Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கையில் இன்றைய செய்தியரங்கத்தில்
#1

<b>Invite LTTE to rebuild : JHU </b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/12/20041231195647lamps.jpg' border='0' alt='user posted image'>
United efforts to move forward
Parliament sessions commenced with a minute's silence to remember those who lost there lives in the Tsunami disaster.
The environment was sombre says journalist Daya Lankapura.

The opposition requested a Parliamentary Select Committee to find out why an early warning on the deadly tidal wave was not made available.

Members of the opposition said that an earthquake signal was recorded around six a clock local time in the morning on the fatal day at the Pallekale monitoring centre.

<b>TNA thanks Sinhalese</b>

All parties including the LTTE should be called upon to actively participate in the reconstruction process said Venerable Aturaliye Ratana of Jathika Hela Urumaya (JHU).

R Sambanthan, leader of the Tamil National Alliances (TNA) parliamentary group thanked all the Sinhalese who helped the Tamils and explained how the LTTE had come forward to help Sinhalese who had been caught in the disaster.

Meanwhile the speaker WJM Lokubandara informed Parliament that the Supreme Court has decided that that the proposed anti-conversion bill which prevents unacceptable influence for religious conversion has a number of clauses that are not compatible with the constitution.

If the proposed amendments are to become law a majority vote as well as approval at a referendum will be needed.

<b>இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஜனாதிபதி திட்டம்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/12/20041230190443cbk-meets-tsunami-victims-0.jpg' border='0' alt='user posted image'>
சுனாமி பேரலைகள் தாக்கியதால் இலங்கையில் மொத்தத்தில் கொல்லப்பட்டோரின் உத்தியோகப்பூர்வ எண்ணிக்கை 30,229ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனோர் எண்ணிக்கை 3,588 என்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை 18,883 என்றும் அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடற்கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட சிறார்களை பாதுகாப்பதற்காக விசேஷ செயற்திட்டம் ஒன்றைச் செயல்படுத்தவிருப்பதாக இன்று இலங்கை ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஆனாதைகளாக்கப்பட்ட சிறார்களைத் தத்தெடுத்து பராமரிப்பவர்களுக்கான விசேஷ உதவித்திட்டம் பற்றியும் ஜனாதிபதி ஆராயவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா.மன்ற குழந்தைகள் நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கரோல் பெல்லமி அம்மையார் நேற்று ஜனாதிபதியைச் சந்தித்ததன் பிறகு இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு இலங்கை ராணுவத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சேத நிலையைப் பார்வையிட ஐ.நா.மன்ற தலைமைச் செயலர் கோஃபி அன்னான் எதிர்வரும் பத்தாம் தேதி இலங்கை வரவிருக்கிறார்.

அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கொலின் பவலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை வருகிறார். அன்றைய தினமே அமெரிக்க கடற்படையின் பாரியக் கப்பலில் 1500 மரைன்ஸ் படையினர் வரவிருக்கின்றனர்.

<b>மட்டக்களப்பு, அம்பாறையில் சடலங்கள் தொடர்ந்து கிடைத்துவருகின்றன</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/01/20050104173211ninthavurschoolhospital203.gif' border='0' alt='user posted image'>

நிந்தவூர் அரச மருத்துவமனை ஒரு பாடசாலையில் செயல்படுகிறது
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் கடல்கொந்தளிப்பால் கொல்லப்பட்டோர் சடலங்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அம்பாறையில் இதுவரை கடற்கொந்தளிப்பு தொடர்பாக 10,436 மரணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன; காணாமல் போனோர் எண்ணிக்கையும் இதில் அடங்கும்.

மட்டக்களப்பில் 2591 மரணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றும் 1149 காணாமல் போயிருப்பதாக புகார்கள் வந்துள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்டோர் எண்ணிக்கை இன்று மட்டும் 62 கூடுதலாகியுள்ளது.

இதுதவிர மட்டக்களப்பில் 7 மருத்துவமனைகளும், அம்பாறையில் 6ம், திருகோணமலையில் 2ம் கடல்கொந்தளிப்பால் சேதமடைந்துள்ளன.

இனி புதிதாக அமைக்கப்படும் வைத்தியசாலைகள் கடற்கரையை ஒட்டி அமைக்கப்பட வேண்டாம் என்று நோயாளர்களும் பொதுமக்களும் கருத்துவெளியிட்டுள்ளனர்.

நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரும் இதே கருத்தைத் தெரிவித்தார்.


<b>திருகோணமலை மாவட்ட நிவாரணப் பணி நிலவரம்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/01/20050104091830sri203.jpg' border='0' alt='user posted image'>

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற கடற்கொந்தளிப்பின் விளைவாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீளக் குடியேற்றவும் இவர்களின் தொழில் முயற்சிகள் தொடர்பான பாதிப்புகளை மதிப்பீடு செய்யவுமான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொழும்பிலிருந்து திருகோணமலையைச் சென்றடைந்த மீன்பிடி அமைச்சு அதிகாரிகள் இது தொடர்பான விபரங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதேவேளை, முகாம்களில் தங்கியுள்ள மக்களை மீளக் குடியேற்றவதில் பாரிய பிரச்சனைகள் எதிர்நோக்கப்பட்டுள்ளன; குறிப்பாக இவர்களில் பெரும்பாலானோரின் வீடுகள் சுனாமி பேரலைகளின் தாக்கத்தினால் அழிந்தும் சேதமடைந்தும் உள்ளன.

இந்த நிலையில், வேறு இடங்களில் தற்காலிகமாக இவர்களை குடியமர்த்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

<b>முல்லைத்தீவு நிவாரணப் பணி நிலவரம்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/01/20050104173141manicksmullaitheevu203.gif' border='0' alt='user posted image'>

முல்லைத்தீவில் கடற்கொந்தளிப்பால் சேதமடைந்து நிற்கும் தேவாலயம்
முல்லைத்தீவு மற்றும் வடமராச்சி கிழக்குப் பகுதிகளில் கடற்கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் வீடுகள் பாதிக்கப்படாதவர்களை மீண்டும் அவரவர் வீடுகளுக்குத் திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இடம்பெயர்ந்தவர்களின் நலன்களை கவனிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள செயலணிக் குழு அதிகாரிகள் இந்நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர்.

வீடுகளை இழந்தவர்களில் முதல்கட்டமாக நூறு குடும்பத்தினரை தனித்தனி குடில்களில் தங்கவைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுத்தம் செய்து, நோய்தொற்றுக் கிருமிகளை அழித்து தூய்மைப்படுத்துவதற்கு 5 கோடி ரூபாய்கள் தேவையென்றும் இப்பகுதிகளில் மீண்டும் வீடுகள் அமைக்கும் விதமாகத் திருத்தியமைப்பதற்கு 75 கோடி ரூபாய்கள் தேவைப்படலாம் என ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

உளரீதியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

BBC
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)