Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்க் கூட்டமைப்பினரை சந்திக்க அனான் இணக்கம்
#1
தமிழ்க் கூட்டமைப்பினரை
சந்திக்க அனான் இணக்கம்
இலங்கை வந்துள்ள ஐ.நா.செயலாளர் நாயகம் கோபி அனான் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பிரதிநிதியை இன்று காலை 8 மணிக்குச் சந்திக்கின்றார்.
கோபி அனானின் விஜயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு தயாரித்த நிகழ்ச்சி நிரலில் தமிழர் தரப்புகளுடனான சந்திப்புகள் புறக்கணிக்கப்பட்டிருந்தன.
இந்த விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் ஐ.நா.அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியதை அடுத்து, கூட்டமைப்பினரைச் சந் திக்கக் கோபி அனான் இணங்கியிருக்கிறார்.
இதேவேளை, ஜனாதிபதியின் ஏற்பாட்டில் சகல அரசியல் கட்சித் தலைவர்களையும் கோபி அனான் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பு இன்று முற்பகல் 10மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்தச் சந்திப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பை அடுத்து கோபி அனான் எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பார்.
அதன் பின்னர் செய்தியாளர் மாநாட்டை நடத்திய பின் அவர் யஐனீவா திரும்புவார்.

நன்றி: உதயன்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)