Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இய்ற்கையின் சீற்றத்தால் எம் தாயகப்பூமி அழிப்பு
#21
இயற்கைச் சீற்றத்தில் சிக்கிய இலங்கை....

இந்தோனேசிய தீவான சுமத்ரா தீவுகளின் கடற்பரப்புகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக தென்கிழக்கு ஆசியாவின் எல்லைக்குள் வரும் நாடுகள் பல மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்தியாவின் தென் மானிலங்கள் (குறிப்பாக தமிழ்நாடு), இலங்கை, அந்தமான், நிக்கோபார், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இயற்கை அனர்த்தங்கள் சீற்றத்தைக் காட்டியுள்ளன.

நிலநடுக்கத் தாக்கம் றிச்டர் அளவில் 8.9ஐ அடைந்துள்ளது. இது 5வது மிகப்பெரிய நிலநடுக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விளைவுகள் நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்டதை விட சுனாமி (Tsunami) எனப்படும் இராட்சத கடலைகள் மூலமே எற்பட்டுள்ளது. இதன் காரணமாக தரைப்பிரதேசங்களை நோக்கி கடல்நீரின் நகர்வு அதீத அசௌகரியத்தையும் பலத்த இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை கடலோரப் பிரதேசங்கள் அடங்கலும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தீவின் கிழக்கு மாகாணங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிளந்தோரின் எண்ணிக்கை 5000 ஐத் தாண்டிய வேளை பாதிக்கப்பட்டோர் அளவு ஒரு மில்லியனை எட்டியுள்ளது.

அரசு அவசரகால நிலையை அறிவித்துள்ளது. எந்த அளவுக்கு நிவாரண நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்ற விபரங்கள் தெரியவில்லை. எனினும் பொதுமக்களிடையேயான விழிப்புணர்வு பெரிதுமே காணப்படுகிறது. அமைப்புகள் பொதுமக்களிடம் நிவாரணப் பொருட்களைத் திரட்டுவதில் தீவிரமாக இயங்குகின்றன. ஏற்கனவே கிழக்கில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களில் அரசு சார்பான நிவாரண நடவடிக்கைகள் விசனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இம்முறை இந்தப் பிரதேசவாத அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. காலகட்டம் இப்படி இருக்க அண்டைய நாடான இந்தியப் பிரதமர் உதவிகளுக்கான உறுதியை அளித்துள்ளார்.

இலங்கை அரசு சம்பவத்தை ...is National Disaster....என அறிவித்துள்ள சந்தர்ப்பத்தில் சம்பவம் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படவே செய்கின்றன....... உயிரிழப்புகளால் ஏற்பட்ட ஓலங்கள் இன்னமும் ஓயவில்லை

நன்றி - விகடன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#22
நீண்ட இரவு

தூக்கம் தொலைந்த இரவில் திரளாக ஓடிவரும் அலைதான் கண்முன் நிற்கிறது. இன்னமும் நம்பமுடியாத திகிலாகத்தான் இருக்கிறது. நிலநடுக்க பேச்சுக்கள் முடிந்து விஜய் டிவியில் மதன்ஸ் பார்வையில் லயித்திருந்தபோதுதான் வந்தது அந்த செய்தி.



சன் நியூஸ் பார்த்து கிளம்பி மந்தவெளி வழியாக பட்டினப்பாக்கம் அடைந்தபோது அலைகளின் கோரத்தாண்டவத்தை உணர்ந்துகொள்ள முடிந்தது. பிளாட்பாரமெங்கும் பெண்களும், குழந்தைகளும். கையில் மூட்டை முடிச்சுகளுடன் கண்ககளில் வழிந்தோடும் கண்ணீரை துடைத்தபடி... ஓரே நாளில் சென்னை மக்களின் வாழ்க்கையை கடல் நீர் புரட்டிப் போட்டுவிட்டது.



பட்டினப்பாக்கம் அரசுக்குடியிருப்பில் மருந்துக்கு கூட ஆளில்லை. முழுங்காலில் பாதியளவு கூட தண்ணீர் இல்லை. ஆனாலும், ஆங்காங்கே மிதக்கும் குடங்களும், பிளாஸ்டிக் வாளிகளும் நிலைமையின் விபரீதத்தை சொல்லிவிடுகின்றன. குடியிருப்புகளைய தாண்டி மீனவர்களின் குப்பத்தை வந்தடைவதற்குள் துணியால் மூடப்பட்ட இரண்டு பிணங்களை பார்க்க முடிந்தது. வழக்கத்திற்கு மாறாக கடல் சுருங்கியிருப்பது போல கரையிலிருந்து இருநூறு அடி தூரம் தள்ளி தனது வழக்கமான வேலையை செய்துகொண்டிருந்தது. நெருங்க ஆரம்பித்த ஐந்தே நிமிடத்தில் ராட்சஸ அலைகள் மேலேழும்பி துரத்த ஆரம்பிக்க பின்வாங்கி ஓடிவந்தேன். இதெல்லாம் ஓரிரு நிமிஷங்கள்தான். மிரட்டிவிட்டு போவதைப் போல திரும்பவும் இருநூறு அடி தள்ளி சாதுபோல நின்று கொண்டது.
அப்போதும் கூட நிலைமையின் சீரியஸ்னஸ் புரியவில்லை. அழகழகான சங்குகள், கிளிஞ்சல்கள் கையில் கிடைத்ததால் மெரீனா கரையோரமாக கண்ணகி சிலை இருந்த இடம் வரை வாக் போய்விட்டு சந்தோம் சர்ச் வரும்போதுதான் கடலூர், பாண்டிச்சேரி, நாகப்பட்டினம் பகுதி தகவல்கள் கிடைத்தன. வழக்கம்போல சன்டிவியும் ஜெயாடிவியும் அரசியல் செய்ய, உதவிக்கு வந்தது என்டிவியும் ஆஜ்தக்கும்தான்.



இதுவரை தமிழகத்தில் 2400 பேர் உயிரிழிந்திருக்கிறார்கள். (அதிகாரபூர்வமாக 1742 பேர்). இதுவரை உயிரிழந்தவர்களின் விபரம் மாவட்டரீதியாக. சென்னை 243, நாகப்பட்டினம் 788, கடலுர் 300, பாண்டிச்சேரி 280, காஞ்சிபுரம் 58, கன்னியாகுமரி 300.



ராணிமேரி கல்லூரி எதிரில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளின் நிலை தெரியவில்லை. அதற்கு பக்கத்திலேயே கடற்கரைக்கு வந்திருந்த இரண்டு லவ் ஜோடிகளும், வாக்கிங் வந்தவர்களையும் காணவில்லை. கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் மாட்டிக்கொண்ட 500 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். பரங்கிப்பேட்டையில் பெங்களூரை சேர்ந்த பயணிகளின் பஸ் சேதமடைந்து 60 பேர் உயிரிழப்பு. வேளாங்கண்ணி கடற்கரையில் சர்ச்சை தவிர மற்ற கடைகளெல்லாம் சின்னபின்னமாகியிருக்கின்றன. கொஞ்சநஞ்சமிருந்த தரங்கம்பாடி மாசிலநாதர்கோயில் போன இடம் தெரியவில்லை. தரங்கம்பாடியில் தண்ணீர் நுழைவாயிலை தாண்டி வெளியே வந்திருக்கிறது. சுற்றுவட்டார வயல்களெல்லாம் கடல் தண்ணீரால் நிறைந்திருக்கின்றன.



