Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
15,000 பேர் சாவு!
#1
15,000 பேர் சாவு!
கிடந்து அழுகும் சடலங்களால் சுகாதாரப் பாதிப்பு;
போதிய நிவாரண உதவிகள் இன்றி மக்கள்
நாட்டின் கரையோரப் பிரதேசத்தில் மனிதப் பேரவலத்தை ஏற்படுத்திய சுனாமி கடற்கொந்தளிப்பில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு வரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்குக் கரையோரப் பிரதேசங்களில் மட்டும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்களின் நூற்றுக்கணக்கான சட லங்கள் இன்னும் ஆங்காங்கே சிதறிக் கிடக் கின்றன. பல்வேறு இடங்களில் அநாதரவான நிலையில் கிடக்கும் சடலங்கள் பல அழுகி வரு கின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது. அவற்றை மீட்டு அடக்கம் செய்வதற்கான நட வடிக்கைகள் நேற்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்தும் நடந்தன. மீட்கப்படாது கிடந்து அழுகும் சடலங்களால் சுகாதாரச் சீர்கேடு ஏற் பட்டு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் காணப் படுகின்றது.
பல ஆயிரக்கணக்கான மக்கள் காயம டைந்துள்ளனர். பல லட்சக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை இழந்து தவிக்கிறார் கள். பாடசாலைகளிலும், ஆலயங்களிலும் அவர்கள் தஞ்சமடைந்துள்ளார்கள். அவர்க ளுக்கு அவசர நிவாரண உதவிகள் வழங்கப் படுகின்றன.
பேரழிவை ஏற்படுத்திய சுனாமியின் தாக் கம் இன்னும் அடங்கியபாடாக இல்லை. மீண் டும் ஒருமுறை இந்திய, இலங்கைக் கரையோ ரப் பிரதேசத்தை அது தாக்கும் சாத்தியக்கூறு கள் இருக்கின்றன என்று இந்திய புவியியல் அவதானிகள் அறிவித்துள்ளனர். இதனால் கரையோரப் பிரதேசங்களில் தொடர்ந்தும் பதற் றம் நிலவுகின்றது. மக்கள் இடம்பெயர்ந்து வரு கின்றனர்.
நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை கிழக்குக் கரையோரத்தை முதல் பேரலை தாக்கியது. தொடர்ந்து பல அலைகளின் தாக்க மும் உணரப்பட்டது. நேற்றும் சில அதிர்வுகள் கிழக்கில் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
"துறைமுக அலை' என்ற அர்த்தம் கொண்ட இந்த சுனாமி கடற்கொந்தளிப்பு கரையோரப் பிரதேசத்தை ஈவுஇரக்கமின்றித் தாக்கியதில் இலங்கையில் வரலாறு காணாத மனிதப் பேர வலம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள், மணித்தியாலத் துக்கு மணித்தியாலம் என்ற ரீதியில் அதிகரித்து வருகின்றது.
நேற்றிரவு வரை 13 ஆயிரத்து 390 பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளனர் என்று கணக்கிடப்பட்டது. மேலும் பலரைக் காண வில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. காணாமற்போனவர்களில் மீட்கப்பட்டவர்கள் மற்றும் மீண்டவர்கள் தவிர ஏனையவர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் பெரியளவில் இல்லை என்றே அதிகாரிகள் கூறுகின்றனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் பணிகள் நேற்று முழுவீச்சில் இடம் பெற்றன. சடங்குகளோ கிரியைகளோ செய்வ தற்கு நேரமோ வசதியோ இல்லை என்பதால் பல நூற்றுக்கணக்கான சடலங்கள் உறவினர் களின் அஞ்சலிக்குப் பின்னர் அடக்கம் செய் யப்பட்டன. பல இடங்களில் நூற்றுக்கணக்கான சடலங்கள் ஒன்றாகவே அடக்கம் செய்யப்பட் டன.
பெருக்கெடுத்த கடல் அலை கரையோரக் கிராமங்களை அள்ளிச் சென்றதில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த அனைவருமே உயிரிழந்த பரிதாபங்களும் இடம்பெற்றுள்ளன. இதனால் வைத்தியசாலைகளில் பல சடலங்கள் அடை யாளம் காணப்படாத நிலையில் கிடக்கின்றன. அவற்றைத் தொண்டு அமைப்புக்களும் மீட்புப் பணியாளர்களும் அடக்கம் செய்துவருகின்ற னர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் போதியளவில் சென்று சேர்வதிலும் சிக்கல்கள் எதிர்கொள்ளப்படுவதாகத் தெரிவிக் கப்படுகின்றது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்றுவரை அரச உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அரசசார்பற்ற அமைப் புக்களும் விடுதலைப் புலிகளும் தமிழர் புனர் வாழ்வுக் கழகமும் இந்த நிவாரண உதவி களை வழங்கி வருகின்றன. சில இடங்களில் அரச அலுவலகங்களும் கடற்கொந்தளிப்பால் சேதமடைந்துள்ளன.
பெரும் எடுப்பில் மீட்புப் பணி மேற்கொள் ளப்படவேண்டியுள்ளது. துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இழப்புக்கள் மேலும் அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டப்படு கின்றது.
உறவுகளையும் உடைமைகளையும் வாழ் விடங்களையும் இழந்து உதவிகளும் இன்றி நிர்க்கதியாகத் தவிக்கும் மக்களுக்கு யார் ஆறு தல் சொல்வது என்று தெரியாத நிலையில் வடக்கு - கிழக்கு எங்கும் சோகமயமாகக் காணப்படுகின்றது. வன்னியில் கறுப்புக் கொடி கள் பறக்கவிடப்பட்டுள்ளன.
நேற்றுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,600 பேரும் வடமராட்சி கிழக்கில் 2,000 பேரும் வடமராட்சியில் 100 பேரும் மட்டக் களப் பில் 1,200 பேரும் திருகோணமலையில் 800 பேரும் தெற்குக் கரையோரப் பிரதேசங் களில் 3,000 இற்கும் அதிகமானவர்களும் அம்பாறையில் 1,500 இற்கும் அதிகமானவர் களும் உயிரிழந்துள்ளனர் எனக் கணக்கிடப் பட்டுள்ளது.
மட்டக்களப்பில் 2,000 பேர் வரையிலா னோர் காணாமற்போயுள்ளனர் என்று தெரி விக்கப்படுகின்றது. முல்லைத்தீவில் 6,000 பேர் வரையிலானோரைக் காணவில்லை என்று கூறப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட் டத்தில் ஐந்து கிராமங்கள் முற்று முழுதாக அழிந்துள்ளன. தெற்கு மாவட்டங்களில் 10,000 பேர் வரையிலானோரைக் காணவில்லை என்றும் கூறப் படுகின்றது.
மட்டக்களப்பு, பொலன்னறுவை, திரு கோணமலை மற்றும் அம்பாந்தோட்டை பிர தான வீதிகள் என்பன சேதமடைந்துள்ளன. இதனால் இந்த மாவட்டங்களுக்கான போக்கு வரத்துக்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

