெளிநாட்டில் தயாரான படம். இன்றுவரை மறக்கமுடியவில்லை. அவை யதார்த்தத்துடன் சம்பந்தப்பட்டவை.

அறிந்து சினிமா பார்க்க புறப்பட்ட நாளில் என்னால் வெறுத்து ஒதுக்கிய ஒரு திரைப்படம். பாலச்சந்தர் தயாரிப்பில் பிரகாஸ்ராஜ் சுருதி நடித்து வெளியான "கல்கி" திரைப்படம். அதன் தாக்கம் இன்னும் மனதைவிட்டகலவில்லை. அதன் பின்பு பாலச்சந்தர் படங்கள் மீது ஒரு நம்பிக்கையின்மை.
[b] ?
Reply
#57
நன்றி பரணி,

[u]"**மலையாள சினிமாவிலும்**
உங்கள் எழுத்துகளிலேயே எனக்கு தேவையான பதில் கிடைத்து விடுவது எனது
அதிஸ்டம்தான்.
(நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று சொன்னா புரியுமா ? என்பது போல உங்களுக்குள்ளேயே விடை இருப்பதை நான் அறிவேன்;.)

ஆரம்ப கால கட்டங்களில் இருந்த மலயாளப் படங்களின் தரம், மாறுபட்டு தற்போது தமிழ் பட (நிலை போல) உலகை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது.

அதற்கு காரணம் மலையாள தொழில் நுட்பத் துறையினரின் , நடிகர்களின் தமிழ் சினிமாவுக்குள்ளான வருகையும் , வியாபாரமும்.

தமிழ் (மக்களுக்கும்) ரசிகர்களுக்கும், மலையாள(மக்களுக்கும்) ரசிகர்களுக்குமிடையே சில வேற்றுமைகள் உண்டு. மலையாளிகள் இல்லாத நாடே இல்லை என்று தெரிந்தவர்களுக்குத் நன்கு தெரியும். அது அவர்களது கல்வி தராதரம் மற்றும் தம் மக்கள் அனைவரும் முன்னேற வேண்டுமென நினைக்கும் கேரள அரசியல் தன்மைகளின் வெளிப்பாடு.

அவர்களைப் பற்றி ஒரு நகைச்சுவை துணுக்குண்டு :

நீல் ஆம்ஸ்ரோங் அப்பலோ .13ல் போய் சந்திரனில் காலடியெடுத்து வைத்த போது ஒருவர் ஓடி வந்து சாயா சாயா என்று நீல் ஆம்ஸ்ரோங்கிடம் பால் தேனீரை நீட்டினாராம்.

யார் நீ ? என்று நீல் ஆம்ஸ்ரோங் கேட்டபோது :
ஞான் ஒரு மலையாளியாக்கும் என்றாராம்.
நான்தான் முதலில் காலடியெடுத்து வைத்துவன் நீ எப்படி வந்தாய்? என்று நீல் கத்திய போது
பதிலுக்கு சிரித்தவாறே:
இவ்வளவு செலவழிக்க வேண்டியதில்லை கொச்சின் எக்ஸ்பிரஸ் 2ம் வகுப்பு டிக்கட் எடுத்தால் போதும் இங்கு வர. . . . .
என்று சொல்லி விட்டு சாயாவைக் கொடுத்தாராம் அந்த மலையாளி...........................

உலகின் எந்த மூலையிலும் இவர்களைப் பார்க்கலாம் என்பதற்காக சொல்லப்பட்டும் ஒரு வினோதமான கதைதான் இது.

அப்படியான இவர்கள் தமது சமூக முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவர்கள். அவர்களுக்கு அவர்களது தாய் மொழி மற்றும் முக்கிய மொழி மலையாளமாகவே இருக்கும் ஆனால் அவர்களில் அனைவருக்கும் உதவி மொழியாக அல்லது துணை மொழியாக (1) ஆங்கிலம் (2) ஹிந்தி (3) தமிழ் (4) கன்னடம் (5) தெலுங்கு (6) உருது (7) படகாஸ் (ஊட்டி பகுதி பழங்குடியினர் பேசும் தமிழ்-மலையாள கலப்பிலான பேச்சு மொழி. நடிகர் கார்த்திக்கின் மனைவி இந்த மொழியைப் பேசுபவர்.) ஆகிய மொழிகள் தெரியும்.

[u]ஒன்று மட்டும் நிச்சயமாக அனைத்து மலையாளிகளுக்கும் மலையாளம் தவிர்த்து (1) ஆங்கிலம் (2) ஹிந்தி (3) தமிழ் ஆகிய மொழிகள் கொஞ்சமாவது நிச்சயம் தெரியும்.

அதனால்தான் இந்தியா முழுவதும் இன-மத-சாதி பிரச்சனைகளும், இவ் வழியிலான குப்பை அரசியலும் தலை விரித்தாடினாலும் , கேரளாவில் மட்டும் அவை தலை தூக்காமல் ஹிந்து - கிறிஸ்தவ - முஸ்லிம் சமூகங்களிடயே ஒற்றுமையும் சம அந்தஸ்த்தும் காணப்படுகிறது. ஓருவரது அபிலாசைகளை புரிந்து கொள்ளக் கூடிய, மற்றவருக்கு எடுத்தியம்பக் கூடிய ஒரு முக்கிய பங்கை வகிப்பது மொழிதான். அது கேரளாவின் ஒற்றுமைக்கு வழி வகுத்து நிற்கிறது.

அது போல் சிங்கப்புூர் நாட்டு தன்மைகளையும் குறிப்பிடலாம்.
சிங்கப்புூரில் சீன-மலாய - இந்திய (பெரும்பாலானவர்கள் தமிழர்கள். இலங்கையரும் இந்த பகுதியில்தான் சேர்க்கப் பட்டுள்ளனர்.) மக்கள் வாழ்கின்றனர்.