பூம்புகாரில் புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல்குளம் நாசமாகிவிட்டது. நாகப்பட்டினம் மெதுவாக காலியாகிக் கொண்டிருக்கிறது. பஸ், ரயிலை பிடித்து மக்கள் மயிலாடுதுறைக்கும், திருவாரூக்கும் வந்துகொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான கடலோரப் பகுதிகளில் தொலைதொடர்பும், மின் தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளன. அரசின் மீட்பு நடவடிக்கைகளில் வேகமோ, மந்தமோ இல்லையென்றாலும் தலைவலியாக இருப்பது கொந்தளிப்பு திரும்பவும் வரக்கூடும் என்று பரவிவரும் செய்திகளால்தான். வானிலைச் செய்திகளைத்தான் அரசினால் துல்லியாக கணிக்கமுடியவில்லை. நிலநடுக்கம், கடல்கொந்தளிப்பு விஷயத்திலுமா? ஆண்டவனுக்கே வெளிச்சம்!

நன்றி - ரஜனி ராம்கி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#23
இரக்கமற்ற இயற்கை

இன்றைய பொழுது எல்லோருக்கும் ஒன்றாகத்தான் விடிந்தது. ஆனால் எல்லோருக்கும் தொடரவில்லை.

இரண்டு தினங்களுக்கு முன்பாகத்தான் சில வாண்டுகளுடன் சேர்ந்து 'The day after tomorrow' என்கிற ஹாலிவுட் படம் பார்த்திருந்தேன். அதில் வந்த ராட்சஸ அலைகள் பிரமிப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. கண் இமைக்காமல் பார்த்து ரசித்தோம். ஆனால் அதே அலைகள் அடுத்த இரண்டு தினங்களில் நிஜத்திலும் உண்டாகும், இவ்வளவு உயிர் சேதங்களை ஏற்படுத்தும் என்று கற்பனையில் கூட எண்ணியிருக்கவில்லை. நான் மட்டுமல்ல இன்று காலை சென்னையில் ஏற்பட்ட நில அதிர்வுகளின் விளைவாக கடலில் இவ்வளவு பெரிய ராட்சஸ அலைகள் உண்டாகும் என்று ஒருவருமே நினைக்கவில்லை. காலையில் உணர்ந்த நிலநடுக்கத்தை ஒருவித 'த்ரில்லிங்' அனுபவமாகவே எல்லோரும் எடுத்துக் கொண்டார்கள். நம்ம ஊருக்கெல்லாம் புயல், பூகம்பமெல்லாம் எதுவும் வராது என்கிற நம்பிக்கை பொதுவாக நம்மிடையே உண்டு. அப்படித்தானே நமக்கும் சொல்லி வரப்பட்டது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று எதையும் எடுக்காமல் இருந்து விட்டோம். இந்த அசட்டையின் காரணமாக இப்போது பல்லாயிரக் கணக்கான உயிர்களை இழந்திருக்கிறோம்.


இன்று பனை மர உயரத்துக்கு விஸ்வரூபம் கொண்டு கோர தாண்டவமாடிய இந்த அலையின் பெயர் சுனாமி(Tsunami) என்கிறார்கள். பசுபிக் கடல் பிராந்தியத்தில் மட்டுமே தென்பட்டு வந்த சுனாமி இந்திய கடற்பகுதியில் தோன்றியுள்ளது இதுவே முதல் முறை. பூமிக்கடியில் அதிர்வுகள் ஏற்படும்போது அங்கே நிகழும் நில மாற்றங்களால் கடல் நீரானது பெரிய அளவில் வெளியேற்றப்படும். அப்போது அது பல மீட்டர்கள் உயரத்துக்கு எழுந்து பல மைல் வேகத்தில் கரையை கடக்கும். பிறகு அதுவே வடிந்து மீண்டும் கடலுக்குள் சென்று விடும் என்கிறார்கள். சுனாமி என்றால் ஜப்பான் மொழியில் மிகப்பெரிய கடல் அலை என்று பெயராம்.

இன்று நேர்ந்த சம்பவங்களைக் கொண்டு தனுஷ்கோடியை அழித்த, லெமூரியா கண்டத்தை விழுங்கிய வரலாற்று பேரழிவுகள் எப்படி இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.

இந்த பூகம்பம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை உற்று நோக்கும் போது எனக்கு ஒரு சந்தேகம் உண்டாகிறது. இது உண்மையில் மையம் கொண்டது இந்தோனேஷியா கடல் பகுதியில். அதன் பாதிப்பு தான் இந்தியா வரை நீண்டது. ஆனால் சேதங்களும், உயிரிழப்பும் இந்தியாவிலும், இலங்கையிலும் தான் அதிகம் இருக்கிறதே தவிர இந்தோனேஷியாவிலோ அல்லது அதன் அருகேயிருக்கும் தாய்லாந்திலோ அதிக பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லையே. உதாரணமாக இந்தோனேஷியாவின் மொத்த உயிரிழப்பு சுமாராக 2000, தாய்லாந்தில் 200. இது நமது நாகப்பட்டினத்தில் மட்டும் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளை விட குறைவு. பொதுவாக நிலநடுக்கம் மையம் கொண்டுள்ள இடத்தில் தானே பாதிப்பு அதிகமாக இருக்கும்? ஒருவேளை கடலோரம் குடிசை போட்டு வாழ்பவர்களின் எண்ணிக்கை இந்த இரண்டு நாடுகளில் தான் அதிகமோ?

இறந்தவர்கள் அனைவரும் கடலோர குப்பங்களில், குடிசைகளில் ஜீவித்து வந்த ஏழைகள். ஏழைகள் என்றால் இருப்போருக்குத்தான் இளக்காரம் என்றால் அந்த இயற்கைக்கும் கூட இரக்கமில்லாமல் போய் விட்டது.

துயரமான நினைவுகளைத் தாங்கிய கருப்பு ஞாயிறாக இன்றைய தினம் நம்மை கடந்து செல்கிறது. 26/12/2004 தமிழக வரலாற்றின் மறக்க முடியாத தேதியாக அமைந்து விட்டது. கனத்த மனதுடன் படுக்கைக்குச் செல்கிறேன்.

நன்றி - ராஜா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#24
புளொரிடாவில் சூறாவளி வந்த போது முன் கூட்டியே அறிந்து அமெரிக்கா பெரிய உயிர் இழப்பு ஏற்படாமல் இருக்க எல்லாரையும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியது. ஆனால் சுனாமி வருவதே தெரியாமல் நாம் தூங்கி கொண்டு இருக்கிறோம். ஏன் நாம் சரியான முன்னேற்பாடுகளையோ (அ) இயற்கை சீற்றங்களை முன்பே அறியக் கூடிய கருவிகளை உருவாக்குவதற்கு தேவையான பணத்தையோ, அறிவியல் கூடங்களையோ உருவாக்காமல் இருக்கிறோம். எல்லா வற்றிற்கும் அமெரிக்கா கூப்பாடு போடும் நாம் இதில் ஏன் அமெரிக்காவை பின் பற்றி உப கரணங்களை சேர்க்க கூடாது.

Kangs
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#25
கடல் கொந்தளிப்பின் பாதிப்புகள்

இந்த இந்தோனேஷிய நிலநடுக்கம் கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிகப்பெரியது என்று US Geological Servey அறிவித்துள்ளது.

