Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அலையில் சிக்கிய இரு சிறுமிகள் அபூர்வமாக தப்பியது எப்படி?
#1
அலையில் சிக்கிய இரு சிறுமிகள்
அபூர்வமாக தப்பியது எப்படி?
அண்மையில் நடந்த சுனாமி அனர்த்த நிகழ்வின் போது அதிசய சம்பவங்கள் இடம்பெற்றதான செய்திகள் பலஅவ்வப் போது வெளிவந்த வண்ணமிருக்கின்றன.
இதுவும் அப்படியானதொரு சம்பவம் தான். மணற்காட்டுப் பகுதியில் சுனாமி தாக்கிய வேளையில் இரண்டு சிறுவர் கள் அபூர்வமான முறையில் காப்பாற்றப் பட்டிருக்கின்றனர்.
தம்பித்துரை சுகன்யா (வயது 7), தம் பித்துரை சசிரூபன் (வயது 02) ஆகிய இரு சகோதரர்களுமே இவ்வாறு காப் பாற்றப்பட்டவர்கள்.
சம்பவதினம் இவ்விரு சிறுவர்களும் வீட்டிலேயே இருந்துள்ளனர். சுனாமி அலைவந்துகொண்டிருந்த செய்தியறிந்து அவசரத்தில் வீட்டிலிருந்த மற்றவர்கள் வெளியில் ஓடித்தப்பிவிட சிறுவர்கள் இரு வரும் வீட்டினுள் தனியாகச் சிக்கிக்கொண் டனர்.
கடல் வெள்ளம் ஊரையே அடித்துச் சென்ற பின்பு உறவினர்கள் பிள்ளை களைக் காணாத ஏக்கத்துடன் தேடியோடி னர்.
ஆனால், எல்லோரும் ஆச்சரியப்படு மாறு அச்சிறுவர்கள் இருவரும் தமது வீட்டின் இடிபாடுபகளுக்கு மத்தியில் இருந்து அழுதுகொண்டு வெளியே வந்தனர்.
சிறுவர்களைக் கண்டு ஆச்சரியத்து டன் எப்படித் தப்பினீர்கள் என்று கேட்ட னர் ஊரவர்கள், அதற்கு அந்தச் சிறுவர் கள் கூறிய பதிலைக் கேட்டு உறைந்தே போய்விட்டனராம்.
கடல் வெள்ளம் வந்த போது எம்மை ஓர் அம்மா மேலே தூக்கியவாறு இருந் தார். அந்த அம்மா எங்களைக் கீழே இறக்கி விட்டு மறைந்து விட்டார். ஆனால், அவரை நான் ஒருநாளும் கண்டதில்லை... என்று தமது திகில் அனுபவத்தைச் சொன்னாள் சிறுமி த.சுகன்யா.
இந்நிலையில், தமக்கு அருகில் கோயில் கொண்டிருக்கும் அன்னை வேளாங் கன்னியே இவ்வாறு தமது பிள்ளை களைக் காப்பாற்றினார் என்று அவ்வூர் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

