Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாட்டார் பாடல்கள்
#1
அனைவருக்கும் வணக்கம்

உங்களுக்குத் தெரிந்த தமிழ் நாட்டார் பாடல்கள் பற்றி சொல்லுங்களேன்.
. .
.
Reply
#2
எனது புத்தக அடுக்குகளில் தேடிக்கொண்டிருக்கிறேன் விரைவில்....
; ;
Reply
#3
விவசாயியின் மனக்குமறல் நாட்டுப்பாடலாக...

காட்ட அழிச்சதாரு
காலமழை மறிச்சதாரு
பூமியெல்லாம் பத்தி எரிய - எங்க
பொழப்பக் கெடுத்ததாரு
காட்ட அழிச்சவன
காவு கொண்டு போகாதோ
மரத்த முறிச்சவன
மண் மூடிப் போகாதோ...
Reply
#4
கடவுளே..என்ன இந்த பாட்டு இப்படி சாபம் போடுது...நன்றி..மேலும் எழுதுங்கள்..
[size=16][b].
Reply
#5
Quote:கடவுளே..என்ன இந்த பாட்டு இப்படி சாபம் போடுது...நன்றி..மேலும் எழுதுங்கள்..
Ţź¡Â¢Â¢ý ÁÉ즸¡¾¢ôÒ «Ð.
Á£ñÎõ ´Õ À¡¼Ö¼ý ÅÕ§Åý.
Reply
#6
மக பேற்றின் போது........ மருத்துவிச்சி பாடும்.......

Quote:மஞசள் பொதியோடும் வந்தீரோ தம்பி..
மஞ்சள் மலை நாடும் கண்டீரொ தம்பி

என்ற பாட்டு யாருக்கு ஞாபகம்........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#7
KULAKADDAN Wrote:மக பேற்றின் போது........ மருத்துவிச்சி பாடும்.......

Quote:மஞசள் பொதியோடும் வந்தீரோ தம்பி..
மஞ்சள் மலை நாடும் கண்டீரொ தம்பி

என்ற பாட்டு யாருக்கு ஞாபகம்........

அரிசிப் பொதியோடு வந்தீரோ தம்பி
அரிசி மலை நாடும் கண்டீரோ தம்பி

இப்படித்தானே இந்தப் பாடல் ஆரம்பமாகும். இல்லையா? :?: :roll:
----------
Reply
#8
vennila Wrote:

என்று தான் நினைக்கிறேன்...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#9
பழைய பாடத்திட்டத்தில நிறைய நாட்டார் பாடல்கள் இருந்தன...கம்பராமாயணம் கூட விரிவா இருந்துச்சு...நமக்குத்தான் அதுகள பிடிங்கிட்டாங்க...நளவெண்பா..நாலடியார் பெரிய புராணம்...சீராப்புராணம்...என்று புராணம் பாட வைச்சுட்டாங்க...! :roll: :wink:

அப்பப்ப பழைய பாடத்திட்டத்த புரட்டேக்க கண்ட நாட்டார் பாடல் ஒன்று...

ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
பாம்புக் குஞ்சுப் பல் விளக்கினன் சும்மாவா இருந்தன்
ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
ஆட்டு முட்டைக்கு மயிர் பிடிங்கினன் சும்மாவா இருந்தன்
ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
கோழிக்குஞ்சுக்கு கொண்டை கட்டினன் சும்மாவா இருந்தன்
.....

இப்படியே,,,,போய்க் கொண்டிருக்கும் மிச்சம் மெமறியில இல்ல.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

(பழைய பாடத்திட்டாக்கள் தெரிஞ்சாத் தொடருங்கோ...ஒரு பக்கத்துக்குக் கிட்ட இது தொடர்ந்திச்சு என்று நினைக்கிறம்...!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
kuruvikal Wrote:பழைய பாடத்திட்டத்தில நிறைய நாட்டார் பாடல்கள் இருந்தன...கம்பராமாயணம் கூட விரிவா இருந்துச்சு...நமக்குத்தான் அதுகள பிடிங்கிட்டாங்க...நளவெண்பா..நாலடியார் பெரிய புராணம்...சீராப்புராணம்...என்று புராணம் பாட வைச்சுட்டாங்க...! :roll: :wink:

அப்பப்ப பழைய பாடத்திட்டத்த புரட்டேக்க கண்ட நாட்டார் பாடல் ஒன்று...

ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
பாம்புக் குஞ்சுப் பல் விளக்கினன் சும்மாவா இருந்தன்
ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
ஆட்டு முட்டைக்கு மயிர் பிடிங்கினன் சும்மாவா இருந்தன்
ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
கோழிக்குஞ்சுக்கு கொண்டை கட்டினன் சும்மாவா இருந்தன்
.....

இப்படியே,,,,போய்க் கொண்டிருக்கும் மிச்சம் மெமறியில இல்ல.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

(பழைய பாடத்திட்டாக்கள் தெரிஞ்சாத் தொடருங்கோ...ஒரு பக்கத்துக்குக் கிட்ட இது தொடர்ந்திச்சு என்று நினைக்கிறம்...!)

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#11
நன்றி குருவி அண்ணா. உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி. 8)

எங்கட அண்ணா சுத்த மக்கு தனக்கு இதெல்லாம் ஞாபகம் இல்லை எண்டவன்(ர்) :evil: :evil:
. .
.
Reply
#12
நாட்டார் பாடல் என்றால் என்ன என்று யாராவது விளக்கம் தரமுடியுமா ?
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#13
அதென்ன பாட்டே வேறையேதோ மாதிரியிருக்கு.. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#14
தாலாட்டு ஒப்பாரி எல்லாம் நாட்டார் பாடல்களா :?:
. .
.
Reply
#15
Quote:[quote="தாலாட்டு ஒப்பாரி எல்லாம் நாட்டார் பாடல்களா

அவையும் நாட்டார் பாடல் களில் அடங்கும்நாட்டார் பாடல்களிற்கு இப்படித்தான் பாடவேண்டும் இன்னஇராகம் எனகிற வரையறையெல்லாம் இல்லை அவை கிராமத்து பாமர மக்களை போலவே சுதந்திரமானவை. ஏனெனில் அவை அவர்களால்தான் பாடப் பெற்றது கோயில் திருவிழாக்கள் திருமணங்களில் தொழிழாளர்கள் தம் அலுப்பை மறக்க பெண் ஆணை கேலிசெயது அல்லது ஆண் பெண்ணை கேலி செய்து .காதலர்கள் .வீரர்களிற்கு மரண வீட்டில் என்று மனிதனின் எல்லா வாழ்க்கை முறைகளிலும் அதன் முறை களையும் பிரதிபலிப்பனவாய் இருந்தவை இந்த பாடல்கள் எழுத படிக்க தொரியாத பாமரர் களாலேயே இவை அதிகம் பாடப்பட்டதால் அதிக மான பாடல்கள் எழுத்தில் இல்லை அதைவிட பின்னர் சினிமா பாடல் களின் ஆதிக்கத்தால் அவை இன்று முற்றாக அழிந்த நிலையிலேயே உள்ளது ஏனெனில் இன்று ஒப்பாரியை தவிர மிகுதி எல்லா இடங்களிலும் சினிமா பாடல்களே...............
தாலாட்டு கூட யாரும் இன்று பாடுவதில்லை (காரணம் பாட தெரியாது)எனக்கு நினைவு தெரிந்து யாழில் கோவில் பொங்கல் காலங்களிலும் மற்றும் மட்டகளப்பு வன்னி பகுதிகளில் வயலில் வேலை செய்வோரும் பாடும் போது கேட்டிருக்கிறேன்(80களின் இறுதியில்)இப்போ அதுகும் இருக்குமா தெரியவில்லை??
; ;
Reply
#16
Quote:ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
பாம்புக் குஞ்சுப் பல் விளக்கினன் சும்மாவா இருந்தன்
ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
ஆட்டு முட்டைக்கு மயிர் பிடிங்கினன் சும்மாவா இருந்தன்
ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
கோழிக்குஞ்சுக்கு கொண்டை கட்டினன் சும்மாவா இருந்தன்
ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
அம்மியடியில கும்மி அடிச்சேன் சும்மாவா இருந்தேன்

