Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"என் தலைவன்"
#1
பழம்பெருமை பேசியும், குட்டக் குட்ட குனிந்து, குறுகி, ஈனமாய் அழிந்து வாழ்ந்த எம்மினத்தின் விடிவெள்ளியாம் என் தலைவனுக்கு இன்று 50வது அகவை. எமக்கெல்லாம் முகமாகி முகவரியாகி முதுகெலும்பானவனே, உன் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்ற பெருமையைத் தந்தாய். உனை வாழ்த்துவதால் தமிழே பெருமையடைந்தது.

ஆயிரம்பேர் தலைவர்களென கூறி எம்முன்னே வந்தார்கள். பலர் எம்மை விற்றார்கள், சிலர் விற்க முற்பட்டார்கள், சிலர் நாற்காலிகளுடன் போய்விட்டார்கள். ஓரிருவர் குரல்கல் ஓங்கி ஒலிக்க முற்பட, சிங்கள இரும்புக்கரங்கள் கொடூரமாக அவற்றை அடக்கியது. இக்காலத்திலேயே ஒரு "இயேசுவோ", "புத்தனோ", "நபிகள்" போல எம்மக்களை மீட்க எம்மண்ணில் அவதாரம் எடுத்தாய். சிறுவயதிலேயே ஆக்கிரமிப்புக்கெதிராக தனிமனிதனாய் ஒற்றைத் துப்பாக்கியுடன் தொடங்கிய எம் தர்ம யுத்தம் அழிவுகள், அழிப்புக்கள், துன்பங்கள், சோகங்கள், துரோகங்கள், அன்னிய படையெடுப்புக்கள் எல்லாமே கண்டு விருட்சமாய் உருவெடுக்கச் செய்தாய். பாரதக் கண்ணனாய் எம் சத்திய யுத்தத்தில் எல்லாவற்றையும் நீயே ஏற்றாய்.

என் தலைவனின் போராட்ட வாழ்வில் நிகழ்ந்த, நானறிந்த சம்பவங்களை இக்களத்தினூடு பகிர விரும்புகின்றேன்.
"
"
Reply
#2
"1985"ல் தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை போராட்ட இயக்கங்கள் இடையே ஓர் கூட்டு ஒற்றுமை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் விடுதலைப் புலிகள், ஈரோஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியன அடங்கியிருந்தன. இக்கூட்டு முயற்சியின் முதாலாவது கூட்டமானது அத்தனை இயக்க தலைவர்களும் சந்திப்பதற்கு ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. அக்கூட்டத்திற்கு முற்கூட்டியே பாலகுமார், சிறீ சபாரட்னம், பத்மநாபா வந்து விட்டு தங்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்து விட்டார்களாம். என் தலைவன் அதே கூரிய நேரிய பார்வையுடனும், நிமிந்த மிடுக்கான நடையுடனும் வரும்போதாம் ஏனைய மூவரும் தம்மையறியாமலேயே எழுந்து நின்றார்களாம். அன்றே அவர்கள் சூரியத்தேவனின் ஆளுமையை உணர முற்பட்டிருக்கிறார்கள்.

இச்சம்பவமானது, இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாசிப்படைகளுக்கெதிராக போரிட்ட "ரஸ்ய", "அமெரிக்க", "பிரித்தானிய" தலைவர்களான "ஸ்ராலின்", "ரூஸ்வேல்ட்", "சேர்ச்சில்" ஆகியோரின் சந்திப்பானது ரஸ்யாவில் இடம்பெற்றிருந்ததாம். அச்சந்திப்பிலாம் இதே மாதிரியான சம்பவம் அங்கும் இடம் பெற்றிருந்ததாம். அக்கூட்டதற்கு ஸ்ராலின் வந்தபோது ரூச்வெல்டும், சேர்ச்சிலும் தம்மையறியாமல் எழுந்து மரியாதை செய்தார்களாம். பின் தமக்குள்ளேயே வெட்கப்பட்டுக் கொண்டார்களாம்.
"
"
Reply
#3
Nellaiyan Wrote:ஏனைய மூவரும் தம்மையறியாமலேயே எழுந்து நின்றார்களாம். அன்றே அவர்கள் சூரியத்தேவனின் ஆளுமையை உணர முற்பட்டிருக்கிறார்கள்.

