Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனடாவில் அவப்பெயரை உண்டு பண்ணும் தமிழ் இளைஞர் குழுக்கள்
மன்னிக்க வேண்டும் குருவிகளே
நான் பிரித்தானியாவில் இல்லை. சுவிசில் இன்றும் நான் புலிக்கொடியுடன் உலாவ முடியும். இந்தக் கேள்வியை நீங்கள் பிரித்தானிய தமிழ் இளைஞா்களிடம் கேட்க வேண்டும். அவா்கள் எப்படி என்று எனக்கு தெரியாது.
எனக்கு இப்பொழுது புரிகிறது குருவிகளே, நீங்கள் தமிழீழத்தை விட கடவுளை அதிகம் நேசிக்கிறீா்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல. எங்களிற்கு கடவுளை விட தமிழீழம் முக்கியம். குருவிகளே தமிழீழம் என்ற ஒன்று பல நுாற்றாண்டுகளிற்கு முன் இருந்தது என்பது விஞ்ஞானபூா்வமாக நிருபிக்கப்பட்ட ஒன்று. கடவுள் இருந்தது என்று நிருபியுங்கள்.
Reply
thaiman.ch Wrote:குருவிகளே
நீங்கள் சொல்கின்ற இந்த அமெரிக்கா, இந்தியா, நோா்வே எல்லாம் எப்பொழுதையா வந்தாா்கள்? விடுதலைப்போராட்டத்தில் இவா்களின் பங்கு என்னய்யா? அமெரிக்கா, யப்பான், இந்தியா எல்லாம் உங்கள் மீது அக்கறை எடுத்தாய்யா உங்களிற்கு உதவி செய்ய வருகிறது? ஆசியாவில் யாா் வல்லாதிக்கம் செலுத்துவது என்பது இவா்களிற்குள் போட்டி. அதற்கு களமாக இலங்கைப்பிரச்சனையை பாவிக்கிறாா்கள். இது விளங்காமல் நீங்கள் இன்னும் அவா்கள் உங்கள் நலனுக்காக வந்தவா்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறீா்கள்.

குருவிகளே, தமிழா் புணா்வாழ்வுக்கழகம், பெருண்மிய மேம்பாட்டு நிறுவனம், தமிழீழ விளையாட்டுத்துறை என்று நாங்களும் தாயகத்தில் உள்ள இந்த நிறுவனங்களும் இணைந்து தான் செயற்படுகிறோம். அவா்கள் எங்களை வேறாகப்பாா்க்கவில்லை. உங்களை மாதிரி சில ...... தான் இப்படி எங்களையும் தாயகத்தையும் பிரித்துப்பாா்க்கிறீா்கள்.

நீங்கள் நாங்கள் பிறக்க முதலே வெள்ளைக்காரனுக்கு விளங்கித்தான் காலணித்துவம் முதல் இன்று வரைக்கும் அங்க கண் வைச்சு நிக்கிறான்..... உங்களுக்குத்தான் உங்கட மண்ணின் மகிமை புரியாமல் நிற்கிறீர்கள்...!

நீங்களே உங்களைப் புலம் பெயர் மக்கள் என்று புறம்பு காட்டிக் கொண்டு இப்ப எங்களைச் சொல்லுங்கோ நாங்கதான் புலம் என்று வரையறுத்ததென்று... ஏன் புலம்பெயர் மக்கள் என்று சொல்கிறீர்கள்... புலம் வாழ் தமிழீழ உறவுகள் என்ற உண்மையச் சொல்லலாமே....அல்லது புலத்தோடு தாயக உறவுகள்... புலத்தில் தாயகம்...இப்படி பலவாறு சொல்லலாமே....அதென்ன புலம் பெயர் மக்கள்... சிறீலங்காவுக்குள் புலம் பெயர்ந்தால் அகதி என்றியள்... நீங்க மட்டும் வித்தியாசமோ...???! அப்ப அவை புலம்பெயர் மக்கள் இல்லையோ... புலம் என்றால் வெளிநாடு என்று எந்த அகராதியில் இருக்கு....!

