Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதுதான் உலகம்
#1
நோபல் பரிசு பெற்82 வயது விஞ்ஞானி கல்லூரி மாணவியை மணக்கிறார்

பீஜிங், டிச. 18_

சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் சென் நிங் யாங். 82 வய தான இவர் இயற்பியல் துறையில் இன்னொரு விஞ்ஞானியுடன் கூட்டு சேர்ந்து ஆராய்ச்சி செய்து அதன் மூலம் சில கண்டுபிடிப்பு களை செய்தார். இதற்காக 1957_ம் ஆண்டு இந்த ஜோடிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சென் நிங் யாங்கின் மனைவி கடந்த ஆண்டு மரணம் அடைந் தார். இதைத் தொடர்ந்து

28 வயது வோங் பான் என்ற கல் லூரி மாணவியை அவர் மணந்து கொள்ள இருக்கிறார். யாங்கும் அவர் மனைவியும் வோங்கை 1995_ம் ஆண்டு சந்தித்தனர்.

`கடவுள் எனக்கு கொடுத்த கடைசிப் பரிசு வோங்' என்று சென் நிங் யாங் கூறி இருக்கிறார்.

"மனதளவில் யாங் இளமை யானவர். நான் அவரைப் பெரி தும் மதிக்கிறேன். அவர் அறிவி யலுக்கு பெரும் தொண்டாற்றி இருக்கிறார் என்று வோங் கூறி னார்.



தாம்பத்ய உறவு இல்லாத திருமணம்
சீனாவில் பிரபலமாகி வருகிறது


பீஜிங், டிச. 18_

தாம்பத்ய உறவு இல்லாத திரு மணங்கள் சீனாவில் இப்போது பிரபலமாகி வருகின்றன. இப்படி தாம்பத்யம் இல்லாத திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமக்களுக்கு உதவுவதற்காக தரகர்கள் தனி அலுவலகம் தொடங்கி உள்ளனர்.

இதேபோன்ற ஒரு திருமண ஏஜென்சி ஜியாங்சு மாநில தலை நகர் நான்ஜிங்கில் தொடங்கப் பட்டு உள்ளது.

தாம்பத்ய உறவு இருந்தால் உடல் ரீதியாகவும், மன ரீதியாக வும் பிரச்சினைகள் ஏற்படுவதாக வும், அவற்றைத் தவிர்ப்பதற்கு தாம்பத்ய உறவு இல்லாத திரு மணங்கள் பிரபலமாகி வருவ தாக அந்த ஏஜென்சி கூறி உள் ளது.
Reply
#2
கர்ப்பிணி வயிற்றைக் கிழித்து குழந்தை திருட்டு : இந்த கொடூரத்தை செய்தவரும் ஒரு பெண்ணே!
கன்சாஸ் சிட்டி: கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையைச் திருடிச் சென்ற பெண் சிக்கினார்.
அமெரிக்கா, மிசோரி மாகாணம், ஸ்கிட்மோர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பாபி ஸ்டின்னெட். வயது 23. எட்டு மாத கர்ப்பிணி. எலி போன்ற அரிய வகை குட்டி நாய்களை இனப் பெருக்கம் செய்து விற்பவர். இன்டர்நெட் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு நாய்களை விற்பார். நாய் வைத்திருப்பவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்குவார்.

கடந்த வியாழக்கிழமை மிகவும் கொடூரமான முறையில் பாபி கொல்லப்பட்டுக் கிடந்தார். அவருடைய வயிறு கிழிக்கப்பட்டு இருந்தது. குழந்தை திருடப்பட்டு இருந்தது. அவருடைய வீட்டிலேயே இந்த கொடூரச் சம்பவம் நடந்திருந்தது. அப்போது அவருடைய தாயார் வீட்டில் இல்லை. அவர் வந்து மகளின் கொடூர கோலத்தைக் கண்டார்; கதறினார்.


பாபியின் தாய், தனது மகள் கொல்லப்பட்டதாக நினைக்கவில்லை. வயிறு வெடித்து இறந்து விட்டதாக தான் முதலில் நினைத்தார். பிறகு, வயிற்றில் இருந்த குழந்தை என்னவாயிற்று என்ற நினைப்பு அவருக்கு வந்தது. போலீசாருக்கு புகார் சென்றது. விசாரணை ஆரம்பித்தது.

ஏன் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது? யார் செய்திருப்பார்கள்? வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட குழந்தை எங்கே? உயிருடன் தான் இருக்கிறதா? இறந்து விட்டதா? அல்லது அதுவும் கொல்லப்பட்டதா? ஏகப்பட்ட கேள்விகளுடன் விசாரணையை முடுக்கினர் போலீசார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசாரின் துரித விசாரணைக்கு 24 மணி நேரத்தில் விடை கிடைத்தது. பாபியை கொன்றவர் ஒரு பெண். பெயர் மான்ட்கோமெரி. வயது 36. பாபி வயிற்றைக் கிழித்து திருடிச் செல்லப்பட்ட குழந்தையும் அவருடைய வீட்டில் உயிருடன் இருந்தது. அது, பெண் குழந்தை. மான்ட்கோமெரிக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்களும் இவருடைய சொந்த குழந்தைகள் தானா என போலீசார் விசாரிக்கின்றனர்.

கம்ப்யூட்டர் மூலம் இப்பெண்ணை போலீசார் பிடித்தனர். நாய் வாங்க அல்லது ஆலோசனைக்காக பாபியை இன்டர்நெட் மூலம் தொடர்பு கொண்டவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்தனர். சம்பவம் நடந்த தினத்தன்று வீட்டுக்கு வருவதாக தகவல் தந்தவர்களின் முகவரிகளை எடுத்தனர். அதில், மான்ட்கோமெரியின் முகவரியும் ஒன்று. விசாரணையில் வசமாக மாட்டிக் கொண்டார். குழந்தை தற்போது தந்தையின் அரவணைப்பில் உள்ளது.

