Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனைவியை கைச்சாத்திரியிடம் பறிகொடுத்த பூசாரி
#1
மனைவியை கைச்சாத்திரியிடம் பறிகொடுத்த பூசாரி மீண்டும் மனைவியுடன் சேர்ந்தார்.

புதன்கிழமை 26 சனவரி 2005 குமரப்பா

லண்டனில் பூசாரியின் மனைவிக்கும் கைசாதகம் பார்க்கும் சாத்திரியார் ஒருவருக்கும் ஏற்பட்ட காதலால் தனது மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்த கோவில் பூசாரி மீண்டும் நீதிமன்றின் உதவியுடன் மனைவியின் கரம் பிடித்துக்கொண்டுள்ளார். லண்டனில் பிரபல தமிழ்க் கோவிலொன்றில் கடமையாற்றும் கோவில் பூசாரியின் மனைவியே அங்கு கைச்சாத்திரம் சொல்லும் சாத்திரியாருடன் தலைமறைவானதும் ää உடனடியாகக் கோவில் பூசாரியால் காவல்துறையினருக்கு முறையிடபட்டதைத் தொடர்ந்து உடனடியாகப் பொலிசாரின் உதவியுடன் மீண்டும் சட்டப்படியான கணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைச்சாத்திரிக்கும் தனக்கும் ஏற்பட்ட காதலே இந்த விபரீத சம்பவத்திற்குக் காரணம் என்று சம்பவத்துடன் தொடர்புடைய பெண்மணி தெரிவித்துள்ளதாகப் பொலிசாருக்குக் கொடுக்கப்பட்ட முறைப்பாடுகள் தெரிவிக்கின்றது.

Source : http://www.nitharsanam.com/?art=8339
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
மனைவியின் கையை வேறெரு சாத்தியிட்டையும் காட்டியிருகலாம்
; ;
Reply
#3
******




*********நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

<b> தணிக்கை செய்யும் நாடுகள்

[b]அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்</b>
எதுவித தணிக்கையும் இல்லை. ஆனால் வெளியீடுகளுக்கு வயதுக்கட்டுப்பாடு உண்டு. இந்த நாடுகள் தமது நாட்டின் வளர்ச்சியடைந்த மனிதர்களுக்கு எது நல்லது எது தீயது என்று பகுத்து அறியும் அறிவு உண்டு என்று நம்புகின்றன.. அந்நாட்டு மக்களும் அறிவியலிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்து விளங்குகிறார்கள்.

சட்டவிரோதமானவை
வெளியிடுபவருக்கு சிறைத்தண்டனை.
<ul>
<li> சிறுவருடன் பாலியல்.
<li> இனத்துவேசமான வெளியீடுகள்.
<li> வன்முறையை தூண்டும் வெளியீடுகள்.
<ul>

<b> ஜப்பான் </b>
எதுவித தணிக்கையும் இல்லை. ஜப்பான் தனது நாட்டின் வளர்ச்சியடைந்த மனிதர்களுக்கு எது நல்லது எது தீயது என்று பகுத்து அறியும் அறிவு உண்டு என்று நம்புகிறது. அந்நாட்டு மக்களும் அறிவியலிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்து விளங்குகிறார்கள்.

<b> சிங்கப்பூர் </b>
அமெரிக்க ஐரோப்பிய பொருளாதாரத்திலும் பாதுகாப்பிலும் தங்கியிருக்கும் நாடு.
தணிக்கை
<ul>
<li> முற்றிலுமான பாலியல் திரைப்படங்கள்.
<li> பொருளாதாரத்தை பாதிக்கும் செய்திகள்.
<li> அரசியல் நடவடிக்கைகள்.
<ul>

<b> இந்தியா, சிறிலங்கா</b>
பின்தங்கிய நாடுகள். மக்களின் அறிவு வளர்ச்சி பற்றியும் பகுத்தறிவு பற்றியும் அரசுக்கு சந்தேகம். அரசியல்வாதிகளின் கூத்தோ அந்த மக்களே பரிதாபப்படுமளவுக்கு அறிவு மந்தமானது.
தணிக்கை
<ul>
<li> திரைப்படத்தில் பாலியல் காட்சிகள்.
<li> அரசியல் பாதிபபை தரும் திரைப்படங்கள்.
<ul>
<b>ஈழத்தமிழ் மக்கள்</b>
*************