உதயன்
Reply
#2
35 000 முதல் 43 000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாமென்று சந்தேகம்.
(செவ்வாய்கிழமை) 28 டிசெம்பர் 2004 , (அருள்)

கடந்த இரண்டு தினங்களுக்கு முதல் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் சுமார் 35 ஆயிரம் முதல் 43 ஆயிரம் வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரியவருகிறது. நடைபெற்ற அனர்த்தத்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டகளப்பு மாவட்டமும் ää முல்லைத்தீவு மாவட்டமும் முற்றுமுழுதாக கடலில் அழிந்துள்ளது. இதுவரை 10 ஆயிரம் தமிழர்கள் இறந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டபோதும் சுமார் 32000 தமிழர்கள் காணாமற் போயுள்ளதாகவும் இவர்களை தேடும் பணி தொடருவதாகவும் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லையென்றும் அறியமுடிகிறது. இதுவரை மட்டக்களப்பில் 8765 தமிழ் மக்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்லாயிரம் பொதுமக்களும் யாழ் மாவட்டதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ள நிலையில்

மீட்புப்பணியினை தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளில் முற்றுமுழுதாக ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது.

¿ýÈ¢: ¿¢¾÷ºÉõ
Reply
#3
Cry Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
உங்கள் உறவுகளை தேடுகிறீர்களா..??

பெரியகல்லாறு
0094672221799
கல்லாறு
0094672221506
களுதாவளை 0094652250599
உடுப்பிட்டி
0094212263524
கோட்டகல்லாறு 0094776014348 0094212263320
மட்டக்களப்பு 0094776321385

இந்த இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
கடற் கொந்தளிப்பு ஏற்பட்டு 60 மணித்தியாலம் கடந்துவிட்டது. காணாமல் போனோரும் மரணமடைந்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. தமிழீழத்தில் 19,623 பேர் பலி?

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற பூகம்பத்தில் வட-கிழக்கு மாகாணங்களில் இதுவரை 9,852 பேர் பலியாகியுள்ளனர். 9,771 காணாமல் போயுள்ளனர்.

சம்பவம் நடந்து 60 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் காணாமல் போனோர் உயிருடன் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு அறவேயற்ற நிலையே மேற்படி மாவட்டங்களில் இன்றும் நேற்றும் காணப்பட்டது.

எனவே காணாமல் போனோரும் மரணமடைந்ததாகவே கருதப்பட வேண்டிய நிலையே தற்போதுள்ளது. அதன் பிரகாரம் தமிழீழப் பிரதேசத்தில் இவ் இயற்கை அனர்த்தத்தால் பலியானவர்கள் தொகை 19,623 ஆகும். இறுதிக் கணக்கெடுப்பு முடிவடையும் போது இத் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

புதினம்
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
கடவுளே உனக்கே இது பொருக்குமா? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[size=16][b].
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)