இப்படிப்பட்ட கொடூரச் சம்பவத்துக்கான காரணம் என்ன? மான்ட்கோமெரி மனநிலை பாதித்தவரா? விடை தெரியவில்லை. அவர் மீது கடத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இக்குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
Reply
#3
அட கடவுளே....பெண்கள் இப்படியும் திருடுவார்களா...! :twisted: :roll:

அதிஸ்டக் குழந்தை.... சும்மா ஒரு சத்திர சிகிச்சை செய்து குழந்தைகளை பத்திரமாக எடுப்பதே பெரிய விடயம்...ஆனா இந்தப் பெண்...பெரிய சத்திர சிகிச்சை நிபுணர் போல....அல்லது அனுபவசாலி போல...உந்த வகைத் திருட்டில...! :twisted: Idea

குழந்தையாவது தப்பிச்சே...அதிலையாவது சந்தோசப்பட வேண்டியது தான்...!

<b>அதுபோக இன்னொரு முக்கிய செய்தி... இணைய வழித் தொடர்புகள் எவ்வளவு ஆபத்தானவை கண்டிங்களோ....சோ கவனமாப் பழகுங்கோ....!</b> Idea :!:

தகவலுக்கு நனறி..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
அடக்கடவுளே.. என்ன உலகம் .. இப்படி போகுது.. Cry Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
kuruvikal Wrote:அட கடவுளே....பெண்கள் இப்படியும் திருடுவார்களா...! :twisted: :roll:

அதிஸ்டக் குழந்தை.... சும்மா ஒரு சத்திர சிகிச்சை செய்து குழந்தைகளை பத்திரமாக எடுப்பதே பெரிய விடயம்...ஆனா இந்தப் பெண்...பெரிய சத்திர சிகிச்சை நிபுணர் போல....அல்லது அனுபவசாலி போல...உந்த வகைத் திருட்டில...! :twisted: Idea

குழந்தையாவது தப்பிச்சே...அதிலையாவது சந்தோசப்பட வேண்டியது தான்...!

<b>அதுபோக இன்னொரு முக்கிய செய்தி... [b]இணைய வழித் தொடர்புகள் எவ்வளவு ஆபத்தானவை கண்டிங்களோ....சோ கவனமாப் பழகுங்கோ....![/</b> Idea :!:

தகவலுக்கு நனறி..!

Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock:
<b> </b>
Reply
#6
தன்னை விட வயதில் மிகவும் மூத்த மணமகனை நிராகரித்த இளம்பெண் திருமணத்திற்கு வந்திருந்த மற்றொரு வாலி பரை மணந்தார்.

உத்தரபிரதேச மாநிலம் முசா பர்பூர் மாவட்டம் புர்காசி நகரைச் சேர்ந்த சபனா (வயது 20) என்ற பெண்ணுக்கும் 30 வயது வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திரு மணம் நடைபெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, மணமகன் தன்னை விட அதிக வயதானவராக இருப்ப தாக கூறி அவரை மணக்க சபனா மறுத்து விட்டார். அவரது இந்த முடிவை ஊர் பஞ்சாயத்தும் ஏற்றுக் கொண் டது.

இதைத் தொடர்ந்து திரு மணத்துக்கு வந்திருந்த ஒரு வாலிபர் திடீர் மணமகன் ஆனார். சபனாவின் சம் மதத்துடன் அவரது கழுத்தில் அந்த வாலிபர் தாலி கட்டி னார்.
Reply
#7
நாயைக் கடித்த மனிதன் கைது

கெயின்ஸ்வில்லே, டிச. 25_

நாய்க்குத் தண்டனை கொடுப்பதற்காக நாயை ஒரு மனிதர் கடித்தார். அவர் பெயர் லேசி 21 வயதான இந்த அமெரிக்கர், தன் காதலி வளர்த்த நாய்க்குப் பயிற்சி கொடுத்தார். அப்போது நாய்க்குத் தண்டனையாக அதைக் கடித்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த காதலி போலீசில் புகார் செய்தார். லேசியைப் போலீசார் கைது செய்தனர்.
Reply
#8
வெளிநாட்டு வேடிக்கை
கொள்ளை அடித்த வீட்டில் தூங்கிய கொள்ளைக்காரன்


லா பிளாட்டா, டிச. 25_

கொள்ளை அடிக்கப்போன இடத்தில் தூங்கிய கொள்ளைக்காரன் போலீசில் பிடிபட்டான்.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த அவன், லா பிளாட்டா நகரில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்கச் சென்றான். பொருட்களை எல்லாம் திருடி ஒரு மூட்டையாகக் கட்டி வைத்தான்.

அந்த மூட்டையுடன் தப்பி ஒடுவதற்கு முன்பு, அவன் கண்களைத் தூக்கம் தழுவியது. அப்படியே உறங்கிப் போனான். பொழுது விடிந்தது. வீட்டுக்காரப் பெண், கொள்ளைக்காரன் தன் வீட்டில் தூங்குவதைப் பார்த்ததும் துடைப்பக்கட்டையால் அடித்து விரட்டினாள்.

அவன் பக்கத்து வீட்டுக்குள் ஓடி ஒளிந்தான். அந்த வீட்டுப் பெண்ணும் அவனை கட்டி வைத்து துடைப்பக் கட்டையால் அடித்தாள். பிறகு போலீசில் புகார் செய்து அவனை பிடித்துக் கொடுத்தாள்.
Reply
#9
அங்கையும் துடப்பகட்டை தான் பாவிப்பார்கள் போல் உள்ள <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)