Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதயம் தாங்குதில்லையே...
#1
[b]<span style='color:red'>இதயம் தாங்குதில்லையே..
<i>[size=14]அழிவு இப்படியும் வருமா?
இந்தக் கடல் நீர் கூட
இத்தனை ஆயிரம் பேரை திண்னுமா?
உன்னையே அன்னையாய்
உன்னையே தெய்வமாய்
உலவிய உறவுகளை
உன் கோரப் பசிக்கு இரையாக்கியவளே
இதயங்கள் எங்கும் சோகம்
திசை எல்லாம் அழுகையின் குரல்
பொத்துவில் முதல் பொலி கண்டி வரை
போன உயிர்கள் எத்தனை எத்தனை
யுத்தம் தந்த அழிவு
சத்தம் இன்றி நின்று விட
சத்தம் இன்றி நீ சந்ததி அழித்து விட்டாய்
உறவை இழந்த உறவின் குரல்
உலகை விட்டு பிரிந்த
ஆன்மாவின் ஏக்கக் குரல்
கேட்க வில்லையா? உனக்கு
முற்றத்தில் விளையாடிய குழந்தை
எண்ணவில்லை தான் மரணிப்பேன் என்று
அதன் எதிர் கால கனவுகள் எங்கே?
அதன் நினைவகள் எங்கே?
சாவு வரும் எனறு கனவு கண்டிருக்குமா?
அந்தப் பிஞ்சு
அழுவதற்க்கு கூட அவ காசமில்லை
அடித்து சென்று விட்டாய்-இன்று
அழுவதற்க்கு யாருமில்லை
குப்பைக்குள் குப்பையானார்
மண்ணுக்குள் மண்ணானார்
கடலுக்குள் மீனுக்கு இரையானார்
அறிக்கை விடுவோருக்கு தெரியாது
இதன் வேதணை...
ஆறுதல் சொல்வோருக்கு புரியாது
இதன் சோகம்
அழிந்தது அழிந்தது தான்
ஆறுதல் அதற்க்கு பரிகாரமாகாது
உயிருக்கு நிகர் ஏதுமுண்டோ
இறுதி வரை உங்களுடன் நாமில்லை
இழப்புக்களும் கணக்கில்லை
உயிருடன் மீண்ட உறவுகளுக்காய்
உலகத்தமிழ் உறவுகள் நாம்
அணி திரள்வோம்..
இது காலத்தின் கட்டாயம்
இயற்கையின் நிர்ப்பந்தம்
உங்களை எண்ணி
கண்கலங்கி நிற்க்கிறோம்
உலக தமிழர் நாம்
உரிமை பறிப்பை உறுதியாய்
எதிர் கொண்டோம்
இயற்கையின் அழிப்பு தனை
இதயம் தாங்கு தில்லை
இனி யொரு பொழுதில் இப்படியோர்
அழிவு வேண்டாம் எமக்கு இப் பூமியிலே...</span></i>
<img src='http://host155.ipowerweb.com/~tamilnaa/photos/mullai20041227/K%20(31).jpg' border='0' alt='user posted image'>
[size=18]நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
[b]<span style='font-size:25pt;line-height:100%'>அழியாதம்மா...</span>
உலகத்தின்னுற்ற துணையாய்
உயிர் வாழ்வுக் கதியதாய்
உலவி வந்திட்ட இயற்கை
என்னும்மெங்கள் தாயே
ஏனெனிந்தக் கொடுமையம்மா?
இயற்கை வளம் கொடத்து
இனிய வாழ்வுக்கு வழி தந்து
இன்று தென் கிழக்காசியாவில்
கடலலைகலுருவில் வந்து
காவிச் சென்றாய் பல்லாயிரமுயிரை
ஒன்றா இரண்டா? சொல்லியழ
ஓராயிரமா ஈராயிரமா ஓலமிட்டழ
பல்ாயிரம் பல்லாயிரம் பரிதவிக்குது
பார்த்தோர் உள்ளமெல்லாம்
செயற்கையின் சீரழிவில்
சிதையுண்டு நிற்க்கும் வேளையில்..
இயற்கை நீயும் இப்படியனால்..
எப்படித் தாங்கிடும் இவ்வுலகம்
தாயே தரணிக்கு தலைவியே
தாங்காதம்மா தாங்கது இப் பூமி
இழந்துவிட்ட உறவகளுக்காய்
எங்கள் இதயத்தில் இரத்தக் கண்ணீர்
அழியாதம்மா என்றும் அழியாதம்மா..
நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
என் குற்றமா? உன் குற்றமா ? இது யார் குற்றம். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[size=16][b].
Reply
#4
என் குற்றமா? உன் குற்றமா ? இது யார் குற்றம். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[size=16][b].
Reply
#5
<b>சுனாமி</b>