நீக்கப்பப்படவில்லை. நீக்கப்பப்படும் என்பதால் எழுதப்படவேயில்லை. - யூட்
Reply
#4
இப்படி சொல்லவதை விட அந்த பெண்ணை விவாகரத்து செய்யச்சொல்லியிருந்தால் நன்றாய் இருந்திருக்கும்..அவங்க செய்தது சரி(பெண்) என்று சொல்வில்லை அதற்காய்.. இப்படியா கதைப்பீங்க..?? :twisted: :twisted: :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
பெண்கள் தாம் ஆண்களின் போகப்பொருட்களாக தம்மை கருதும்வரை, தாம் ஆண்களின் சொத்துகளாக நடந்து கொள்ளும் வரை, அதைப்பற்றி பேசுவது மட்டும் ஏன் தவறு? இந்தப் பெண் வெறும் பண்டம். ஒருவர் வைத்திருந்தார். இன்னொருவர் கொண்டோடினார். வைத்திருந்தவரோ ஏதோ சட்டத்தையையும் பொலிசையும் காட்டி, தனது பண்டத்தை திரும்பவும் கைப்பற்றி விட்டார். அவர் கட்டிலோடு கட்டிவைக்காவிட்டால் திரும்பவும் பண்டம் காணாமல் போகலாம்.

இவர் பண்டமல்ல பெண்ணென்றால் பிடிக்காத பூசாரியை விகாகரத்து செய்துவிட்டு பிடித்த சாத்திரியோடு சட்டப்படி வாழ, அரச அலுவலகத்தில் விண்ணப்பம் நிரப்பி கையெழுத்து போடுவதற்கு ஒரு அரைநாள் கூட ஆகாது. இது பெண்ணல்ல பண்டம்.
''
'' [.423]
Reply
#6
இந்த இடத்தில் பெண்ணைகளை யாரும் போகப்பொருளாய் பாக்கவில்லை.. அவர்கள் செய்த தவறுக்கு காதல் என்று பெயர் கொடுக்கிறார்கள். அது எந்த விதத்தில் சரி என்பதை விட. இப்படி பட்ட சம்பவங்கள் அடிக்கடி வேவ்வேறு இடங்களில் நடக்கின்றன. அவைகள் பெரிதாக வெளியுலகிற்கு வருவது கிடையாது( இதைவிட கேவலமாகவும் நடக்கின்றன) அந்தப்பூசாரி தனது மனைவியை அழைத்துவந்ததுக்கு பல காரணங்கள் இருக்கலாம். அதைவிட இனி அவர்கள் சந்தோசமாக வரழ்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.. அது போக நீங்கள் அப்படி கூறியது.. எந்த விதத்தில் சரி என்று சொல்லுகிறீர்கள்..?? :?:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
tamilini Wrote:அந்தப்பூசாரி தனது மனைவியை அழைத்துவந்ததுக்கு பல காரணங்கள் இருக்கலாம். ?
பூசாரி தனது மனைவியை <b>"அழைத்து"</b> வந்ததாக அவர் எழுதியிருந்தால் நான் இந்த தொடரிலேயே எழுதியிருக்க மாட்டேன்.
என்ன எழுதியிருந்தார் என்று பாருங்கள்.

Vaanampaadi Wrote:கோவில் பூசாரியின் மனைவியே அங்கு கைச்சாத்திரம் சொல்லும் சாத்திரியாருடன் தலைமறைவானதும் ää உடனடியாகக் கோவில் பூசாரியால் காவல்துறையினருக்கு முறையிடபட்டதைத் தொடர்ந்து உடனடியாகப் பொலிசாரின் உதவியுடன் <b>மீண்டும் சட்டப்படியான கணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்</b>.

மனைவியை ஒரு பண்டம், பொருள் போல பூசாரியிடம் <b>ஒப்படைக்கப்பட்டார்</b> என்று எழுதியிருக்கிறது. நீங்கள் "பெண் போகப்பொருளாக கருதப்படவில்லை" என்று எழுதுகிறீர்கள்.