காலையில் முதலில் வந்த செய்தி சென்னையில் லேசான நிலநடுக்கம் என்ற அளவில் மட்டுமே இருந்தது. காலை 8 மணி சன் செய்திகளில் கூட சேதம் பற்றிய தகவல் இல்லை. அதற்கு பிறகு தான் கடல் கொந்தளித்து ஊருக்குள் புகுந்துள்ளது. நேரம் சுமார் 8.30லிருந்து 8.45க்குள் இருக்கலாம் என்கிறார்கள்.

மெரினா பீச்சோரம் சுமார் 20 கார்கள் வெள்ளத்தில் சிக்கி, தாறுமாறான நிலையில் இருப்பதாக சன் செய்திகளில் கூறினார்கள். அதில் வந்து ஜாக்கிங் சென்றவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும் வழக்கத்தை விட ஞாயிறன்று கடற்கரையில் அதிக அளவில் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடுவார்களாம். அவர்களும் பலியாகி இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

காலையில் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகவும் அப்போது வெளியே 'ஹோ'வென ஒரு பேரிரைச்சல் கேட்டதகாவும், அதனைத் தொடர்ந்து 'ஓடுங்க' என்று கூக்குரல் கேட்டதகாவும் கையில் சிக்கிய ஒரு பிள்ளையை மட்டும் அள்ளிக் கொண்டு தான் ஓடியதாகவும், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த இன்னொரு மகன் என்ன ஆனான் என்று தெரியவில்லை என்றும் கூறியபடி ஒரு பெண் கதறியது கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.

தமிழகம் முழுவதும் கடல் கொந்தளிப்பில் சுமார் 2500 பேர் பலி என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நாகப்பட்டினத்தில் மட்டும் 1500 பேர். அங்கே இரண்டு கடலோர கிராமங்கள் முற்றிலும் மூழ்கி விட்டன.

கன்னியாகுமரியில் விவேகானதர் பாறைக்கு சுற்றுலாச் சென்ற 500 பேர் கடல் நடுவே மாட்டியுள்ளதாகவும், மீட்கப்பட்டு வருவதாகவும் இன்னொரு செய்தி. புதுப்பட்டினம் என்னும் ஊரில் தேவாலயம் இடிந்து அதனுள் இருந்த 42 பேர் பலியாகி விட்டனர்.

கடலில் மீன் பிடிக்கச் சென்ற 5000 மீனவர்களின் நிலை பற்றிய தகவல் இல்லை. கிட்டத்தட்ட 10 மீ உயரத்துக்கு அலைகள் எழும்பியதாக சொல்கிறார்கள். இதனால் மீனவர்களில் பெரும்பாலானோர் இறந்திருக்கவே வாய்ப்பு அதிகம்.

செய்திகள் பெரும்பாலும் வதந்திகள் இன்றி கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருப்பதாக தெரிகிறது. சன் செய்திகளில் கூட இறந்தவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் போது "அதிகாரப்பூர்வமான செய்திகளின்படி" என்றே குறிப்பிட்டார்கள். என்றாலும் உண்மையான எண்ணிக்கைத் தெரிய இரண்டு நாள்களாவது ஆகலாம்.

நிலநடுக்கத்தின் வால் பகுதியிலேயே இத்தனை பாதிப்பு எனும் போது அது மையம் கொண்டிருந்த நாடுகளில் நேர்ந்திருக்க கூடிய பேரழிவு கவலையைத் தருகிறது. அந்தமான் நிகோபர் தீவுகளின் நிலவரம் தெரியவில்லை.

இந்த நிமிடம் வரை help line ஏற்படுத்தப்படவில்லை என்று சன் டி.வி குற்றம் சாட்டி வருகிறது. உதவிக்கு போலீஸ் கண்ட்ரோல் ரூமின் 100 ஐயே தொடர்பு கொள்ள சொல்கிறார்கள். ஜெயா டி.வியிலும் help line தொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லை.

மீட்பு நடவடிக்கைகளை ஜெயலலிதா பார்வையிட்டு வருகிறார். பிரதமர் தன்னிடம் தொலைபேசியில் நிலவரங்களைக் கேட்டறிந்ததாகவும், அப்போது 'என்ன உதவி வேண்டும்?' என்று கேட்டவரிடம் இனிமேல் இதுபோன்ற பேரழிவுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ள(seismological survey) ஏற்பாடு செய்யும்படி தான் கேட்டுக் கொண்டதாகவும் ஜெ. கூறினார்.

எனக்கும் இதே வருத்தம் தான். தென்கிழக்கு ஆசியாவின் கடற்கரை பகுதிகளை கிட்டத்தட்ட துடைத்தெறிந்து விட்ட இந்த பேரழிவை நம்மால் முன்கூட்டியே கணித்திருக்க/கணிக்க முடியாதா? இயற்கை சீற்றங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள நாம் அனுப்பிய செயற்கைகோள்களும், நம் வானிலை நிலையங்களும் வெறும் மழையளவை அளக்கத்தானா?

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

நன்றி - ராஜா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#26
<b>கனடியத் தமிழ் வானொலி நிவாரண நிதிசேகரிப்பு
கனடியத் தமிழ் வானொலி

தாயகத்தில் கடல்கொந்தழிப்பினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கான நிதிசேகரிப்பில் கனடியத் தமிழ் வானொலி தற்பொழுது ஈடுபட்டு வருகின்றது. தங்களது அன்பளிப்புக்களை வழங்க விரும்புபவர்கள் கலையகத்துடன் தொடர்புகொள்ளுங்கள்

416-264-8798

http://www.ctr24.com[/b]
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#27
தகவல்களுக்கு நன்றி BBC
Reply
#28
உலக நாடுகளின் உதவிகள் வட-கிழக்கிற்குச் சென்றடைய ஆவண செய்ய வேண்டும்: கொழும்பு தமிழ்ப் பிரமுகர்கள்

தற்போது உலக நாடுகளால் வழங்கப்பட்டு வரும் உதவிகள் தமிழர்களின் தாயகப் பகுதிக்கும் சென்றடைவதற்கு ஏற்ப வழிகளைச் செய்ய வேண்டுமென்ற ஆதங்கம் கொழும்பு தமிழ்ப் பிரமுகர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களி;ல் இவ்வாறான நிலைமைகளின் போது கிடைக்கப்பெறும் உதவிகளில் தமிழர் பிரதேசங்கள் மாற்றாந்தாய் மனப்பாண்மையுடனே நோக்கப்பட்டன என்பதும்ää உதவிகள் சிறியளவிலேயே அனுப்பப்பட்டு வந்தன என்பதுமே இதற்கான காரணமாகும்.

தமிழர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பெரும்பாண்மையான கரையோரப் பிரதேசங்கள் தமிழர் தரப்பின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வருவதால் இவற்றிற்கான உதவிகள் மறைமுகமாக மறுக்கப்படலாம் என்ற ஐயம் எழுப்பப்படுகிறது. குறிப்பாக இப்பகுதிகளிற்கான போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு வசதிகளற்றனவாக இருப்பதால் அவற்றைக் காரணங்காட்டி இவை மறுக்கப்படலாம் என்றே கருதப்படுகிறது.

