01-25-2005, 02:14 PM
செய்திகள்
செவ்வாய்க்கிழமை 25.01.05 - 7:05 மணி தமிழீழம்
விடுதலைப் புலிப் போரளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை கேணல் பானு அவர்கள் மறுத்துள்ளார்.
மட்டக்களப்பின் பனிச்சங்கேணி எனும் இடத்தில் நான்கு விடுதலைப் புலிப் போராளிகளை கருனா குழுவினர் சுட்டுக் கொன்றதாக கனடாவில் இயங்கிக்கொண்டிருக்கும் தமிழ் வானொலி ஒன்று செய்தி வெளியிட்டதை விடுதலைப் புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் பானு அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளார்.இப்படியான சம்பவங்கள் இடம்பெறவில்லை எனவும் பானு அவர்கள் குறிப்பிட்டார்.மட்டக்களப்பு பனிச்சங்கேணி பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாமை நோக்கி கருனா குழுவினை சேர்ந்தவர் ஆர்.பி.ஜி தாக்குதல் மேற்கொண்டதாகவும் விடுதலைப் புலிகள் திருப்பித் தாக்கியதில் கருனா குழுவைச் சார்ந்தவர் அந்த இடத்திலே சுட்டுக் கொல்லப்பட்டார் எனவும் அதற்குப் பின்னர் அங்கு எந்த சம்பவங்களும் இடம்பெறவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
Source : Pathivu