Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலஙகையில் பாரிய சேதம்
#1
India Top Stories - Reuters


Death toll hits 150 after tsunami floods Sri lanka

1 hour, 23 minutes ago


COLOMBO (Reuters) - At last 150 people were killed after a tsunamai triggered by an earthquake off the Andaman islands in the Indian Ocean struck Sri Lanka on Sunday, district oficials said.



The worst-hit area appeared to be the tourist region of the south and east and the chairman of the John Keells hotel chain said five of his hotels had been badly flooded.


No communications were available with the low-lying Maldive islands to the south.


Further details were not immediately available.
Reply
#2
வானம்பாடி தமிழ்.
Reply
#3
ஊமை Wrote:வானம்பாடி தமிழ்.

டிசம்பர் 26, 2004

இலங்கையில் 160 பேர் பலி: இந்தியாவிடம் உதவி

கொழும்பு:

நிலநடுக்கம் காரணமாக உருவான கடல் கொந்தளிப்பில் இலங்கையில் குறைந்தது 160 பேர் பலியானார்கள். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ உதவி தருமாறு இந்தியாவிடம் இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே கோரியுள்ளார்.


தென்னிந்தியாவில் சென்னை, ஆந்திராவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வங்காள விரிகுடாவில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் இந்தோனிஷியாவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தால் இலங்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கிழக்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் கடல்நீர் உள்ளே புகுந்ததில் குறைந்தது 160 பேர் இறந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்தனர். ஏராளமானோர் வீடிழந்தனர்.

இவர்களுக்கு சிகிச்சையளிக்கவும், கடலலையில் சிக்கியவர்களை மீட்கவும் உதவுமாறு இந்தியாவிற்கு ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Reply
#4
டிசம்பர் 26, 2004

நில நடுக்கம் கடல் கொந்தளிப்பு: தமிழகத்தில் 50 பேர் பலி

சென்னை:

நிலநடுக்கம் காரணமாக சென்னையில் இன்று ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் 25 பேர் வரை பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 25 பேர் இறந்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது.


சென்னையில் இன்று காலை லேசான நில அதிர்ச்சியும், அதைத் தொடர்ந்து கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது. நில அதிர்ச்சி சில விநாடிகளில் அடங்கி விட்டாலும், கடல் கொந்தளிப்பு பெரிய அளவில் சென்னை நகரின் கடலோரப் பகுதிகளை ஆட்டிப் படைத்து வருகிறது.

கடலோரப் பகுதிகள் ¬முழுவதும் கடல் நீர் உள்ளே புகுந்து வருகிறது. இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு வருகின்றனர்.

மீனவர்கள் வசிக்கும் குப்பங்களுக்குள் கடல் நீர் புகுந்ததால் கடல் நீரில் மூழ்கி 25 பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகளில் பல உடல்கள் கடல் நீரில் மிதந்து வந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குடிசைகள் இடிந்து விழுந்ததில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டவர்கள் சென்னையின் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீடு இழந்தவர்கள் பல்வேறு பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விநியோகப்பதற்காக 1 லட்சம் உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கடல் கொந்தளிப்பு மிகவும் மோசமாக இருப்பதால் கடலோரப் பகுதி ¬முழுவதும் போக்குவரத்து ¬முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைச் சாலையான காமராஜர் சாலை முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்படுகிறது. மெரீனா கடற்கரையையே காணவில்லை எனும் அளவுக்கு கடல் நீர் ஊருக்குள் புகுந்து வருகிறது.

துறைமுகத்தின் சில கட்டடங்களில் கடல் நீர் புகுந்துள்ளது.

இதற்கிடையே, சென்னை விமான நிலைய ஓடு பாதையில் நில அதிர்வு காரணமாக விரிசல் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விமான சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் கடலூர் மாவடத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் 25 பலியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. மாமல்லபுரத்திலும் கடல்நீர் உள்ளே புகுந்துள்ளது.
Reply
#5
சற்று முந்திய BBC TV News செய்திகளின் படி இலங்கையில் 300 பேர்வரை இறந்துள்ளதாக அறியமுடிகிறது.

BBC, CNN TV News களை பாருங்கள்............

Breaking News ஆக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன......
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)