<img src='http://kavithan.yarl.net/kavithan_img/kavi_anpeenalamaa_nine-thumb.PNG' border='0' alt='user posted image'>
[u]<span style='font-size:27pt;line-height:100%'><b>
இலைகள் உதிர்த்த ஆலமரமாக, எம் காதல்..!</b></span>
<span style='font-size:22pt;line-height:100%'>
நாள் சென்று வந்தாலும்
நானிருக்கும் முகவரியை
நாடிவந்தது உன் மடல்.
கடல் கொண்ட கொடூரத்தால்
பெடல் அற்ற சைக்கிளாய் உளன்ற எனக்கு - உன்
மடல் மூலம் திடம் கொடுத்தாய் மன்னவனே.
கடிதங்கள் பல வரைந்து
கட்டானா புத்தகத்தில் மறைத்துவைத்தேன்
காதல(லி)ன் உனக்காக.
ஆனால், படித்ததெங்கள்
கடலலைகள்...!
நாளும்..., நாளும்...,
எம் நினைவுகளை
நாட்குறிப்பில் தொடர் கதையாக
எழுதிவைத்தேன்.
தொடரும் எம் வாழ்வில்
திருக்குறளாய் படித்திடலாம் என.
தோற்றுவிட்டேன்...! தோற்றுவிட்டேன்..!
காதலில் அல்ல கடலலையிடம்.
இரவு முழுவதும்
உன்னை நினைத்து
கண்ணீர் விட்டு.. விட்டு..,
நனைந்து போன அந்த தலையணைகளில்
விளைந்த உப்பை
என் காதல் சின்னமாக்க
கனாக்கண்டேன். -ஆனால்
கடலலைகள் தலையணையை
வாரிச் சென்று விட்டனவே.
காதல் சின்னாமாய் நான் சேர்த்து வைத்த
கவிவரிகள் காணாமல்
போனதுக்கு காரணமும்
அக் கடலலைகள்.
காவியங்கள் வரிசையில்
காதல் இராமாயணம் எழுத
காத்திருந்து பெற்ற உன்
கடிதங்கள் கடலோடு போனதுக்கு
காரணமும் அவ்வலைகள்.
வெவ்வேறு திசையில் இருந்து வந்த
வேகமான அலைகள்
வேரோடு எம் காதலை சாய்க்க
வேங்கையாய் பாயந்தன.
விழுதுகளால் சூழ்ந்த எம் காதல்
இலைகளை உதிர்த்தாலும்
இறுமாப்பாய்...
இன்றும் ஆலமரமாய்
விழுதுவிட்டு படர்கிறது.
கடல் அலைகளால் கூட
பிரிக்க முடியாத எம் காதல்
எம் உயிர் உள்ளவரை
என்றென்றும் தொடரும்.
இப்படிக்கு
உன் அடுத்த மடலுக்காய்
ஏங்கும் அபலை.</span>
கவிதன்
05/02/2005
http://kavithan.yarl.net/archives/001696.php#more