போர்க்காலத்தில் பெறப்பட்ட உதவிகள் பூரணமாக சிங்களப் பிரதேசங்களிற்கே செலவு செய்யப்பட்டன என்பதும்ää சமாதான சு10ழ்நிலை ஏற்பட்டு மூன்று வருடங்களான போதும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இன்றுகூட அபிவிருத்தி நடவடிக்கைகள் முற்றாக மறுக்கப்பட்டுள்ளதோடுää அப்பகுதிவாழ் மக்களும் இரண்டாந்தரப் பிரiஐகளாகவே நோக்கப்பட்டு பல அவஸ்தைகளிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்

அண்மையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது அவசர உதவிகளிற்கான அழைப்பு அரச அதிகாரிகளாலும்ää பாராளுமன்ற உறுப்பினர்களாலும் விடுக்கப்பட்ட போது அவை அரசால் உதாசீனப்படுத்தப்பட்டதோடுää அரச அதிகாரிகள் அத்தியாவசிய நிவாரணத்திற்குத் தேவையென கேட்ட தொகையைக் கூட கொடுக்க அரசு மறுத்துவிட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எனவே தற்போது கிடைக்கப்பெறும் உதவிகளில் ஓரளவாவது தமிழர் பிரதேசத்தைச் சென்றடைய புலம்பெயர்ந்த தேசங்களில் வதியும் தமிழர்கள் தத்தமது நாடுகளின் அரசியல்வாதிகளைத் தொடர்பு கொண்டுää அந் நாடுகளினூடாக சிறீலங்காவிற்கு இராஜதந்திர அழுத்தத்தைக் கொடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதே சிறந்த வழி என்பதே மேற்படி தமிழ்ப் பிரமுகர்களின் கருத்தாகும்.

இதேவேளை தமிழ்ப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து மகிழ்ச்சி கலந்த கருத்துக்களையே சிங்களப் பேரினவாதிகளும் அவர்கள் சார்ந்த கட்சிகளும் வெளிப்படுத்துவதையே சிங்கள ஊடகங்கள் கொழும்பில் எந்தவித தயக்கமுமின்றி வெளியிட்டு வருகின்றன.

http://www.eelampage.com/index.shtml?id=20...70620048612&in=
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#29
கடல் கொந்தளிப்பால் கடற்படைக்குப் பாரிய சேதம்

நேற்றைய கடல் கொந்தளிப்புக் காரணமாக சிறிலங்கா கடற்படையிரின் பராக்கிரமபாகு போர்க்கப்பல் காலி துறைமுக கடற்பகுதியில் மூழ்கியுள்ளதாகவும் திருமலையில் கண்காணிப்பில் ஈடுபட்ட மூன்று கடற்படைக் கப்பல்களும் வேறு கலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக திருகோணமலை சீனன்குடாவில் அமைந்துள்ள சிறிலங்காவின் வட-கிழக்குப் பிராந்தியக் கடற்படைத் தளத்துக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும் இது குறித்த விபரங்களை படைத்தரப்பு வெளியிடுவதை முற்றாகத் தவிர்த்துள்ளது.

அதேபோல் வடக்கில் காங்கேசன்துறைää காரைநகர்த் தளங்கள் பாரிய சேதம் அடைந்திருப்பதாகவும் பல கலங்கள் கடல் நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

இருந்த போதிலும் இந்தியாவிடம் தமது கடற்படையின் தேவைகளிற்காக உடனடியாக போர்க் கப்பல் ஒன்றை வழங்குமாறு சிறிலங்கா அரசு கோரியிருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவம் வெளியிட்ட தகவலின் படி அவர்களின் 51-1ம் 51-4ம் 51-5ம் பிரிகேட்டுகளிற்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கிழக்கில் கல்குடாää கஜவத்தைää கல்லடி மாங்கேணி இராணுவ முகாம்களும் அறுகம்பைää பானமை உட்பட்ட அம்பாறை மாவட்டத்தின் நான்கு விசேட அதிரடிப்படை முகாம்களும் தரைமட்டமாகியுள்ளன.

அத்தோடு கரையோரப் பகுதிகளில் அமைந்திருந்த காவலரண்கள்ää கண்காணிப்பு முகாம்கள் என்பன கடல்நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சுமார் 400க்கும் மேற்பட்ட படையினர் பலியானதாக தகவல்கள் கசிந்துள்ள போதும் இது பற்றிய உண்மை விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதேவேளை இப் பேரழிவில் கடற் புலிகளின் பலம் சிதைக்கப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை சிங்கள இனவாதிகளை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளதாகவும் அதனை அவர்கள் சிங்கள ஊடகங்களிற்குப் பகிர்ந்து வருவதாகவும் கொழும்பு வானொலியொன்று தெரிவித்துள்ளது.

ஆனால் சிறிலங்காக் கடற்படையைப் போன்று கடற் புலிகள் எந் நேரமும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவதில்லை என்பதோடுää நடவடிக்கைகள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் தமது கலங்களை தரைப்பகுதியில் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்துவதோடுää தேவையின் பொருட்டே தமது கலங்களை கடற் பகுதிக்கு கொண்டு செல்வதை வழமையான செயற்பாடாகக் கொண்டவர்கள் என்பதால் அவர்களிற்கு பெருமளவு சேதங்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டிருக்கும் என்றே தான் நம்புவதாக இராணுவ ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

http://www.eelampage.com/index.shtml?id=20...70716338613&in=
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#30
கொந்தளிப்பு - சிறு குறிப்பு

சுனாமி (tsunami, ஜப்பானிய மொழியில்) என்றழைக்கப்படும் கடல் கொந்தளிப்பு கடலுக்கடியில் ஏற்படும் நிலநடுக்கங்களாலும், கடலடி எரிமலைகளாலும், விண்கற்கள் கடலில் விழுவதாலும் ஏற்படுகிறது. கடலில் ஒரு இடத்தில் ஏற்படும் இத்தகைய அதிர்வு மற்ற இடங்களுக்குக் கடல் கொந்தளிப்பாகப் பரவுகிறது. இக்கொந்தளிப்புப் பரவும் நேர அளவைக் கணக்கிட இயலும். 1960களின் ஆரம்பத்தில் பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் அலாஸ்காவையும், சிலியையும் பாதித்த பிறகு 1965ல் யுனெஸ்கோ உதவியுடன் 1965ல் International Tsunami Information Center ஹவாய்யில் ஹோனலுலுவில் நிறுவப்பட்டது. இது பசிபிக் கடற்பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்களைப் பதிவு செய்கிறது. ரிச்டர் அளவு, நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் இவற்றைக் கொண்டு கொந்தளிப்பு எவ்வளவு நேரத்தில் எந்தெந்த நாடுகளுக்குப் பரவும் என்ற எச்சரிக்கையை அந்தந்த நாடுகளுக்கு அனுப்புகிறது. இந்த எச்சரிக்கையின் படி கடலோர மக்கள் இடம் பெயர்க்கப் படுகிறார்கள். இதோ இந்தப் படத்தைப் பாருங்கள்.

<img src='http://img.photobucket.com/albums/v22/sundaravadivel/ttthawai.jpg' border='0' alt='user posted image'>

இதில் ஒவ்வொரு பட்டையும் கொந்தளிப்புப் பரவ ஒரு மணி நேரமாகும் என்பதைக் குறிக்கிறது. இதன்படி ஹவாயில் ஏற்படும் நிலநடுக்கம் அலாஸ்காவில் கடல் கொந்தளிப்பை ஏற்படுத்த சுமார் 6 மணி நேரங்களாகும்.