!
Reply
#17
நாட்டார் பாடல்களிலே எனக்கு மிகவும் பிடித்தது. இது திரைப்பாடலாகவும் வெளிவந்தது.
ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே
நல்ல பாம்பு வேடங் கொண்டு நான் வருவேன் சாமத்திலே

நல்ல பாம்பு வேடங்கொண்டு நடுச் சாமம் வந்தாயானால்
ஊர்க்குருவி வேடங் கொண்டு உயரத்தான் பறந்திடுவேன்

ஊர்க்குருவி வேடங்கொண்டு உயரத்தான் பறந்தாயானால்
பருந்தாக வேடங் கொண்டு உன்னிடத்தில் நான் வருவேன்

இப்படியாக போய்க் கொண்டே இருக்கும். காதலர்க்கிடையே உள்ள ஊடல் .மிச்சம் ஞாபகமில்லை.

!
Reply
#18
இது நாட்டார் பாடலா என்று தெரியவில்லை.
முன்பு புத்தகத்தில் படித்தது...

கோண கோண மலை ஏறி
கோப்பிப் பழம் பறிக்கையிலே
ஒரு பழம் தப்பிச்சுன்னு
உதைச்சான் ஐயா சின்னத்துரை

இந்த பாடல் மலையக தோட்டத் தொழிலார்களின்
அவலத்தை குறிக்கிறது.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
முடியொடு தேங்காயை கையில் எடுத்தோம்..
மூத்தவர் கணபதியை தோத்திரம் செய்தோம்
தெந்தென்னா தானா தெந்தென்னா தானா
தெந்தென்னா தானா தானத்தந்தின தானா

நல்லைநகர் வாழும் எங்கள் கந்தஸ்வாமி
நல்லாய் நினைந்து அரிவாள் எடுத்தோம்

மட்டுருக்கவே அரிவாளை செய்து
மாவிலங்கம் படிதன்னில் இறுக்கி

வெட்டும் பிடியை சிறக்கவே வெட்டி
வெள்ளி தகட்டால் விரல் கட்டமிட்டு

நல்லைநகர் வாழும் எங்கள் கந்தஸ்வாமி
நல்லாய் நினைந்து அரிவாள் எடுத்தோம்

பாசக் கயிறுருவி பண்டிக்கு நாய் விட்ட
பரமசிவன் ஐயனை பாடியே வாறோம்...
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#20
KULAKADDAN Wrote:முடியொடு தேங்காயை கையில் எடுத்தோம்..
மூத்தவர் கணபதியை தோத்திரம் செய்தோம்
தெந்தென்னா தானா தெந்தென்னா தானா
தெந்தென்னா தானா தானத்தந்தின தானா

நல்லைநகர் வாழும் எங்கள் கந்தஸ்வாமி
நல்லாய் நினைந்து அரிவாள் எடுத்தோம்

மட்டுருக்கவே அரிவாளை செய்து
மாவிலங்கம் படிதன்னில் இறுக்கி

வெட்டும் பிடியை சிறக்கவே வெட்டி
வெள்ளி தகட்டால் விரல் கட்டமிட்டு

நல்லைநகர் வாழும் எங்கள் கந்தஸ்வாமி
நல்லாய் நினைந்து அரிவாள் எடுத்தோம்

பாசக் கயிறுருவி பண்டிக்கு நாய் விட்ட
பரமசிவன் ஐயனை பாடியே வாறோம்...
குளக்காட்டான் இது உண்மையிலேயே இப்படி ஒருபாட்டு உண்டா??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)