அதுமட்டுமல்லாமல்...அங்க தாயக மக்கள் போராடுவார்களாம்... சண்டை பிடிப்பார்களாம்...விடுதலை பெறுவார்களாம்...நாங்கள் காசனுப்பிப் போட்டு... தமிழீழம் கிடைச்ச உடன அபிவிருத்திக்குப் போவோமாம்...அதுவரை கை கட்டி இருக்கலாமாம்... ஏனென்றால் அங்க சண்டை பிடிக்கிறது ஏதோ மற்றான் தானே...அவனும் உங்கள் இரத்தம் தான்... இதை அங்குள்ள இளைஞர்களிடம் சொல்லுங்கள்... தினமும் சென்றியில் கால் கடுக்க நின்று சோதனை முடித்து பள்ளிக்குப் போய் படிக்கிறவன்... சகோதரம் என்றும் பார்க்காம பிஞ்ச செருப்பால அடிப்பான்.... ஒருக்கா விமானம் ஏறினா 10 மணித்தியாலத்தில் உங்கள் காலடியில் இருப்பான் உங்கள் உறவு....!

உங்களை எல்லாம் எப்படி உங்கள் பெற்றோர் இங்கே அனுப்பி வைத்தனர்...சிந்தித்துப் பாருங்கள்.... காணி பூமியை விற்றோ அடகு வைத்தோ....இன்றிக் கடன் வாங்கியோ.... அன்று பெற்ற அந்தப் பணம் உங்கள் வாழ்நாளில் எந்தளவு உழைத்தாலும் அவை அதற்கு ஈடாகாது...அதற்காய் தானும் நீங்கள் தாயகத்துக்கு உதவ வேண்டும்....அது உங்கள் கடமை....எங்கள் கடமையல்ல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
குருவிகளின் வாதம் சரியானதே. ஆயினும் குருவிகளின் யதார்த்த சிந்தனை இளைஞனாகிய தாய்மண்ணின் சிந்தனை வாய்க்காலுக்குத் தடையாக எண்ணுவது தவறானது தாய் மண்.

ஒரு விடுதலைப்போராட்டம் வெற்றிபெற விடுதலைக்கனவு மட்டும் விடுதலையைப் பெற்றுத்தராது. குறிப்பிட்ட சிலரது கட்டிடம் கட்டிக்கொடுப்பதாலோ , அல்லது குறிப்பிட்ட சில உதவிகள் மட்டும் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் வலுவைத் தராது.

ஆனால் தாய்மண் போன்ற இளையவர்களின் இத்தகைய சிந்தனைகளை; வரவேற்கப்பட வேண்டும் குருவித்தாத்தா.

குழந்தைகளின் கனவுகள் , கற்பனைகளை முளையில் கிள்ளியெறிவதை முதலில் பழசுகளாகிய நீங்கள் (யதார்த்தவாதிகள்) தவிர்த்துக் கொள்ளுங்கள்.

18வயது இளைஞனுக்கும் , 35வயது உங்கள் போன்ற ஆண்மகனுக்கும் வித்தியாசம் இருக்கிறது குருவிகாள்.

சிறுவர்கள் , .இளைஞர்கள் ,யுவதிகள் என்றால் எங்கள் கிடுகுவேலிக்கனவுகள் எங்களுக்குள் வருகிறது. கிடுவேலியை விட்டு நவீன யுகத்தையும் கொஞ்சம் சிந்திப்போமா ?

'ஆடுவோமே பள்ளுபாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று" இப்பாடலைப் பாரதி பாடியபோது பாரதம் விடுதலை பெறாமலே இருந்தது. ஆனாலஇ பாரதி விடுதலைபெற்றதாய் கனவுகண்டான். அதற்காக பாரதியின் கனவுதான் பாரதத்தின் விடுதலையைப் பெற்றுக்கொடுத்தது என்று வெட்டிக்கதை பேசவரவில்லை.

