Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணையத்தில் குறும்படங்கள் பற்றி
#21
நன்றி அஜீவன்!

இது போன்ற இன்னும் பல படைப்புகள்
உங்களிடமிருந்து வருமென எதிர் பார்க்கிறேன்.

தொடருங்கள் வாழ்த்துக்கள்.

இதிலே இன்னும் சில கருத்துக்களைச் சேர்த்துள்ளேன்.
http://www.yarl.com/articles.php?articleId=279
Nadpudan
Chandravathanaa
Reply
#22
[quote=AJeevan]
அன்றைய இலங்கை பட முதலாளிகள் செய்த அதே தவறைத்தான் புலம் பெயர் தமிழ் தொலைக்காட்சிகளின் முதலாளிகளும் செய்து வருகிறார்கள்.அது அவர்களுக்கே வினையாகிக் கொண்டிருக்கிறது.
இவர்கள் எவரும் இங்கு வாழும் எமது கலைஞர்களுக்கான சந்தர்ப்பங்களை மனமுவந்து வழங்கவேயில்லை.
தென்னிந்தியாவைத் தேடிச் சென்ற இவர்களுக்கு பக்கத்து வீட்டிலிருக்கும் தனது சக உடன் பிறப்பை தெரியவேயில்லை.

உங்கள் ஆதங்கம் புரிகிறது.

தென்னிந்திய சினிமாக்கள் எங்களை ஆட்கொண்டு பல காலங்கள் ஆகிவிட்டது. தென்னிந்திய சினிமா என்பது இன்று சாதாரணமாக வாழ்க்கையுடன் ஒன்றிவிட்டதொன்று. தென்னிந்திய சினிமா செய்திகளைத் தாங்கித்தான் தமிழ்ப் பத்திரிகைகள் உலா வருகின்றன. இல்லாவிட்டால் அவை வியாபாரத்துறையில் தோல்வியைத் தழுவிவிடும நிலைதான் உள்ளது.
இணையப்பக்கங்களையும் கூட அவை பெரிதளவு ஆட்கொண்டுள்ளன. தேசியம் பேசுபவர்கள் கூட சினிமா பாடல்கள் அல்லது சினிமா செய்திகள், பேட்டிகள் இல்லாமல் தங்களது ஊடகங்களை நடாத்த முடியாத நிலையே இன்று உள்ளது.
புலம்பெயர்ந்த வாழ்வில் எங்களுடைய இயந்திர வாழ்க்கைக்கு பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது, இருப்பது இந்த சினிமாதான். வேலையால் களைத்து வீடு திரும்புபவனுக்கு யதார்த்த வாழ்க்கையைக் காண்பிக்கின்றோம் என்றால் அது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பது கேள்வி.
ஒன்றில் எங்களவர்களின் ரசிக்கும் திறமையை நாம் மாற்ற முற்பட வேண்டும். இல்லையெனில் அவர்களுடைய ரசனைக்கேற்ப படைப்புக்களைத் தந்து படிப்படியான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ரசிகர்கள் அறிவானவர்கள், ரசிக்கும் திறன் உள்ளவர்கள் என்று எண்ணிக் கொண்டு படைப்புக்கள் வருமாயின், அது ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அமிழ்ந்து விடும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமாயின் ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகை எல்லோரிடமும் போய்ச் சேர வாய்ப்புண்டு. அதேவேளையில் ஒரு இலக்கியப் பத்திரிகை ஒரு குறிப்பிட்டவர்கள் கையில் மட்டுமே இருக்க வாய்ப்புண்டு.
ஊடகங்கள் வியாபாரத்திற்கோ அன்றி பிராச்சாரத்திற்காகவோ இருப்பினும், அவற்றை நடாத்த பணம் வேண்டும், போதுமான ரசிகர்கள் வேண்டும். ஆகவேதான் அவர்கள் தென்னிந்தியாவில் இருந்து நிகழ்ச்சியைத் தருவிக்கின்றார்கள். ஆக ஊடகவியலாளரை வெறுமனே குற்றம் சுமத்துவது பொருந்தாது. எமது கலைஞர்களின் நிகழ்ச்சிகளை முற்றாக அவர்கள் புறந்தள்ளியிருந்தால் உங்கள் ஆதங்கத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் எங்கள் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. உதாரணத்திற்காக வேண்டுமானால் இந்தக் களத்தில் வந்து போகும் நாச்சிமார் கோயிலடி ராஜனைச் சொல்லலாம். அவரது வில்லிசை வாரம்தோறும் இடம்பெறுவதாக அறிகின்றேன்.
ஆக எங்கள் கலைஞர்களின் திரைப்படத் துறையிலான வளர்ச்சிக்கு ஊடகவியலாளரின் பங்கு என்ன என்பதை நீங்கள் சொல்ல வேண்டிய நேரமிது.
Reply
#23
color=green]<b>நமக்கொரு புலம் பெயர் சினிமா </b>[/color]

தமிழ் திரைப்படங்கள் அல்லது தமிழ் வீடியோ திரைப்படங்கள் என்றதும் தமிழர்கள் மனதில் திரையாக விரிவது தென்னிந்திய அதாவது தமிழ்நாட்டுத் திரைப்படங்கள் என்ற எண்ணம்தான்.

நாம் பழக்கப்பட்ட அல்லது வளர்ந்த வாழ்க்கை முறையிலிருந்து எப்படி உடனடியாக விடுபட முடியாதோ அதே போல்தான் இதுவும்.
எனக்குத் தெரிந்தவிதத்தில் இலங்கையிலும் சரி, மலேசியாவிலும் சரி, சிங்கப்பூரிலும் சரி தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகளிலும் சரி உருவாக்கப்பட்ட தமிழ் வீடியோ அல்லது திரைப்படங்கள் பெரும்பாலும் தென்னிந்திய பாணியைத் தழுவியதாகவே இருந்திருக்கின்றது. ஒரு சில படங்கள் வித்தியாசமாக இருக்க முற்பட்டாலும் முழுமையாக என்று கூறமுடியாது. இலங்கையில் உருவான ஒரு சில தமிழ்பேசும் சினிமாக்கள் சிங்கள சினிமாவின் தாக்கத்தைப் பெற்றிருந்ததையும் குறிப்பிட்டேயாகவேண்டியுள்ளது.