சிங்கப்புூர் சீனரின் முக்கிய மொழிகளாக <i>மன்டரீன், ஹொகியன்,கென்தனிஸ்</i> ஆகிய மொழிகள் வழக்கத்தில் இருந்தாலும் அவர்களது பொது மொழியான <b>ஹொகியன்</b> மொழியும், மலாயரின் <b>மலாய்</b> மொழியும் , இந்தியரின் <b>தமிழ்</b> மொழியும் ,

<b>ஆங்கிலம்</b> அனைவருக்குமான பொது மொழியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதுடன், பாடசாலைகளில் ;

அனைத்து மாணவர்களும் பொது மொழியான <b>ஆங்கிலத்தைக்</b> கற்பதுடன்
<b>சீனர்கள் , தமது இரண்டாவது மொழியாக ஹொகியன் மொழியையும்,
மலாயர் தமது இரண்டாவது மொழியாக மலாய் மொழியும்,
இந்தியர்கள் தமது இரண்டாவது மொழியாக தமிழ் மொழியும் கற்க வேண்டுமெனும்
கட்டாயச் சட்டம் 1980களில் அமுலுக்கு வந்தது.</b>

இந்தியர்களில் (1) ஹிந்தி (2) தமிழ் (3) கன்னடம் (4) தெலுங்கு (5) உருது பேசுவோருக்கு தமிழ் கற்றுக் கொள்வதில் சிரமம் இருந்ததால் அவர்கள் <b>1.ஹொகியன் 2.மலாய் 3.தமிழ் </b>ஆகிய மொழிகளுள் ஏதாவது ஓரு விரும்பிய மொழியைத் தேர்வு செய்யும் உரிமையை மாணவர்கள் வசம் விட்டு விட்டனர்.

இக்கால கட்டத்தில் 1000 முதல் 3000 பிரதி வரை மட்டுமே விற்பனையாகிக் கொண்டிருந்த, தமிழ் வளர்த்த தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களது தனி முயற்சியால் வெளி வந்து கொண்டிருந்த தமிழ் முரசு பத்திரிகையின் விற்பனை 3000லிருந்து 12000 வரை எகிறியது. இன்றும் தமிழை வாசிப்போம் தமிழை நேசிப்போம் எனும் இயக்கமாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.

தவிர அங்கு அரசியலுக்கு வரும் எவரும் சிங்கப்புூர் பல்கலைக்கழகங்களில் அரசியல் துறைசார்ந்த பட்டதாரியாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்ட ஒன்று. சிங்கப்புூரை உருவாக்கிய பெரு மதிப்புக்குரிய லீ குவான் யூ அவர்களுக்கு வலதுகரமாக செயல்பட்டவர் இலங்கையை தாயமாகக் கொண்ட திரு.இராஜரத்தினம் அவர்கள் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியல் களத்தில் எமது உரிமைகளை முடிந்த போது கோட்டை விட்டு , மொழியை வைத்து பகடை நாடகமாடி வயிறு வளர்த்த நம் ஆரம்பகால சுயநல அரசியல்வாதிகள், திட்டமிட்டே தமது சுயநல அரசியல் லாபங்களுக்காகவும், வாக்கு வங்கிகளுக்காகவும் திறம்பட நடித்து அரங்கேற்றியதன் பயனாக, நமது சமூகம் இன்று அல்லல் படுகிறது. ஆனால் அந்த அரசியல்வாதிகளும் அவர்களது குழந்தைகளும் மட்டும் இதற்கு விதி விலக்காக செயல்பட்டது.அவர்களது பரம்பரை மட்டும் எல்லா நாடுகளுக்கும் சென்று, எல்லாம் கற்று............ விதைத்தது யாரோ வினை அறுப்பது யாரோ ?

ஒரு மனிதனுக்கு பல மொழிகள் தெரிந்தால் அவன் ஒருவனாக அல்ல பலராக (4 மொழி தெரியுமானால் 4 மனிதர்களுக்கு சமமாக) கருதப்படுகிறான் என்பது மலையாளிகள் சொல்லும் ஒரு முக்கியமான வசனம்.

அது அவர்களது முன்னேற்றத்துக்கும், புரிந்துணர்வுக்கும் அடி கோலுகிறது. ரசிகர்களின் பகுத்தறிவு தராதரத்தை வைத்தே அவரவர் படைப்புகள் உருவாகின்றது.

நாம் வளரும் போதும் ஏனைய சமூகங்களையும் அவர்களது படைப்புகளையும் பார்க்கும் போதும் எமக்கு வெளியே நின்று எம்னமப் பார்க்கும் நிலைக்கு நாம் வரும் போதும் நம்மில் நிச்சயம் வித்தியாசங்கள் நிகழும் . . . . .

தயவு செய்து குழந்தையாக அடம் பிடிக்காமல் வெளிச்சத்துக்கு வாருங்கள் . . .

அன்புடன்
அஜீவன்
Reply
#58
நல்லதொரு விடயம் பற்றி பேசுகிறீர்கள்.நிறைய விடயதானங்கள் கிடைக்கின்றன.ஒதுங்கி நின்று உள்வாங்கிகொள்கிறேன்.
Reply
#59
எப்படியும் கருத்து எழுதலாம்.. இப்படியும் எழுதலாம்.. கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறதே!! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நன்றிகள் அஜீவன்..
.
Reply
#60
நீண்டவிளக்கத்துடனான அன்பான அமைதியான பதிலிற்கு நன்றி திரு.அஜீவன்.
நேரப்பற்றாக்குறை இன்னும் சில விளக்கங்கள் தேவை பின்பு வருகின்றேன்.
நன்றி
[b] ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)