Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
North and East 4000 Tamils Killed including 1200 Child
#1
North and East 4000 Tamils Killed including 1200 Child.

Massive tsunamis wiped out four Thousand Tamils life including Eleven
Hundreds Child And One million peoples displaced from North and East of
Stilanka only. Specially Around 2000 were dead in Mullaitivu District
it
in Tamil Tigers control Area. Large numbers of children were killed.
The
political wing of the Liberation Tigers appealed for international
assistance in providing relief to the people affected by the tsunami
waves
"We appeal to the international community to provide the wherewithal to
meet with the exigencies and to avoid a humanitarian crisis. The human
disaster and the tragedy the survivors face are unprecedented and need
immediate and effective humanitarian intervention. We therefore solicit
the
support of the Donor nations, UN agencies and INGOs to consolidate
their
efforts and ensure that the assistance reach the needy in time," the
appeal
said and declare National Emergency.
Reply
#2
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அவசர வேண்டுகோள்!


நில நடுக்கத்தினால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பின் காரணமாக வடக்கு கிழக்கில் ஏற்பட்ட அனர்த்தத்துக்கு உடனடியாக உதவுமாறு அனைத்துலக சமூகத்திடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று காலை இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு கரையோரப்பகுதிகள் பெரும் கடல் கொந்தளிப்பிற்குள்ளும் வெள்ள அனர்த்தங்களிற்கும் உட்பட்டது.

அம்பாறை மட்டக்களப்பு மூதூர் திருக்கோணமலை வடமாராட்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதிகளைச் சேர்ந்த பல கிராமங்களும் நகரங்களும் இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் சில கரையோரப் பகுதிகளினுள் மூன்று கிலோமீற்றர் வரை உள்நுழைந்த கடல்நீர்; பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சுமார் 1000 பொதுமக்கள் இதுவரை காணமல் போயுள்ளனர் என்ற தகவல் அப்பகுதி புனர்வாழ்வுக் கழக தொண்டர்களினால் தரப்பட்டுள்ளது. இவர்களில் பெண்களும் குழந்தைகளுமே அதிகளவில் அடங்கியுள்ளனர்.

தற்போது இப்பகுதிகளில் துரித மீட்புப் பணிகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழக தொண்டர்கள் பொதுமக்கள் ஆகியோருடன் இணைந்து விடுதலைப் புலிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்கப்படும் மக்கள் உயர்வான உட்பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அவசர உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

திருகோணமலைப் பகுதிகளில் தற்போது வெள்ளம் முற்றாக நீங்கிவிட்டது. இங்குள்ள கரையோரக் கிராம மக்கள் தற்போது ஐமாலியா சென்சேவியர் பாடசாலைகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை வெள்ளத்தால் கொல்லப்பட்ட 6 உடல்கள் திருமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. மூதூர் பகுதியில் இதுவரை 152 சடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் இப்பகுதிகளில் எமது தொண்டர்களும் பொதுமக்களும் மீட்பு மற்றும் அவசர உதவிவழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வடமாராட்சி பகுதிகளில் வெள்ள அனர்த்தங்கலில் கொல்லப்பட்ட 52 உடல்கள் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. சுமார் 300 காயமடைந்த பொதுமக்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாக உயர்வான உள்கிராமப் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கரையோர பகுதிகளில் 250ற்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் இவ்வெள்ள அனர்த்தங்கள் தொடர்பான அச்சம் இன்னமும் ஓயாத நிலையில் மக்கள் தத்தமது கிராமங்களுக்கு உடனடியாக செல்லமுடியாத சூழல் நிலவுகின்றது.

தற்போது தற்காலிகமாக வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் தங்கியுள்ள மக்களிற்கு உடனடி நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் பணி துரிதமாக தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கான பெருமளவு உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அனைத்துலக சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கின்றது.

அனைத்துலக ரீதியாக ரிரிஎன் தொலைக்காட்சி மற்றும் ஐபிசி தமிழ் வானொலி ஊடாக இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படும் நம்பிக்கை ஒளி நிதித்திட்டத்தின் முழு வளங்களும் தற்போது ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வழங்குவது என தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முடிவு செய்துள்ளது.

பல்லாயிரம் மக்களின் அவசர தேவை கருதி உடனடியாக செயற்பட்டு நிதிப்பங்களிப்புக்களை வழங்குமாறு புகலிடத்தமிழர்கள் தமிழ் வணிகர்கள் பொதுநிறுவனங்கள்ää ஆலயங்கள் ஆகியோரிடம் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பகிரங்கமாக வேண்டி நிற்கின்றது.


தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கி கணக்கு இலக்கம்

TRO Bank account in Colombo, Sri Lanka:

Bank A/C: 01607837001
Standard Chartered Bank
Wellewatte Branch
Colombo 06
Sri Lanka

TRO
410/112, Buller Street
Buddhaloga Mawatha
Colombo 7

Phone: +94 1 69 32 54
Fax: +94 7 471 65 76
<img src='http://www.tamilnatham.com/advert/tro20041227/tro261204/tro2.jpg' border='0' alt='user posted image'>
Reply
#3
இலங்கைத் தீவகத்தில் 13390 பேர் பலி தமிழீழத்தில் மட்டும் 7000 பேரை பறிகொடுத்து விட்டோம்!!
கிளிநொச்சி நிருபர் திங்கட்கிழமை 27 டிசம்பர் 2004 15:46 ஈழம்

இலங்கைத்தீவு முழுமையிலும் 13 ஆயிரத்து 390 பேர் கடற் புவி நடுக்கத்தால் இறந்துள்ளதாக சிறிலங்கா அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் மிக அதிக இழப்பு தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தில் இறந்தோர் எண்ணிக்ககை 7000 எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை முதல் யாழ்ப்பாணம் வரை உயிரிழப்புகக்ளுடன் பத்தாயிரம் மக்கள் காயமடைந்துமுள்ளனர்.

சிறிலங்கா அரசிற்கு பெருமளவில் சர்வதேச உதவிகள் வந்து கொண்டிருக்கின்ற நிலையிலும் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு அரச நிவாரணப் பணிகள் எதுவும் இதுவரை வந்து சேரவில்லை.

நிவாரணப் பணிகள் தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளாலும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தாலும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களாலும தமிழ் மக்களாலும் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரச அதிகாரிகள் போதிய நிதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்காத காரணத்தால் அவர்களால் மக்களுக்குரிய நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முடியாது உள்ளதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு அரச அதிபர் செயலகம் கரைதுறைப் பற்று உதவி அரச அதிபர் செயலகம் முல்லைத்தீவு நகரில் கடல் பூகம்பத்தால் அழிவுகளைச்; சந்தித்துள்ளன.

புதினம்
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)