அதற்கு காரணம் சிங்கள தொழில்நுட்ப கலைஞர்கள் அப்படங்களில் முக்கியபங்கு வகித்ததும், அவற்றை தமிழ் - சிங்களம் எனும் இரு மொழிகளிலும் வெளியிட எத்தனித்ததும்தான். தமிழீழத்தில் தற்போது உருவாகும் பல வீடியோ திரைப்படங்கள் மாறுபட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இக்கருத்துக்கள் சிலசமயம் ஆரம்பத்திலேயே தென்னிந்திய - உலக சினிமாக்களுக்கு எதிரான எண்ணத்தை உருவாக்க முற்படுவதாக எண்ணத்தோன்றும். பிரச்சனை இதுவல்ல, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஏனைய புலம்பெயர் சமூகங்கள் போல நாமும் புலம் பெயர் தமிழ் சினிமா ஒன்றை ஜெனிக்கவைப்பதற்கு ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நல்லதொரு சமயத்தில் தேவையான சில உண்மைகளை தெரிந்து கொள்வதும், அவற்றின்பால் தெளிவு பெறுவதும் இன்றியமையாதது.

சாதாரணமாகவே பொழுதுபோக்கான சினிமாவுக்கு கொடுக்கும் வரவேற்பை யதார்த்தமாக சினிமாவுக்கு மக்கள் கொடுக்காதது வருத்தத்திற்குரியதுதான். ஏனைய சமூகங்களை விட தமிழ் சமூகம் பொழுதுபோக்கிற்கான சினிமாவைத்தான் விரும்புகின்றது.

யதார்த்தமான, அல்லது பரிசு பெற்ற படம் என்றாலே திரையரங்கு பக்கமே தலைகாட்டாத காலமும் இருந்ததை எவரும் மறுக்க முடியாது.

தொலைக்காட்சி நாடகங்கள் தமிழில் தயாரிக்கப்படத் தொடங்கிய பின் இந்நிலையில் (தமிழர்கள் மத்தியில்) சற்று மாறுதல் ஏற்பட்டுத்தான் இருக்கின்றது.

ஆனால் தென் இந்திய தொலைக்காட்சி நாடகங்களுக்கு முன்னோடியான நிகழச்சி இலங்கையின் சிங்கள தொலைக்காட்சி நாடகங்கள்தான் என்பது அநேகருக்கு தெரியாத ஒரு விடயம்.

அதேபோல் இலங்கை வானோலியின் (அப்துல் ஹமீத்)பாடுட்டுக்கு பாட்டு தென் இந்திய தமிழர்கள் மத்தியில் பிரபல்யமாகி பல வடிவங்களில் பல் வேறு தொலைக் காட்சிகளில் வேற்று உருவங்களில் வந்து உலக தமிழர்களைக் கவர்ந்து கொண்டிருக்கின்றன.


இதன் பின்னணியை வைத்துத்தான் சொல்கிறேன், யதார்த்த சினிமா பற்றி ஏனோ என்ற மனோநிலையில் நாம் சிந்திக்க மறந்துவிட்டாலும்கூட, தற்போது நம்மிடயே அது சற்று மாற்றம் பெற்றிருப்பதாகவே எண்ணத்தோன்றுகின்றது. அதற்கு இன்றைய எமது அரசியல் மற்றும் புலம்பெயர் மாற்றங்களும் புதிய சிந்தனைகளும் ஒருவகையில் காரணிகளாக இருக்கின்றன.

தவிர புலம்பெயர் தமிழ் சினிமா எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஆராய முற்படும்போது முதன்முதலாக என் எண்ணத்துக்கு வருவது தென்னிந்திய வியாபார தமிழ் சினிமாவும் அதன் பாதிப்பும்தான்.

தென்னிந்திய கனவுலக சினிமாவுக்கு பழகிப்போன சாதாரண மக்களை யதார்த்த சினிமாவுக்குள் தள்ளி அதை ரசிக்கவைப்பது மிக மிக கடினமான ஒன்றுதான். அதாவது சர்க்கரையை அதிகமாக உட்கொண்டு பழக்கப்பட்டவரிடம், இப்போதிருந்து சர்க்கரையை நிறுத்திவிடுங்கள் என்று சொல்வது போன்றதுதான் இதுவும்.

உண்மை கசக்கும், அதற்காக உண்மைகளை மறைத்து உணர்வு அடிப்படையில் துவேசமாக செயல்பட்டு மனிதநேயத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் எண்ணாது, இக்கட்டுரைபற்றி யதார்த்தமாக சிந்திக்க வேண்டுகின்றேன்.

புலம்பெயர் தமிழ் சினிமா ஒன்று உருவாக வேண்டுமென்று ஆதங்கப்படுபவர்கள், தமிழக சினிமாவை எதிர்ப்பதா, ஆதரிப்பதா, அங்கிருந்து எதையாவது கற்றுக்கொள்வதா எனும்கேள்வியை முதலில் தமக்குத்தாமே எழுப்ப வேண்டும்.

இந்தியாவிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் பரந்துவாழும் இந்திய -இலங்கைத் தமிழர்களை மட்டுமல்ல, ஏனைய நாட்டுத் தமிழ்போசும் மக்களையும் கவரும் விதத்தில் தென்னிந்திய தமிழ் படங்கள் வரவேற்பையும் வளர்ச்சியையும் பெற்றிருப்பதை எவராலும் மறுக்க முடியாது.

தமிழக ஒளிப்பதிவாளர்களும் இசையமைப்பாளர்களும் கூட ஆங்கில படங்களில் பணியாற்றுமளவுக்கு தகுதி பெற்றிருக்கின்றார்கள். தமிழர்களை ஏளனமாக எண்ணிய இந்திக்காரர்கள் கூட சிறந்த தொழில்நுட்பத்திற்காக தமது படங்களை சென்னையில் உருவாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். தென்னிந்திய தமிழ் படங்களில் நடித்தால் புகழ் பெறும் தன்மை உண்டாகிறது எனும் நிலை பிறமொழி நடிக - நடிகையர் மனதிலும் ஏற்பட்டிருக்கின்றது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையிலுள்ள சினிமா தொழில்நுட்பக்கூடங்கள் ஆசியாவிலேயே சிறந்த தொழில்நுட்பக்கூடங்களாகத் திகழ்கின்றன. இங்கே தயாரிக்கப்படும் திரைப்படங்கள் ஆங்கிலப்படங்களுக்கு கிடைக்கும் வசூலை பெறாவிடினும், ஆங்கிலப் படங்களிற்கு நிகரான தொழில்நுட்பம் பெற்றிருப்பதை எவராலும் மறுக்க முடியாது.
ஹொலிவுட் திரைப்படத் துறையினரும் சென்னைக்கு காலடியெடுத்து வைக்கப் போவது புதிய செய்தி.

