Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேசத்தின் துயர்!
#1
தேசத்தின் துயர்!


இயற்கையினால் தாயகப் பகுதியில் வரலாறு காணாத பெரும் அனர்த்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இவ் அனர்த்தமானது ஒரு தேசியத் துயர் எனக் கூறும் அளவிற்கு பாரிய அழிவினை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பிற்குள்ளாகியிருந்த மக்களை மீண்டும் துயருறும் வகையில் இப்பெரும் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. அந்தமான் கடற்பிரதேசத்தில் கடலடியில் ஏற்பட்ட புவியதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் கிராமங்களுக்குள் புகுந்ததினால் இப் பேரனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இவ் அனர்த்தத்தினால் இறந்தவர்கள்ää காயமடைந்தவர்கள் தொடர்பான உறுதியான தகவல்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. எனினும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காயங்களுக்கு உள்ளாகியும் உள்ளனர் என்பது பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டதொன்றாகவே உள்ளது.

இதேவேளை பல ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான மக்களின் உடமைகளும் அலையினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அதாவது பெரும்பாலான மக்கள் உயிரை இழந்தது மட்டுமல்ல தமது குடியிருப்புக்கள்ää தொழில் உபகரணங்களää; உடமைகள்ää என்பனவற்றையும் இழந்து நிர்க்கதியானதொரு நிலையை அடைந்துள்ளனர்.

எதிர்வு கூறப்படமுடியாததொரு அனர்த்தமாக இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இவ் அனர்த்தத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள்ää சிறுவர்கள்ää பெண்கள் ஆகியோராகவே உள்ளனர். பலர் குடும்பமாகவே பலியாகியுள்ளனர்.

கடந்த இரு தசாப்த கால யுத்தத்தினால் பாதிப்புற்ற தமிழ் மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலும்ää பெரும் நெருக்கடியின் மத்தியிலுமே தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். சிறிலங்கா அரசாங்கம் யுத்தத்தினால் பாதிப்பிற்குள்ளான தமிழ் மக்களுக்கான புனர்வாழ்வுää புனரமைப்பு பணிகளில் அக்கறை காட்டாத நிலையில் மக்கள் தமது வாழ்விற்காகப் பெரும் போராட்டங்களை நடாத்த வேண்டியதாயிருந்தது.

இந் நிலையில் கிராமங்களில் ஏற்பட்டுள்ளஇவ் அனர்த்தத்திற்கு சிறிலங்கா ஆட்சியாளர்களிடம் இருந்து எத்தகைய உதவிகள் கிடைக்கப் பெரும் என்பது குறித்து உடனடியாக எதையும்; எதிர்வு கூற முடியாது. ஏனெனில் சிறிலங்கா அரசு மனிதாபிமான உதவிகளைக் கூட இன வேறுபாடு அற்ற முறையில் வழங்கப்படும் எனவும் எதிர்பார்ப்பதற்கில்லை.

இந்நிலையில் தாயகப் பிரதேசத்தில் பாதிப்பிற்குள்ளாகியுள்ள எமது மக்களுக்கு செய்யக்கூடிய ஒரே உதவி அவர்களின் துயர் துடைப்பதற்கு எம்மால் ஆன உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குவதே ஆகும்.

இத் துயரத்தில் இருந்தும் இழப்பில் இருந்தும் மக்கள் மீள்வதென்பதும் இலகுவானதொன்றான காரியமாக இருக்கப் போவதில்லை. ஏனெனில் இது இலகுவில் மீண்டுவிடக் கூடிய துயரமாகவோ அன்றி வெறும் நிவர்த்திக்கப்படக் கூடிய இழப்பாகவே இல்லை.

ஏனெனில் இத் துயரமானது இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமானதல்ல இது எமது தேசத்தின் துயரம.; இதில் இருந்து மீண்டு வர வேண்டுமானால் அனைத்து மக்களுக்குமே இதற்குத் தம்மால் ஆன பங்களிப்பைச் செய்தல் வேண்டும்.

