Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
மதமாற்றம் 90களில் நான் பிரான்ஸ் வந்த புதிதில் இந்த மாற்றவாதிகள் அனேகம்பேரை சந்தித்திருக்கிறேன் உரையாடி வாதங்கள் செய்துமிருக்கிறேன் .குறிப்பாக அவர்கள் எமது பலவீனங்களையறிந்து அதாவது வதிவிட பிரச்சனை வேலையின்மை மொழி பிரச்சனை இப்படியான பிரச்சனைகள் மற்றும் தனிப்பட்ட மனஉளைச்சலில் உள்ளவர்களை இலகுவில் பேசி பேசியே தங்கள் பக்கம் இழுப்பதில் வல்லவர்கள் குறிப்பாக இவர்களது அணுகுமுறை குடியேற்றவாசிகளை நோக்கியதாகவே இருக்கும்.ஆனாலும் மற்றைய சமூகங்களைவிட ஈழத்தமிழர் சமூகத்தில் இவர்களின் போதனைகள் அதிகளவு வெற்றியை கொடுக்கவில்லையென்பதே உண்மை.அதற்கு எமது பழகிப்போன கலாச்சார சமூக கட்டமைப்பும் ஒரு காரணமாகும்.2000ம் ஆண்டுகளளவில்எம்மிடையே இவர்களின் போதனைகள் மிகவும் குறைந்துபோயிருந்தது. காரணம் இவர்கள் இந்த 2000ம் ஆண்டு உலகம் அழிக்கப்படும்.அப்போது கர்த்தரை நம்பியவர்களே காப்பாற்றபடுவார்கள் என்றுமிரட்டியே அதிகளவு போதனைகளில் ஈடுபட்டனர்.ஆனால் 2000த்தில் பெரிதாக எதுவும் நடைபெறாததால்.இவர்களின் போதனையும் சோர்ந்து போயிருந்தது..ஆனால் அண்மையில் நடந்த சுனாமி அனர்த்தத்தின் பின் இவர்களின் பிரச்சாரம் மீண்டும் எம்மவர்மத்தியில சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது கைகளில் புத்தகங்களுடன் வலம்வர ஆரம்பித்து விட்டார்கள்.எனவே இவர்களைபற்றியதும் இவர்களின் மதங்களை பற்றியதுமான ஆரோக்கியமான விமரிசனங்களை முன் வையுங்கள்...
; ;
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ம் எங்களுக்கும் பெரிய தொல்லை கொஞ்ச நாள்.. பிறகு நான் தயவு செய்து எங்கட பொன்னான நேரத்தை வேஸ்ட் பண்ணாதீர்கள் என்று சொன்னன்... வாறது குறைவு.. ஆனால் ஒன்று.. சுனாமி வந்த போது உருக்கமாய் பாமிலி எப்படி என்று வந்து விசாரிச்சார்கள்.. நன்றி சொன்னன்.. கேட்டதுக்கு.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
மதமாற்றம்...பொதுவாக எங்கும் நடைபெறுவது...இன்று நேற்றல்ல..ஆதிமுதல்.
பெரும்பதலும் புலத்திலும் சரி..தாயகத்திலும் தற்போது மதமாற்றத்திலிடுபடுவோர் கத்தோலிக்க மற்றும் புரட்டஸ்தந்து பிரிவை சாரா கிறீஸ்தவர்கள் என நினைக்கிறேன். என்னை 2 3 முறை சந்தித்தார்கள். எனது நேரமின்மை காரணமாக அவர்களுடன் எதுவும் கதைக்காது அனுப்பிவிட நேர்ந்தது. இங்கு மதமாற்றத்துக்கு என்னென் உத்திகளை கையாழுகிறார்கள் தெரியவில்லை. ஆனால் தாயகத்தில் மதமாற்றத்துக்கு கைகொள்ளும் உத்திகள் பற்றி தெரியும். உதாரணத்துக்கு சில...
