Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொதிக்கும் சாம்பாரில் விழுந்து சிறுமி பலி
#1
பிப்ரவரி 06, 2005

பள்ளியில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்து சிறுமி பலி

சென்னை:

சென்னை அருகே சென்னீர்க்குப்பம் பகுதியில் பள்ளிக்கூட சத்துணவு அறையில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த 6 வயது சிறுமி இறந்தாள்.


அச் சிறுமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவளது குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அருகே உள்ள சென்னீர்க்குப்பம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் ஜான்சி ராணி (வயது 6) என்ற சிறுமி படித்து வந்தாள். கடந்த புதன்கிழமை பள்ளி சத்துணவு அறைக்குள் சென்ற ஜான்சி ராணி அங்கு சட்டியில் வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் சாம்பாரில் விழுந்துவிட்டாள்.

இதில் உடல் முழுவதும் எரிந்து போன நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று ஜான்சி ராணி இறந்தாள்.

சிறுமியின் சாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா ஜான்சி ராணியின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு தர உத்தரவிட்டார்.

சாம்பாரை மூடி வைக்காமல், பணியில் அலட்சியமாக இருந்த பள்ளி சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்டோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.


தட்ஸ்டமிழ்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply
#3
Cry Cry
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)