Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் ஐரோப்பாவுக்கு புலிகளின் அரசியல் குழு!
#1
மீண்டும் ஐரோப்பாவுக்கு
புலிகளின் அரசியல் குழு!
அரசின் பொறுப்பற்ற போக்கை
சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்தும்


விடுதலைப் புலிகளின் உயர்மட்ட அரசியல் குழு ஒன்று மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு விரை வில் விஜயம் செய்யவிருக்கின்றது.
ஆழிப்பேரலை அனர்த்த மீள்கட்டுமானப் பணிகளில் தமிழரை ஒதுக்கி அமைதி முயற்சிகளை உதாசினம் செய்து, போர்முனைப்புடன் செயற்படும் இலங்கை அரசின் பொறுப்பற்ற போக்கை சர்வதேச சமூகத்துக்கு அம்பலப்படுத்தப்படுவது உட்பட பல்வேறு முக்கிய பணிகளில் இக்குழு தனது மேற்குலக விஜயத்தின் போது ஈடுபடும் எனத் தெரிகின்றது.
விடுதலைப் புலிகளின் உயர்மட்ட அரசியல் குழு நோர்வே, டென்மார்க், சுவீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்யவிருப் பது தொடர்பான பூர்வாங்க ஏற்பாடுகள் நடை பெறுகின்றன என்ற தகவலை அனுசரணைப் பணியில் ஈடுபட்டிருக்கும் நோர்வேத் தரப்பு வட்டாரங்கள் வெளியிட்டன.
பெரும்பாலும் இந்த மாத இறுதியில் இவ் விஜயம் இடம்பெறும் என்றும் அந்த வட்டா ரங்கள் தெரிவித்தன.
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் காவல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், நீதி, நிர் வாகத்துறைப் பொறுப்பாளர் இ.பரராஜசிங்கம் (பரா) உட்பட ஏழுபேர் கொண்ட உயர்மட்ட அரசியல் குழுவே ஐரோப்பிய நாடுகளில் சுற் றுப்பயணம் செய்து அந்த நாடுகளின் தலை வர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவிருக் கின்றது.
வெளிநாடுகளில் வதியும் சட்ட அறிஞர்கள், மூத்த தமிழ்ப் பிரஜைகள், பிரமுகர்கள் போன் றோருடனும் இக்குழு கலந்துரையாடி பல திட்டங் களை வகுக்கும் என்றும் கூறப்பட்டது.
ஆழிப்பேரலை அனர்த்த மீள்கட்டுமானம் தொடர்பான நடவடிக்கைகளைக் கையாள் வதற்கான உத்தேச பொதுக்கட்டமைப்பு பற்றி யும் அதன்சட்ட அதிகாரங்கள், செயற்பாடுகள், பங்கு - பணிகள் ஆகியவை பற்றியும் வெளி நாட்டில் வதியும் தமிழர்களான மூத்த சட்ட அறிஞர்களோடு இக்குழுவினர் விரிவாக ஆலோ சனை நடத்துவர் என்றும் கூறப்பட்டது.

Uthayan
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)