01-01-2005, 03:20 PM
ஆசியப் பிராந்தியத்தில் கடலின் நடுவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பூமி அதிர்ச்சி காரணமாக கரைநோக்கிப் பாய்ந்து பெரும் அனர்த்தங்களை ஏற்படுத்திய கடலலைகள் நிலையாக அமைந்திருந்த நாடுகளின் நிலப்பரப்பிலும் - உலக வரைபடத்தில் ஆசியப் பிராந்திய நாடுகளின் அமைவிலும் மாற்றத்தை ஏற்படுத்துமளவுக்கு பலம்வாய்ந்தவையாக அமைந்து விட்டன என அமெரிக்காவின் பிரபல பௌதிகப் புவியியல் விஞ்ஞானியான ஹென் ஹட் கட் தெரிவித்துள்ளார். 9 ரிச்டர் அளவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவல்ல இந்த பூமி அதிர்ச்சி சுமாத்திராவின் தென்கிழக்கு மூலையின் 250 கிலோ மீற்றர் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, அதனைச் சூழவுள்ள சிறுதீவுகள் அமைந்திருந்த நில அமைப்பை 20 மீற்றர் தூரத்திற்கு அப்பால் 66 அடி தள்ளிச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் வடமேல் முனையான சுமாத்திரா தீவும் 36 மீற்றர் தூரம் அதன் முன்னைய அமைவிலிருந்து தென்மேற்குத் திசைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியதிர்வுத் தகவல் மையத்தின் பௌதிகப் புவியியல் விஞ்ஞானியான ஸ்ரூ வர்ட் சிப்கின் என்பவரும் இக்கருத்தை ஏற்றுள்ளார்.
சுமாத்திராதீவு இவ்விதம் அமைப்பு ரீதியில் நகர்த்தப்பட்டிருப்பது மட்டுமன்றி அதனது முன்னைய கடல் மட்டத்தினின்றும் மேலுயர்ந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பர்மா ஆகிய நாடுகளும் முன்னரை விட அவற்றின் கடல் மட்டத்திலிருந்து தாழ்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக இந்தோனேசியத் தீவுகளின் நில அமைவிலும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடற் பெருக்கத்தின் இத்தகைய விளைவுகள் விரைவில் உலகவரைபடத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் - கூறப்பட்டது.
-சூரியன்.கொம்-

www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->