12-25-2004, 04:20 AM
இவர்களும் பெண்கள்....
கதிரவன் அலைந்தோய்து போன அமைதியான அந்த வடக்குக் கரைக் கடல் மேற்பரப்புக்குள் தோய்ந்து மூழ்கின்றான். வடலி நிழலை மறைத்துத் தன்னந்தனியே நிக்கின்றது விசாலத்தின் வீடு. ஒரு காலத்தில் பலருக்கு உள்ளூர் சைவக்கடை. இவள் வீட்டுக்கு ஊருக்குள் ஒர் பட்டம். 'வேசி வீடு'. வஞ்சகமின்றி எல்லோரும் ஏனோ, செல்லமாகவே கூப்பிடப் பழகிவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். விபரணம் ஏன்? போன வருஷம் வரை உரார் பலர் புளங்கிய இடமானாலும், இன்று சனம் வருவது அரிதாகிவிட்டது. காரணம் விசாலத்துக்கோ வயசாகிவிட்டது. மன்னிக்கவும் அவளது கட்டிலுக்கு. "விசாலம் நச்சாலும், துணையேது..? இத நாஞ்சொல்லேல...." ஊரில் புண்ணியவான்கள் கள்ளுக்குப் பின் ஞானத்தில் உபதேசிப்பது காதில் விழுவதுண்டு. "அட கள்ளேறுறவன் கூட" விசாலத்தின், இன்று ஈடாடிக்கொண்டிருக்கும் கட்டிலிற் சுருண்டு கிடக்கும் பஞ்சு மெத்தை சொல்லும் ஆயிரம் கதை-பகல் கதைகள் கூட உண்டாம், பசிக்கென்ன நேரமா குறிச்சிருக்கு.
வளையில் தொங்கும் கொழுக்கியில் ஜாம் போத்தில் விளக்கைக் (சென்.ஜோன்ஸ் பெடியன் கண்டுபிடிப்பு) கொழுவி விட்டு வாசல் கதவுக்குப் பின்னால் சப்பாணி கட்டுகிறாள் பேதை. அவள் எப்பொழுதும் முன்னால் வருவதில்லை. கதவுக்கு முன்னால் வருவதை பலர் விரும்புவதுமில்லை, ஏன் வந்ததும் இல்லை, அந்தப் புண்ணியாவன் ஜி.எஸ் (G.S-Grama Sevegar-கிராம உத்தியோகத்தர்) ஐத்தவிர. பாவம் மனுசனும் அறுவத்தஞ்சிலேயே போச்சேந்திட்டிது. மற்றவ எல்லாரும் கொல்லைப் புற குசினிக் கதவிலதானே புழங்கிறது. இன்று விசாலத்திற்கு வயது நாற்பத்தைந்தாகிறது. சற்று திரும்பிப் பார்த்தால், மண்வீட்டுக்கு வந்து, பின்னர் கல்லாக்கி இருபத்தைந்து வருடம். கல்லுக் குறுணல்கள் பெருங்கைகள் விசிறிய பணத்திற் தான்.
இவ்வளவு காலமும் ஓடாத்தேஞ்சதுதான் மிச்சம். இருந்த ஒரு பிள்ளையும் காலிற்குக் கீழில்லை. இடஞ்சலாப் போடுமெண்டு ஒருக்கா வெளீல அனுப்பினதுதான். திரும்பவே இல்லை. கண்ணுக்கெட்டாத் தூரத்தில் எங்காவது ஊதாரியாகத் திரிவானாக்கும். இதுதானே வழக்கம். விபரமேதும் தெரியாது.
முகட்ட அண்ணாந்து யோசிச்சா.... அந்த G.S தான் படிக்கல். அன்றைக்கு வேட்டையாடி புலி அந்தாள் தான். றேஷன் காட்டில் கையெழுத்து வாங்கச்சென்ற போது சூறையாடப்பட்டாள் விசாலாச்சி (பொருத்தமான சொல் பாலியல் வன்தாக்குதல்) G.S வடிவிற் பிடித்தது சனி. G.S க்கோ நாற்பதாகியும் வீட்டுச் சாப்பாடு இல்லை.
சம்பவத்தை அறிந்தது ஊர். இனிக்கேட்க வேண்டுமா? விஷயம் ஊர் முழுவதும் தெரியவர, கெஞ்சிக் கதறினாள்- G.S இன் காலிலேயே பழிகிடந்தாள் விசாலம். பயனேதுமில்லை. அந்த முரட்டுக் காளைக்கோ மனம் கசியவில்லை.
சம்பவம் ஏற்பட்டு ஒரு கிழமை கூட ஆகவில்லை. விசாலத்தின் புறக்கதவை விரல் மொளிகள் நொருக்க ஆரம்பித்து விட்டன. என் செய்வது.... வயலுக்கும் போக முடியாது. அரங்கேற்றம் தான் ஆகிவிட்டதே. மீண்டும் சலங்கையைக் கட்டுவதில் சங்கடம் இருதாலும், சமூகவழக்கம் அரங்கிற்கான பாதயைத் தானே வகுத்துள்ளது. அன்றிலிருந்து மெத்தையோடு மெத்தையா திரௌபதியின் (அவளுக்கும் உடன்பாடு இருக்கவிலைத் தானே) கதி வீசாலத்துக்கு. ஆரம்பத்தில் கடினமாக இருந்த்தாலும், எலாவற்றையும் பழக்கப் படுத்திவிட்டாள் இந்தப் பரத்தை. (சூட்டப்பட்ட பேர்)
காமுகரின் முகங்களோ, பெயர்களோ நினைவிலில்லை.
புறக்கதவும் சாத்தப் பட்டுவிட்டது....
எல்லாம் நாலு சுவருக்குள்ளேயே நடந்தேறிவிட்டது
வாசகர்களே விழித்து விடுங்கள்.....! இனியும் உறக்கமேன்....
இது கதையல்ல நிஜம்.... விசாலங்கள் பல இன்றும் உருவாக்கப் படுவது தான் பரிதாபம்.....
இவர்களை இழிப்பதை விட்டு விட்டு....வீரவாள் ஏந்துங்கள்.........
காண்போம் சமுதாய விடுதலை.....உண்மையான......சம நீதியுள்ள....
இவை என் ஏக்கங்கள்.... நீங்களும் ஏங்குவீர் என எண்ணுகின்றேன்....
விகடன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->