Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அரசாங்கம் மேற்கொண்டு வரும் போலியான சமாதான முயற்சிகளால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி திருமதி. சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் பிரிவின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள போதும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு பொருத்தமான சூழல் இன்னமும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மிலிந்த மொறகொட பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ், பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிராஜேஸ் மிஸ்ரா உட்பட பலரையும் சந்தித்து சமாதான முயற்சிகளின் தற்போதைய நிலமைகள் தொடர்பாக விளக்கங்களை அளித்து வருகின்றனர்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
வவுனியா தட்சணாகுளம் பகுதியில் இனங்காண முடியாத வகையில் உருக்குலைக்கப்பட்ட ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. துப்பாகியால் சுட்டுக் கொலை செய்த பின்னர் பெற்றோல் ஊற்றி சடலம் எரிக்கப்பட்டமைக்கான தடயங்கள் காணப்பட்ட போதும் இச்சடலம் எவருடையது என்பது இன்னும் இனங்காணப்படவில்லை.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
ஆச்சி ஆட்சியில இருக்கிறதே சிங்கள நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தான். பிறகென்ன கதை விடுகிறா? என்ன மிலிந்த கப்பல் விடச் சொல்லி இப்பவே கால்ல விழப் போய்டாரே? பெர்ணான்டஸ் ஒரு மாதிரியான ஆள். பிறகு கப்பல்ல வேறை எதையும் சேத்து அனுப்பி வைச்சாலும் வைப்பார்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
என்ன ஓடுரதுக்கோ? ஆருக்கு ஆச்சிக்கோ?!
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன் :!: :?: :!: :?:
seelan
Posts: 182
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
மதி வதனன் உம்மை மாதிரி விசா இலலை எனக்க தேவையில்லாமல் வர சும்மா தனிப்பட்ட தகவல் மையத்திலை வந்து கழப்ப வேண்டாம் உமக்கு விசர் எண்டால் உம்மோடை வைச்சுக் கொள்ளும் சரியா :twisted: :twisted: :twisted: :twisted:
. . . . .
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
ஐ.நா.சபையின் அமர்வில் கலந்து கொள்வதில் ஜனாதிபதிக்கும்
அரசுக்கும் இடையில் முறுகல்
ஐ.நா. சபையின் அமர்வொன்றுக்கு சமுகமளிப்பது தொடர்பாக ஜனாதி பதிக்கும், அரசுக்கும் இடையில் முறு கல் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐ.நா. சபையில் எதிர்வரும் 22 ஆம் திகதி எயிட்ஸ் நோய் தொடர்பான அமர்வொன்று இடம்பெறவுள்ளது. இதில் இலங்கை சார்பாக வெளிவிவ கார அமைச்சர் டிரோன் பெர்னாண்டோ கலந்துகொள்ளவிருந்தார். ஆனால், இந்த அமர்வில் தான் கலந்துகொள்ளப் போவதாக ஜனாதிபதி சந்திரிகா குமார துங்க அறிவித்துள்ளார். இது தொடர் பாக ஐ.நா. செயலாளருக்கும் அறிவித் துள்ளார்.
இந்த விடயம் குறித்து அமைச் சர் டிரோன் பெர்னாண்டோ தெரிவித்த தாவது:-
இந்த அமர்வில் நான் கலந்து கொள்ளவிருந்தபோதும் தான் கலந்து கொள்ளப்போவதாக ஜனாதிபதி பத்து நாள்களுக்கு முன்னர் தமது
வேண்டுகோளை ஐ.நா. சபைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதிக் கும், அரசுக்கும் இடையிலான அரசி யல் முறுகல் நிலையை சர்வதேச சமூகத்துக்கு முன்கொண்டு செல்லக் கூடாது என்பதற்காக ஐ.நா. சபை யில் இடம்பெறவுள்ள குறிப்பிட்ட அமர் விலிருந்து விலகிக்கொள்ள நான் தீர் மானித்துள்ளேன். ஐ.நா. சபைக்கு தமது வேண்டுகோளை அனுப்புவது தொடர் பாக வெளிவிவகார அமைச்சுக்கு ஜனாதிபதி எவ்விதத் தகவல்களை யும் வழங்கவில்லை.
இப்படி அமைச்சர் தெரிவித்தார்.ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் ஹாPம் பீரிஸ் இது பற்றிக் கூறுகை யில்:-புலிகளுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டபோதும், அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அரசு அகற்றியபோதும் அரசு, ஜனாதி பதியுடன் கலந்தாலோசிக்கவில்லை. இவற்றோடு ஒப்பிடும் போது இந்த விடயம் பெரிதானதொன்றல்ல என்றும்-வெளிவிவகார அமைச்சின் அதி காரிகளினு}டாகவே தமது கோரிக் கையை ஜனாதிபதி ஐ.நாவுக்கு அனுப்பியிருந்தார். இது வெளிவிவ கார அமைச்சருக்குத் தெரியாமல் இருப் பது என்பது அமைச்சின் நிர்வாக சீரின்மையையே காட்டுகிறது என்றும் - அவர் தெரிவித்தார். ..;.