பூசாரி வேண்டாம், சாத்திரிதான் தேவை என்று போக அந்த பெண்ணுக்கு பூரண உரிமையிருக்கிறது. ஆனால் அந்தப்பெண்ணை ஒரு தொலைந்து போன பொருளைப்போல இன்னுமொரு ஆணிடமிருந்து பறித்து <b>சட்டப்படி</b> உரிமையான ஆணிடம் <b>ஒப்படைத்ததாக </b>எழுதியிருப்பதில் பெண் போகப்பொருளாக தெரியவில்லையா உங்களுக்கு? தொலைந்து போன பிள்ளைகளை இதனுடன் ஒப்பிடாதீர்கள். இது "பூசாரி வேண்டாம்" என்று வெறுத்து வேறொருவரை விரும்பிப்போன முழுமையாக வளர்ச்சியடைந்த சுதந்திரம் இருப்பவராக கருதப்படும் பெண், குழந்தையல்ல.

tamilini Wrote:அது போக நீங்கள் அப்படி கூறியது.. எந்த விதத்தில் சரி என்று சொல்லுகிறீர்கள்..?? :?:


சரியென்று யார் சொன்னது? உங்களைப்போன்ற பெண்களுக்கே நிதர்சனம் பெண்ணை பொருளாக கருதி எழுதியிருப்பது இன்னமும் புரியவில்லையல்லவா? அதைப்படிக்கும் உங்களைப்போன்ற பெண்கள் இதை ஏன் என்று கேட்க வேண்டும் என்பதற்காக தான் அப்படி எழுதினேன். நான் மற்ற களங்களில் எழுதியவற்றை படித்திருப்பீர்கள் அல்லவா? சிந்திக்க தூண்டுவதற்கு பல முறைகள் உண்டு. இது எனது அனுபவத்தில் சக்தி வாய்ந்த சிந்திக்க தூண்டும் முறை. ஆகவே முடிவாக நான் எழுதியது தவறானது.
அதை கட்டுப்பாட்டாளரும் நீக்கிவிட்டார்.
கூடுதலான செய்தித்தணிக்கை உள்ள நாடுகளை நீங்கள் அவதானித்தால் அவை பின்தங்கிள நாடுகளாகவே பெரும்பாலும் இருக்கின்றன. காரணம் அங்கே இவ்வாறாக மக்களை சிந்திக்க தூண்டும் விடயங்கள் பிரசுரமாவதில்லை. தணிக்கை செய்யப்பட்டு விடுகின்றன. ஆகவே மக்களுக்கு சிந்திக்கும் தூண்டுதலும் திறனும் குறைந்து கொண்டு போகின்றன. இது தமிழ்மக்களுக்கும் பொருந்தும்.
Reply
#8
<!--QuoteBegin-Jude+-->QUOTE(Jude)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அந்தப்பூசாரி தனது மனைவியை அழைத்துவந்ததுக்கு பல காரணங்கள் இருக்கலாம். ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பூசாரி தனது மனைவியை <b>"அழைத்து"</b> வந்ததாக அவர் எழுதியிருந்தால் நான் இந்த தொடரிலேயே எழுதியிருக்க மாட்டேன்.
என்ன எழுதியிருந்தார் என்று பாருங்கள்.

<!--QuoteBegin-Vaanampaadi+-->QUOTE(Vaanampaadi)<!--QuoteEBegin-->கோவில் பூசாரியின் மனைவியே அங்கு கைச்சாத்திரம் சொல்லும் சாத்திரியாருடன் தலைமறைவானதும் ää உடனடியாகக் கோவில் பூசாரியால் காவல்துறையினருக்கு முறையிடபட்டதைத் தொடர்ந்து உடனடியாகப் பொலிசாரின் உதவியுடன் <b>மீண்டும் சட்டப்படியான கணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்</b>. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

மனைவியை ஒரு பண்டம், பொருள் போல பூசாரியிடம் <b>ஒப்படைக்கப்பட்டார்</b> என்று எழுதியிருக்கிறது. நீங்கள் "பெண் போகப்பொருளாக கருதப்படவில்லை" என்று எழுதுகிறீர்கள்.

பூசாரி வேண்டாம், சாத்திரிதான் தேவை என்று போக அந்த பெண்ணுக்கு பூரண உரிமையிருக்கிறது. ஆனால் அந்தப்பெண்ணை ஒரு தொலைந்து போன பொருளைப்போல இன்னுமொரு ஆணிடமிருந்து பறித்து <b>சட்டப்படி</b> உரிமையான ஆணிடம் <b>ஒப்படைத்ததாக </b>எழுதியிருப்பதில் பெண் போகப்பொருளாக தெரியவில்லையா உங்களுக்கு? தொலைந்து போன பிள்ளைகளை இதனுடன் ஒப்பிடாதீர்கள். இது "பூசாரி வேண்டாம்" என்று வெறுத்து வேறொருவரை விரும்பிப்போன முழுமையாக வளர்ச்சியடைந்த சுதந்திரம் இருப்பவராக கருதப்படும் பெண், குழந்தையல்ல.

