Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சட்டசபைக்கு வந்த தமிழ் சினிமா!
#1
சட்டசபைக்கு வந்த தமிழ் சினிமா!

நேற்று கூடிய சட்டசபையில் தமிழ்சினிமாதான் ஹீரோ. கேள்வி நேரத்தில் தமிழ் மொழியின் 'புதிய' வாட்ச்மேன் ராமதாஸ் சார்பில் அவர் கட்சிதலைவர் ஜி.கே. மணி தமிழ் சினிமா டைட்டில் குறித்துப் பேசினார்.

" 'சிட்டிசன்' என்ற ஆங்கில சொல்லுக்கு குடிமகன் என்பது ஆண்பால். ஆகவே பெண்ணை அழைக்க குடிமகள் என்று குறிப்பிடவேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார். அதே ஆண்டு 'சிட்டிசன்' என்ற பெயரில் தமிழ்திரைப்படம் வந்தது. அந்தப்படத்திற்கு குடிமகன் அல்லது குடிமகள் என்று பெயர் வைத்திருக்கலாம் என்று முதலைச்சரே கூறினார்" என்று முதல்வரே ஒரு காலத்தில், சினிமாவுக்கு தமிழ்பெயரை பரிந்துரைத்திருக்கிறார் என்று கோடிட்டுக்காட்ட, முதல்வரின் பதில் 'நச்'சென்று அமைந்தது.

"திரைப்படங்களுக்கு பெயர் வைப்பதை நிர்ணயிக்கும் உரிமை, தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லை. மேலும், படத்தை தணிக்கை செய்யும் தணிக்கை குழுவின் மீது மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று விளக்கமளித்தார்.

ஆனால், ஜி.கே. மணி இதிலெல்லாம் அடங்கி விடுகிற ஆளா? அவர் மீண்டும் தமிழ்... தமிழ்.. என்று கதைக்க, கேள்விகளால் ஒரு வேள்வியே நடத்திவிட்டார்கள். சுவாரஸ்யமான அந்த கேள்விகள்...

* ஜி.கே. என்ற உங்கள் பெயருக்கு முன்னால் உள்ள இனிஷியல் தமிழா? அதை தமிழில் மாற்றுவீர்களா?

* கார், டீ, சைக்கிள் இவற்றை எப்படி சொல்வீர்கள்? தமிழிலா ஆங்கிலத்திலா?

* சைக்கிளில் மொத்தம் 200 உதிரிப் பாகங்கள் உண்டு. அனைத்திற்கும் ஆங்கில பெயர்கள்தான். இவற்றை எப்படி தமிழில் சொல்வீர்கள்?

இந்த கேள்விக்கு, ஜி.கே. மணி "மிதிவண்டியின் உதிரிப்பாகங்களின் தமிழ்ப் பெயர்களை புத்தகமாக வெளியிட்டிருக்கிறோம். உங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம்" என்று சொல்ல, இடையில் புகுந்த முதல்வர், "புத்தகத்தை பிறகு படிப்போம். இப்போது சைக்கிளின் உதிரிப்பாகங்களின் தமிழ்ப்பெயர்களை சொல்லுங்கள். அவர்கள் வெளியிட்ட புத்தகத்தை ஜி.கே. மணியே படிக்கவில்லை" என்று கூற, பிரச்சனையை எழுப்பியவர் முகத்தில் லிட்டர் லிட்டராக அசடு!

'தமிழ்' என்று பேசும் முன், நாம் பச்சை தமிழர்களாக இருக்கிறோமா என்று தமிழ் வாட்ச்மேன்கள் சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது!
சினி சவுத்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
தம்பி சட்டசபையை ஆக்கிரமித்து வைத்தüருப்பதே தமிழ் சினிமாதான். பிறகு நீங்கள் சட்டசபைக்கு வந்த தமிழ்சினிமா என்று பெரிதாக தலைப்பிட்டிருக்கிறீர்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#3
அதுசரி இந்த தகவல் எந்த தமிழ் விரோத பத்திரிகையி எடுத்தீர்கள். வேறு ஊடகங்ள் வேறு மாதிரியல்லவா நண்பரே போட்டு இருக்கின்றார்கள். மொத்ததில் கமலகாசனின் திரைப்படம் வெளியில் வராது போல் தெரிகின்றது. பார்போம் புலுத்தில் கமலின் படத்திற்கு மக்கள் ஆதரவு கொடுக்கின்றார்களா என்று.