இளம் வயதில் கணவனை இளந்த ஒரு குடும்பத்திற்கு பொருளாதார ரீதியில் உதவி மதமாற்றம் மேற்கொள்ளபட்டது. அதேபோன்று கூலி வேலையில் ஈடுபடும் அதிகரித்த குழந்தைகளை கொண்ட குடும்பத்தை இணைத்து கொண்டார்கள். அதே வேளை மதம் மாறி பின் தமது எதிர்பார்ப்பு நிறைவேறாது மீள தமது பழைய மதத்துக்கே மீண்ட இரண்டு குடும்பங்களையும் கண்டுள்ளோம். அவர்கள் எக்காரணத்துக்காக இணைந்தார்களோ அது நிறைவேறமையே இதற்கு காரணம். பொருளாதார நிலையால் மதம் மாறுதை தாயகத்தில் எமது பாரம்பரிய மத நிறுவனங்கள் அதாவது கோயில்களின் நிர்வாகிகள் நினைத்தால் குறைக்கமுடியும். உதாரணமாக ஒவ்வோரு ஊரிலுமுள்ள பெரிய ஆலயங்கள் அவர்களது ஆலயத்துக்கு கிடைக்கும் வருடாந்த வருமானம்தில் ஒருபகுதியை... வறுமையில் வாடும் குடும்பங்களை தெரிவு செய்து வருடம் வருடம் 2 3 குடும்ப பிள்ளைகளை தெரிவு செய்து.. அவர்களின் பாடசாலை கல்வி முடியும் வரை உதவலாம்.
கணவனை இழந்த குடும்பத்துக்கு சுயதொழிலில் ஈடு பட உதவலாம்.
இங்கு அவர்களது மத நம்பிக்கையை விமர்சிக்க விரும்பவில்லை . மத நம்பிக்கை அவரவர் மனது சம்பத்தபட்டது.
அவர்கள் எம்முடைய எப்பலவீனத்தை பாவித்து மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என புரிந்து கொண்டு எமது பாரம்பரிய மத நிறுவனங்களை மக்களுக்கு உதவும் நிறுவனங்களாக மாற்றினாலே போதும்.
இன்னுமொரு கருத்து இம்மதமாற்று குழுவினர் அமெரிக்க அடிவருடிகள் என விளக்கும் கட்டுரையை தாயகத்தில் வாசித்த ஞாபகம்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2
Threads: 0
Joined: Feb 2005
Reputation:
0
இயற்கையையும் நடுகல்லையும் (வீரச்சாவடைந்தவர்களின் நினைவுகற்கள்) வணங்கி வந்த ஆதித்தமிழனுக்கு மதங்கள் கற்பிக்கப்பட்டு இருக்கின்றன. அப்போது கற்பித்தவர்களை என்ன செய்வது..?
மதம் என்பது கொள்ளைக் கூட்டம்தானே! இதில் எந்தக் கொள்ளைக் கூட்டத்துடனும் யார் சேர்ந்தால் என்ன?
தமிழின உணர்வாளரான நாங்கள் ஏன் கவலைப் படவேண்டும்?
தமிழனை யாரும் ஏமாற்றாத வண்ணம் அவன் தன்னை உணர்ந்து கொள்ள பகுத்தறிவாளனாக மாற்றவேண்டும்.
ஏன் எதற்கு எப்படி என்று அறிவு பூர்வமாக ஆராய்ந்து வாழ்பவனாக மாற்றவேண்டும்.
இதற்கு ஆவன செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்.
