11-22-2004, 04:28 PM
இன்றைய செய்தி:
இச்செய்தியானது இலங்கை இராணுவ, அரசியல் புனாய்வுப் பிரிவினரினால் விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்த மிக திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கையாகும். ஏற்கனவே உலகில் இன்று நடந்துவரும் தாக்குதல் சம்பவங்களில் தற்கொலைத் தாக்குதல்களே பாரிய சேதங்களை மட்டுமல்ல, அதற்கெதிரான செய்திகளை, விமர்சனங்களையே சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு வருகிண்றன. மற்றும் தற்கொலைத் தாக்குதல்கலை நடாத்தும் போராட்ட இயக்கங்களை வல்லரசுகள் பயங்கரவாத சிகப்பு முத்திரையிட்டு வருகிண்றன. இன்று உலகின் மாற்றங்களை தமக்கு ஆதரவாக மாற்ற முற்படும் இலங்கை அரச, இராணுவ இயந்திரத்தின் சதிவலையில் நம் தமிழ்த் தேசிய ஆதரவு ஊடகங்களும் தாக்கம் உணராமல் வீழ்ந்து விடுகிண்றன.
இன்று இச்செய்திக்கு அனைத்து இலங்கையில்ருந்து வரும் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. அதை விட ரி.ரி.என். ஐ.பி.சி போன்ற தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகச் செயற்படும் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. இப்படியான உண்மைக்கு மாறான, தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு எதிரான பாதிப்புகளை ஏற்படுத்தும் இது போன்ற செய்திகளை முதன்மைப் படுத்துவதை தவிர்த்து இவற்றின் பொய்மைத் தன்மைகளை வெளிக்கொணரப்பட வேண்டும்.
Quote:வான் கரும்புலிகள் குறித்து
புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை
அரசு, பாதுகாப்பு வட்டாரங்களில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்
|வான் கரும்புலிகள்| என்ற புதிய பிரிவைப் புலிகள் தோற்று வித்துப் பயிற்சி கொடுத்துவருகின்றார்கள்.
- இப்படி புலனாய்வுத்துறை அரசுக்கு எச்சரிக்கை செய்திருக் கின்றது.
இந்த எச்சரிக்கை அரசு மற்றும் பாதுகாப்பு உயர் வட்டாரங் களில் பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பிவிட்டிருப்பதாகக் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டிருக் கின்றது.
தாம் இப்போது புதிதாக தோற்றுவித்திருக் கும் ஷவான் கரும்புலி|களுக்குப் புலிகள் வன்னிக் காட்டில் எங்கோ ஓரிடத்தில் பயிற்சி கொடுத்து வருகின்றார்கள்.
புலிகள் இயக்கத்தில் கடற்கரும்புலிகள், தரைக்கரும்புலிகள் போன்று வான் கரும்புலி களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் புதிதாகச் சுவீகரித்துக் கொண்டிருக்கும் ஷமைக்ரோ| விமானங்கள் மூலம் இந்த வான் கரும்புலிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
ஆகக்குறைந்தது இத்தகைய மூன்று வான் கலங்களைப் புலிகள் சுவீகரித்துள்ளனர் என முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன என் பது குறிப்பிடத்தக்கது.
மண் மற்றும் மாதிரிகளை இலக்குவைத்து இப்பயிற்சிகள் நடைபெறுகின்றன. அதை நோக் கும்போது கொழும்பில் கேந்திர நிலைகளை அல்லது மிக முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து இப்பயிற்சிகள் நடக்கக்கூடும் எனக் கருதமுடிகின்றது.
இந்த வகையில், முக்கிய அரசியல் தலை வர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உட்படப் பல
ரும் இலக்குவைக்கப்படலாம்.
இந்தவகைத் தாக்குதலின்போது கரும்புலி கள், தற்கொலைத் தாக்குதலுக்கான அங்கி களை அணிந்திருப்பது மட்டுமல்லாமல் ஷமைக்ரோ| வான்கலம் நிறைய வெடிகுண்டுகளை நிரப்பிக் கொண்டுவந்து இலக்குகளை இலக்குவைத்து மோத முயலக்கூடும்.
பொதுக்கூட்டம் ஒன்றில் முக்கிய பிரமுகர் ஒருவர் உரையாற்றிக்கொண்டிருக்கையில் அவ ரது மேடையை இலக்குவைத்து வெடிகுண்டு கள் நிரப்பிய ஷமைக்ரோ| விமானத்தைச் செலுத்தி அதை மேடையுடன் மோதவைத்துத் தாக்குதல் நடத்துவது குறித்தும் பயிற்சியளிக் கப்படுவதாகக் கூறப்படுகின்றது.
- இவ்வாறு புலனாய்வு வட்டாரங்கள் அரச மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகளை எச்சரித் துள்ளன என்றும் -
அரச, பாதுகாப்பு வட்டாரங்களில் இந்த எச்சரிக்கை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் -
கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றில் இராணுவ ஆய்வாளர் ஒருவர் வரையும் பத்தி யில் தகவல் வெளியிடப்பட்டிருக்கின்றது.
விடுதலைப் புலிகள் தற்போதைய யுத்த நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி வெளிநாடு களில் தமது போராளிகளுக்கு விமானப் பயிற்சி களை வழங்கி வருகின்றனர் என வேறு சில செய்திகள் தெரிவிக்கின்றன. .

" "