Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இவர்களோடு வாழ மறுபிறப்பொன்று வேண்டும்
#1
<span style='font-size:22pt;line-height:100%'> <b>இவர்களோடு வாழ
மறுபிறப்பொன்று வேண்டும்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/01/20050110164613kallady-vipulananda.jpg' border='0' alt='user posted image'>

இயற்கை எவ்வளவு பலம் வாய்ந்தது என்பது
இப்போதுதான் நமது கண்களுக்கு புரிகிறது.
அது போலவே மக்களது அன்பு கூட
எவ்வளவு சக்திவாய்ந்தது என்பதும்
நமக்குத் தெரிகிறது...........

2004 மார்கழி 26 ம் திகதி கடல்
நமது நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டது.
அன்று முதல் ஒவ்வொரு மனிதனின்
ஆழ் மனதிலும் இறுகிக் கிடந்த
அன்பும் கருணையும் கடல் அலை போலவே
பொங்கிப் பிரவாகித்ததை
யாராலும் மறுக்க முடியாது

கடந்த காலங்களில்
நாம் நம்மவர்களின் கொடுமையான
தன்மைகளை மட்டுமே பேசி வந்தோம்.

சிறு பெண் குழந்தைகளைக் கூட
பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தும் . . . . .
மனித உயிர்க் கொலைகாரர்கள் நிறைந்த
ஒரு சமூகத்தைப் பற்றியே பேசி வந்தோம்.

ஆனால்
இன்று நாம் பேசுவது
ஒவ்வொரு சதமாக சேர்த்த உண்டியலைக் கூட
அப்படியே தூக்கிக் கொடுக்கும் மனம் படைத்த
ஒரு சமூகத்தைப் பற்றியதாகும்.

அடுத்தவரிடம் கையேந்தி பிச்சையெடுத்தவர்கள் கூட
தனது பிச்சைப் பாத்திரத்தைக் கொட்டிக் கொடுத்து
பாலுக்காக ஏங்கும் குழந்தைகளுக்கு கொடுங்கள்
என்று கூறும் ஒரு சமூகத்தை பற்றியதாகும்.

மனித உயிர்க் கொலைகளை
அரசியலுக்காகச் செய்து வந்த ஒரு சமூகம்
அதை மறந்து மனித நேயத்தை
நினைக்கத் தலைப்பட்டிருக்கும்
புதியதொரு சமூகத்தைப் பற்றியதாகும்.

பொங்கி எழுந்த கடலலைகள்
நீலமென்றோ பச்சையென்றோ சிகப்பென்றோ
எந்த அரசியல் சாயங்களின் பேதமும் பார்க்கவில்லை.
அது போலவே
அது சிங்களவன் புலிகள் என்ற
பேதத்தைக் கூடப் பார்க்கவில்லை.
குடிசையென்றோ மாடமாளிகை என்ற பேதமும்
அதற்கு இல்லை.
துவிச்சக்கர வண்டியென்றோ பென்சென்றோ
கூட பேதம் அதற்கில்லை.

கடல் ஒருமித்த தனது குணத்தை வெளிப்படுத்தியது.
அது ஒரேயடியாக அனைவரையும் பொதுவாகவே தாக்கியது.
இதுவே இயற்கையின் நியதி.

இங்கேதான்
எம்மவர் கூட அரசியலை மறந்தனர்.
இன மத பேதங்களை மறந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு
தமது மனதில் உருவான கருணையையும் அன்பையும்
இரு கரங்களாலும் முகம் பாராது
பகிர்ந்தளித்து கொடுத்து
தம்மை யாரென்று வெளிப்படுத்தனார்கள்.

அங்கே நிற பேதங்களோ
சிங்களம் தமிழ் முஸ்லிம் என்ற பேதமோ
தலை தூக்கவேயில்லை.
மனித மனங்களில் இருந்து வெளிப்பட்ட
அடிப்படையான ஆத்மார்த்தமான அன்பை மட்டுமே
அங்கே காணக்கூடியதாக இருந்தது.

50 சதத்தால் என் சம்பளத்தை உயர்த்து
எனக் கூக்குரல் போடும் மனிதர்கள்
தனது ஒரு நாள் சம்பளத்தை கையளித்தனர்.

எடுத்ததெற்கெல்லாம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு
அப்பாவி நோயாளிகளை இம்சைப்படுத்தும்
வைத்தியர்களும் தாதிகளும் மாறிப் போய்
அவர்களாக முன்னின்று செய்த சேவைகள்
அவர்களை தெய்வத்துக்கு ஒப்பாகப் பார்க்க வைத்தது.

இன்று
இவற்றைச் செய்யுங்கள் என்று
யாரும் இவர்களுக்கு அறிவுறுத்தவில்லை.
உத்தரவு போடவோ அதிகாரம் செய்யவோ
இவர்களுக்கு யாரும் இருக்கவில்லை.
இவர்களுக்கு ஆணையிட்டது இவர்களது
அன்பும் கருணையும் கொண்ட மனம் மட்டுமேயாகும்.

இம் முடிவுகளை எடுப்பதற்கு - இம்முறை
இவர்களுக்கு நாட்களோ மாதங்களோ எடுக்கவில்லை.
ஒரேயடியாக - ஒரு கணத்திலேயே
இவர்கள் முடிவெடுத்தார்கள்.
தம்மால் கொடுக்க முடிந்தது எதுவோ
அதை வாரி வளங்கினார்கள்
அல்லது செய்தார்கள்.

கொடுப்பதற்கு ஓன்றுமில்லாமல் தவித்தவன்
தன் உழைப்பையாவது வாரி வழங்கினான்.

இதுவரை நாம்
இன்னொன்றை எதிர்பார்த்துக்
கொடுப்போரைத்தான் கண்டிருக்கிறோம்

தேர்தலுக்கு
ஒரு வாகனத்தைக் கொடுப்பவன்
ஆகக் குறைந்தது
ஒரு கண்டிராக்ட்டாவது கிடைக்குமென்றே நினைத்தான்.
இன்று அவன் தன் வாகனத்தை
பாதிக்கப்பட்டோருக்கு
எதையாவது கொண்டு போகக் கொடுத்தான்.
அதே வாகனம்
உயிரற்ற உடல்களைக் கொண்டு சென்ற போது கூட
அவன் எதிர் கருத்துக் கூறாமல் மகிழ்வோடு இருந்தான்.

இன்று தன்னால் முடிந்த
ஓரு பிடிச் சாதத்தைக் கொடுத்ததே
பசித்தவன் பசியாறட்டும் என்ற மனமகிழ்வோடுதான்.

கையிலருந்ததை கொடுத்து விட்டு
ஒரு சிலர் வெறுமனே நடந்தது கூட
அல்லல் படுபவன் வாழவேண்டும்
என்ற ஆதங்கத்தில்தான்.

இவர்கள் எவருமே
ஆகக் குறைந்த நன்றி என்ற
வார்த்தையைக் கூட எதிர்பார்க்காமலே செய்தார்கள்.

கேடுகெட்ட அரசியல்
தன் சாயத்தை மறந்து போய்
உண்மையும் ஒற்றுமையும் சேர்த்து
அன்பை மனித மனங்களில்
தவழ வைத்த காலம் இதுவாகத்தானிருக்கும்.

தொலைக் காட்சி நாடகங்களுக்கு
அடிமையான சமூகம்
அதை மறந்து மனத உயிர்பலிகளைக் கண்டு
ஐயோ என்று கதறியழுதனர்.

தண்ணியின் வேகத்தை தாள முடியாமல்
கடல் அலையோடு அடிபட்டுப் போகும்
காட்சியைப் பார்த்து அதைக் காண சகிக்காது
கண்களை மூடிக் கொண்டனர்.

விழியோரம் வழிந்த கண்ணீரைக் கூட
மனம் தடுமாறி கையில் பட்டிருப்பது
மாவென்றோ மிளகாய் பொடியென்றோ கூட
எண்ண மறந்தவர்களாய் கண்களைத் துடைத்தனர்.

ஐயோ என்ற கதறலோடு
தன் கையில் பட்டதை எடுத்து
தானமாக வாரி வழங்கினர்.

அரச உதவிகளோ
வெளிநாட்டு உதவிகளோ வருவதற்கு மட்டுமல்ல
அவர்ளே செய்வதறியாது திகைத்து நின்ற போது
சாதாரண மக்களின் உதவிகளே
பாதிக்கப்பட்வர்களை சென்று உடனடியாகச் சேர்ந்தது.

மனிதர்கள்
கருணை காட்டிய நேரங்களை பார்த்ததுண்டு.
ஆனால் இலங்கையின் ஒட்டு மொத்த சமூகமே
கருணை கொண்டதை இதுவரை
எவரும் இப்படிப் பார்த்திருக்கவே முடியாது.

இன்று
அழுத இதயங்கள்
பணத்துக்காக ஒப்பாரி வைக்கவில்லை.
உண்மையாகவே அழுதன.
கொடுத்தவர்கள் வள்ளளெனப்
பெயரெடுக்கக் கொடுக்கவில்லை.
அவர்கள் உண்மையாகவே கொட்டிக் கொடுத்தனர்.
இவர்கள் பெயரைக் கூடத் தெரியப்படுத்தாமல் கொடுத்தனர். இங்கேதான்
நாம் உண்மை மனித மனம் கொண்ட
இதயங்களைக் கண்டோம்.
இவர்கள் எவ்வளவு பெரியவர்கள்.
பெருமை மிக்கவர்கள்.
இந்த மனிதர்கள் எவ்வளவு இனியவர்கள்.
இது ஒரு இனிய சமூகம்தானே?

நானும்
இவர்களோடு ஒருவனாய் இணைந்து கொண்ட போது
நாங்கள் எமது இனத்தவர் (சிங்களவர்) வாழும்
தெற்கே போகாமல்
தமிழர்கள் (விடுதலைப் புலிகள்) வாழும்
வாகரையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தோம்.

எமது வாகனம்
பாய்களாலும் படுக்கைகளாலும்
பெண்களுக்குத் தேவையான ஆடைகளாலும்
மருந்துகளாலும் நிறைந்து கிடந்தது.

\"உணவு வகைகள் எப்படியாவது கிடைக்கும்.
நாங்கள் வேறு ஏதாவது எடுத்துச் செல்வோம்.
படுப்பதற்கான பாய்கள் அதிகம் தேவைப்படும்\" என
யாரோ ஒருவர் சொல்ல
அதை எவரும் எதிர்க்காமல் ஏற்றுக் கொண்டார்கள்.

எமக்குத் தேவையான சில உதவிகளை
சியநேரு விளையாட்டுக் கழகமும்
மாணவர் சங்கமும் செய்தது.

\"நாங்கள் யாரும் போகாத
மூதூர் பக்கமாய்ப் போவோம்\" என்றார் ஒருவர்.

யாரும் அதை மறுப்பு சொல்லாமல் ஏற்றுக் கொண்டோம்.

நாங்கள் போவது புலிகளின் பகுதிக்கென்று
யாரும் மறுப்பு சொல்லவில்லை.
நாங்கள் போவது கடல் சாத்தானால்
துன்புற்ற தங்குமிடமின்றித் தத்தளிக்கும்
அனாதைகளுக்கு உதவவேயாகும்.
குளிரில் நடுங்கும் குழந்தையை
அணைத்துக் கொண்டு உறங்க
ஒரு தாய்க்கு நாம் கொடுக்கும்
விரிப்புகள் உதவுமானால்
அதுவே போதும்.

சமாதனமோ யுத்தமோ என்ற
பிரச்சனைகள் கூட எம் முன் எழவேயில்லை.

அவையனைத்தையும் கடல் எம்மை
சிறிது காலத்துக்காவது மறக்க
வைத்துவிட்டதாகவே தோன்றியது.

கடும்
குளிரிலும் மழையிலும்
ஒரு கோவிலிலோ
பாடசாலையிலோ
அல்லது ஏதோ ஒரு மண்டபத்திலோ
படுக்க ஒரு விரிப்புன்றி ஏங்கும்
மழலைகளையாவது காப்பாற்ற
எம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டுமென்ற
உணர்வு மட்டுமே எமது மனங்களில் இருந்தது.

ஆனாலும்
நாங்கள் கந்தளாய் பகுதியைத் தாண்டும் போது
எமது பயணத்துக்கான தடையேற்படுத்தும்
செய்திகளையே கேட்க முடிந்தது.

\"போகாதீர்கள் புலிகள் பொருட்களை அபகரிக்கிறார்கள்\"
என்று சொன்னார்கள்.

ஆனால்
ஒரு சிலர்
\"அங்கு ஒரு பிரச்சனையுமில்லை பயப்படாமல் போங்கள்\"
என்று சொன்னது மனதுக்கு கொஞ்ச ஆறதலாக இருந்தது.

கெட்ட செய்திகளை விட நல்ல செய்திகளை மட்டுமே
மனதில் போட்டுக் கோண்டு போய்க் கொண்டிருந்த போது
ஒரு கடையருகே நிறுத்தி கடைக்குள் உள்ளிட்டோம்.

\"உங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராது.
விரும்பினால் நானும் உங்களுக்கு உதவுகிறேன்.
எவ்வளவு சனம் வேதனைப் படுகுது தெரியுமா'\" என்று கூறி
ஒரு பெரியவர் எம்மோடு வரக்கூடத் தயாரானார்.

அந்தப் பெரியவரது வார்த்தைகள்
எமக்கு யானைப் பலத்தைத் தந்தது.

எவரது பேச்சையும் காதிலெடுக்காமல்
பயணத்தைத் தொடங்கினோம்.

அரச போலீசின் காவலறணை அடைந்த போது
\"புலிகள் தாக்குகிறார்கள் போக வேண்டாம்\" என்றார்கள்.
ஓரு உயர் அதிகாரி கூட அதையே சொன்னார்.

\"எங்களை போவதற்கு அனுமதியுங்கள் அது போதும்\" என்றோம்.

போக அனுமதித்தார்கள்.

அரச அதிகாரப் பகுதியைத் தாண்டி
புலிகளின் அதிகாரப் பகுதிக்குள் உள்ளிட்டோம்.
செஞ்சிலுவைச் சங்கத்தின் வாகனங்களும்
இன்னும் சில வாகனங்களும்
புலிகளின் வாகனங்களும் போய்க் கொண்டிருந்தன.
எமது வாகனத்தையும் அவர்களது வாகனத்துடன்
வரிசையாக ஓட்டிச் சென்றோம்.

ஓரு கட்டிடத்தினருகே வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
எமது வாகனத்தையும் நிறுத்த வேண்டியதாயிற்று.

முன்னால் சென்ற சில வாகனங்களிலிருந்த பொருட்கள்
இறக்கப்படுவது தெரிந்தது.

சிறிது நேரம் நாங்கள் அமைதியாக இருந்தோம்.

\"போவோம் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்\"
என்று சொன்னவர் வாகனத்தை ஓட்டிய சந்திராதான்.

\"பொருட்களை எடுக்க முயன்றால் திரும்புவோம்\"
என்றார் மற்றொருவர்.

வாகனத்தை முன் நோக்கி நகர்த்தினோம்.

வாகனத்தின் முன் பகுதியில் <b>சிங்களத்தில்</b>
<b>எமது சகோதரர்களுக்கு எமது பங்களிப்புகள்</b>
என்று எழுதப்பட்ட பதாகை வேறு இருந்தது.

எமது வாகனத்தை செக் பொயின்டில் இருந்த
புலிகள் நிறுத்தாமல் முன்னேற சைகை செய்தார்கள்.
வாகனத்தை எட்டிக் கூட அவர்கள் பார்க்கவில்லை.

நாம் பயணிக்கத் தொடங்கினோம்.

வாகரை நோக்கிய பயணத்தின் போது
மகாவலி கங்கையை தாண்டிச் செல்ல வேண்டிய
பகுதியை அண்மித்த போது
மற்றுமொரு புதிய பிரச்சனை ஏற்பட்டது.

வாகரை அகதிகளின் முகாமுக்கு செல்ல
இன்னும் 40 கிலோ மீட்டர் செல்ல வேண்டியிருந்தது.
பாதை வேறு தாறு மாறனதாகவும் உடைந்தும் காணப்பட்டது.
கதிரவன் கூட அஸ்தமித்துக் கொண்டிருந்தான்.
இறுதியாக காலம் எமது பயணத்தைத்
தொடரவிடாது தடுக்க முயன்றது.


எமக்குத் தெரிந்த
தமிழில் ஒரு புலிப்படை வீரனிடம்
அகதி முகாம் பற்றிக் கேட்டோம்.

ஆனதீவு என்று போகும் வழியை விபரித்தான்.

கடுமையாகப் பாதிக்கப்பட்டு
வழியெல்லாம் காடுகள் தடுத்து கிடந்த
பாதையின் ஊடாக
ஆனதீவு அகதிகள் முகாமை அடைந்தோம்.

காடுகள் நிறைந்த
ஒரு குக் கிராமத்தில் அமைந்து இருந்த
சிறியதொரு கட்டிடமே ஆனதீவு அகதிகள் முகாம்.
அங்கு குழந்தைகளும் பெண்களும் மட்டுமே காணப்பட்டார்கள்.
ஆண்களாக சில வயோதிபர்கள் மட்டுமே இருந்தார்கள்.

அந்த இளம் பிஞ்சுகள் எம்மை கண்ட போது
ஓடி வந்ததை என்னால் விபரிக்க முடியாது.
குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு
அந்த காட்சியை எண்ண முடியும்.

எங்கள் வாகனத்தில் படுக்கை விரிப்புகளும்
பாய்கள் மற்றும் பெண்களுக்கான உடைகளும்
கொஞ்சம் மருந்துகளும் மட்டுமே இருந்தது.
ஓரு பத்திரிகையையோ
அல்லது
காட்போட் அட்டையையோ விரிப்பாக்கிக் கொண்டு
படுத்திருந்தவர்களுக்கு நாம் கொண்டு போயிருந்த
படுக்கை விரிப்புகள் எப்படி உதவும் என்பதை
விபரிக்க வார்த்தைகளில்லை.

எம் செயலை விட
நாம் அங்கு கண்ட காட்சியை விபரிப்பதே
சரியென்று நினைக்கிறேன்.

அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த
ஒரு பௌத்த பிக்கு (துறவி)
சிலரோடு அங்கு வந்து ஆகாரங்கள்
பரிமாறிக் கொண்டிருந்த காட்சியும்
ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த விதமும்
என்னை சிலிர்க்க வைத்தது.

போலீசாரின் செக் பொயின்ட்களில்
தன்னை போக விடாது தடுக்கும் போதும்
எது வந்தாலும் எம்மைப் போல அல்லல்படும்
சகோதர தமிழ் சகோதரர்களுக்கு
உதவ வேண்டுமென்று பிடிவாதமாக வந்து
இவர்களுக்கு உதவும் போது
<b>எனக்கு இதுபோல் இவர்களோடு வாழ
மறுபிறப்பொன்று வேண்டும் </b>என்று அவர்
வார்த்தைகளை உச்சரித்த போது
அவர் கண்கள் குளமாகியதை
என்னால் பார்க்க முடிந்தது.

இப் பிஞ்சுக் குழந்தைகள்
மஞ்சல் வண்ண ஆடையுடுத்திய
ஒரு பௌத்த துறவியைக் கண்ட முதல்
முறையாகக் கூட இது இருக்கலாம்.
அங்கிருந்த பெண்களும் குழந்தைகளும்
நன்றியறிதலோடு பிக்குவானவரை
வழியனுப்பிய விதத்தில் இருந்த
சிநேகதத்தை நான் எங்குமே கண்டதில்லை.

நான் அவரிடம்
சில விபரங்களை கேட்க முனைந்த போது
<b>புத்த பெருமான் இருந்திருந்தால்
இன்று இப்படித்தான் இருந்திருப்பார் </b>
என்ற வார்த்தைகளை மட்டும் உதிர்த்து விட்டு
தான் வந்த வாகனத்தில் ஏறிக் கொண்டார்.

திரும்பி வரும் வரையும்
சோகத்தில் கூட சிரிப்பு மாறா
மாசற்ற குழந்தைகளின்
இனிய புன்னகைகள்
என்னை நிரப்பியிருந்தது.

<b>- கருணாதாச சூரியாரச்சி</b>

<b>மீவித்த</b> சிங்கள சஞ்சிகையிலிருந்து............</span>
Reply
#2
சொட்டு கண்ணீர் மட்டும்தான் பதில்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#3
சில சிங்கள காவிகளிலும் சொட்டு மனிதம் தங்கியுள்ளது
; ;
Reply
#4
Quote:1994 மார்கழி 26 ம் திகதி கடல்
நமது நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டது

அஜீவன் அண்ணா ஆண்டு மாறி உள்ளது... இக்கடுரையை இங்கு இட்டதுக்கு அதுவும் தமிழில்..... நன்றி
[b][size=18]
Reply
#5
kavithan Wrote:
Quote:1994 மார்கழி 26 ம் திகதி கடல்
நமது நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டது

அஜீவன் அண்ணா ஆண்டு மாறி உள்ளது... இக்கடுரையை இங்கு இட்டதுக்கு அதுவும் தமிழில்..... நன்றி

தவறை உணர வைத்தமைக்கு, நன்றி கவிதன்.
2004.12.26 மாற்றியுள்ளேன்.
Reply
#6
கண்ணீர் மட்டுமே பதிலாய்..
[size=16][b].
Reply
#7
நன்றி அண்ணா
Reply
#8
எனக்கு தெரியும்
எல்லாரும் மனிதர்கள்
ஆனால் அவர்களை வைத்து ஆட்சி செய்யவேண்டும் எ;னறு நினைப்பவர்கள் தான் வில்லண்ணடமானவர்கள்
ஆனால் பெரும்பாலான மக்கள் தங்களை அறியாமல் இந்த ஆட்சியாளர்களுக்கு பின்னால் அணிவகுக்கிறார்கள்

நாங்களும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள புனிதர்கள் என்று நீருபிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை
every one will die one day
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)