கொடுமை என்னவென்றால் இந்தத் தகவல் மையம் பசிபிக் கடற்பகுதிக்கு மட்டுமே எனத் தெரிகிறது. சமீபத்தில் நடந்த ஒரு மாநாட்டில் இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆசிய நாடுகளையொட்டிய பசிபிக் பகுதிகளுக்கும் இத்தகைய மையம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது. எது எப்படியோ...இன்னொரு விபத்து தவிர்க்க முடியாமல் போனது.

தொடர்புடைய சுட்டிகள்: http://www.drgeorgepc.com/TsunamiFAQ.html
http://wcatwc.arh.noaa.gov/ttt/ttt.htm[/size]

நன்றி - சுந்தர்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#31
அஞ்சலி

கடந்த காலங்களில் நில நடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் தமிழகத்தில் நடக்காது என்ற கருத்து ஆய்வாலர்களால் வலுவாகச் சொல்லப்பட்டது. நில நடுக்கமே வராது என்ற நிலையிருக்கும் பொழுது சுனாமிகளை யார் கவனிக்கப் போகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு சென்னையிலும், தமிழகத்திலும் லேசான நில அதிர்வு ஏற்பட்ட பொழுதே மற்றொரு ஆய்வை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் அதில் எந்த சேதமும் இல்லாததால் யாரும் அதைப் பற்றி யாரும் அக்கறை காட்ட வில்லை.

இந்தியாவில் ISRO சார்பாக 6 செயற்கோள்கள் இருக்கின்றன. அந்தச் செய்ற்கைக்கோள்களால் ஏன் இத்தகைய இயற்கைச் சீற்றங்களை முன் கூட்டியே அறிய முடியவில்லை ? கடலாய்வு குறித்த செயற்கைக்கேள்களும்
இருக்கின்றனவே அவை ஏன் இந்தக் கடல் தொந்தளிப்பை முன் கூட்டிய அறிய முடியவில்லை ? இந்தக் கேள்வி ISRO உயரதிகரியிடம் முன்வைக்கப்பட்டதற்கு அவர் அளித்த விளக்கம் "கடலலைகள் குறித்து ஆராயக் கூடிய எந்த செயற்கைக்கோள்ளையும் நாம் வைத்திருக்கவில்லை. அது போல செயற்கைகோள்கள் பூமியை சில நேரங்களில் தான் ஸ்கேன் செய்யும். அப்படி ஸ்கேன் செய்யும் பொழுது இத்தகைய எந்த அறிகுறிகளும் தென்படவில்லை" என்றார்.

இத்தகைய சுனாமிகளை கண்டறியும் திறன் பசிபிக் நாடுகளில் உள்ளது. ஆனால் ஆசியாவில் இல்லை. இருந்திருந்தால் உயிர்ச்சேதங்களை தடுத்திருக்கலாம் என்று BBC தொலைக்காட்சி தெரிவித்தது.

நடந்து போனவைகளைப் பற்றிக் குறைச் சொல்லிக்கொண்டிருப்பதில் எந்தப் பலனும் இல்லை. இனி என்ன செய்வது என்று தான் யோசிக்க வேண்டும்.

பல செயற்கைக்கோள்களை செலுத்தியிருக்கும் நாம் இயற்கையின் பல்வேறு சீற்றங்களையும் கண்டறிய தொழில்நுடபங்களை உருவாக்க வேண்டும். பிற நாடுகளிடம் அத்தகைய தொழில்நுட்பங்கள் இருந்தால் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். நில நடுக்கம் போன்ற சீற்றங்களை முன் கூட்டியே கண்டறிய முனைய வேண்டும்.

மகாராஜ்டிரா, குஜராத் என்று நிகழ்ந்த கோரங்களுக்கு அடுத்து தமிழகம். இனிமேலும் இத்தகைய கோரங்கள் நிகழக்கூடாது. இயற்கை சீற்றங்களை தடுக்க முடியாது. ஆனால் அதனால் ஏற்படக் கூடிய சேதங்களை சரியான தற்காப்பு நடவடிக்கை, திட்டமிடுதல் மூலம் குறைக்க முடியும்.

நிருபர்களிடம் பேசிய தமிழக முதல்வர், நிலநடுக்கம் பற்றிய அறிவு தமிழக அரசுக்கு தேவைப்படுவதாகவும், பிரதமரிடம் அது குறித்த தகவல்கள் வேண்டும் எனக் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதிலிருந்தே
இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுக்கு எந்தளவுக்கு இது குறித்த அறிவும், இத்தகைய நிலையில் செயலாற்றும்
திறனும் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இது களையப்பட வேண்டும்.

மாநில அரசும், மய்ய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். மய்ய அரசில் உள்ளது போல மாநில அரசிலும் Crisis Management குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழக அரசின் தலைமைச் செயலகமும், காவல்துறை தலைவர் அலுவலகமும் கூப்பிடு தூரத்தில் இருக்கும் சாலையில் அசம்பாவிதம் நடந்து, பல மணி நேரங்களுக்குப் பிறகு தான் நிவாரணப் பணிகளே முடுக்கி விடப்பட்டுள்ள பொழுது எங்கோ இருக்கும் நாகப்பட்டினத்தின் குக்கிராமங்களில் எப்பொழுது நிவாரணம் முழுஅளவில் போய்ச் சேரும் என்று தெரியவில்லை. மய்ய அரசின் அவசர காலக் குழு இராணுவம், கடற்படை, விமானப்படைகளை முடுக்கி விட்டுள்ளது. நிவாரணங்கள் துரிதமாக நடப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இத்தகைய பெரிய சீற்றங்களில் மாநில அரசுகளுக்கு இருக்கும் வசதிகளும், இயந்திரங்களும் மிகக் குறைவு.

மருத்துவ வசதிகளும் போதுமான அளவில் இல்லை. சென்னையில் அப்பலோ போன்ற தனியார் மருத்துவமனைகள் தங்களது சேவையைச் செய்ய தொடங்கியிருப்பது ஆரோக்கியமாக இருக்கிறது. மாவட்ட தலைநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளும் இத்தகைய சேவையைச் செய்ய முன்வர வேண்டும்.

எதிர்கட்சிகள் மாநில அரசை குற்றம் சாட்டுவதை நிறுத்தி விட்டு தங்களால் முடிந்த மக்களுக்கான சேவையை செய்ய முன்வர வேண்டும். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்திருதாலும் இது தான் அரசு இயந்திரங்களின் லட்சணம்.கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டால் கீழ் மட்டத்தில் உள்ள தொண்டர்களை தூண்டி விட்டு சில மணி நேரங்களில் மாநிலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் அரசியல் கட்சிகள் இத்தகைய தருணத்தில் அரசை சாடிவிட்டு வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்க கூடாது. தங்களது தொண்டர்களைக் கொண்டு மீட்பு நடவடிக்கைகளில் அரசுக்கு உதவி செய்யலாம்.

நடந்து விட்ட அசம்பாவிதத்திலிருந்தாவது நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அசம்பாவிதம் நடந்து சில நாட்களில் அதை மறந்து விடாமல் நீண்டகால தீர்வுக்கு முனைய வேண்டும்.

பச்சிளம் குழந்தைகளின் சடலங்களைப் பார்க்கும் பொழுது எழும் வேதனை இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய சேதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதே ஆயிரக்கணக்கில் பலியாகி விட்ட உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.