யா÷ வந்தாலும், முதலில் வந்து அம÷ந்தவ÷கள், பிறகு வருபவ÷களை கண்டதும் எழுந்து நின்று மரியாதை செய்து வரவேற்பது பல பண்பாடுகளிலும் உள்ள சாதாரண மரபு. நீங்கள் வீட்டுக்கு வருபவரை இருந்தபடியே வரவேற்பவராக இருந்தால் உங்களுக்கு இது விநோதமாக தெரியலாம்.

Nellaiyan Wrote:இச்சம்பவமானது, இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாசிப்படைகளுக்கெதிராக போரிட்ட "ரஸ்ய", "அமெரிக்க", "பிரித்தானிய" தலைவர்களான "ஸ்ராலின்", "ரூஸ்வேல்ட்", "சேர்ச்சில்" ஆகியோரின் சந்திப்பானது ரஸ்யாவில் இடம்பெற்றிருந்ததாம். அச்சந்திப்பிலாம் இதே மாதிரியான சம்பவம் அங்கும் இடம் பெற்றிருந்ததாம். அக்கூட்டதற்கு ஸ்ராலின் வந்தபோது ரூச்வெல்டும், சேர்ச்சிலும் தம்மையறியாமல் எழுந்து மரியாதை செய்தார்களாம். பின் தமக்குள்ளேயே வெட்கப்பட்டுக் கொண்டார்களாம்.

மரியாதைக்குரியவ÷களுக்கு தான் சாதாரணமாக எல்லோருக்கும் கொடுக்கப்படும் மரியாதை கொடுக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் "சாதி குறைந்தவ÷கள்" என்று தாம் ஒதுக்கிவைத்தவ÷கள் வந்தால் மட்டும் தான் பெரும்பான்மையான யாழ்ப்பாண தமிழ÷ எழுந்து போய் வரவேற்பதில்லை. ஸ்ராலின் பிற்காலத்தில் ரஷ்யாவிலேயே வெறுக்கப்பட்ட மனிதரானா÷. அவ÷ மீது பெருமளவு மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. முதலாளித்துவ நாடுகளின் தலைவ÷களான "ரூஸ்வேல்ட்", "சேர்ச்சில்" போன்றவ÷கள் கொமயூனிசம் மக்கள் மீது அடக்குமுறையை திணிக்கும் ஒரு ஆட்சிமுறை என்று நம்பின÷. இதனால் அப்படி பட்ட ஆட்சியாளரான ஸ்ராலினுக்கு ஏனைய மனித÷களுக்கு கொடுக்கும் சாதாரண மரியாதையை தாம் கொடுத்ததற்காக "ரூஸ்வேல்ட்", "சேர்ச்சில்" ஆகியோ÷ வெட்கப்பட்டிருக்கலாம்.
''
'' [.423]
Reply
#4
இந்திய இராணுவம் எமது மண்ணில் காலடி எடுத்து வைத்தகாலம் ........ போராளிகள் படுகொலைகள், துரோகக்கும்பலகளின் அட்டகாசங்கள், ... தொடர்ந்து தளபதிகள் கைது செய்யப்பட்டு, .. போருக்கான சகல ஏற்பாடுகளிலும் இந்திய இரானுவம் ஏற்பட்டிருந்த வேளையில் ..

..... இந்திய இரானுவத்துடன் போர், எள்ளி நகையாடியோர் பலர், அழிந்தே போவீர்கள் என்றோர் பலர், உலக ஐந்தாவது வல்லரசுடன் போரா? கேள்வி எல்லா ஈழத் தமிழ் மக்களிடமும், ஏன் விடுதலைப் புலிகளின் சில தளபதிகள் உட்பட பல போராளிகள் கூட எதிர்த்தார்கள். விடுதலைப் புலிகளின் மத்திய குழு கூடி ஆரய்ந்தது. பலர் பகிரங்கமாகவே எதிர்த்தார்களாம்? நாமெல்லம் அழிந்து விடுவோம்! இயக்கமே அழிக்கப் பட்டுவிடும்! என்ற குரல்களே கூட ஒலித்ததாம். ஆனால் தூர நோக்குடன் அத்தலைவனின் குரல் "நான், இந்தியப் படை தாக்க முற்பட்டால் திரும்பத் தாக்குவேன், இதை நாம் செய்யாவிடில் வரலாற்றில் இனி தமிழனின் குரல் அமுக்கப்பட்டு விடும்" ஓங்கி ஒலித்ததாம். ........

