Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
203 பேர் பலி - சீன நிலக்கரி சுரங்கம்புதையுண்ட பயங்கரம்
#1
காஸ் வெடித்தது-203 பேர் பலி - சீன நிலக்கரி சுரங்கம்புதையுண்ட பயங்கரம்


<img src='http://www.dinakaran.com/daily/2005/Feb/15/flash/C1144_china.jpg' border='0' alt='user posted image'>
<b><i>சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க தீயணைப்பு போலீசார் ஆயத்தமான காட்சி. </i></b>

சீனாவில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மதியம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்தக் கோர சம்பவத்திற்கு 203 பேர் பலியாகியுள்ளனர். 22 பேர் படுகாயமடைந்தனர். 13 பேர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி யுள்ளனர். அவர்களை உயிருடன் மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

வடகிழக்கு சீனாவில் லியோனிங் மாகாணத்தில் புக்சின் நிலக்கரி தொழிற்சாலை குழுமத்திற்கு சொந்தமான சுஜpயவான் நிலக்கரி சுரங்கம் உள்ளது. தரை மட்டத்திலிருந்து 794 அடி ஆழத்தில் பூமிக்கு அடியில் அமைந்துள்ளது இந்த சுரங்கம். சம்பவம் நடந்த போது 238 தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த காஸ் சிலிண்டர் எதிர் பாராமல் பயங்கரமாக வெடித்தது. இதில் சுரங்கத்தின் உள்பக்க சுவர்கள் இடிந்து விழுந்தன. வெடிவிபத்தினால் ஏற்பட்ட தீ மற்றும் இடிபாடுகளில் சிக்கி சுமார் 203 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல பேர் காயமடைந்தனர். 13 பேர் உயிருடன் சுரங்கத்தில் சிக்கியுள்ளனர். உயிருடன் சிக்கியவர்களை மீட்கும் பணி உடனடியாக தொடங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்ததும் மாநில கவர்னர் மற்றும் துணை கவர்னர்கள் இரண்டு பேர் உட்பட அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர். மீட்புப் பணிகளில் சுமார் 180 பேர் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று மதியம் மொத்தம் 574 பேர் சுரங்கத்தினுள் பணி செய்து கொண்டிருந்தனர். விபத்து நடப்பதற்கு அரைமணி நேரம் முன்பு 336 பேர் பணிமுடிந்து சுரங்கத்தை விட்டு வெளியேறி விட்டனர். அரைமணி நேரத்திற்கு முன் விபத்து நடந்திருந்தால் உயிரிழப்பு பலமடங்கு அதிகரித்திருக்கும்.

சீனாவில் சுரங்க விபத்து நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. கடந்த 2004 ஆம் வருடத்தில் மட்டும் சுமார் 6300 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 6000 பேர் இறந்துள்ளனர். சீனாவில் 70 சதவீத மின் உற்பத்திக்கு நிலக்கரியையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. இதனால் நிலக்கரி சுரங்க உரிமையாளர்களும், அரசு அதிகாரிகளும் பாதுகாப்பு அம்சங்களை காற்றில் பறக்க வி;ட்டு தொழிலாளர்களை கசக்கி பிழிந்து வருகிறhர்கள். அது மட்டுமல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக பல நிலக்கரி சுரங்கங்கள் புற்றீசல் போல் பெருகிவிட்டன. விபத்து நடந்த பிறகு பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என அரசு எச்சரிப்பதோடு சரி. நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் நிலக்கரி சுரங்க விபத்துகள் அங்கு தொடர்கதையாக உள்ளது.


நன்றி-தினமலர்
Reply
#2
ஆசியா பகுதிக்கு யார் சாபமோ, தொடர்ச்சியான அவலங்கள்.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
:: ::

-
!
Reply
#3
Cry Cry Cry
Reply
#4
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#5
சீனாவில இப்படி அடிக்கடி நடக்கிறது வழமையாய் போச்சு.. என்ன இது இந்த வருடம் உலகம் இப்படி போகுது. Cry Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
இதையும் உங்களுடன் பகிர வேண்டும்..... எனக்கு தெரிந்த சீனர்கனளிடம் கேட்டபோது அவர்கள் சொன்னது தங்களிடம் போதும் போதுமென்ற அளவுக்கு மக்கள் இருக்கிறார்கள் என்று... Confusedhock:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#7
அடப்பாவிகளா..?? அப்ப அழியட்டும் என்கிறார்களா..??? :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
:?: :?:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#9
போதுமான அளவிற்கு ஆக்கள் இருக்கிறார்கள் என்றால்.. என்ன அர்த்தம்...???
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)