தமிழ்சசி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#32
மீட்பு நடவடிக்கை

நில நடுக்கம் ஏற்பட்டு பல மணி நேரங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்னமும் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சென்னை மட்டுமில்லாமல், கடலூர், நாகை, கன்னியாகுமரி ஆகிய தமிழக கடலோரப் பகுதிகள் அனைத்தும் பாதிப்புள்ளாகியிருக்கிறது. சென்னையில் 100, கடலூரில் 100 என்று சாவு எண்ணிக்கை அதிகம் உயரும் போல தெரிகிறது. கடலூர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பல மீனவ கிராமங்களில் கடல் நீர் புகுந்து உயிர்ச் சேதம் விளைவித்துள்ளது.

ஆனால் இது வரை அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. போலீஸ், மீட்புக் குழு என்று எவரும் அதிக எண்ணிக்கையில் காணப்படவில்லை. மக்கள் தங்களுக்குள்ளாகவே உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். பார்வையிட ஆளுங்கட்சி குழு, எதிர்க்கட்சி குழு என்று மீடியா முன்பு காட்சி தந்து கொண்டிருக்கிறார்கள். தில்லியில் இருந்து தயாநிதி மாறன் வருகிறாராம். வந்து என்ன கிழிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.

தற்பொழுது தேவைப்படுவது இந்த பார்வையிடல்கள் அல்ல. Crisis Management என்ற ஒன்று இருப்பதாக தெரியவில்லை. மாவட்ட ஆட்சி தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ?

தமிழக கடலோர பகுதி நெடுகிலும் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளுக்கு உடனடியாக இராணுவமும், கடற்படையும் ஈடுபடுத்தி மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இன்னமும் இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகத் தான் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இனி மேலும் எதற்கு தயார் நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதியில் மருத்துவ வசதிகளும் இல்லை. போலீஸ் எண்ணிக்கையும், மாநில அரசின் குழுவும் தற்பொழுதுள்ள சூழ்நிலையில் போதாது.

பாதிக்கப்பட்ட பகுதிகள் மிக அதிகமாக இருப்பதால் மிக துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகம், ஆந்திரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், ஓரிசா என்று இந்தியாவின் கிழக்கு கடற்கரை முழுவதும் மற்றும் இலங்கைத் தீவிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் விவரம் தெரிய பல நாட்கள் ஆகலாம்.



தமிழ்சசி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#33
உதவியை வேண்டும் இலங்கை

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் இயற்கையின் சீற்றத்தால் அழிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்களை மீட்டெடுப்பதற்கு உதவி செய்துகொண்டிருக்கிறார்கள்.தாங்கள் வதியும் நாடுகளிலுள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழக கிளைகள் மூலமாகவோ அல்லது அமைப்புகள் மூலமாகவோ உதவிகளை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

புனர்வாழ்வுக்கழகம் விடுத்துள்ள அறிக்கையின்படி மீட்புப்பணிகளுக்கும் காயமடைந்தவர்களுக்கான மருத்துவப்பணிகளுக்கும்,உடமை இழந்தவர்களுக்கு ஆகக்குறைந்த தேவைகளான உணவு,உடுபுடவைகள் ஆகியவற்றை வழங்குவதற்கும் பாரியளவு நிதி தேவைப்படுகின்றது.

யாழ்,மட்டக்களப்பு மற்றும் தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் மீட்புப்பணிகளிலும் புனரமைப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.நிதியுதவி தவிர வேறுவகையான உதவிகள் எதுவுமே கையாலாகாத நிலையில் அவர்களது பணியைப் பாராட்டுவது தவிர வேறுவழி தெரியவில்லை.

நண்பர்கள் கூறியபடி உலர் உணவு வகைகள் பொதிசெய்யப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருக்கும் பாடசாலைகள்,கோவில்கள்,தேவாலயங்கள் தோறும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.கூடவே மீளவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் குடியமர்பவர்களுக்கு தற்காலிக கூடாரங்களை வழங்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கெல்லாம் நிறைய நிதியுதவி தேவைப்படுகின்றது.

அரசாங்கத்திற்கூடாக அனுப்பப்படும் நிதியுதவி தமிழர் பிரதேசத்திற்கு முழுதாகப் போய்ச்சேரும் என்ற நம்பிக்கை பலருக்கும் இல்லை.சில வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் நடைபெற்ற அனர்த்தத்திற்கு அரசாங்கம் காட்டிய பாராமுகம் இதனைத் தெளிவுபடுத்துகின்றது.ஆகவே தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஊடாகவும் பிற அரசசார்பற்ற அமைப்புகள் ஊடாகவும் உதவிகளை வழங்குவதே நல்லது.

வெளிநாடுகளில் வதிபவர்கள் இவ்வாறான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு உங்கள் நிதியுதவிகளைச் செய்யுங்கள்.தொடர்புகொள்ள இயலாத பட்சத்தில் இலங்கையில் வதியும் உங்கள் உறவினர்கள் ஊடாக நிதியை அனுப்பி உதனவி சரியா இடத்திற்குப் போய்ச்சேர்வதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்

நன்றி - ஈழநாதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#34
இலங்கையில் மீட்புப்பணிகள்

கடற்கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இலங்கையின் வடகிழக்கு வடக்குப் பிரதேசங்கள் பேரழிவுக்குள்ளாகியிருக்கின்றன.போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பிரதேசங்களாகையால் அரச இயந்திரத்தின் உதவி எட்டாத நிலையில் விடுதலைப்புலிப் போராளிகளுடன் மக்களும் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.


<img src='http://kavithai.yarl.net/archives/penpuli.jpg' border='0' alt='user posted image'>


யாழ்ப்பாணத்தில் மட்டும் 2000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பெரும்பாலும் வடமராட்சி கிழக்கே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

<img src='http://kavithai.yarl.net/archives/vadamaraadsi.jpg' border='0' alt='user posted image'>

பருத்தித்துறையிலிருந்து வெற்றிலைக்கேணி,கட்டைக்காடு வரையான வடமராட்சி கிழக்குப் பிரதேசம் பெரும் அழிவுக்குள்ளாகியுள்ளது.வல்வெட்டித்துறையிலிருந்து பருத்தித்துறை வரையான பகுதியும் சிறிதளவு உயிர்ச்சேதத்தை எதிர்நோக்கியுள்ளது.பெரும்பாலான மீனவர் குடிசைகள் அழிக்கப்பட்டுள்ளன.வள்ளங்கள் வலைகள் போன்றவை வீதியில் தூக்கிவீசப்பட்டதால் சின்னாபின்னப்பட்டுப் போயுள்ளன.

முல்லைத்தீவில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.இதுவரை 1600 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.கிளிநொச்சி,புதுக்குடியிருப்பு,வவுனியா வைத்தியசாலைகள் இறந்தவர்களின் உடல்களால் நிரம்பி வழிகின்றன.தொற்றுநோய் அச்சம் காரணமாக சடலங்கள் அடையாளம் காணப்படாமலேயே புதைக்கப்படும் அவலம் நடக்கின்றது.