ஏ கடலே!
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன்முதலாய்ப் பிணங்கள் பொறுக்கிறோம்

ஏ கடலே!
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா!
முதுமக்கள் தாழியா?

நீ கலங்களின் மைதானமா?
பிணங்களின் மயானமா?

துக்கத்தை எங்களுக்குத் தந்துவிட்டு
நீ ஏன் கறுப்பை அணிந்திருக்கிறாய்?

உன் அலை
எத்தனை விதவைகளின் வெள்ளைச்சேலை?

நீ தேவதை இல்லையா
பழிவாங்கும் பிசாசா?

உன் மீன்களை நாங்கள்
கூறுகட்டியதற்கா
எங்கள் பிணங்களை நீ
கூறுகட்டுகிறாய்?

நீ அனுப்பியது
சுனாமி அல்ல
பிரளயத்தின் பினாமி

பேய்ப்பசி உன்பசி
பெரும்பசி

குமரிக்கண்டம் கொண்டாய்
கபாடபுரம் தின்றாய்
பூம்புகார் உண்டாய்

போதாதென்று
உன் டினோசர் அலைகளை அனுப்பி
எங்கள்
பிஞ்சுக்குழந்தைகளின்
பிள்ளைக்கறி கேட்கிறாய்

அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?

என்னபிழை செய்தோம்?
ஏன் எம்மைப் பலிகொண்டாய்?

சுமத்ராவை வென்றான்
சோழமன்னன் ராஜராஜன்

அந்தப் பழிதீர்க்கவா
சுமத்ராவிலிருந்து சுனாமி அனுப்பிச்
சோழநாடு கொண்டாய்?

காணும் கரைதோறும்
கட்டுமரங்கள் காணோம்
குழவிகளும் காணோம்
கிழவிகளும் காணோம்
தேசப்படத்தில் சில கிராமங்கள் காணோம்

பிணங்களை அடையாளம்காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள்
பிணத்தையே காணோம்

மரணத்தின் மீதே
மரியாதை போய்விட்டது
பறவைகள்
மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய்வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை

அழுதது போதும்
எழுவோம்
அந்த
மொத்தப் பிணக்குழியில்
நம் கண்ணீரையும் புதைத்துவிடுவோம்

இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு

இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்

நாம் மனிதர்கள்
எதிர்கொள்வோம்

மீண்டும் கடலே
மீன்பிடிக்க வருவோம்

ஆனால்
உனக்குள் அஸ்திகரைக்க
ஒருபோதும் வரமாட்டோம்


வைரமுத்து
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
பள்ளிக்கு விடுமுறை
பகலெல்லாம் விளையாட்டு
பாலர் எமக்கோ கொண்டாட்டம்
அப்படி தான் இதுவும்
நத்தார் நன்நாளில்
நலமோடு இருக்கவும்
நாள் இனிதாய் மலர்ந்திடவும்
இறைவனை வேண்டினோம்.
நலமான நல் வாழ்வு
எங்களுக்கு கிடைத்ததா?
நாட்டுக்கு நாடு
நாற்பதாயிரம் உயிர்கள்
நாறிக்கிடக்கிறதே
நாசமான அலைகளால்.
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)