MEERA Wrote:Quote:மேற்கோள்:
இணைந்தது: 15 சித்திரை 2003
கருத்துக்கள்: 5289
வதிவிடம்: மாந்தோப்பு
எழுதப்பட்டது: வெள்ளி கார்த்திகை 19, 2004 5:07 pm Post subject:
அதைப்பற்றிக் கவலைப்படாதேங்க இங்க உள்ள மக்களை நாங்க அங்க அனுப்பி படிப்பிக்கிறம்... தேவையான ஆக்களைக் காப்பாத்துவம்.... நீங்க வாங்க போராட... உங்களக் கூப்பிடுறது சுத்திப் பாக்க இல்ல.... துப்பாக்கி எழுத்து எதிரியை விரட்ட போராட தமிழீழம் பெற.... வாறிங்களோ... free ரிக்கட் அனுப்புறம்...!
_________________
சபேஸ் இதன் அ÷த்தம் என்ன?
குருவிகளின் இக்கருத்துக்கு முன்னர், தாய்மண் எழுதிய கருத்துக்களை பார்த்தீர்களேயானால் அவர் (தாய்மண்), குருவிகள் தாயகத்தில் இருப்பதாக எண்ணித்தான் கருத்துக்களை வைத்திருக்கிறார். ஆதலால் குருவிகள் அதே வளியிற்ச் சென்று "காலை விட்டு ஆழம் பார்த்திருக்கிறார்".
குருவிகள் சொல்ல வாறதிற்கு தகுந்த உதாரணம் (எங்கள் வீட்டில் நடந்ததை) சொல்கிறேன்:
இது சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது:
அப்பா: எங்களுக்கெண்டு ஒரு நாடு வேண்டும். அப்படியொரு நாடு இருந்திருந்தால், ஏன் இந்தக்குளிர் நாட்டில இருக்க வேணும்? அங்கை பச்சைத்தண்ணிய குடிச்சிட்டு கிடந்தாலும் நிம்மதி.
நான்: இப்ப இருக்கிற நிலமையில (இது சமாதான ஒப்பந்தத்திற்கு முன்) அடிபட்டு தான் நாடு எடுக்க வேணும்.
அப்பா: அதுக்கு தானே பெடியள் அடி படுறாங்கள்.
நான்: எந்த பெடியள்? ஏன் உங்கட பெடியளால அடிபடேலாதோ? 1 க்கு 3 பேர் இருக்கிறோம்... சரி 1 வேண்டாம் 2 பெடியளை வைச்சுக்கொண்டு ஒரு பெடியனை போராட அனுப்புங்கோவேன். சரி எந்த பெடியனை அனுப்பிறது எண்டு சங்கடமாய் இருந்தால் சொல்லுங்கோ நான் போறேன்.
அப்பா: உந்த வியாக்கியானத்தை விட்டுட்டு போய் படி.
நான்: அப்படி எண்டால் ஊராவீட்டு பெடியள் சாகவேணும். உங்கடை பிள்ளையள் பாதுகாப்பான இடத்தில இருந்து படிச்சிட்டு ஆரேன் போராடிச் செத்து, ஊனமாகி நாடுபிடிக்க, உங்கட பிள்ளையள் அங்க விசிற் பண்ணி நாடு பாத்து நாலு கதை சொல்ல வேணும்.
அப்பா: கதைக்கு கதை சொல்லாமல், கதையை நிப்பாட்டிப் போட்டு போய் படி.
அப்பாவும் நானும் அந்த விடயத்தில் மௌனம்.
கிட்டடியில் நடந்த விஷயம்:
(அப்பா பொங்கு தமிழுக்கு போனவர், எனக்கு போகக் கிடைக்கவில்லை<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
அப்பா: நல்ல சனம்... ஒரு ஒண்டு ஒண்டகால் இலச்சம் சனம்.
நான்: அதாலை இப்ப என்னத்தைச் சாதிச்சோம்?
அப்பா: கனேடிய அரசாங்கத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இப்ப விளங்கும் தானே.
நான்: என்ன விளங்கும்? தமிழாக்கள் மற்றாக்களின்ரை கோடிக்கை நிண்டு கொண்டு வீர வசணம் பேசுவினம் எண்டோ?
அவ்வளவு அக்கறை இருக்கிறநிங்கள் எண்டால்... வந்த 1 இலட்சத்து 20 ஆயிரம் சனத்தை 12 ஆல பிரிக்க 10 ஆயிரம் சனம் வரும். ஒவ்வொரு 10 ஆயிரம் சனமும் ஒவ்வொரு மாத வக்கேஷன் (விடுமுறை) எடுத்துக்கொண்டு போய், இளம் ஆக்கள் போராட, உங்கள மாதிரி முதியோர்கள் போராட்டத்திற்கு உதவி செய்ய 1 வருடத்தில நாடு கிடைச்சிடும். 1 மாத விடுமுறையில எங்கேயோ எங்கேயோ எல்லாம் போறிங்கள் அங்கை போய் போராடினா நாடு கிடைச்சிடும். 1 மாத விடுமுறை எடுத்தால் இஞ்சை ஒணுடும் குடி முழுகிப் போகாதே. என்ன மாதிரி உங்களுக்கு ரிக்கற் ஏற்பாடு செய்யட்டோ?
அப்பா: உனக்கு ஒரு கதைக்கு ஒரு கதையச் சொன்னா, உடனை வியாக்கியானம் சொல்ல தொடங்கு.
நான்: இது வியாக்கியானம் இல்லை அப்பா. 10 ஆயிரம் பேர் ஒவ்வொரு மாதமம் அங்கை போய் போராடினா வெற்றி வரும். அதை விட்டுட்டு ஆற்றையேன் கோடிக்கை நிண்டு கொக்கரிக்கிறதிலை அர்த்தம் இல்லை.
ஒவ்வொருவரும் 1 மாத விடுமுறையில (எல்லா வேலைத் தளத்திலும் 1 மாத விடுமுறை தருவார்கள் தானே) அங்கை போய்ப் போராடுவோம். மிகுதி உள்ள 11 மாதமும் உழைத்து எங்களால் முடிந்த பண உதவியையும் செய்வொம்.

நாடும் கிடைக்கும், தாய்மண் சொன்ன மாதிரி கட்டுமான பணிகளும் நடக்கும்.

<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்ன சொல்லுறியள் :?: நான் ரெடி... நீங்கள் ரெடியோ :?: :?:

<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இதையே தான் குருவிகளும் சொல்கின்றன.
-சபேஷ்-