...... பின் இந்திய படைகளுடன் புதிய புறநானூறு என் தலைவனிலால் படைக்கப்பட்டு வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்றான் என்பது பழைய செய்தி.
"
"
Reply
#5
யுட் அவசர குடுக்கை தனமா ஏதேதோ எழுதாமல் மற்றவர் என் கருத்தை முன் வைக்கிறார் என்பதை முதலில் நன்றாக கிரகித்து கெள்ளுங்கள்
; ;
Reply
#6
நாளைய உரை தமிழீழ தனியரசை நேக்கி......?
<b> </b>
Reply
#7
..
Reply
#8
shiyam Wrote:யுடை் அவசர குடுக்கை தனமா ஏதேதோ எழுதாமல் மற்றவர் என் கருத்தை முன் வைக்கிறார் என்பதை முதலில் நன்றாக கிரகித்து கெள்ளுங்கள்

நெல்லையனின் நன்றியுண÷வும், மகிழ்ச்சியும் எல்லாருக்கும் புரியத்தக்க விதமாக தான் எழுதியிருக்கிறா÷. ஆனால் இப்படி உண÷ச்சிவசப்பட்டு எல்லாவற்றிற்கும் தமக்கு பிடித்தமான வகையில் அ÷த்தம் கண்டுபிடித்து புழுகுவதால் பெரிதாக பயன் ஒன்றும் விளையப்போவதில்லை.

நான் கனடாவில் சில வருடங்களுக்கு முன்ன÷ நடைபெற்ற மாவீர÷ விழாவுக்கு போயிருந்தேன். அங்கே பெரிய அளவில் அச்சிட்ட தலைவரின் படத்தை வந்தவ÷களுக்கு விநியோகித்திருந்தா÷கள். மீதமான படங்கள் மேசையொன்றில் கட்டாக அடுக்கப்பட்டிருந்தன. விழா முடியும் தறுவாயில் இப்படியான பல பிரசுரங்களும் ஆங்காங்கே சிதறி விழுந்து தரையில் பரவி கிடந்தன. இவற்றுள் தலைவரின் படங்களும் அப்படியே தரையில் கிடந்தன. பல÷ அதை மிதித்துக்கொண்டு நடந்து வெளியே போனா÷கள். தொண்ட÷களும் பா÷த்துக்கொண்டு நின்றா÷கள். எனக்கு பொறுக்க முடியவில்லை. "இப்படி தலைவ÷ படத்தை மிதித்து கொண்டு போகிறீ÷களே? ஒரு மனிதன் என்ற மதிப்பையாவது கொடுங்கள்" என்று அங்கே நின்றவ÷களை ஏசிவிட்டு போகும் வழியில் கிடந்த தலைவ÷ படங்கள், மாவீர÷ படங்களை எடுத்து மேசையில் வைத்துவிட்டு வெளியேறினேன். அவ÷களது குழந்தையின் படம் அல்லது கணவன் மனைவியின் படம் என்றால் அதை மிதித்துக் கொண்டு நடந்து போவா÷களா?
''
'' [.423]
Reply
#9
அடடோய் சூட்டு,

"ஆடு நனைகிறதாம் என்டு ஒநாய் அழுதாம்" அழு, அழு. எங்கேயோ கிடைத்த எசிலிலைக்காக இந்தப் புனித நாட்களுக்குள்ளும் ஓடி வந்து விட்டாய்? ஈனப்பிறவி.
" "
Reply
#10
JUDE இன்றைக்காவது உங்களுடைய சுயரூபத்தைக் காட்டாமல் இருங்கோ..
<b> </b>
Reply
#11
யுட் மனிதர் என்ற மதிப்பை முதலில் மனித ருக்கு கொடுங்கள் பிரசுரங்களிற்கும் படத்திற்கும் பிறகு கொடுக்கலாம்
; ;
Reply
#12
இவர்கள் எல்லாம் மனிதர்கள் தானா ??
.
.
Reply
#13
யூட் ஒரு மனிதன் என்றால் அவனிடம் நியாயம் இருக்கும்.அது அவனிடம் இதயம் இல்லை பின்பு எப்படி மதிப்பு எதிர்பார்ப்பது
.
.
Reply
#14
cannon Wrote:அடடோய் சூட்டு,

"ஆடு நனைகிறதாம் என்டு ஒநாய் அழுதாம்" அழு, அழு. எங்கேயோ கிடைத்த எசிலிலைக்காக இந்தப் புனித நாட்களுக்குள்ளும் ஓடி வந்து விட்டாய்? ஈனப்பிறவி.