Source: Uthayan
Reply
#2
அப்ப என்னங்க.. மற்றச்சிறுவர்கள் குழந்தைகள் இல்லையா..?? அவங்க கு}ட என்ன கோவம் அந்த அம்மாவுக்கு.. ??? :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
சுனாமியை வைச்சும் ஒருத்தன் அல்லா என்றான்..ஒருத்தன் வேளாங்கன்னி எங்கிறான்..மதம் பிடிச்சதுகளுக்கு மதம் இன்னும் தீரல்லப் போல... துனபம் வந்தது தன்னைப் போல மனிதனுக்கு என்று உணர்கிறானே இல்ல...!! :evil: Idea Confusedhock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
இப்படி மட்டக்களப்பில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற முஸ்லிம்களுக்கு இந்துக்கடவுளான கிருஷ்ணன் பாம்பணையில் பள்ளிகொண்டு அவர்களுக்கு காட்சிகொடுத்தாராம். ஆஞ்சயேரை தினமும் வணங்கும் ஓர் பக்தனை குரங்கு காப்பாற்றியதாமே. இப்படி பல அதிசயங்கள் நிகழ்ந்திருக்கு என்று தப்பியவர்கள் பலர் பத்திரிகைக்களித்த தகவலைப் படித்தேன். அதிசயம்தான்.
----------
Reply
#5
ஓ இப்படி வேறை நடக்கா..?? :|
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
என்னங்க அப்ப எல்லாக் கடவுளும் ஒன்றா வந்து கலியுகத்துக்கு ஒரு வோணிங் கொடுத்திருக்காங்களோ...வந்தவங்க நல்லது செய்திருக்கலாமே...இவ்வளவு உயிர்களைக் கொன்றது...அதுவும் அப்பாவிகளைக் கொன்றதில என்ன தர்மம் இருக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
«ôÀÊ ´ñÎõ þø¨Ä... ±øÄ¡õ ±í¸¼ ¦ÀÊÂûà ¾¢ÕÅ¢¨Ç¡¼ø.. ±ýÉ ±í¸¼ ¦ÀÊÂû ±ñ¼ ¯¼§É ÌÆôÀÁ¡¸ þÕì¸?? «Ð¾¡ý ±ýà ¾¡ÊÅû÷ò¾ ÌÆó¨¾¸Ç¢ÉÐõ ±í¸¼ Òо¨ÄÅ÷ (¸ÕÉ¡ö) ýà ¦ÀÊÂÙõ ¾¡ý.. «ò§¾¡¼ þó¾ ¿¡(ö)¸ò¾¢Éà ¾¢ÕÅ¢¨Ç¡¼Öõ ܼ... :roll: :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
tamilini Wrote:அப்ப என்னங்க.. மற்றச்சிறுவர்கள் குழந்தைகள் இல்லையா..?? அவங்க கு}ட என்ன கோவம் அந்த அம்மாவுக்கு.. ??? :roll: :roll:

kuruvikal Wrote:சுனாமியை வைச்சும் ஒருத்தன் அல்லா என்றான்..ஒருத்தன் வேளாங்கன்னி எங்கிறான்..மதம் பிடிச்சதுகளுக்கு மதம் இன்னும் தீரல்லப் போல... துனபம் வந்தது தன்னைப் போல மனிதனுக்கு என்று உணர்கிறானே இல்ல...!! :evil: Idea Confusedhock:

என்ரை பதிலை வைச்சு.. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்ற கோணத்திலை பார்க்கவேண்டாம்... நான் வெளிப்படையாகவே சொல்லுறன் எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை...

தயவுசெய்து தாழ்மையான ஒரு வேண்டுகோள்.. கடவுள் நம்பிக்கை எண்டுறது தனிமனிதனுடைய சிந்தனையை பொறுத்தது.. அதை நாங்கள் ஏன் விமர்சிப்பான்?

விமர்சி;ப்பதன் ஊடாக பலருடைய (யாழ் களத்திலேயே) எதிர்ப்புகளை சம்பாதிக்கவேண்டி வரும்.. இல்லை..
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place
Reply
#9
கடவுளே ஒருத்தர காப்பாத்தி பலர சாகவிட்டா சந்திரிகா சிங்களவருக்கு நிவாரணம் கொடுத்து தமிழருக்கு கொடுக்காமல் விட்டா சந்திரிகா கடவுளவிட better போல இருக்கு. அப்படி ஒரு சக்த்தி அவர்கள காப்பாத்தி இருந்தா அந்த சக்த்தி வணங்கப்படக்கூடிய ஒண்ணு அல்ல. ஒரு தாய் தான் பிள்ளைகள் எல்லோரையுமே காப்பாத்த முயற்ச்சிப்பாள் மனிதனுக்கு இருக்கிற இந்த எண்ணம் கடவுள் என்று சொல்லப்படுகிற அதுக்கு இல்லை என்றாள் அதுதான் கடவுளா?
Reply
#10
krishnan விமர்சிக்க வேண்டாம் சிந்திக்க தூண்டலாம் தானே?
Reply
#11
இனி இப்பிடித்தான் பல கதை கை கால் முக்கு எல்லாம் வைத்து வரும்
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)