08-20-2003, 12:03 PM
சிந்தனை செய் மனமே......
|
சிந்தனை செய் மனமே......
|
|
08-20-2003, 12:03 PM
சிந்தனை செய் மனமே......
09-01-2003, 10:48 PM
சிந்தனை செய்திடு மனமே சிந்தனை செய்திடு
உன் வீட்டு முற்றத்தில் - இளந் தென்றலுக்காய் காத்திருந்த காலமதை சிந்தனை செய்திடு உன் உள்ளத்தின் வேட்கைகள் உரிமையிழந்த போது - உன் உணர்வுகள் இறந்ததே .. அதைச் சிந்தனை செய்திடு உயிரைத் துச்சமாய் கையிலெடுத்து கண்ணில் படும் கயவர்களை அழிக்கவுன் உறவுகள் சென்றனரே அந்தப் பொழுதினையும் சிந்தனை செய் உரிமைப் போர் புரிந்து - உனக்காய் வாழ்ந்து மடிந்தனரே - அவர்களைச் சிந்தனை செய்.. இத்தனையையும் தாண்டி - உன் வாழ்விற்கொரு வழி பிறந்திட்டதென்றால் காரணம் என்னவென்றும் சிந்தனை செய்.. நாளைய நீ உனக்காக அல்ல உன் எதிர்கால மண்ணிற்காக நாளையவுன் நாகாPகம் உனக்காகவல்ல உன் தாய் மண்ணிற்காக இன்றைய உன் உழைப்பிலுமோர் பகுதி இன்றைய உன் வாழ்விலுமோர் பகுதி இன்றைய உன் சிந்தனையிலுமோர் பகுதி இன்றைய உன் பார்வையிலுமோர் பகுதி விடியல் பெற்று அந்த வெறிச்சோடிய மண்ணைப்பார்த்து .. மூன்றாம் உலகில் மூச்சைப்பிடித்து உன் வரவிற்காய் காத்திருக்கும் உன் தாய் மண்ணிற்காய் மண்ணின் மைந்தர்களுக்காய் !!!! உன் பொறுப்புக்கள் இன்று மேற்கைத்தேய மண்ணில் மோகம் கலந்து மறைந்து கொண்டு செல்கிறது.. - அதனை ஆற அமர நிதனமாய் சிந்தனை செய் ! நாளைய எதிர்காலத்திற்காய் இன்றே நீ சிந்தனை செய் மனமே சிந்தனை செய்!
11-08-2003, 05:17 PM
வய்யாபுரி என்னை சிந்தனை செய்யவைத்;;துவிட்டீர்கள். உணர்கிறேன் என் தவறை....
வாழ்க உங்கள் கவி ஆற்றல் அன்புன் ஆதி
11-12-2003, 05:37 PM
மின்னல் இட்ட கவிதையில், கவிஞர் வைரமுத்துவின் வார்த்தைகள்,
அதைத் தொடர்ந்து வையாபுரியின் வார்த்தெடுத்த வரிகள் இத்தனையும் இன்பம் சேர்த்தன. நன்றி! |
|
« Next Oldest | Next Newest »
|