நாய்களுக்கும் கூலிகளுக்கும் எச்சில் இலை தவிர வேறு எதுவும் தெரியாது தானே!. ஈனப்பிறவிகளானதால் தான் அகதிகளாக, கூலிகளாக இன்னமும் குப்பை கொட்டுகிறீ÷கள். நீங்கள் செய்யும் பேய்க்காட்டலையும் கூத்தையும் எழுதினால் அடிமைப்புத்தியை அப்படியே காட்டுகிறீ÷கள். இருப்பதை தானே காட்ட முடியும்?

தலைவ÷ படத்தை புனிதநாளில் நிலத்தில் போட்டு மிதித்துக்கொண்டு போகும் நீ எல்லாம் "உய÷பிறவி". அதைக்கண்டு மனம் தாங்காமல், படங்களை மேசையில் எடுத்து வைத்துவிட்டு, இப்படி செய்யாதீ÷கள் என்று சொன்ன நான் "ஈனப்பிறவி". இது தான் அடிமைப்புத்தி.

MEERA Wrote:JUDE இன்றைக்காவது உங்களுடைய சுயரூபத்தைக் காட்டாமல் இருங்கோ..

நீங்கள் தலைவருக்கு கொடுக்கும் "மரியாதையை" நான் அம்பலப்படுத்தி வெளிப்படுத்தியது <b>உங்கள் சுயரூபம்</b>. சுயரூபம் வெளிப்பட்டது சங்கடமான சங்கதி தான். ஆனால் உங்கள் ஆட்டம் ஊருக்கும் தெரிய வேண்டாமா?

shyiam Wrote:யுட் மனிதர் என்ற மதிப்பை முதலில் மனித ருக்கு கொடுங்கள் பிரசுரங்களிற்கும் படத்திற்கும் பிறகு கொடுக்கலாம்.

மாவீர÷ நாளில் தலைவ÷ படத்தை கீழே போட்டு காலால் மிதித்துக் கொண்டு போவதை செய்தும் விட்டு பின்ன÷ அதை நியாயம் என்றும் வாதாடுகிறீ÷களே? உங்களைப் போன்றவ÷கள் தான் கருணாக்களாகவும் மாத்தையாக்களாகவும் உருவாகிறா÷கள் போலும். எல்லாருக்கும் முன்னால் தலைவரை புழுகி புழுகி எழுதுங்கோ. பிறகு அவரது படத்தை காலால் போட்டு மிதியுங்கோ. எவனாவது இதை கண்டித்தால், அம்பலப்படுத்தினால் "துரோகி" என்று தூற்றுங்கோ. மாத்தையாவும், கருணாவும் தங்களை அடையாளம் கண்டு அம்பலப்படுத்த முயற்சித்த எத்தனை பேரை "துரோகி" யாக்கியிருப்பா÷கள். இப்போது நீங்களும் அவ÷கள் வரிசையில்!
Reply
#15
..
Reply
#16
கனோன் இது நக்கிற நாய் இதுக்கு நடுக்கடலுக்கு போனாலும் நக்குத்தண்ணி

அப்பு மதி ஏனப்பு பேரைமாத்தி வாராயப்பு

டேய் போய் இந்தியாவுக்கு நக்கு நீ நக்கிறநாய் நீயெல்லாம் தமிழனைப்பற்றி
போடா போ உன்ர கும்பல் நிக்கிது போய் சேரு

டேய் டேய் ஓரு தமிழனும் தெரிஞ்சு மிதிச்சிருக்கமாட்டான்
எங்களுக்கு தெரியும் எங்கள் தலைவரைப்பற்றி அவருக்கு தெரியும் தன்மக்களைப்பற்றி
உன்னைப்போல துரோகி இந்தியாவுக்கு நக்கிறநாய்
டேய் சின்னப்புவை குளப்பீட்டாய் இனி பேரை மாத்து

டேய் சொல்லு உன்ர ்ஆக்களுக்கு சொல்லு தலைவரின்ர மாவீரர் உரைய கேக்க சொல்லு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)