இளையோரின் சிந்தனைகளுக்கு வடிகாலமைத்துக் கொடுப்பது பழையோர்களின் கடமை. குருவிகளே உங்களுக்கும்தான்.
:::: . ( - )::::
Reply
thaiman.ch Wrote:எனக்கொரு ஆசை குருவிகளே
நீங்கள் 6 வயதில் இங்கு வந்திருக்க வேண்டும். நான் தாயகத்தில் இருந்து உங்களை நீங்கள் கேட்ட இந்த கேள்விகளை கேட்ட வேண்டும். இன்று நாங்கள் செய்கின்றதில் 10 வீதம் என்றாலும் நீங்கள் செய்வீா்களா என்பது எனக்கு சந்தேகமே.

நீங்களாவது 6 வயது வரை இருந்தீர்கள்... நாங்கள் பிறந்தது முதலே புலம் பெயர்வுதான்... ஆனா நாங்கள் விளையாட்டு மைதானம் கட்டவில்லை... உயிர்காக்க எங்களால் இயன்ற பணிகள் செய்கிருக்கின்றோம்...!

இன்னும் செய்வோம்...ஆனால் என்ன செய்தம் என்று சொல்லமாட்டம்...அப்படிச் சொன்னா அது விளம்பரம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
thaiman.ch Wrote:எனக்கொரு ஆசை குருவிகளே
நீங்கள் 6 வயதில் இங்கு வந்திருக்க வேண்டும். நான் தாயகத்தில் இருந்து உங்களை நீங்கள் கேட்ட இந்த கேள்விகளை கேட்ட வேண்டும். இன்று நாங்கள் செய்கின்றதில் 10 வீதம் என்றாலும் நீங்கள் செய்வீா்களா என்பது எனக்கு சந்தேகமே.

தாயகப்பற்றென்பது பத்துவயதில்தான் வருமஇ ,ஆறுவயதில்தான் வரும் என்றெல்லாம் ஏன் தாய்மண் வீம்புக்கு நிக்கிறீர்கள் ?

வெளிநாடுகளில் பிறந்தாலும் தங்கள் தாய்மண்ணை நேசிக்கின்ற குழந்தைகளின் காலம் தாய்மண் இது ?
6வயதில் வந்தால்தான் புரியும் 10வயதில் வந்தால்மதான் வரும் என்றெல்லாம் என்ன வாதம் தாய்மண் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:::: . ( - )::::
Reply
ASWINI2005 Wrote:குருவிகளின் வாதம் சரியானதே. ஆயினும் குருவிகளின் யதார்த்த சிந்தனை இளைஞனாகிய தாய்மண்ணின் சிந்தனை வாய்க்காலுக்குத் தடையாக எண்ணுவது தவறானது தாய் மண்.

ஒரு விடுதலைப்போராட்டம் வெற்றிபெற விடுதலைக்கனவு மட்டும் விடுதலையைப் பெற்றுத்தராது. குறிப்பிட்ட சிலரது கட்டிடம் கட்டிக்கொடுப்பதாலோ , அல்லது குறிப்பிட்ட சில உதவிகள் மட்டும் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் வலுவைத் தராது.

ஆனால் தாய்மண் போன்ற இளையவர்களின் இத்தகைய சிந்தனைகளை; வரவேற்கப்பட வேண்டும் குருவித்தாத்தா.

குழந்தைகளின் கனவுகள் , கற்பனைகளை முளையில் கிள்ளியெறிவதை முதலில் பழசுகளாகிய நீங்கள் (யதார்த்தவாதிகள்) தவிர்த்துக் கொள்ளுங்கள்.

18வயது இளைஞனுக்கும் , 35வயது உங்கள் போன்ற ஆண்மகனுக்கும் வித்தியாசம் இருக்கிறது குருவிகாள்.

சிறுவர்கள் , .இளைஞர்கள் ,யுவதிகள் என்றால் எங்கள் கிடுகுவேலிக்கனவுகள் எங்களுக்குள் வருகிறது. கிடுவேலியை விட்டு நவீன யுகத்தையும் கொஞ்சம் சிந்திப்போமா ?