திரைப்படத் துறைக்கு கணணிகள் ஆற்றும் பங்கு அளப்பரியது.தற்போதய கணணி வல்லுனர்களாக இந்திய வல்லுனர்கள் இருப்பதால் இந்த மாற்றம் அவர்களது தேவையாக இருக்கிறது.

ஆனால் சர்வதேச அளவில் ஒரு சில விகிதாசாரத்தின் அடிப்டையில் படங்களே பேசப்படுகின்றன. யதார்த்த சினிமா சர்வதேச அளவில் பேசப்படுவதுபோல் கனவுலக சினிமா சர்வதேச அளவில் பேசப்படாததால் இந்தியாவில் தயாராகும் சினிமா எண்ணிக்கையின் அடிப்படையில் யதார்த்த சினிமாவின் எண்ணிக்கை போதாதென்றுதான் கூறத் தோன்றுகின்றது.

இந்தியர்களின் பொழுதுபோக்கு சினிமா என்பதால் இப்படியான நிலை ஏற்பட்டிருக்கின்றது என்றுதான் கூற வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் எம்மவரின் முக்கிய பொழுதுபோக்கும் வீடியோ படங்கள் பார்ப்பதுதான். தற்போதைய பொழுது போக்கு புலம் பெயர் தொலைக் காட்சிகளைப் பார்ப்பது.

எனவே யதார்த்த சினிமாவை விட கனவுலக சினிமாவின் தயாரிப்பு பார்வையாளர்களின் ஏற்றுக்கொள்ளல் மூலம் அதிகரித்து இருக்கின்றது.

ஆகவே தென் இந்திய - திரைப்படங்களை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அவர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடப்போவதில்லை. எதிர்ப்பு என்பது குரோத மனப்பன்மை ஒன்றை வளர்க்குமே தவிர வேறு எந்தவொரு சாதனையையும் படைத்துவிடாது.

தமிழ்பேசும் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் எமது சகோதர இன மக்கள் எனும் எண்ணமில்லாவிடில் நாம் நம்மை ஏமாற்றும், நான் எனும் அகந்தையில் வாழ்வதாக ஆகிவிடும்.

இதுதவிர புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ்பேசும் மக்களை, தென்னிந்திய தமிழ் படங்களைப் பார்க்காதீர்கள் என்றால், அவர்களுக்காக உருப்படியாக ஏதாவது படைப்புக்களை கொண்டு வருகிறோமோ என்றால் வாய்மூடி மௌனமாவதைத் தவிர வேறு வழி கிடையாது.

தமிழ்படங்களை தவிர்த்தால் நாம் வாழும் நாடுகிளில் திரையிடப்படும் ஆங்கில அல்லது நாம் வாழும் நாட்டின் திரைப்படங்களை மட்டுமே பார்க்க வேண்டிவரும்.

அப்படியானால் நாம் சத்தமிடும் கலை கலாச்சாரம் புலம்பெயர் நாடுகளில் என்னாவது?

அநேகமான படித்த தமிழர்கள் கௌரவத்துக்காக ஆங்கிலத்தில்தான் வீட்டிலும் உரையாடுகின்றார்கள். புலம்பெயர்ந்து நாட்டின் பிரச்சினை காரணமாக வெளியேறிவிட்ட அநேக தமிழர்களுக்கு ஆங்கில அறிவு குறைவுதான். அவர்கள் தாம் வாழும் நாட்டின் மொழியைத் தெரிந்து கொள்கின்றார்கள். இவர்கள் தமிழ் மொழியை மறக்காவிடினும் இவர்களுக்குப்பிறக்கும் எதிர்காலக் குழந்தைகள் நிச்சயம் எமது மொழியையும் கலாச்சாரத்தையும் மறந்துவிடுவார்கள்.

இக்கருத்து கலாச்சாரத்தை காக்க முற்படுவதான சாயத்தை பூச எத்தனித்தாலும், ஊர்க்குருவி உயரப்பறந்தாலும் பருந்தாவதில்லை என்பதுபோல் நாம் எங்கு எப்படி வாழ்ந்தாலும் நமது அடையாளம் மாறப்போவதில்லை.

எனவே தென்னிந்திய - மற்றும் உலக சினிமாக்களை எதிர்ப்பதை விட்டு, அவற்றிலிருந்து நல்லவற்றைக் கற்றுக் கொண்டு நமது பிரச்சனைகள் - நமது எண்ணங்கள் கொண்ட சினிமா ஒன்றை படைக்கவும், அதை வேறுபடுத்திப் பார்த்து ஆதரவளிக்கவும் அனைவரும் முன்வரவேண்டும்.

சொல்வது சரிதான். இவை பார்வையாளனுக்கு போய்ச் சேருமா? உடனடியாக போய் சேராதுதான். ஆனால் தொலைக் காட்சிகள் பத்திரிகைகள், வானொலிகள், புத்தகங்கள், கருத்தரங்குகள் வழி போய் சேர வகை செய்யலாம். இவை அனைத்துக்கும் கலைஞர்கள் வரிசையில் முதன்மை பெற்றவர்கள் மனம் திறந்து பேசி ஒன்று சேரலாம். புதியவர்களுக்கு வழிகாட்டலாம்.

தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்பவனும் - தனது குறைகளை தெரிந்து கொள்பவனும் ஏனையோரின் விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு செயல்படுபவனும் மட்டுமே ஒரு நல்ல கலைஞனாக - படைப்பாளியாக பரிணமிக்க முடியும். அப்படியில்லாவிடில் எப்போதும் போல் பழைய பல்லவியைத் தொடரவேண்டியதுதான்.

புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியிலிருந்து அத்தி பூப்பதுபோல் ஆண்டொன்றுக்கு ஏதோ ஒன்று இரண்டு படைப்புகள் வந்து வெற்றி பெற்றுவிட்டால் அது ஒரு சாதனை என எண்ணுவது மடமையானது.

அனைத்துப் பகுதியிலிருந்தும் படைப்புகள் புதிது புதிதாக உருவாக்கம் பெற வேண்டும். வேறுபட்ட நாடுகளில் இருந்து மாறுபட்ட அனுபவங்களாக அவை அமையும் போது அவை வித்தியாசமாகவே இருக்கும். அவை நிச்சயம் மக்களால் வரவேற்கப்படும்.

