01-21-2005, 12:11 PM
<img src='http://www.flagfocus.info/worldflags-large/flag-Ger-Swastika-1935-45.gif' border='0' alt='user posted image'>
`ஸ்வஸ்திக்' சின்னத்துக்கு
தடை விதிக்க வேண்டும் என்பதா?
இங்கிலாந்தில் வசிக்கும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு
லண்டன், ஜன. 21_
"ஸ்வஸ்திக்" சின்னத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பதற்கு, இங்கிலாந்தில் வசிக்கும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள் ளனர்.
"ஸ்வஸ்திக்" சின்னம்
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதிர்ஷ்டத்துக்காகவும், அமைதிக்காகவும், ஆன்மீக திருப் திக்காகவும் "ஸ்வஸ்திக்" சின் னத்தை இந்துக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்துக்கள் ஆட்சி காலத்தில் நாணயங்களிலும் "ஸ்வஸ்திக்" சின்னம் பொறிக்கப்பட்டது. வீட்டின் வாசல்களிலும், அழகு பொருட்களிலும் "ஸ்வஸ்திக்" சின்னத்தை பொறித்து மகிழ்ந் தனர்.
இந்தியா, சீனா, கிரீஸ் ஆகிய நாடுகளில் இந்துக்கள் தவிர புத்தர்களும் இந்த சின்னத்தை அதிர்ஷ்டத்தின் சின்னமாக பயன்படுத்தி வந்தனர்.
ஹிட்லர்
இந்த நிலையில் ஜெர்மன் நாட் டில் புரட்சி படையை உருவாக் கிய ஹிட்லர் தனது "நாஜி" படைக்கு சின்னமாக "ஸ்வஸ் திக்"கை எடுத்துக்கொண்டார்.
"ஸ்வஸ்திக்" சின்னத்தை அழி வின் சின்னமாகவும், மரணத்தின் சின்னமாகவும் நாஜி படைகள் அறிவித்தன. பிற்காலத்தில் "ஸ்வஸ்திக்" சின்னத்துக்கு ஜெர்மனி அரசு தடை விதித்தது.
இங்கிலாந்து இளவரசர்
இந்த நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி, லண்டனில் ஒரு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்து இருந்த விசேஷ ஆடை யில் "ஸ்வஸ்திக்" சின்னம் அழகு பொருளாக பொறிக்கப்பட்டு இருந்தது.
இந்த சம்பவம் இப்போது பிரச்சினையை கிளப்பி இருக் கிறது. "ஸ்வஸ்திக்" சின்னத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று இங்கிலாந்தில் கோரிக்கை வலுத்து வருகிறது.
"எங்கள் சின்னம்"
அதற்கு இங்கிலாந்தில் வசிக் கும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்து அமைப்பின் செயலாளர் ரமேஷ் கல்லிடை கூறியதாவது:_
ஸ்வஸ்திக் சின்னம், எங்கள் சின்னம். பல ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே ஸ்வஸ்திக் சின்னத்தை இந்து சமயத்தினர் கோவில்களிலும், குகைகளிலும் வரைந்து உல்ளனர்.
ஸ்வஸ்திக் சின்னம் சூரியனை குறிக்கிறது. நகைகளிலும் ஸ்வஸ் திக் சின்னத்தை பதித்து அணிந்து இருக்கிறார்கள். ஸ்வஸ்திக் என்ற சொல், சமஸ்கிருதத்தில் இருந்து வந்த சொல்.
நாஜிக்கள் இந்த வார்த்தையை யும், சின்னத்தையும் 1920_ம் ஆண்டு தங்கள் படைக்கு சின்ன மாக பயன்படுத்திக் கொண் டனர்.
ஆதரவு திரட்டுவோம்
இங்கிலாந்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் இதுபற்றி விளக்கம் அனுப்பி இருக்கிறோம். எங்கள் கோரிக் கைக்கு ïதர்களும் ஆதரவு தெரி வித்து உள்ளனர். தொடர்ந்து ஆதரவு திரட்டுவோம்.
ஸ்வஸ்திக் சின்னத்தை இந்துக் களின் சின்னமாக அறிவிக்க வேண்டும். இதற்கு தடை விதிக்க கூடாது.
இவ்வாறு ரமேஷ் கூறினார்.
கிறிஸ்தவர்கள் போல
இந்து அமைப்பு பிரதிநிதிகள் நிதின் மெகமா, பூபேந்திரா படேல் ஆகியோர் கூறுகையில், "கிறிஸ்தவர்கள் சிலுவையை சின்னமாக கழுத்தில் அணிந்து கொள்வது போல, இந்துக்கள் "ஸ்வஸ்திக்"கை அணிந்து கொள்ளவேண்டும். இந்த சின் னம் ஆரியர் காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வந்தது" என்று தெரிவித்தனர்.

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&