'ஆடுவோமே பள்ளுபாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று" இப்பாடலைப் பாரதி பாடியபோது பாரதம் விடுதலை பெறாமலே இருந்தது. ஆனாலஇ பாரதி விடுதலைபெற்றதாய் கனவுகண்டான். அதற்காக பாரதியின் கனவுதான் பாரதத்தின் விடுதலையைப் பெற்றுக்கொடுத்தது என்று வெட்டிக்கதை பேசவரவில்லை.

இளையோரின் சிந்தனைகளுக்கு வடிகாலமைத்துக் கொடுப்பது பழையோர்களின் கடமை. குருவிகளே உங்களுக்கும்தான்.

இளைஞர்களின் சிந்தனை என்பது மலை உச்சியில் ஆரம்பிக்கும் ஆற்றின் ஊற்றுப் போன்றது... அது தெளிவானதாய் சரியான பாதையில் ஓடினால் தான் பேராறாகும்...இல்ல கிளை ஆறுகளாகி சிற்றாறாகி சீரழிய வேண்டியதுதான்.... சிந்தனைகள் தோன்றும் வேளையில் அதை திசைப்படுத்த அல்லது தானே தன் சிந்தனைகளை தர்க்கித்து திசைப்படுத்த இளைஞனுக்கு தெரிந்திருக்க வேண்டும்...நியாயங்கள் அநியாயங்கள் சாத்தியங்கள் அசாத்தியங்கள் சூழ்நிலைகள் சந்தர்ப்பங்கள் என்று தன்னை நோக்கி வரும் ஒவ்வொன்றையும் பற்றி தன்னால் இயன்ற மட்டில் பகுத்தாயும் திறனைக் கொண்ட இளைஞன் மட்டும் சிந்தனைகளால் சீரான வழியில் வழிப்படுத்தப்படுவான்....! எல்லாவற்றிற்கும் மேலாக இளைஞன் ஆன ஒருவனுக்கு இலட்சியம் என்ற ஒன்று இருக்க வேண்டும்...ஆற்றுக்கு இலக்கு பள்ளத்தில் இருக்கும் கடல் போல... இளைஞனுக்கும் இலச்சியம் இருக்க வேண்டும்...அது உயர்ந்ததாய் அவனுக்கும் சமூகத்துக்கும் பயனுள்ளதாய் அமைய வழி காட்ட வேண்டியது சமூகத்தின் கடமை...அதனால்தான் நாம்... நாம் தரிசித்த யதார்த்தத்தைச் சொல்கின்றோம்...அதில் தேவையானதை ஆராய்ந்து பெற வேண்டியதைப் பெறுவது அந்த இளைஞனின் கடமை....!

முக்கிய குறிப்பு ... குருவிகளுக்கு நீங்கள் குறிப்பிட்ட வயதில்லை....அதை அடைய இன்னும் காலம் இருக்கு....! அதுபோக குருவிகள் நாங்கள் கிடுகு வேலியும் பாத்திருக்கிறம்..முட்கம்பி வேலியும் பாத்திருக்கிறம்..சுத்து மதிலும் பாத்திருக்கிறம்.. சுத்த பனிக்கட்டியும் பாத்திருக்கிறம்..இன்னும் பார்க்காமலும் பலது இருக்கு...! :wink:

<b>அனுபவங்கள் அவையா வரும் வரை காத்திருந்தால் வயதாகும் நாமே தேடிப்போனால் அவை விரைந்து கிடைக்கும்...!</b> - இது குருவிகள் பொலிசி:wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
நான் 6 வயது பற்றி சொன்னதுக்கு காரணம் குருவிகள் எங்களை வெளிநாடு தப்பியொடியவா்கள் என்று விளக்கினாா். 6 வயதில் நாங்கள் இங்கு வரும் பொழுது எங்களிற்கு இந்த நாட்டு நடப்பும் தெரியாது குருவிகளே. விளங்குதா?
Reply
குருவிகளே இப்பொழுது உங்களுடைய உண்மையான நிலை இங்கு உள்ளவா்களிற்கு விளங்கியிக்கும்! நீங்கள் எழுதியவற்றை ஆரம்பத்திலிருந்து பாா்த்தால் விளங்கும். நாங்கள் மைதானம் கட்டுகிறோம் என்று சொல்ல விருப்பப்படவில்லை. நீங்கள் தான் நாங்கள் இங்கு என் கிளிக்கின்றோம் என்ற கருத்தை கொண்டுவந்தீா்கள். அதற்காகத் தான் நான் இதை சொன்னேன். நீங்கள் என் செய்கிறீா்கள் என்று ஏன் சொல்ல மாட்டீா்கள்? சொல்வதற்கு நீங்கள் ஒன்றும் செய்யவில்லையா??
Reply
குருவிகளே நீங்கள் யதாா்த்தத்தை சொல்கிறீா்களா?
தமிழீழம் கிடைக்காது என்ற உங்கள் கருத்து யதாா்த்தமா???
குருவிகளே தமிழீழம் இன்னும் கிடைக்கவில்லை. அப்படியொன்று இருக்கின்றது. ஆனால் கடவுள் என்ற ஒன்று இருக்கின்றது என்று நீங்கள் நிருபியுங்களேன்.
இங்கே வாழ்கிறவா்கள் தாயகத்தில் உள்ள கோயில்களிற்கு உதவி செய்கிறாா்கள் என்று என்னுடன் முரண் படுகிறீா்கள். ஏன் நீங்கள் உங்க கோயில் நடத்துகிறவங்களுக்கு அதை சொல்றீங்கள் இல்லை. உங்க வாங்க மாட்டம் என்டு கோயில்கள் சொன்ன இங்க எப்படியய்யா குடுப்பாங்க?
Reply
thaiman.ch Wrote:குருவிகளே இப்பொழுது உங்களுடைய உண்மையான நிலை இங்கு உள்ளவா்களிற்கு விளங்கியிக்கும்! நீங்கள் எழுதியவற்றை ஆரம்பத்திலிருந்து பாா்த்தால் விளங்கும். நாங்கள் மைதானம் கட்டுகிறோம் என்று சொல்ல விருப்பப்படவில்லை. நீங்கள் தான் நாங்கள் இங்கு என் கிளிக்கின்றோம் என்ற கருத்தை கொண்டுவந்தீா்கள். அதற்காகத் தான் நான் இதை சொன்னேன். நீங்கள் என் செய்கிறீா்கள் என்று ஏன் சொல்ல மாட்டீா்கள்? சொல்வதற்கு நீங்கள் ஒன்றும் செய்யவில்லையா??

தம்பி உப்படியான உணர்ச்சி வசப்படுத்தல்கள் நாங்களும் செய்தவைதான்...அப்ப உங்கட விடச் சின்னனா இருக்கேக்க... இப்ப எங்களுக்கே விளங்கிட்டுது..உணர்ச்சி வசப்படுவதாலோ... இல்ல தம்பட்டம் அடிப்பதாலோ சமூகத்துக்கும் எமக்கும் எதுவும் ஆகப் போவதில்லை.. செய்ய நினைப்பதை அமைதியாகச் செய்து அது நாலு பேருக்கு நன்மை அளித்தா அதில் வார மனத்திருப்தி போதும்... நீங்கள் 6 வயதில் நாட்டுக்கு வந்தீர்கள் நாங்கள் 1 வயதில் காட்டுக்குப் போனோம்...எங்கே அவஸ்தையும் அனுபவமும் அதிகம் கிடைத்திருக்கும் என்று உணருங்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
மன்னிக்க வேண்டும் குருவிகளே நீங்கள் என்னை தயவு செய்து தம்பி என்று சொல்லவதை நிறுத்தவும். என் நாட்டை எவன் இளிவு செய்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்று தாயகத்தில் வாழ்கின்ற நீங்களே கிடைக்காத தமிழீழத்திற்கு என்று எழுதினீா்களோ அப்பொழுது நான் உங்களை விளங்கிக் கொண்டேன்.
சரி நீங்கள் ஒரு வயதில் காட்டுக்குப் போனீா்கள். இப்பொழுதும் காட்டிலா இருக்கிறீா்கள்?
Reply
thaiman.ch Wrote:குருவிகளே நீங்கள் யதாா்த்தத்தை சொல்கிறீா்களா?
தமிழீழம் கிடைக்காது என்ற உங்கள் கருத்து யதாா்த்தமா???
குருவிகளே தமிழீழம் இன்னும் கிடைக்கவில்லை. அப்படியொன்று இருக்கின்றது. ஆனால் கடவுள் என்ற ஒன்று இருக்கின்றது என்று நீங்கள் நிருபியுங்களேன்.
இங்கே வாழ்கிறவா்கள் தாயகத்தில் உள்ள கோயில்களிற்கு உதவி செய்கிறாா்கள் என்று என்னுடன் முரண் படுகிறீா்கள். ஏன் நீங்கள் உங்க கோயில் நடத்துகிறவங்களுக்கு அதை சொல்றீங்கள் இல்லை. உங்க வாங்க மாட்டம் என்டு கோயில்கள் சொன்ன இங்க எப்படியய்யா குடுப்பாங்க?