இதனை அந்த................... பத்திரிகையிலிருந்தா எடுத்தீங்க. ஐஐயோ தமிழருக்கு நஞ்சை அல்லவா ஊட்டுகின்றது. அது தமிழர் விரோத பத்திரிக்கை என்பது உங்களுக்கு தெரியாதா?
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#4
இதனை சினிமா செய்திகளை மட்டுமே வெளியிடும் சினிசவுத் இணைய தளத்தில் இருந்து எடுத்தேன். இது அவர்களின் உள்ளூர் அரசியல் என்பது ஒரு புறம் இருக்க தமிழ் பற்றி அதிகம் பேசும் பலர் தமது வாழ்க்கையில் அதனை கடைப்பிடிப்பதில்லை என்பதை வெளிக்காட்டுகின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
அதென்னங்க அந்த பத்திரிகை தமிழ் ஆர்வலர்கள பற்றி மட்டும்தான் தப்பாக கட்டுரை வரைகின்றார்கள். ஏன் ஜெயலலலிதா ரயனிகாந்த் காமலகாசன் தப்பே செய்யாத பிறவிகளா? அப் பத்திரிகையினர் தமது பிழைப்பிற்காக தமிழில் எழுதுகின்றார்கள் . தமிழ்குடிதாங்கி தமிழில் திரைப்படங்களுக்கு பெயர்வைக்கச்சொன்னால், அது தமிழ் குடிதாங்கியின் பிரச்சனையா? ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சனை அல்லவா? அப்படி இருக்க தனது பெயரை சினி சொத் என அங்கிலத்தில் வைதுக்கொண்டு. தமிழருக்கு அறிவுரை கூறுகின்றார்களா? அதை தமிழன் வேறு படிக்கின்றானா? தமிழைக் காப்பது அனைத்து தமிழரின் கடமையும் கூட. இப்படியே போனால் தமிழின் நிலை என்னாவது. தானும் படுக்கானாம் தள்ளியும் படுக்கானாம் என்பதைப்போல. தாமும் தமிழுக்காக பேச மாடார்கள்.
பேசுபவர்களையும் விடமாட்டார்கள். என்கின்ற கதையாக தான் ஜெயலலிதா சினிசொத் போன்றவர்களின் நடவடிக்கை இருக்கின்றது. இது நமக்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் கமலை போன்ற சந்தர்ப்ப வாதிகளை அடயாளம் காண்பதற்கு.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#6
தம்பி மதுரன் உங்களுக்கு இப்பவா தெரியும் கமல் சந்தர்ப்பவாதி என்று . கமல் கடைந்தமோரிலை வெண்ணெய் எடுக்கிற ஆள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#7
அண்ணன் வியாசன் அவர்களே, உண்மையில் கமல் பற்றி அறிந்து கொள்ளும் வயதில் நான் அன்று இருக்கவில்ல. ஆகயால் நான் அவரின் விசிறியாக இருந்தது உண்டு. நான் கமலின் இரசிகனாக இருந்தும் இப்படி பேசுகின்றேன் என்றால் அதற்கு ஒரு காரணம் உண்டு. கமல் தன்னை ஒரு தமிழ்பற்றாழ்னாக முன்பு காட்டியமையே. நடிப்பதிலும் அவர் மன்னன். என்ன நாம் தப்பாக கணித்துவிட்டோம். கமலைப்போன்றவர்கள் திரயில் மட்டும் நன்றாக நடிப்பார்கள் என்று தப்பாக நினைத்துவிட்டோம், ஆனால் இப்போதுதான் தெரிகின்றது இவர்கள் சொந்த வாழ்கையிலும் நடிகர்கள் என்று.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#8
தம்பி இவையள் சதைவிக்கிற வியாபாரிகள். கொள்கை ஒன்றும் இவையளுக்குஇல்லை.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#9
நன்றி வியாசன் அண்ணா. இந்த விடயத்தில் உன்கள் கருத்தும் எனது கருத்தும் ஒன்றிபோவதனையிட்டு மகிழ்ட்சியே. கருதுக்கள் எல்லாவற்றிலும் ஒத்துப்போக முடியாது. எனினும் இதுபோன்ற சில விடயங்களில் நம்முடய கருத்துக்கள் ஒத்து போவதனையிட்டு நாம் மகிழ்ந்து கொள்ளலாம். சந்தர்ப்பம் கிடைத்தால் வேறு விடயதலைப்புக்களிலும் ஆரோக்கியமான முறையில் உங்களுடன் கலந்துரையாட முடியும்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)