இதற்கு ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

அது இலங்கையின் சிங்கள சினிமாதான். அன்றைய ஆரம்ப கால சிங்கள சினிமா தென் இந்தியாவில்தான் உருவானது. பின்னர் அது காலப்போக்கில் இந்திய திரைப்பட தொழில் நுட்பவியலாளர்களின் உதவியோடு இலங்கையில் உருவாகத் தொடங்கியது.

இவற்றின் ஆரம்ப முன்னோடிகளாக இருந்தவர்கள் தமிழ்ர்கள் என்பதும் , இலங்கையின் முதலாவது தமிழ் சினிமாவை சமுதாயம் (1960) எணும் பெயரில் தயாரித்து இயக்கிவர் ஹென்றி சந்திரவன்ச என்ற சிங்களவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய இலங்கை தமிழ் சினிமா நசுங்கிப் போனதற்கு பொறாமை - ஈகோ - குழிதோண்டல்கள் காரணமாகியது.இவர்கள் சினிமாவைப் பற்றி தெரிந்து கொள்ளவோ கற்றுக் கொள்ளவோ முயலவேயில்லை.

இலங்கையில் நாடகங்களைச் செய்தவர்கள் தமிழ் சினிமாக்களை உருவாக்க முற்பட்டது போல இங்கும் தொடர்கிறது.

நாடகம் என்பது வசனங்களினூடாக பார்வையாளனை தன் வசப்படுத்துகிறது. சினிமா விசுவல் மீடியா எனப்படும் காட்சிகளினூடாக பார்வையாளனை தன் வசப்படுத்துகிறது.

இவற்றின் அடிப் படையைக் கற்றுக் கொள்ளாமல் சினிமா ஒன்றை உருவாக்க முற்படுவதால் தோல்விகளை சந்திக்கிறோம்.

இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் சினிமாக்களில் பணியாற்றிய பல கலைஞர்கள் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றார்கள். இவர்களில் ஒரு சிலருக்கு சினிமாதுறை பற்றிய கல்வி, அறிவு அல்லது அனுபவம் இருக்கிறது.

இவர்களது பெரிய குறை அனைத்தும் தமக்குத் தெரியும் என்று தமக்குத்தாமே கிரீடம் சூடிக் கொள்கின்றார்கள். இதனால் இவர்கள் ஏனைய திறமையுள்ள கலைஞர் ஒருவருடன் சேர்ந்து எதுவும் செய்யாது, தனது தலையில் அனைத்தையும் போட்டுக்கொண்டு செயல்படத் துடிக்கிறார்கள்.

இதற்கு மிக முக்கிய காரணம் தான் அடுத்தவன் முன் தாழ்ந்து விடுவேனோ எனும் தாழ்வு மனப்பான்மைதான். அத்துடன் ஒரு குழுவாக சேர்ந்து செய்யும்போது அனைத்துக்கும் தானே முழு உரிமையும் கோர முற்பட்டு, அடுத்தவர்களை மலினப்படுத்தி படைப்புகளை புஸ்வாணமாக்கி விடுகிறார்கள்.

அப்படியுமில்லாவிட்டால் எதுவுமே தெரியாத அப்பாவி புதிய கலைஞர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து தன் சுய விளம்பரத்துக்காக அவர்களை பலிக்கடாவாக்கி தப்பிக்கொள்வது. இப்படிப்பட்டவர்களுக்கும் மூன்றாம் தர அரசியல்வாதிகளுக்கும் எந்த வேறுபாட்டையும் நான் கண்டதில்லை.

இன்னுமொருசாரார், கதை - திரைக்கதை இயக்கம் ஆகியவற்றோடு கதாநாயகனாகவும் நடிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள்.

இவர்கள் திருமண பிறந்தநாள் விழக்களை படம்பிடிப்பது போல் சினிமாவையும் நினைப்பது கேலிக்குரியது.

ஒளிப்பதிவுக் கருவியால் பொம்மை வந்தால்போதும் என்று மட்டும் நினைக்கின்றார்கள்.

[b]சினிமா சில நெறிமுறைகள் மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு உருவாகும் ஒருகலை. நினைத்ததை நினைத்த இடத்தில் புகுத்தும் ஒரு கலையல்ல.

அப்படியான விதிமுறைகளை தவிர்த்தால் ஏதோவொரு படைப்பாக இருக்குமே தவிர, அது எவராலும் பேசப்படாததாகப் போய், படைத்தவர் தன் வீட்டில் வைத்து தானே போட்டுப் பார்த்து ரசிக்க வேண்டியதாகிவிடும்.

இதுதவிர மேடை நாடகத்துக்கும் - சினிமாவுக்கும் உள்ள வித்தியாசத்தைக்கூட பலரால் வேறுபடுத்திப் பார்க்கமுடியாமலிருக்கின்றது.

புலம்பெயர் தமிழ் சினிமா என வந்த படைப்புகளில் உள்ள பெரியதொரு குறை இலங்கைத் தமிழையும், இந்தியத் தமிழழையும், நாடகவசன நடைகளையும் புகுத்தி பார்வையாளனை பைத்தியக்காரனாக்க முற்படுவது.

இப்படியான ஒரு சில படங்களை பார்வையிடும் பார்வையாளர்கள் படும் அவஸ்தையும் - நகைப்பும் புலம்பெயர் சினிமா ஆர்வலர்களை புண்படுத்துகின்றது.

பணபலமும், ஆர்வமும் மட்டுமே ஒருவனை படைப்பாளியாக்கி விடுவதில்லை.

ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு அப்படத்தின் கதையைச் சொல்வது கடினமல்ல. ஒரு கதைக் கருவை பார்வையாளன் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் திரையில் செதுக்குபவன் மட்டுமே படைப்பாளியாக முடியும்.

சினிமா பல்வேறு தரப்பட்ட மக்களை ஈர்க்கும் ஒரு கலை. எனவே எல்லா ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மைக்கு ஏற்பவே ஒரு படைப்பை மக்கள் முன் வைக்க வேண்டியிருக்கின்றது.

சமூகத்துக்கு போய்சேராத, பார்வையாளனின் ஏற்றுக்கொள்ளல் மூலம் அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு கலைவடிவமானாலும் அது பயனற்றது என்பதே என் கருத்து.

எனவே செய்யும் கலை பற்றிய கல்வியறிவும், அனுபவமும், சிந்தனையும் நிச்சயம் தேவை. அதை விடுத்து விலையுயர்ந்த சாதனங்கள் பிரமாண்டமான வெற்றிகரமான திரைப்படமொன்றை தரும் என்ற கருத்து என் உடன்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கின்றது.

இதுபோன்ற இடையூறுகள் மத்தியில் ஒரு சில படைப்புகள் அத்தி பூத்தாற்போல் பூக்க முயன்று மொட்டிலேயே கருகிவிடுவது மிக மிக வேதனையானது.

அப்படி வரும் படைப்புகள் பற்றிய விமர்சனங்கள்கூட மிகவும் அரிதாகவே எழுதப்படுகின்றன. சிலர் படைப்பை விமர்சிப்பதை விடுத்து படைப்பாளியை விமர்சிக்கத்தொடங்கிவிடுகிறார்கள். ஒரு சிலர் படைப்பாளியின் படைப்பைவிட அவனது பூர்வீகத்தை தெரிந்து கொள்ளவே பிரயத்தனபடுகிறார்கள்.

இங்கே அந்தக் கலைஞன் எந்த சாதியில் பிறந்தான் என்பதிலிருந்து அவனது தற்போதைய அரசியல் நிலைப்பாடுவரை தேடிக் கண்டுபிடித்து ஒரு புதிய கலைஞனின் வரவை தடுப்பதை முக்கிய குறிக்கோளாக கொள்கிறார்களே தவிர, புதிய வரவொன்றாக ஆதரிப்பதை தவிர்த்து வருவதால், இன்றுவரை சிறந்த புதிய கலைஞர்கள் முகம் நினைவில் நிற்கும் முன்னே முகமிழந்துவிடுகின்றார்கள்.

பணவசதி படைத்த ஒரு சிலரும், எதையாவது சாதித்தே ஆகவேண்டும் என்ற ஒரு சிலரும் மின்மினிகள் போல் தலைகாட்டி உதிர்ந்து போய்விடுகிறார்கள்.

இதற்கெல்லாம் பார்வையாளர்கள் அல்லது ரசிகர்கள் மேல் பழி - பாவத்தை போட்டு விடுவதை நான் எதிர்க்கிறேன்.

எமது மக்கள் தொடர்பு சாதனங்கள், மற்றும் ஊடகங்கள் இவற்றை மக்கள் முன் கொண்டு வந்திருந்தார்களேயானால் இன்று பெருவாரியான கலைஞர்களும், கலைப்படைப்புக்களும் எம்முன் இருந்திருக்கும்.

எனவே இனியும் இக்குறுகிய நோக்கத்தை மாற்றும் பொறுப்பு எமது புலம்பெயர், மக்கள் தொடர்பு சாதனங்கள் மற்றும் ஊடகங்களுக்கும், விமர்சகர்களுக்கும் உண்டு.

இவர்களுக்கிடையிலும் புதுப்புதுப் படைப்புகள் உருவாக அவா கொள்ளும் மனதநேயமிக்க ரசிகர்களும் விமர்சகர்களும் பல கலைஞர்களுக்கு உரமாக இருப்பது ஆறுதலான விடயம்தான்.

எனவே கலைஞர்களில் பயிற்சியும், தேர்ச்சியுமுள்ள கலைஞர்கள் தான் என்ற ஈகோ மாயையிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு கூட்டமாக கலைப்படைப்புக்களை மக்கள் முன் கொண்டு வர முயல வேண்டும்.

கூட்டாகப் பணிபுரியும்போது கருத்து மோதல்கள் ஏற்படத்தான் செய்யும். அதற்காக ஜால்ரா அடிப்பதைத்தவிர்த்து உண்மைகளை விமர்சித்து உண்மைகளையும், நியாயங்களையும் ஏற்றுக்கொண்டு கரம்கோர்த்து படைக்க நினைப்பவர்கள் மட்டுமே உண்மை கலைஞர்கள்.

தனி மனிதனாக எதையும் சாதித்தவர்கள் உலகில் இல்லை என்பதை மறக்கக்கூடாது. ஒருவனின் வெற்றிக்குப் பின் பலர் நிழல்போல் துணையாக இருக்கின்றார்கள். மனம்விட்டுப் பேசுங்கள். பணம் படைத்தவர்கள் மற்றும் புலம் பெயர் தொலைக் காட்சிகளை வைத்திருப்பவர்கள் முன்வந்து புதுவரவுகளுக்கு உதவலாம்.

வேறு, வேறு திசைகளிலிருந்து புதிய படைப்புகளும் வரவேண்டும் என்ற எண்ணம் எம்மிடம் ஏற்பட்டால் மட்டுமே தொடர்ந்து படைப்புகள் வெளிவர வாய்ப்பாக அமையும்.

எனவே ஏனைய உலக படைப்புகளை வரவேற்று அவர்களிடமிருந்து புதியவற்றை கற்றுக்கொண்டே எமது படைப்புக்களை உருவாக்க முயல வேண்டும். சினிமா பற்றிய அறிவைப்பெற புத்தகங்கள், கல்லு}ரிகள், கருத்தரங்குகள் ஆகியவற்றின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஆரம்ப அறிவை தெரிந்து கொள்ளாமல் ஒரு உருப்படியான திரைவடிவத்தை உருவாக்க முடியாது. அதை சினிமாத்துறை சார்ந்தோர் உடனடியாக செய்ய வேண்டும்.

அவற்றின் பால் ஈடுபாடுள்ளவர்கள் சினிமா பற்றிக் கற்றுக் கொள்ள விரும்பி தொடர்பு கொண்டால் உதவ முடீயும்.

உங்களைப் போலவே ,
குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்கும் இந்த வாய்பை பெற்றுக் கொடுங்கள்.அவர்கள்தான் நாளைய உலகம்.நம்மால் முடியாத கனவுகளை அவர்கள் மூலம் நிஜமாக்குங்கள்.

தவிர விசயம் தெரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து படைப்புகளை உருவாக்குவதன் மூலமும், புதியவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதன் மூலமும், விசயம் தெரிந்தவர்களை ஆதரிப்பதன் மூலமும் எமது படைப்புகள் வெளிவரக்கூடிய நிலையை உருவாக்கும்.

புதுவரவுகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் மட்டுமே எமது புலம்பெயர் படைப்புக்களுக்காக மக்களை ரசிகர்களை ஏங்க வைக்கலாம். அது தவறும் பட்சத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறுபக்கம் திரும்பிவிடும்.