முதலில் எழுதுறத ஒழுங்கா வாசிக்க தமிழ் தெரியுமா...இல்ல விடிய விடிய இராமாயணம் சொல்லியும் விடிஞ்சு இராமர் சீதைக்கு என்ன முறை என்று கேக்க சித்தி எண்டது போல...இருக்கிற உங்கட கதைக்கு கதை எழுதிறது தப்புப் போலத் தெரியுது...!

தமிழீழம் எங்களுக்கும் தெரியும்... எழுத்தில.... நிஜத்தில எட்ட இன்னும் பலத எட்ட வேணும் அதுக்கு புலம் தாயகம் எண்ட பிரிவு தேவையில்ல எல்லோரும் ஒரே மக்களாய் ஒற்றுமையோட ஒன்றாக ஒரே இலச்சியத்திற்காய் உழைக்க வேண்டும்...அப்பதான் அது சாத்தியம்... நான் காசு கொடுப்பம் களத்துக்குப் போமாட்டன் என்றோ..நான் காட்டிக் கொடுப்பேன் தமிழீழம் தேவையில்லை என்றோ..நான் களம் போவேன் காசு பெறமாட்டேன் என்றோ நான் அகிம்சா மூர்த்தி ஆயுதம் தொடேன் என்றோ நான் ஆயுதம் தான் தூக்குவன் அரசியல் பேசேன் என்றோ இருந்தால்...உங்கள் எங்கள் தமிழீழம் கனவுதான்....!

உங்களுக்கு கடவுள் சிலையாகத் தெரியலாம் இல்ல தெரியாமல் விடலாம் எங்களுக்கு அம்மா அப்பா சகோதரங்கள்...நல்ல மனிதர்கள்.. நல்ல உயிரினங்கள் இவையாவும் கடவுளாத் தெரியுது...அது எங்கள் சுய சிந்தனைக்குரியது...சுய விருப்பமும் கூட....!

நீங்கள் கொடுக்க அவர்கள் வாங்க... அவர்கள் கொடுக்க நீங்க வாங்க...ஏதோ வியாபாரம் நடந்தால் சரி... உதில சொல்லுறத்துக்கும் ஒன்றுமில்ல...சொல்லிப் பிரயோசனமும் இல்ல....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
குருவிகளே நீங்கள் நாங்கள் பிறக்க முதலே வெள்ளைக்காரணுக்கு...... என்ற ஒரு விவாதம் முன் வைத்தீர்கள் நினைவிருக்கிறதா?? இதில் நீங்கள் என்று யாரை சொல்கிறீர்கள்??? தமிழர்களையா?? அப்படியென்றால் உங்களுடைய முன்னோர்கள் தமிழர்களில்லையா? நீங்கள் தமிழர்களில்லையா? இப்பொழுது தெரிகிறதா யாரிடம் ஒற்றுமையில்லை என்று. நாங்கள் என்று சொல்லுங்கள்.
Reply
குருவிளே நீங்கள் தமிழீழம் பற்றி எழுதியதை நீங்கள் மழுப்பலாம். இதை வாசிக்கும் நேயா்களிற்கு விளங்கும். அதென்ன குருவிகளே நீங்கள் நாங்கள்??? இப்பொழுதும் நீங்கள் தான் பிரித்துப்பாா்க்கிறீா்கள். நாங்கள் என்று சொல்லப் பழகுங்கள்.
Reply
எனது கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லையே. நீங்கள் இப்பொழுதும் காட்டில் தான் இருக்கிறீா்களா?
Reply
thaiman.ch Wrote:மன்னிக்க வேண்டும் குருவிகளே நீங்கள் என்னை தயவு செய்து தம்பி என்று சொல்லவதை நிறுத்தவும். என் நாட்டை எவன் இளிவு செய்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்று தாயகத்தில் வாழ்கின்ற நீங்களே கிடைக்காத தமிழீழத்திற்கு என்று எழுதினீா்களோ அப்பொழுது நான் உங்களை விளங்கிக் கொண்டேன்.
சரி நீங்கள் ஒரு வயதில் காட்டுக்குப் போனீா்கள். இப்பொழுதும் காட்டிலா இருக்கிறீா்கள்?