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அது போக நீங்கள் அப்படி கூறியது.. எந்த விதத்தில் சரி என்று சொல்லுகிறீர்கள்..??  :?:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


சரியென்று யார் சொன்னது? உங்களைப்போன்ற பெண்களுக்கே நிதர்சனம் பெண்ணை பொருளாக கருதி எழுதியிருப்பது இன்னமும் புரியவில்லையல்லவா? அதைப்படிக்கும் உங்களைப்போன்ற பெண்கள் இதை ஏன் என்று கேட்க வேண்டும் என்பதற்காக தான் அப்படி எழுதினேன். நான் மற்ற களங்களில் எழுதியவற்றை படித்திருப்பீர்கள் அல்லவா? சிந்திக்க தூண்டுவதற்கு பல முறைகள் உண்டு. இது எனது அனுபவத்தில் சக்தி வாய்ந்த சிந்திக்க தூண்டும் முறை. ஆகவே முடிவாக நான் எழுதியது தவறானது.
அதை கட்டுப்பாட்டாளரும் நீக்கிவிட்டார்.
கூடுதலான செய்தித்தணிக்கை உள்ள நாடுகளை நீங்கள் அவதானித்தால் அவை பின்தங்கிள நாடுகளாகவே பெரும்பாலும் இருக்கின்றன. காரணம் அங்கே இவ்வாறாக மக்களை சிந்திக்க தூண்டும் விடயங்கள் பிரசுரமாவதில்லை. தணிக்கை செய்யப்பட்டு விடுகின்றன. ஆகவே மக்களுக்கு சிந்திக்கும் தூண்டுதலும் திறனும் குறைந்து கொண்டு போகின்றன. இது தமிழ்மக்களுக்கும் பொருந்தும்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

ம் மீண்டும் வந்த பெண்ணை அவர் தவிர்த்தது விடாது தன்னுடன் அழைத்துச்சென்றதை சொன்னேன்.. நாங்க போகப்பொருளாய் பார்க்கப்டவில்லை என்றதன் அர்த்தம்... அவங்களை யாரும்.. கடத்திக்கொண்டு போகவில்லை தாங்களா காதல் மயக்கத்தில.. போய் இருக்காங்க என்று என்பதைச்சொன்னம்.. அதற்கு நீங்க இட்ட கருத்தைப்பார்த்தால்... போகப்பொருளாய் மட்டும் அல்ல விற்பனை வியாபாரப்பொருளாய்.. சொன்ன மாதிரி இருந்தது அதைத்தான்.. நாங்க கேட்டம்.. மற்றப்படி.. அந்த பெண்ணை மீண்டும் ஏற்றுக்கொண்டவருக்கும்.. திரும்பிப்போனவவினுடைய வாழ்வும் இனி எப்படியோ..?? அந்த சாத்திரி தான் சொல்லனும்.. ?? Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--> ம் மீண்டும் வந்த பெண்ணை அவர் தவிர்த்தது விடாது  தன்னுடன் அழைத்துச்சென்றதை சொன்னேன்..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தமிழினி, தமிழினி, செய்தி அப்படி சொல்லவில்லை.

<!--QuoteBegin-Vaanampaadi+-->QUOTE(Vaanampaadi)<!--QuoteEBegin-->கோவில் பொலிசாரின் உதவியுடன் <b>மீண்டும் சட்டப்படியான கணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்</b>. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இப்படியல்லவா சொல்லியிருக்கிறது?