ஆகையினால் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி பரந்து வாழும் எமது மக்கள் இத்துயருற்ற மக்களுக்கு ஆறுதலளிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு உதவியளிக்க முன்வருதல் வேண்டும். ஏனெனில் இவர்களின் துயர் துடைக்கபடுவதாவது எமது தேசத்தின் துயர் துடைக்கப்படுவதற்கு ஒப்பானதாகும்.

நன்றி: ஈழநாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
அவசரப்பணிக்கு ஒன்றிணைவோம்


இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்பட்ட இலங்கைத்தீவு பேரனர்த்தத்தில் அழிந்து போயுள்ளது.

கடலோரக் கிராமங்களில் நிகழ்ந்த இந்தப் பேரனர்த்தத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளன. பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் உறவுகளை இழந்து பரிதவிப்புடன் காணப்படுகின்றனர்.

பல வைத்தியசாலைகளில் இறந்தோரின் நூற்றுக் கணக்கான சடலங்கள் குவிந்து கிடக்கின்றன.

பல கடலோரக் கிராமங்கள் முற்றாக நீரில் மூழ்கிவிட்டது. பல்லாயிரக் கணக்கான மக்கள் உடுத்த உடையுடன் அகதிகளாக இடம் பெயர்ந்து உயர்வான பிரதேசங்களில் தஞ்சம டைந்துள்ளனர்.

பாடசாலைகள் மத வழிபாட்டுத் தலங்கள் பொதுக் கட்டிடங்களில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்தப் பேரழிவில் பெரும் பாதிப்புக்குள்ளான பிரதேசம் தமிழர் தாயகம் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது அவசியம்.

போர் அனர்த்தத்தினால் உயிர் உடமைகளை இழந்து அதன் மீட்சிக்கான தவிப்புடன் இருக்கும் மக்களை இந்தப் பேரழிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை மக்கள் கண்டிராத இந்த உலக அழிவிற்கு ள்ளாகியிருக்கும் மக்களுக்கு மனிதாபிமானப் பணிகள் அவசர அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

நிலத்தில்ää நீரில் புதையுண்டு கிடக்கும் சடலங்களை மீட்பதற்கும் வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருக்கு வைத்திய வசதிகளை வழங்குவதற்கும் மற்;றும் உதவிகளை வழங்குவதற்கும் உடனடியாக சர்வதேச சமூகம் உதவ வேண்டும்.

நேற்றைய அனர்த்தத்தில் தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த அழிவுகளில் இன மத பேதங்களை கடந்து தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் உயிரிழந்தனர்.

இவர்களை மீட்கும் பணியிலும்ää அவசர உதவிகளை வழங்கும் பணிகளிலும் சகல தரப்பினரும் ஈடுபட்டனர்.

ஆயினும் தமிழர் பிரதேசத்தின் இயற்கை அழிவுகளை ஊடகங்கள் முழுமையாக வெளிக்காட்டவில்லை. தென்பகுதியில் நடந்தவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

இன்றைய இந்த அவல நிலையில் எவ்வித பக்கச்சார்பும் இன்றி அவசர வசதிகள் வழங்கப்பட வேண்டும். அது நிற்க தற்போது ஏற்பட்டுள்ள கோர நிகழ்வு மீண்டும் ஏற்படுமா என்ற பீதி மக்கள் மனங்களிலே நிரம்பியிருக்கின்றது.

இயற்கை அனர்த்தத்தினை முன் கூட்டியே அறிய முடியாத நிலையில் இனிமேல் இப்படி ஒரு கடல் கொந்தளிப்புக்குள் சிக்குண்டு மனித உயிர்கள் அழிந்து விடக் கூடாது என்பதில் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.

அதேவேளை இவ்வாறான ஒரு கடல் கொந்தளிப்பு மீண்டும் ஏற்படக் கூடிய சாத்தியமிருப்பதாக வரும் செய்திகளை அடுத்து கடலோரக் கிராம மக்கள் வேறு இடங்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். அதே சமயம் இன்னல்களுக்குள்ளாகி உயிர் உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுடன் நாமும் துக்கத்தை பகிர்ந்து கொள்கின்றோம்.

நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)