சரி மிஸ்டர் தாய் மண்... தாய் மண்ணில் தன் அனுபவத்தை எழுதும் சகோதரனின் கதை கேட்க திராணியில்லாத நீங்கள் தமிழீழம் பெற்றுத் தருவீர்கள் என்று எண்ண நாம் என்ன வேடிக்கை மனிதரோ... ஒருவேளை வெள்ளைக்காரன் கேட்டிருப்பான் உனக்கு எது நாடென்று சொல்லேலாம முழிச்சிருப்பியள்...அதுதான் தமிழீழ தாகம் இப்ப பிறந்திருக்குப் போல...அப்படியே இன்னும் கொஞ்சக் காலம் போக வெள்ளைக்காட கேள் பிரண்ட வர...தமிழீழமா...அது நடக்குமா...ஐ ஆம் சுவிஸ் சிற்றிசன் வாடி நாம் நடப்போம் பப்புக்கு எண்டுவியள்...இதுவும் எங்களுக்குத் தெரியும்...உங்களை நம்பி எங்கள் தமிழீழக் கனவு கலையாது.... அதற்கு விலை கொடுத்த எங்களுக்குத் தெரியும்.... அதன் பெறுமதி....! சும்மா கதையளக்காதீர்கள்... யாராவது கேட்பார் இருந்தா அளவுங்கள் உங்கள் கதை...கேட்டு கைதட்டிப் போவர்... தமிழீழம் நாளை பிறக்கும் என்றும் வாழ்த்திவிட்டும் போவர்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
கிடைக்காத ஒன்றைப்பற்றி பேசுகிறேன் என்று நீங்கள் சொன்னது போல் தெரிகிறது??? இப்பொழுது எங்கிருந்து உங்களிற்கு தமிழீழ ஞானம் பிறந்தது?? ஒ உங்களிற்கு கடவுள் வந்து ஞானம் தந்தாரா? கேட்டுச் சொல்லுங்க ஒரு கிலோ ஞானம் என்ன விலை என்டு. உங்கள மாதிரி இங்கயும் கொஞ்சப் போ் இருக்கினம்.
Reply
thaiman.ch Wrote:எனது கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லையே. நீங்கள் இப்பொழுதும் காட்டில் தான் இருக்கிறீா்களா?

இப்ப காட்டில் இல்ல மாந்தோப்பில்..வதிவிடம் போட்டிருக்குப் பார்க்கவில்லையோ...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
எனக்கு இப்பவும் இங்க சிற்றிசன் தான். சிற்றிசன் வச்சிருக்கிறவன் எல்லாம் உங்களுக்கு தமிழன் இல்லை?? நல்லா இருக்கே உங்கட கதை.
Reply
நீங்க இப்ப என்டாலும் அகதி இல்லாமல் உங்கட மாந்தோப்பில வாழுறீங்கள். நாங்கள் இப்பவும் அகதியள் தான். இப்ப சொல்லுங்க யாருக்கு வலி அதிகம்???
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)