தமிழ்ப்பெண்களுக்கு தன்மானமே கிடையாதா தமிழினி? நீங்களுமா இதை ஏற்றுக்கொள்கிறீர்கள்? ஒருவரை பிடித்து மற்றவரிடம் (ஒரு பொருள் போல) ஒப்படைக்க முடியுமா? அப்படி செய்தால் அது விற்பனை செய்யத்தக்க பண்டமாகுமல்லவா? உங்களை ஒரு பெண் என்ற ஒரே காரணத்தால் பிடித்து இன்னுமொருவரிடம் ஒப்படைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? ஒரு ஆண் வேறு ஒரு பெண்ணுடன் போயிருந்தால் இப்படி பிடித்து ஒப்படைத்திருக்க மாட்டார்களல்லவா?
பொலிசாரின் உதவியுடன் <b>மீண்டும் சட்டப்படியான மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்</b>. இப்படி எங்கேயாவது எப்போதாவது கேள்விப்பட்டது கூட இல்லையே? எப்படித்தான் எமது தமிழ் பெண்கள் இப்படி சூடு சுரணையற்று வாழ்கிறார்களோ!
Reply
#10
அந்த ஒப்படைக்கப்பட்டது என்று சொல் பிரச்சனையா இருக்கா..?? பெண் என்ற காரணத்தால் பிடித்து ஒப்படைக்கப்பட்டிருக்கு என்று எப்படி சொல்லுறீங்க..இது நடந்ததற்கு ஆதாரம் என்ன..?? லண்டனில இப்படி நடக்கிறது சாதாரணம்... பொலீஸ் பெண்விரும்பினபடினால் தானே பொலிஸ் அனுப்பியிருப்பினம்.. பெண் என்றில்ல எங்கள யாரும் பிடித்து ஒப்படைக்கிற நிலமையில நாங்க இல்ல.. எதை வைத்து சொல்லுறீங்க.. ஆணை ஒப்படைக்க மாட்டார்கள் என்று.. ஆணைப்பற்றி கொம்லைன் பண்ணினால் நடக்கக்கு}டும்.. அதைவிட அந்தப்பெண். இன்னொருவரின் மனைவி சட்ட பு}ர்வமாக விவாகரத்துச்செய்யாமல்.. இன்னொருவருடன் சென்றது.. தவறு.. இது ஆணுக்கும் பெண்ணுக்கும்.. பொருந்தும்.. பொலிஸ் அவர்களை மீண்டும் சேர்த்திருக்கலாம்.. இதை ஒப்படைப்பு என்று.. நிதர்சனம் சொல்லுது.. மற்றது.. ஒருவருடைய மனைவியோ கணவனே.. சட்ட ரீதியாக விவாகரத்துச்செய்யாமல்.. இன்னொருவருடன் வாழ முடியுமா..??? அப்படிப்பாத்தால்.. முடியும் என்றால் அவர்களைப்பிரித்தது.. பொலிஸ் தவறு.. முடியாது என்றால்.. அப்படி வாழ்ந்தது அவர்கள் தவறு.. இதில என்ன மற்றத்தமிழ்ப்பெண்கள்.. பெண்களைக் குறை கு}றி என்ன பண்ண..?? :roll: :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
அண்ணா உங்கட கருத்தின் படி ஓட்டு மொத்த தமிழ் பெண்களுக்கும் தன்மானம் இல்லை எண்டல்லவா வருகுது. இதை என்னால் எற்றுக்கொள்ள முடியாது. ஒரு தன் மானமுள்ள எந்தப் பெண்ணாலும் உங்கட கருத்தை ஏற்க முடியாது.:roll:

இந்தச் செய்தியில சொல்லப்பட்ட சம்பவம் அந்தக் குடும்பத்தின் தனிப்பட்ட விவகாரம். ஆனால் இதை மட்டும் வைத்து ஓட்டு மொத்த தமிழ் பெண்களையும் எடை போடாதீங்க Confusedhock:

நாங்க இருக்கிற சமூகத்தில ஒரேயடியாக புரட்சி செய்ய முடியா விட்டாலும் சுயகௌரவத்துடன் வாழத்தான் எந்தப் பெண்ணும் விரும்புவினம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
. .
.
Reply
#12
Niththila Wrote:அண்ணா உங்கட கருத்தின் படி ஓட்டு மொத்த தமிழ் பெண்களுக்கும் தன்மானம் இல்லை எண்டல்லவா வருகுது. இதை என்னால் எற்றுக்கொள்ள முடியாது. ஒரு தன் மானமுள்ள எந்தப் பெண்ணாலும் உங்கட கருத்தை ஏற்க முடியாது

நித்திலா, தமிழினி, தமிழ்ப்பெண்களுக்கு தன்மானம் நிறைவே உண்டு. "ஒப்படைக்கப்பட்டார்" என்ற வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை. ஒருவரை மற்றவரிடம் எப்படி ஒப்படைப்பது? அப்படி எழுதுவதை ஏன் பெண்கள் பொறுத்து கொள்கிறார்கள் என்பது தான் எனது கேள்வி. தமிழினியின் விளக்கம் நியாயமாக பட்டாலும் அது ஒரு வகையில் இப்படியாக நிதர்சனம் எழுதுவதை பொறுத்துக்கொண்டு போவதாக தான எனக்கு படுகிறது. எவ்வளவு தான் ஆத்திரமூட்டக்கூடியதாக எழுதினாலும் பண்பு தவறாமல் எழுதும் உங்கள் இருவருக்கும் நன்றி.
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)