<img src='http://kavithai.yarl.net/archives/tepolice.jpg' border='0' alt='user posted image'>

கரையொதுங்கும் சடலங்கள் இன்னும் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை சுமாத்திரா பிரதேசத்தில் மீண்டும் நிலநடுக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இலங்கையில் மீண்டும் சுனாமியின் தாக்கம் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.கடற்கரையை விட்டு மேட்டுப்பாங்கான இடத்திற்கு செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

காலம் கடந்த எச்சரிக்கை என்றாலும் மேலதிக இழப்பைக் குறைக்க இது உதவு.மீண்டும் ஒரு சுனாமி கிழக்குப் பகுதியைத் தாக்கும் பட்சத்தில் நிலமை இன்னும் மோசமாகலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.மீட்புப்பணிகள் பாதிக்கப்படுவதோடு காயமடைந்து அங்கங்கே ஒதுங்கியுள்ளவர்கள் உயிரிழக்க நேரிடும் என்று அஞ்சப்படுகின்றது.

நோர்வே,ஐரோப்பிய ஒன்றியம்,அமெரிக்கா,அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்தும் இந்தியாவிடமிருந்தும் பலகோடி ரூபா பணமும் மருந்து,உணவு,பாவனைப்பொருட்களும் இலங்கை அரசாங்கத்திற்கு உதவியாக வழங்கப்பட்டபோதிலும் இதுவரை அரசாங்கத்தின் உதவி எதுவுமே வன்னிப்பிரதேசத்து மக்களுக்கு கிடைக்கவில்லை.

கிழக்கிலங்கையிலும் சிங்களவர்,முஸ்லிம்,தமிழர் வேறுபாடுகளின்றி புலிகளும் தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் இணைந்து மீட்புப்பணிகளிலும் நிவாரணப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.இங்கும் அரச இயந்திரத்தின் உதவிகள் போதுமான அளவில் எட்டப்படவில்லை.அரச ஊடகங்கள் தமிழர் பகுதிகளில் ஏற்பட்ட இழப்பை குறைத்தே தெரிவித்து வருகின்றன.நாட்டையே உலுக்கிய பேரழிவு கூட பேரினவாதிகளின் கண்ணைத் திறக்கவில்லை.

<img src='http://kavithai.yarl.net/archives/batti.jpg' border='0' alt='user posted image'>


வவுனியா நகரம் வன்னிப்பகுதி மக்களுக்கான மீட்புப்பணிகளுக்காக அதி உசார் நிலையில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.மூவின மக்களும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களைப் பராமரிப்பதிலும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதிலும் ஈடுபட்டுள்ளார்கள்.அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களுடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

<img src='http://kavithai.yarl.net/archives/puli.jpg' border='0' alt='user posted image'>

http://kavithai.yarl.net/archives/002463.html#more
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#35
Cry Cry Cry Cry Cry
[b]
Reply
#36
இணைய மூலம் தாயகத்திற்கு உதவ விரும்புபவர்கள் பின்வரும் தளங்களைப் பாவித்து செலுத்திக் கொள்ள முடியும்.
http://www.troonline.org
http://www.troonline.dk

அல்லது
TRO Bank account in Colombo, Sri Lanka:

Bank A/C: 01607837001
Standard Chartered Bank
Wellewatte Branch
Colombo 06
Sri Lanka

TRO
410/112, Buller Street
Buddhaloga Mawatha
Colombo 7

நேரடியாக அனுப்பி வைக்க முடியும்.

நாம் ஒவ்வொருவரும் எம்மால் முடிந்த அளவு பங்களிக்க வேண்டிய நேரம் இது. தயவு செய்து இவ்விபரங்களை உங்களுக்கு தெரிந்த ஒவ்வொருவருக்கும் கொடுத்து எம்மக்களின் துயர்துடைக்க உதவுங்கள்.
<b>
?

?</b>-
Reply
#37
Åí¸¢ À½Á¡üÈÐìÌ IBAN No §¸ð¸¢È¡÷¸û <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#38
Quote:Åí¸¢ À½Á¡üÈÐìÌ IBAN No §¸ð¸¢È¡÷¸û
http://www.troonline.dk இதை முயற்சியுங்கள்
<b>
?

?</b>-
Reply
#39
மனிதாபிமான சேவைகளுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அழைப்பு

ஆசியாவின் தென்பகுதி மற்றும் தென் கிழக்குப் பகுதிகளில் சுனாமியினால் ஏற்பட்ட பாரிய அனர்த்தங்கள் இன்னமும் கணக்கிடப் படுகின்றன. சுனாமியனால் ஏற்பட்ட அனர்த்தங்களைவிட பாரியளவிலான அழிவுகள் ஏற்படும் அவல நிலை இன்னும் அங்கே இருக்கின்றது. தொற்று நோய்கள், பட்டினிச் சாவுகள் போன்றவை பெரும் சவாலாக உருவெடுக்க சாத்தியங்கள் அங்கே பெரிதும் காணப்படுகின்றது. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டிய பாரிய பொறுப்பு சகல மக்களுக்கும் உண்டு

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - சிறிலங்கா
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் ஒரு மனிதநேய அமைப்பாக தன்னை சிறிலங்காவில் பதிவு செய்து கடந்த 19 வருடங்களாக தனது சேவையை ஆற்றி வருகின்றது. கடந்த சில காலங்களாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பல உதவி நிறுவனங்களுடனும், அரசசார்பற்ற அமைப்புக்களுடனும், ஐக்கிய நாடுகளின் அமைப்புக்களுடனும் இணைந்து பாரிய அளவிளான மக்கள் நலன் பேணும் திட்டங்களை சிறிலங்காவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஆற்றி வருகின்றது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகமானது சிறிலங்காவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் எட்டு மாவட்டங்களிலும் தனது உபகட்டமைப்பை நிறுவி அவற்றை செவ்வனவே இயக்கி வருகின்றது. அத்துடன் 3500க்கு மேற்பட்ட ஊழியர்களை தன்னகத்தே கொண்டும் உள்ளது. இவர்களுக்கான மாத ஊதியத்தையும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் வழங்கி வருவதையும் இங்கு குறிப்பிடல் வேண்டும்.

கடந்து வந்த 19 ஆண்டுகளில் தனது சேவையில் பலதரப்பட்ட அவசியத் தேவைகளுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முகம் கொடுத்திருக்கின்றது. இருபது வருடங்களாக சிறிலங்காவில் நடந்த யுத்தத்தின் போதும் மக்களுடைய இன்னல்களைத் தீர்க்க பல வகைகளில் உதவியிருக்கின்றது. சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில், 1995 இல் பாரிய அளவிலான தமிழ் மக்கள் இடம் பெயர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவ்வாறு இடம் பெயர்ந்த மக்கள் தொகை 500,000க்கு அதிகமானது எனக் கணிக்கப்பட்டிருந்தது. அவ் இடம் பெயர்ந்த மக்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தனித்து நின்று உதவி செய்து அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்து, பெரியளவில் ஏற்ப்பட இருந்த மனித அழிவைக் காப்பாற்றியிருந்தது. இச் செயற்பாடானது இடம் பெயர்ந்த மக்களின் உண்மையான உடனடித் தேவைகளை அறிந்து அவற்றை நடைமுறைப் படுத்தக் கூடிய ஆற்றல் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு இருப்பதைக் காட்டி நின்றது. ஆகவே இப்பொழுதும் சுனாமி அவலத்தால் இடம் பெயர்ந்த மக்களுக்கான உடனடித் தேவைகளுக்கும் நிவாரணப் பணிகளுக்குமான சேவைகளைச் செய்ய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு போதுமான அனுபவங்களும், ஆற்றலும் இருக்கின்றது.

