01-19-2005, 05:48 PM
<span style='font-size:25pt;line-height:100%'>சுயாட்சிக்கான தேவையை விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தி வருகின்றனர்: பிரான்ஸ் ஏடு புகழாரம்! </span>
பிரான்சிலிருந்து மீரா பாலகணேசன் புதன்கிழமை 19 சனவரி 2005 17:53 ஈழம்
இலங்கைத் தீவகத்தில் ஆழிப்பேரலை நிகழ்த்திய பின்னர் மக்களைப் பாதுகாக்கும் பராமரிக்கும் வல்லமையை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்; உலகின் பார்வைக்கு சுயாட்சிக்கான நியாய காரணத்தையும் அவர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள் என பிரான்சின் பிரபல ஏடான மெட்ரோ தெரிவித்துள்ளது.
மெட்ரோ ஏடு தெரிவித்துள்ள கருத்துகள்:
ஆழிப்பேரலை ஓய்ந்த சில கணங்களில் பின்னால் தமிழீழ விடுதலைப் புலிகள் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் மக்களை காப்பாற்றினார்கள்.
கடலில் மிதந்த பிணங்களை மீட்டெடுக்கும் பணியிலும் மிகச்; சிறப்பாக இயங்கினார்கள். அவர்கள் முகாம்களை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களை அங்கு தங்க வைத்தனர்.
அதன்பின்னர் பாதுகாப்பு அரண்களை அமைத்து கொள்ளைகள் நடைபெறாமல் தடுப்பதற்கான செயல்களில் இறங்கி இருந்தார்கள். வாகனங்களில் காயப்பட்டவர்களை மருத்துவ நிலையங்களுக்கு எடுத்துச்; சென்றார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரத்தம் வழங்குவதிலும் அவர்கள் முன்நின்றார்கள். ஒளிää ஒலிப்பதிவுக் கருவிகளுடனும்ää கணனிகளுடனும் விடுதலைப் போராளிக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இறந்தவர்களின் முகங்களை புகைப்படம் எடுத்தார்கள். அடையாளம் காண்பதற்காக அவற்றை ஆவணப்படுத்தினார்கள்.
அதன் பின்னர் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கும்ää புதைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.
'அவர்களின் இராணுவம் மிக நன்றாக வேலை செய்யும் திறன்மிக்கதாக இருந்தது என்று உதவி செய்வதற்காக தமிழீழத்திற்கு வருகை தந்திருந்த பிரித்தானியாவைச்; சேர்ந்த மருத்துவர் ரூபன் துரைராஜா கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான முறையில் நிவாரண உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதில் விடுதலைப்புலிகள் அக்கறையாக இருந்தனர்.
இப்பேரழிவின் போது சிறிலங்கா அரசோ செயலற்றதாக இருந்தது.
1983ல் இருந்து இலங்கைத் தீவகத்தின் வடக்கிலும்ää கிழக்கிலுமாக விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காகப் போராடிவருகிறது.
இரத்தம் சிந்திய தற்கொடையின் மூலம் நன்கு அறியப்பட்டவர்களாக விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள்.
2002ம் ஆண்டிலிருந்து போர் நிறுத்தச்; செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
ஆழிப்பேரலைää இரண்டு முகாம்களுக்கிடையிலும் ஒரு சாமாதனத்தை ஏற்படுத்தும் வாய்ப்புக்கு ஆதரவளிக்கலாம்.
ஒன்றாக வேலை செய்வதற்கான உடன்பாடுகளையும் எட்டலாம்ää சமாதானப் பேச்;சுக்களும் உருவாகி இலங்கையில் அவர்களிடையே ஒரு மாற்றம் நிகழலாம் எனவும் அந்த ஏடு தெரிவித்துள்ளது.
நன்றி புதினம்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

hock: :wink: :?: