11-26-2004, 10:10 PM
<img src='http://img72.exs.cx/img72/1176/child.gif' border='0' alt='user posted image'>
இதுவும் ஒரு உயிர் தான்
பிறப்பெடுத்த காரணம் அறியாது
பிறப்பின் பொருள் தெரியாது
மகிழ்வின் நிறமறியாது
படும் துயரின் காரணம் தெரியாது
கொடுமை பல குறையாமல்
கொண்டு சீர் குலைந்த நிலையில்
உயிரினமாய் உருவெடுத்து
பசி என்னும் கொடியமிருகம் ஆக்கிரமிக்க..
நோய் என்னும் அரக்கனுக்கு இரையாகி..
ஆறடி நிலம் எதற்கு
அரை அடி போதும் என
கடையிடம் போகும் இடமதை
அறிந்தோ அறியாமலோ
சென்றடைந்து..
தலைநிமிர தஞ்சமின்றி
நிலம் தழுவிய படி இங்கு
பாவம் செய்தவர்கள் எங்கோ இருக்க
வழியறியாது வகையறியாது
வண்ணச்சிறகு விரிக்க வேண்டிய
சின்னச்சிட்டு சிலையாகி விட்டதா...??
கொத்திச் செல்ல வந்த
கொடிய பறவை கூட
கொடுமை கண்டு
சற்று சிந்திக்கிறதா...??
முடியும் நேரம் என காத்திருக்கா...??
இல்லை முடிந்தும் பலன் ஏது
என்று ஒதுங்கியதா...??
குந்த நிலம் வேண்டாம்
அறிவுப்பசிக்கு கல்வி வேண்டாம்
வயிற்றுப்பசி தீர்க்க
அரைவயிறு சோறு போட ஆள் இல்லை...??
கொண்ட நோயின் குணம் அறிந்து..
கொள்ளுகின்ற நோய்க்கு
தக்கன செய்ய ஒருவன் இல்லை
காணதா கடவுளுக்காய்...
கண்ட இடம் எல்லாம் சண்டை
கண்ணால் கண்ட இந்த
காட்சியை போக்க ஆள் இல்லை..??
வழிகள் தொலைத்தவரா இவர் -- இல்லை
வழிகள் அற்றவரா ..
களம் பல கண்டவரா
காலம் இது போவதற்கென விட்டுவிட
கருகிடும் காட்சியிது...
முதிர்ந்த பழம் அல்ல...
அரும்பாகா மொட்டு இது...
விடியலே இல்லாமல்
விடை பெறும் நிலவிது
காணும் கண்களை ஒரு
கணம் கலங்க வைக்கும்
காட்சி இது ஒன்று
காணாத காட்சிகள் எத்தனை...??
ஒரு இணையத்தில் இந்த படம் கண்ட பொழுது.. எனக்குள் எழுந்தவை <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
www.tamilini.blogspot.com
இதுவும் ஒரு உயிர் தான்
பிறப்பெடுத்த காரணம் அறியாது
பிறப்பின் பொருள் தெரியாது
மகிழ்வின் நிறமறியாது
படும் துயரின் காரணம் தெரியாது
கொடுமை பல குறையாமல்
கொண்டு சீர் குலைந்த நிலையில்
உயிரினமாய் உருவெடுத்து
பசி என்னும் கொடியமிருகம் ஆக்கிரமிக்க..
நோய் என்னும் அரக்கனுக்கு இரையாகி..
ஆறடி நிலம் எதற்கு
அரை அடி போதும் என
கடையிடம் போகும் இடமதை
அறிந்தோ அறியாமலோ
சென்றடைந்து..
தலைநிமிர தஞ்சமின்றி
நிலம் தழுவிய படி இங்கு
பாவம் செய்தவர்கள் எங்கோ இருக்க
வழியறியாது வகையறியாது
வண்ணச்சிறகு விரிக்க வேண்டிய
சின்னச்சிட்டு சிலையாகி விட்டதா...??
கொத்திச் செல்ல வந்த
கொடிய பறவை கூட
கொடுமை கண்டு
சற்று சிந்திக்கிறதா...??
முடியும் நேரம் என காத்திருக்கா...??
இல்லை முடிந்தும் பலன் ஏது
என்று ஒதுங்கியதா...??
குந்த நிலம் வேண்டாம்
அறிவுப்பசிக்கு கல்வி வேண்டாம்
வயிற்றுப்பசி தீர்க்க
அரைவயிறு சோறு போட ஆள் இல்லை...??
கொண்ட நோயின் குணம் அறிந்து..
கொள்ளுகின்ற நோய்க்கு
தக்கன செய்ய ஒருவன் இல்லை
காணதா கடவுளுக்காய்...
கண்ட இடம் எல்லாம் சண்டை
கண்ணால் கண்ட இந்த
காட்சியை போக்க ஆள் இல்லை..??
வழிகள் தொலைத்தவரா இவர் -- இல்லை
வழிகள் அற்றவரா ..
களம் பல கண்டவரா
காலம் இது போவதற்கென விட்டுவிட
கருகிடும் காட்சியிது...
முதிர்ந்த பழம் அல்ல...
அரும்பாகா மொட்டு இது...
விடியலே இல்லாமல்
விடை பெறும் நிலவிது
காணும் கண்களை ஒரு
கணம் கலங்க வைக்கும்
காட்சி இது ஒன்று
காணாத காட்சிகள் எத்தனை...??
ஒரு இணையத்தில் இந்த படம் கண்ட பொழுது.. எனக்குள் எழுந்தவை <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->www.tamilini.blogspot.com
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->