01-18-2005, 11:07 AM
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபாகரன்
இலங்கையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சுனாமி தாக்குதலில் இறந்துவிட்டதாக இலங்கை அரசு வதந்தி பரப்பியது. இலங்கை ரேடியோவும் பிரபாகரன் இறந்து விட்டதாகவும் அவரை பல நாட்களாக காணவில்லை என்றும் ஒலிபரப்பியது. விடுதலைப்புலிகள் இதை வன்மையாக கண்டித்தனர்.
இந்த நிலையில் பிரபாகரன் சுனாமி பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்வது தொடர்பாக விடுதலைப்புலிகளுடன்கிளிநொச்சி முகாமில் ஆலோ சனை நடத்தினார். தமிழ்செல்வன் உள்பட முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். பொதுமக்கள் முன்பும் அவர் தோன்றி இலங்கை அரசின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். விடுதலைப்புலிகளுடன் பிரபாகரன் ஆலோசனை நடத்திய புகைப்படத்தை விடுதலைப்புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஆலோசனை கூட்டத்தில் பிரபாகரன் பேசும்போது "தமிழர் பகுதி யில் இலங்கை ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் முதல் சுனாமி. இப்போது தமிழர் பகுதியில் ஏற்பட்டு இருப்பது 2-வது சுனாமி நாம் சர்வதேச உதவிகளை மட்டுமே நம்பி இருக்கமுடியாது. மீட்பு பணிகளை மேற்கொள்வதிலும் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதிலும் நம்மை நாமே முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். சுனாமி பாதித்த தமிழர் பகுதிகளில் மருத்துவ பணிகளை மேற்கொண்ட டாக்டர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.
News Source : Maalaimalar
Photos: Tamilnet
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/ltte_leader_meet_170105_02.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/01/ltte_leader_meet_170105_06.jpg' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&