பணிவன்புடன்
அஜீவன்
www.ajeevan.com
www.europemoviesfestival.com
Reply
#24
திரு.அஜீவன் அவர்களிற்கு வணக்கம்
வாழ்த்துக்கள்

இதுநாள்வரை பத்திரிகைமூலமாகவும் யாழ் இணையத்தின் மூலமாகவும்தான் உங்களது படைப்புகளை அறிய முடிந்தது. காணமுடியவில்லை. கேள்விப்பட்டதுடன் மாத்திரமே இருக்கின்றது.
இங்கு சகோதரி முல்லை மணிதாசன் ஜயா மற்றும் சந்திரவதனா அக்கா அவர்களின் விமர்சனங்களையும் அதற்கு உங்களது பதில்களையும் பார்க்கும்போது உங்களது படைப்புகளை இக்கணமே பார்க்கவேண்டும்போல் ஆவல் எழுகின்றது. ஆனால் அதற்கு ஏற்ற வழிவகைள் எனக்கு இல்லை. எதுவாகினும் இன்னும் இன்னும் உங்களது படைப்புகள் வளரவேண்டும். உங்கள் படைப்புகளால் எங்கள் மண்ணின் அவலங்கள் பாரெங்கும் படரவேண்டும். விழித்திருந்தும் உறங்குவதுபோல் நடித்துக்கொண்ருக்கும் தமிழினம் உங்கள் படைப்புகளால் துள்ளி எழவேண்டும் என வாழ்த்திக்கொள்வதில் நான் மகிழ்வடைகின்றேன்
வாழ்க
வளர்க
அன்புடன்
பரணீதரன்
[b] ?
Reply
#25
அன்பு பரணிக்கு

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
தங்களுக்கு எமது குறும்படங்களை பார்க்க விரும்பினால் நேரடியாக எமக்கு தங்கள் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களுடன் எழுதுங்கள்.

(மு.கு:- உங்கள் முகவரி மற்றும் விபரங்கள் உங்கள் அனுமதியின்றி எவருக்கும் கொடுக்கப்பட மாட்டாது.)

அல்லது இக் குறும்படங்களை விமர்சித்தவர்கள் உங்களுக்கு தெரிந்தவராகவோ அல்லது அருகாமையிலோ இருந்தால் அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடிந்தால் பெற்றுக் கொள்ளுங்கள்.

நட்புடன்
AJeevan
film - tv -video production
(the official member of swiss movie)
P.O.Box.950
4601 - OLTEN
Switzerland
tel.+41 62 212 96 23 or +41 79 209 12 49
fax. +41 62 213 05 58

email:ajeevan@mailcity.com
www.ajeevan.com
Reply
#26
தங்கள் அன்பான பதிலுக்கு நன்றி திரு.அஜீவன்

எனது விலாசத்தை உங்களிற்கு தருகின்றேன். இங்கு விமர்சனம் வைத்தவர்கள் யாரும் என்னருகில் இல்லை. நான் தொலைவில் இருக்கின்றேன். எனவே தங்களிற்கு எனது விலாசத்தை தருவதில் பிரச்சினை இல்லை. தனிப்பட்ட செய்திமூலம் தந்து உதவுகின்றேன்
நன்றி வணக்கம்
அன்புடன் பரணீதரன்
[b] ?
Reply
#27
<b>திரைப் பட படைப்பாளிக்கு எது முக்கியம்?</b>

சிற்பிக்கு கல் முக்கியம்.

ஓவியனுக்கு திரையும் வர்ணமும் முக்கியம்.

எழுத்தாளனுக்கு வரி வடிவம் முக்கியம்.

கவிஞனுக்கும் கதாசிரியனுக்கும் கற்பனைத் திறன் முக்கியம்.

ஒளிப்பதிவாளனுக்கு ஒளியை ஆளும் திறன் மற்றும் அழகியல் உணர்வு முக்கியம்.

தொகுப்பாளனுக்கு வேவையானதை தேர்வு செய்யவும்,தேவையற்றதை தூக்கி எறியவும் முடிந்த தைரியமும், அழகியலோடு பார்வையாளன் முன் படைக்கும் திறன் முக்கியம்.

இசையமைப்பாளருக்கு கதையை விஞ்சி நிற்காத இசையை தருவது முக்கியம்.

இயக்குனருக்கு அனைத்தையும் பற்றிய அறிவு முதிர்ச்சி முக்கியம்.........
Reply
#28
பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை உதயா ஜூவலர்ஸ் ஆதரவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் கே.எஸ்.ராஜா என ஞாபகம்.. இது சரியா பிழையா என்பதை அறிந்தவர்கள்தான் கூறடவேண்டும்..
.
Reply
#29
sOliyAn Wrote:பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை உதயா ஜூவலர்ஸ் ஆதரவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் கே.எஸ்.ராஜா என ஞாபகம்.. இது சரியா பிழையா என்பதை அறிந்தவர்கள்தான் கூறடவேண்டும்..

திரைவிருந்து என்ற நிகழ்ச்சிதான் கே.எஸ்.ராஜாவின் பிரபல்யமான நிகழ்ச்சி.

அந்நாட்களில் " வீட்டுக்கு வீடு வானோலிப் பெட்டிக்கருகில் அமர்ந்திருக்கும்...................
என்று தொடங்கி,

[b]திரைவிருந்து

என ரீங்காரமிட்ட கே.எஸ்.ராஜாவின் குரலுக்கு வசியமாகதவர்களே இல்லை.

அப்துல் ஹமீத் தொடக்கிய பாட்டுக்கு பாட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபன வர்த்தக சேவை , இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபன சேவை 2 என மாறிய காலத்தில் நிறுத்தப்பட்டு உதயா ஜூவலர்ஸ் ஆதரவில் கே.எஸ்.ராஜா நடத்தினார்.பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டு லலிதா ஜூவலர்ஸ் ஆதரவில் மீண்டும் அப்துல் ஹமீத் தொடங்கினார்.

இதன் இடையே இலங்கையை விட்டு தமிழ்நாடு சென்று தற்காலிகமாக குடியேறிய கே.எஸ்.ராஜா
இந்திய வானோலியொன்றில் (விவித் பாரதியின் தேன் கிண்ணம்) இதே பாட்டுக்கு பாட்டைத் தொடங்கினார்.

ஆனால் அது பின்னர் அப்துல் ஹமீத் வசம் கைமாறியது..
Reply
#30
AJeevan Wrote:
sOliyAn Wrote:பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை உதயா ஜூவலர்ஸ் ஆதரவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் கே.எஸ்.ராஜா என ஞாபகம்.. இது சரியா பிழையா என்பதை அறிந்தவர்கள்தான் கூறடவேண்டும்..