முழு அளவிலான அழிவுகளும், இழப்புக்களும் இதுவரை அறியப்பட முடியாவிட்டாலும், எடுக்கப்பட்ட கணிப்பின் பிரகாரம் 27.12.2004 இல் பின்வரும் இழப்புக்கள் பெறப்பட்டிருக்கின்றன.

இலங்கையின் கிழக்குப் பகுதிகளான மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகள் பெரும் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. மேற்குறிப்பிட்ட இடங்களில் கடல் அலையானது மூன்று கிலோமீற்றர் தூரத்துக்கும் அப்பால் நகரத்துக்குள் புகுந்து பாரிய சேதங்களை ஏற்படுத்தியிருந்தது.
கிடைக்கப் பெற்ற அறிக்கையின் பிரகாரம் 7400க்கு மேற்பட்ட உயிர் இழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. 11417க்கு மேற்ப்டவர்களுக்கு வெவ்வேறு விதமான உடற் தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஏறக்குறைய அரை மில்லியன் மக்களுக்கு மேலாக தங்கள் இருப்பிடங்களை விட்டு அயற் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடம் பெயர்ந்திருக்கிறார்கள்

பாதிப்புக்களின் அளவு
மாவட்டங்கள் இடம்பெயர்வு இறப்பு காயங்கள் நிலமை
அம்பாறை: Displaced - 20000, Deaths - 2200, Injured - 300, Situation - மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
மட்டக்களப்பு: Displaced - 118000, Deaths -1860, Injured -2100, Situation -மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது
திருகோணமலை: Displaced - 137000, Deaths -700, Injured -3400, Situation -மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது
முல்லைத்தீவு: Displaced - 97000, Deaths -1300, Injured -3800, Situation -மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது
யாழ்ப்பாணம்: Displaced - 110000, Deaths -1600, Injured -1800, Situation -மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது
மன்னார்: Displaced - 6000, Deaths - Nil, Injured -17, Situation -மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது
மொத்தம்: Displaced - 488000´, Deaths -7660, Injured -11417 .

மேற் தரப்பட்ட அறிக்கையானது தகவல்களின் அடிப்படையில் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கின்றது

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உடனடியான செயற்பாடுகள்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனது மாவட்டக் கிளையினூடாகத் தொண்டர்களைத் திரட்டி உடனடியான தேவைகளை சமாளிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள் உள்ளூர் உதவி நிறுவனங்கள், சில சர்வதேச நிறுவனங்களின் தொண்டர்களூடாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவ பிரிவினூடாகவும் அவசியத் தேவைகளைக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அவசியத் தேவையான உணவு, சுத்தமான நீர், மருத்துவத் தேவைகள் போன்றவற்றைக் கவனிப்பது. இறந்தவர்களின் உடல்களை அப்புறப் படுத்துவது போன்றவற்றிற்கு முக்கியம் தந்து வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன.

தற்போதைய நிலமையில் பெரியளவிலான தேவைகள் இருக்கின்றன. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட அளவிலான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளக் கூடிய அளவிலேயே தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இருக்கின்றது. மேலும் தேவைகள் அதிகரிக்க்கும் வாய்ப்பிருப்பதால் உடனித் தேவைகளுக்கும் மேலதிக செயற் திட்டங்களுக்கும் உதவி நிறுவனங்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அழைப்பு விடுக்கின்றது.

சர்வதேச சமூகத்துக்கு தமிழர் புனாவாழ்வுக் கழகம் ஒரு அவசர அழைப்பு
வெல்லப் பட வேண்டிய இந்த சவாலை எதிர் கொள்ள தமிழர் புனாவாழ்வக் கழகத் தொண்டாகள், உள்நாட்டு உதவி நிறுவனங்களின் தொண்டர்கள் ஏற்கனவே தங்கள் உதவிகளையும், சேவைகளையும் வழங்கத் தொடங்கிவிட்டார்கள். அவற்றை நடைமுறைப்படுத்த அத்தியாவசியமானவற்றை சர்வதேச சமூகத்திடமிருந்து தமிழர் புனர் வாழ்வுக் கழகம் எதிர் பார்க்கின்றது.

வெளிநாடுகளில் செயற்படும் தனது 14 கிளைகளின் ஊடாகவும் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் நிதி உதவிகளையும், உடல் உதவிகளையும் கோரி இருக்கின்றது. அவை வெகு விரைவில் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பின்வருவன அவசரத் தேவைகளுக்காகக் கோரப்படுகின்றன.
1. உணவு (பால் மா, பதனிடப்பட்ட உணவு போன்றவை) 80,000 குடும்பங்களுக்கான மூன்று நேர உணவு இரண்டு கிழமைகளுக்கு
2. உணவு அல்லாதவை ( சமையல் அறைப் பொருட்கள்,
100 000பாய்கள் போன்றவை)
3. உடைகள் ( பிரத்தியேகமாக பெண்கள், குழந்தைகள்)
4. மருந்து வகைகள் (paracetamol, anti biotics, dressings, suture material, disposable syringes etc)
5. நீரைச் சுத்திகரிக்கும் மாத்திரைகள் ( 500 000) தண்ணீர் கொள்கலன்கள் (5லீற்றர்)
6. தற்காலிகக் கொட்டகைகள் (25,000கொட்டகைகள் குடும்பங்களுக்காகவும் 50 மருத்துவ வசதிகளுக்காகவும்)
7. மின் உற்பத்தி சாதனங்கள் (50)

மேற்குறிப்பிட்ட பொருட்களானது தண்ணீரினால் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க பெரிதும் உதவும். தமிழர் புனர்வாழ்வுக் கழகமானது மேலே தரப்பட்டவற்றை உடனடியாக எதிர்பார்க்கின்றது. இவை மக்களின் அவசியத் தேவையாகின்றது.
இவ் அவசியத் தேவையை உடன் நடைமுறைப்படுத்த தமிழர் புனாவாழ்வுக் கழகத்திற்கு இரண்டு மில்லியன் டொலாகளுக்கு மேலாகத் தேவைப்படுகிறது என்று கணக்கிடப் பட்டிருக்கின்றது.

இந்த அவசியத் தேவைகளுக்கு சர்வதேச மக்களிடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவர்களது ஆதரவுக் கரங்களை வேண்டி நிற்கின்றது.

மேலதிக விபரங்களுக்கு.
00 94 112 693254 ( கொழும்பு)
00 94 21 228 3947 (கிளிநொச்சி)
cpara@hotmail.com
http://www.troonline.org/[/size]

Thanx: Chandravathana
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#40
KULAKADDAN Wrote:Åí¸¢ À½Á¡üÈÐìÌ IBAN No §¸ð¸¢È¡÷¸û <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

IBAN No இல்லாமல் அனுப்பலாம். அனுப்பும் செலவு 11யூரோக்கள் வருகிறது. ஐரோப்பிய யூனியனில் இருக்கும் நாடுகளுக்கு மட்டுமே இந்த IBAN No கேட்பார்கள். மற்றும்படி இல்லை. IBAN Noகொடுத்தால் அனுப்பும் செலவு குறைவு. அதற்காகவே கேட்பார்கள். இது இல்லையென்று சொல்லி அனுப்புங்கள்.
:::: . ( - )::::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)