அன்புடன்
திரு
கனடா
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
குளகாட்டான் சென்னது உண்மைதான் இந்த புதிய மதங்களின் தாயகம் அமெரிக்காதான் எதையும் வியாபார ரீதியாகவே அணுகும் அமெரிக்கரகளின் பணம் பண்ணும் ஒரு யுக்திதான் இந்த மதங்களும்.அதைப்போல முன்பு காலனித்துவ ஆட்சிக்கு எப்படி கத்தோலிக்க பாதிரிமார்கள் உடந்தையாக இருந்தார்களோ அதேபோன்று இன்று இந்த புதிய மதங்களின் போதகர்களும் உளவாளிகளாக உள்ளனர்.மற்றபடி இவர்களின் போதனைகளும் ஊரிற்குதான் அவர்களிற்கல்லஉதாரணத்திற்கு எனக்கு யெகோவாவின் சாட்சிகள் மதத்தில் போதகர்கள் சிலருடன் பலகால நட்பு உண்டு அவரகளின் போதனைகளிற்கும் செய்கைகளிற்கும் சம்பந்தமேயில்லை
; ;
Posts: 123
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
<!--QuoteBegin-muzhakkam thiru+-->QUOTE(muzhakkam thiru)<!--QuoteEBegin-->இயற்கையையும் நடுகல்லையும்
மதம் என்பது கொள்ளைக் கூட்டம்தானே! இதில் எந்தக் கொள்ளைக் கூட்டத்துடனும் யார் சேர்ந்தால் என்ன?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஆமாம் முழக்கம் திரு நீங்கள் சொல்வது சரி. எல்லாம் கொள்ளைக்கூட்டம் எதில் யார் சேர்ந்தாலும் ஒன்டுதான். ஆனால் ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறும்போது மாற்றமடைந்தவர் மாறிய மதம் தொடர்பாக அதிதீவிர நிலைப்பாட்டை எடுப்பதற்கு நிறையவே வாய்ப்புக்கள் உள்ளன. அத்துடன் ஏற்கனவே இருக்கின்ற சமுதாய கட்டமைப்பை இது சீர்குழைக்கலாம்
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
ஒவ்வொருவருடைய பலவீனங்களை கண்டு அதை தட்டி மத(மன)மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர்.
நான் வசிக்கும் பகுதியில் சில காலத்துக்கு முன்னர் ஒரு தமிழன் மதமாறிவிட்டான் (மரியாதை கொடுக்க மனம் தரவில்லை) அவன் அந்த நேரத்தில் எனக்கு இருந்த பிரச்சனையை பயன்படுத்தி என்னை அணுகினான். ஆண்டவன் தன்னுடைய கனவில் வந்து எனக்கு உதவச் சொன்னதாக கூறினான். என்னை தன்னிடம் அழைத்து வரச்சொன்னதாக சொன்னான். பண்க்கஷ்டம் எல்லோருக்கும் வரும் நீ வேறு கஷ்டத்தில் இருக்கின்றாய் என்றான் .தன்னுடைய பெயரை மாற்றிவிட்டதாகவும் சொன்னான் .
நான் அவனைக் கேட்டேன் உன்னுடைய தகப்பனின் பெயரை மாற்றிவிட்டாயா ? என்று அதற்கு அவன் பதில் கூறாமல் சென்றுவிட்டான்
இப்படி இவர்களை கேட்டால்தான் சரி மற்றபடி நாங்கள் வாதாடினால் அவர்கள் தேவையற்ற கதைகளை கதைப்பார்கள்.
சரியோ தப்போ என்னுடைய தாயை என்னால் மாற்ற முடியாது. அதைப்போலத்தான் என்னுடைய தாய்மொழியும் மதமும் அதில் இருக்கும் தவறுகளை களைவோம் . அதற்காக மதமாறி விபச்சாரிகள் ஆகமுடியாது.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
<!--QuoteBegin-muzhakkam thiru+-->QUOTE(muzhakkam thiru)<!--QuoteEBegin-->இயற்கையையும் நடுகல்லையும் (வீரச்சாவடைந்தவர்களின் நினைவுகற்கள்) வணங்கி வந்த ஆதித்தமிழனுக்கு மதங்கள் கற்பிக்கப்பட்டு இருக்கின்றன. அப்போது கற்பித்தவர்களை என்ன செய்வது..?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீங்கள் சொல்லும் இவ்விடத்திலிருந்தே மதம் ஆரம்பமாகிறது வேறு யாரும் கற்பிக்க வேண்டிதில்லை என நினைக்கிறேன். ஆதி மனிதன் தனக்கு வேட்டைக்கு உதவிய கல்லையும் ஈட்டியையும் வணங்க தொங்கியிருப்பான் அதே பின் மதமாகியிருக்கும்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>