திரைவிருந்து என்ற நிகழ்ச்சிதான் கே.எஸ்.ராஜாவின் பிரபல்யமான நிகழ்ச்சி.

அந்நாட்களில் " வீட்டுக்கு வீடு வானோலிப் பெட்டிக்கருகில் அமர்ந்திருக்கும்...................
என்று தொடங்கி,

[b]திரைவிருந்து

என ரீங்காரமிட்ட கே.எஸ்.ராஜாவின் குரலுக்கு வசியமாகதவர்களே இல்லை.

அப்துல் ஹமீத் தொடக்கிய பாட்டுக்கு பாட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபன வர்த்தக சேவை , இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபன சேவை 2 என மாறிய காலத்தில் நிறுத்தப்பட்டு உதயா ஜூவலர்ஸ் ஆதரவில் கே.எஸ்.ராஜா நடத்தினார்.பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டு லலிதா ஜூவலர்ஸ் ஆதரவில் மீண்டும் அப்துல் ஹமீத் தொடங்கினார்.

இதன் இடையே இலங்கையை விட்டு தமிழ்நாடு சென்று தற்காலிகமாக குடியேறிய கே.எஸ்.ராஜா
இந்திய வானோலியொன்றில் (விவித் பாரதியின் தேன் கிண்ணம்) இதே பாட்டுக்கு பாட்டைத் தொடங்கினார்.

ஆனால் அது பின்னர் அப்துல் ஹமீத் வசம் கைமாறியது..
நன்றி.. அஜீவன்.. அவரது.. தன்னைப்பற்றிய.. மிகையான.. அசையழுத்த.. விளம்பரம்.. காரணமாக.. அந்த.. நேரங்களில்.. வானொலியை.. நிறுத்திய.. இடைத்தர.. வயதினர்.. பலர்.. இருக்கின்றார்கள்..

சில.. வேளைகளில்.. தற்போது.. அசையழுத்தம்.. கூடி.. நான்.. நிறுத்துவதுபோல..

இவர்களுக்கு.. விளம்பரம்தான். சரி..

செயற்கையாக.. அருவருப்புூட்டும்.. வகையில்.. விளம்பரம்.. செய்வதுபொல.. அறிவுசார்ந்த.. ஒலிபரப்புச்.. செய்பவர்கள்..

தற்காலத்து.. வானொலி.. ஒலிபரப்பாளர்களில்.. இயற்கையான.. அசைவழுத்தத்துடன்.. ஏற்ற.. இறக்கத்துடன்.. நிகழ்ச்சி .. செய்ய.. ந தீபசுதனைக்.. கேட்டுத்தான்.. அவரது.. செய்திகள்.. மீண்டும்.. கேட்கவேண்டும்.. என்ற.. ஆர்வத்தை.. உண்டுபண்ணும்.. ஒரு.. குறிப்பிட்ட.. விடயத்தைப்பற்றி.. தொலைபேசி.. விவாத.. நிகழ்ச்சிக்கும்.. அவரைக்கேட்டுத்தான்..
:!: :!: :!:
Truth 'll prevail
Reply
#31
என் இனிய நண்பர்களே,

நாம் குறும்படம் என்ற தலைப்பை விட்டு திசை மாறி பயணிக்கத் தொடங்கியுள்ளோம்.

எனது கருத்துகளுக்கு வலு சேர்ப்பதற்காக வைத்த சில உதாரணங்களினால் ஏற்பட்டுள்ள சங்கடத்திற்காக வருந்துகிறேன்.

இனியும் வேறு பிரச்சனைகளை இப்பகுதிக்குள் திணிக்காமல் இருக்க முயற்சி செய்வோம்.

உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றிகள்............

பணிவன்புடன்
அஜீவன்
Reply
#32
தொடருங்கள் யீவன்
Reply
#33
இயல்பான கதை.. இயல்பான பாத்திரங்கள்.. பஞ்சாபி விசயத்தில் அந்தப் பெண் பாத்திரத்தின் மனதில் சந்தேகம் எழுவதை அற்புதமாக மிகவும் யதார்த்தமாக சித்தரித்திருக்கம் விதம் பாராட்டுதற்குரியது.. பல குடும்பங்களில் நிலவும் அவசர புத்தியால் எழும் சிந்தனையற்ற சந்தேகத்தை அப்படியே அந்த காட்சி மிகவும் தத்துரூபமாக வெளிப்படுத்துகிறது.
அந்த பஞ்சாபி அவளது பிறந்தநாளுக்கு வாங்கப்பட்டதுதான் என விளக்கமளிக்கும்போது.. அவள் உடனே தனது மகிழ்ச்சியை காட்டியிருந்தால்.. அந்தப் பாத்திரப் படைப்பே பாழாகியிருக்கும். தனது தவறை காட்டிக் கொடுக்க வெட்கத்திலோ அல்லது குற்ற உணர்விலோ அவள் மெளனமாக இருப்பது.. அந்தப் பாத்திரத்தின் போக்குக்கு மேலும் யதார்த்த வலுவையே சேர்க்கிறது.
வேலைக்குப் போகாத பெண் தனிமையாலும் வீட்டு வேலையாலும் வெறுப்படைகிறாள்.. வேலைக்குச் செல்பவனோ உடலாலும்.. மேலதிகாரிகளின் தொல்லையாலும் வெறுப்படைகிறான்.. அத்துடன் தனக்குதவி வேண்டுமென்பதற்காக நண்பனுக்கு வீடு மாற உதவி.. கோயிலுக்கு போற காட்சியின் மூலம் பல விடயங்களை மிகவும் எளிமையாக சுட்டிக் காட்டும் விதத்துக்கு.. அஜீவனின் முதுகில் இரண்டு தட்டுத் தட்டத்தான் வேண்டும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இன்னுமொரு தட்டு தட்டத்தான் வேண்டும்.. பலமாக.. அந்த இறுதி முடிவுக்காக.. சந்தேகங்களுக்க அப்பாலும்.. உள்ளங்களின் உரசல்களுக்கு அப்பாலும்.. பாசம் வெளிப்படுகிறதே.. அது.. அதில் நமது பண்பாட்டு படிவை அப்படியே பதித்துவிடுகிறார் அஜீவன்.. வாழ்த்துக்கள்.
சில சம்பவங்களை பொருத்தமான இசைகளின் மூலமும் பதிய வைத்து தனது திறமையை வெளிப்படுத்துகிறார் அஜீவன்.
நமக்குள் ஒரு திறமையான கலைஞன் நிமிர்ந்து நிற்கிறான. அவனைப் பயன்படுத்தி பெறுவதற்கு பற்பல உண்டு.. ஆகவே பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றுமட்டும்தான் தற்போது கூறமுடிகிறது.
.
Reply
#34
<b>Sethu wrote</b>
Quote:தொடருங்கள் யீவன்

தனக்கு எடாச் சிங்களம் தன் பிடரிக்கு நாசம்...
சேது
திரைப்படம் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது ஆர்வமும் இல்லையென இந்தக் களத்தில் எழுதியுள்ளீர்கள்..இந்தப் பக்கத்தில் நீங்கள் எதுவும் எழுதாமல் இருப்:பதே சாலச் சிறந்தது...அஜீவனின் கருத்தையேற்று ஒதுங்குங்கள்
Reply
#35
நிழல் யுத்தம் பார்த்தேன்....
பல குடும்பங்களிடையே நிலவி பாரிய விரிசல்களின் அடிக்கல்லாக இருக்கும் சிறியது போன்ற ஒரு பெரிய பிரச்சினையை
கருப்பொருளாக்கி பொருத்தமான நடிகர்களை தேர்ந்து நடிக்கவைத்திருக்கிறார் அஜீவன்.
நாயகி...கணவனில் சந்தேகப்படும் போது வெளிப்படுத்தும் முகபாவமும் நாயகனின் இயல்பான நடிப்பும் பாராட்டுக்குரியவை.கணவனிடம் கோயிலுக்குப் போகவேண்டுமென்று சொல்ல அவன் பதிலேதும் சொல்லாமல் செல்ல ; தன் வார்த்தையை கணவன் உதாசீனம் செய்வதாக எண்ணி தனியாக அவள் இரண்டொரு வார்த்தைகளை புலம்புகிறாள். யாருமேயில்லாத அந்த இடத்தில்..அவள் மனதில் எண்ணுவதை வாயசைவில்லாமல் ஒலியை பின்னணியில் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். விபத்து நடைபெறுவதாக நாயகி கனவு காண்பதனூடாக நாயகி தனது தவறை உணர்ந்ததையும் கலவரத்துடன் கணவனருகில் வந்து அவன் முகத்தில் இருசொட்டுக் ; கண்ணீர் சிந்தி அவன் மேலுள்ள நேசத்தை வெளிப்படுத்தியதும் அருமை.விபத்தும் அது படமாக்கப் பட்ட கோணமும் அற்புதமானது. யதார்த்தமான உரையாடல் இதமான இசைக் கோர்ப்பு. மிகத் தரமான ஒளிப்பதிவாளராக படத்தொகுப்பாளராக மிளிர்கிறார் அஜீவன்.புகலிட திரைத்துறைக்கு இன்னும் இன்னும் நல்ல படைப்புகளை அஜீவன் தருவார் என்ற நம்பிக்கையை தந்திருக்கிறார். வாழ்த்துகள்..

-
Reply
#36
அன்புடன் மணிதாசன் - சோழியன்

உங்கள் விமர்சனங்களுக்கும், பாராட்டுகளுக்கும்,வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.

"அஜீவனின் முதுகில் இரண்டு தட்டுத் தட்டத்தான் வேண்டும்.. இன்னுமொரு தட்டு தட்டத்தான் வேண்டும் பலமாக.. ."
(என் வீடும் உங்களுக்கு தெரியும் என்பதால்.........கொஞ்சம் யோசனைதான்.)

நன்றிகள்...................................

மணிதாசன்,
எச்சில் போர்வை மற்றும் நிழல் யுத்தத்தில் நடித்திருப்பவர்கள் என் நெருங்கிய நண்பர்கள். அத்துடன் என்னோடு இணைந்து பணிபுரியும் ஒளிப்பதிவாளர்கள்.

அவர்களது ஒத்துழைப்புக்கும், என்னோடு சேர்ந்து மனம் தளராமல், (யதார்த்தமாக) நல் மனதுடன் ஈடுபட்ட உழைப்புக்கும் உங்களைப் போன்றோரின் வாழ்த்துகள் நிச்சயம் மகிழ்வைத்தரும்.

சினிமாவில் வெற்றி காண்பது என்பது ஒரு தனி மனிதனால் சாதிக்கக் கூடியது அல்ல.
அந்தப் படைப்பில் பங்கு கொள்ளும் அனைவரதும் பங்களிப்பிலும்;, அர்பணிப்பிலும்தான் அதன் வெற்றி நிர்ணயிக்கப் படுகிறது.

எனவே உங்கள் பாராட்டுகளை தாழ்மையுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

உங்கள் வாழ்த்துகள் பலிக்கட்டும்.

மனம் திறந்து பாராட்டவும் மனசு வேண்டும்.
அவை ஏனைய கலைஞர்களுக்கும் கிடைக்க உறுதி கொள்வோம்.

பணிவன்புடன்
அஜீவன்
Reply
#37
அன்பு சேது,

நிச்சயம் நாம் தொடர்ந்து செல்ல வேண்டும்.
அதுவே நமது குறிக்கோள்.

இருப்பினும் நாங்கள் தடம் புரளாமல் முன் செல்லுவதற்கு

நீங்கள் ஒரு நல்ல செய்தியாளர் என்பதால் சினிமா பற்றி ஏதாவது நல்ல தகவல்களை வாசிக்க நேர்ந்தால் அல்லது பார்க்க நேர்ந்தால் அவற்றை மட்டும் இப் பகுதிக்குள் கொண்டு வாருங்கள்.

தாழ்மையுடன்
அஜீவன்
Reply
#38
முதுகில் தட்டிக்கொடுப்பது என்பார்களே.. அதாவது உரிமையுடனும் பாசத்துடனும் தொடர்ந்து செல் என்பதாக அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள்..
.
Reply
#39
sOliyAn Wrote:முதுகில் தட்டிக்கொடுப்பது என்பார்களே.. அதாவது உரிமையுடனும் பாசத்துடனும் தொடர்ந்து செல் என்பதாக அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள்..

விளக்கிச் சொன்ன பிறகுதான் நிம்மதி.
நன்றிகள்.......................
Reply
#40
நிச்சயமாக தங்களின் கருத்தை செவிமடுகிண்றேன்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)