Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் வெளிநாட்டு நிதியுதவி கோர முடியாது: சந்திரிகா
#1
ஜனவரி 04, 2005

புலிகள் வெளிநாட்டு நிதியுதவி கோர முடியாது: சந்திரிகா

கொழும்பு:



வட கிழக்கு இலங்கையில் நிவாரணப் பணிகளுக்கு விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதியுதவி கோர முடியாது என இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.

ஆனால், அரசாங்கத்தின் உதவி கிடைக்காத நிலையில் அன்னிய நிதியுதவியை நேரில் பெறுவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என புலிகள் கூறியுள்ளனர்.

தனியார் தொலைக்காட்சிக்கு சந்திரிகா அளித்துள்ள பேட்டியில், நிவாரணப் பணிகளில் தமிழர் பகுதி, சிங்களர் பகுதி என்றெல்லாம் பாகுபாடு பார்க்கப்படவில்லை. விடுதலைப் புலிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

என்ன வகையான உதவி தேவை என்பதை புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனிடம் தொலைபேசியில் கேட்டு, வேண்டியதை செய்து வருகிறார் எனது உதவியாளர் என்றார் சந்திரிகா.

ஆனால், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட வட கிழக்குப் பகுதியில் அரசின் உதவி போதிய அளவில் வந்து சேரவில்லை. இதனால் புலிகள் தான் நிதி திரட்டி நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் இலங்கையில் குவிந்த வண்ணம் இருந்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களுக்கு இதுவரை எந்த உதவியும் வந்து சேரவில்லை என்கிறார் புலிகளின் கமாண்டரான பானு.

மேலும் வட கிழக்குப் பகுதிக்குள் வரும் தன்னார்வ அமைப்புக்களின் நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்களை ராணுவ செக்போஸ்ட்களில் நீண்ட நேரம் நிறுத்தி வைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

வட கிழக்கில் அழுகிய உடல்களாலும், தொடர் மழையாலும் சுகாதார நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக திரிகோணமலையில் நிலைமை படு மோசமாக உள்ளது.

படாலிபுரம் என்ற இடத்தில் பள்ளியொன்றில் 209 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒரே ஒரு கழிப்பறை தான் உள்ளது.

சுனாமியால் உயிரிழந்தோர் விவரம்:

அம்பாறை 11,225 பேர்

மட்டக்களப்பு 2,040

யாழ்பாணம், கிழக்கு வடமராச்சி 780

முல்லைத்தீவு 1,666

திரிகோணமலை 946

மொத்தத்தில் இப் பகுதியில் 16,650க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் சில ஆயிரம் பேரைக் காணவில்லை.

இதே போன்ற நிலை தான் இலங்கையின் தென் பகுதிகளிலும் நிலவுகிறது. அங்கும் சுமார் 20,000 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சில ஆயிரம் பேரைக் காணவில்லை.

மொத்தத்தில் இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 40,000த் தாண்டியுள்ளது.

தமிழகத்தை காத்த இலங்கை:

சுமத்ராவில் ஏற்பட்ட பயங்கர கடல் அலைகளின் பெரும் தாக்கத்தை இலங்கை சந்தித்துவிட்டதால் தான் ராமேஸ்வரம் தொடங்கி தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்படவில்லை.

திருச்செந்தூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகள் மீதான கடல் அலைகளை இலங்கையின் கிழக்குப் பகுதி சந்தித்துவிட்டது.

அதே நேரத்தில் இலங்கைக்கு மேலே மூக்கு மாதிரி நீட்டிக் கொண்டிருக்கும் நாகப்பட்டிணமும், அதன் முனையில் இருந்த வேளாங்கண்ணியும் பெரும் சேதத்தைத் சந்தித்துள்ளன. மேலும் இலங்கையின் தென் பகுதியைத் தாக்கிய சுனாமி அலைகள் கொஞ்சமாய் திரும்பி வந்ததன் விளைவைத் தான் கன்னியாகுமரி மாவட்டமும் குளச்சலும் சந்தித்துள்ளன.

இப் பகுதியிலும் சுனாமி பேய்த் தாக்குதலை இலங்கை தான் பெருமளவில் சந்தித்துள்ளது.

இலங்கையால் தான் தென் தமிழகம் இந்த அளவோடு சுனாமியிடம் இருந்து தப்பியுள்ளது.
Reply
#2
Quote:Vaanampaadi



இணைந்தது: 29 கார்த்திகை 2004
கருத்துக்கள்: 105
வதிவிடம்: Tamilnaadu
எழுதப்பட்டது: செவ்வாய் தை 04, 2005 11:44 am Post subject: புலிகள் வெளிநாட்டு நிதியுதவி கோர முடியாது: சந்திரிகா



ஜனவரி 04, 2005

புலிகள் வெளிநாட்டு நிதியுதவி கோர முடியாது: சந்திரிகா
ஒருக்கா கேட்டுச்சொல்லுங்கோ இவளின்டை வீட்டில இருந்து அங்கொட கன துரமோ எண்டு??? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
Reply
#3
அப்பு அவவுக்கு அறளை பேர்ந்துவிட்டது.இப்ப அவ என்ன சொல்லறது என்ன செய்யிறது என்று தெரியாமல் .இப்ப அவ நல்ல நகைச்சுவையான கருத்துக்களை சொல்லறா கோவியாதையுங்கோ
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#4
Quote:Nada



இணைந்தது: 21 ஐப்பசி 2004
கருத்துக்கள்: 145

எழுதப்பட்டது: செவ்வாய் தை 04, 2005 9:33 pm Post subject:



அப்பு அவவுக்கு அறளை பேர்ந்துவிட்டது.இப்ப அவ என்ன சொல்லறது என்ன செய்யிறது என்று தெரியாமல் .இப்ப அவ நல்ல நகைச்சுவையான கருத்துக்களை சொல்லறா கோவியாதையுங்கோ

உவள் பாவி உந்த லெவலில போனா கோவை சரளா வின்டை ரெக்கோட் உடையும் போல இருக்கு!!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
Reply
#5
Quote:உவள் பாவி உந்த லெவலில போனா கோவை சரளா வின்டை ரெக்கோட் உடையும் போல இருக்கு!!!

ஏங்க கோவை சரளாவை இதுக்க இழுக்கிறீங்க அவ லெவெலே வேறை Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
ஐயோ நான் தேவையில்லாமல் கதைக்கேல்லை கதைச்சா அப்பு நிலமை தெரியாமல் ம ---- ல உளறுது என்டுவீங்கள் நான் போறனப்பா!!
வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
சின்னப்பு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#7
40 வயதுக்கு மேற்பட்டால் நாய்க்குணம் வரும் என்பார்கள் நம் முதியவர்கள். கொஞ்சக் காலமாகவே திருமதி சந்திரிக்க குமாரதுங்க அம்மையாரிடம் இந்தக்குண்ங்கள் தெரியுது கண்டியளோ. அது அவ சொல்லி தப்பில்லை வயசுக்கோளாறு.
Reply
#8
:|
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
அவவுக்கு எல்லாவித உதவிகளும் செய்யத்தானே அமரிக்கர் இந்தியர் பாகிஸதான்காரர் பிரிட்டன்காரர் எல்லாம் வருகினம் அவ பிரச்சினை இல்லை அவவுக்கு
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#10
இடை இடையில இப்படி அறிக்கை விட்டாதானே அரசியல் வாதி. யார் கேட்கினம் என்கிறத பற்றீ அவங்களுக்கு கவலை இல்லை <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
[size=16][b].
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)