Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவல நிலை
#1
அவல நிலை
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வாகரை மதுரங்கேணிக்குள மக்களுக்கு எதுவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்ப்படவில்லை, பொதுமக்கள் கவலை.

வாழைச்சேனையிலிருந்து சுமார் 35 கிலோமிற்றருக்கு அப்பால் வாகரை பிரதேச செயலகப்பிரிவில் மதுரங்கேணிக்குளக் கிராமம் உள்ளது. 152 குடும்பத்தினர் வாழுகின்ற மேற்படி கிராமத்தில் மக்களுக்குரிய அடிப்படைவசதிகள் எதுவும் இன்றி வாழ வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் உள்ள இக்கிராம மக்களை நாம் நேரடியாகச் சென்று வினாவியபோது. எதுவித கடைகளும் அற்ற இக்கிராம மக்கள் பொருட்கள் பெற வேண்டுமானால் 35 கிலோமீற்றர் அளவில் நடந்து வந்தே வாழைச்சேனையில் பொருட்கள் பெறவேண்டும். போக்குவரத்து செய்வதற்குரிய வாகன வசதிகள் எதுவுமில்லை இங்கு வாழுகின்ற 152 குடும்பத்தில் இரண்டு பேரிடம் மாத்திரமே துவிச்சக்கரவண்டி உள்ளது. அனேகமாக இக்கிராமத்திலுள்ள மக்கள் ஏதாவது அவர்களுக்கு தேவையான பொருட்கள் பெறவேண்டுமாயின் போக்கு வரத்திற்குரிய சம்பளம் கொடுத்து துவிச்சக்கரவண்டி உள்ளவர்களிடம் அனுப்புவார்கள். இந்தளவிற்கு வாழ்க்கையின் அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு கடந்த 2000ம் ஆண்டில் வாகரை போக்குவரத்துச்சபை உபசாலையினால் மேற்படி கிராமத்திற்கு பஸ் சேவை போடப்பட்டது. ஆனால் போடப்பட்ட பஸ் சேவை ஒரு மாதத்தின் பின்பு இடைநிறுத்தப்பட்டது. பின்பு அதிகாரிகளிடம் அவித்தும் எதுவித பலனுமில்லையென இம்மக்கள் தெரிவித்தார்கள்.

அத்துடன் இக்கிராமத்தில் எந்தவிதமான ஒரு வீட்டுத்திட்டமும் இதுவரையில் வழங்கப்படவில்லை. இவர்களுடைய வாழ்விடங்களைப் பார்க்கும் போது உண்மையில் இவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் தெளிவாகப் புலப்படுகின்றது. இது தொடர்பாக இக்கிராமத்தின் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் க.இராசமாணிக்கம் அவர்களிடம் கேட்ட போது, இங்கு அனைவருமே வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள்தான் 152 குடும்பத்தில் 128 குடும்பத்திற்கு சமூர்த்தி நிவாரணமுத்திரை வழங்கப்படுகின்றது என்றும் இம்மக்கள் யுத்தசூழ்நிலையில் நன்கு பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இராணுவத்தினால் சுடப்பட்டவர்கள் 15 பேரும், இராணுவத்தின் திட்டமிட்ட கொலையினால் 13 விதவைகளும், தாய், தந்தை இல்லாமல் மூன்று சிறுவர்கள் அனாதையாகவும் முற்றுமுழுதாக இயங்க முடியாமல் அங்கவீனமுற்று இராணு வெடியினால் மூன்று பேர் இருப்பதாகவும் மேற்படி கிராமம் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை நாம் இக்கிராமத்திலுள்ள பாடசாலையான அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் எஸ்.சுகுமார் அவர்களிடம் கேட்டோம். உண்மையில் பாடசாலை மாணவர்களின் நிலைமை மனவேதனையளித்தது. உதாரணமாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும் போது மயக்கமடைவதாகவும் இது தொடர்பாக ஆராய்த வேளை மாணவர்கள் காலை உணவின்றி வீட்டில் உள்ள வறுமைநிலை காரணமாகவே மாணவர்கள் பெரும் பாலனோர் வருவதாகவும் தெரிவித்த அதிபர் பாடசாலையின் குறைபாடுகள் தொடர்பாக தெரிவிக்கையில்:- பத்து வருடகாலமாக நாற்காலி இல்லாமல் மாணவர்கள் தரையிலே இருந்துவருகின்றனர். சுமார் 136 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் 9ம் தரம் வரை வகுப்புக்கள் உள்ளது என்றும், ஐந்து நிரந்தர ஆசிரியர்கள் உள்ளார்கள் எனவும், 11 ஆசிரியர்கள் இப்பாடசாலைக்கு தேவையெனவும் கட்டடவசதி மிகமிகக் குறைவாகவும், ஐந்து வகுப்புக்கள் நடாத்த கட்டடவசதி தேவையாக உள்ளதாகவும் தெரிவித்த அதிபர்.

மாணவர்களுக்கான சலகூட வசதி இல்லாததால் பெண்மாணவிகள் வகுப்பு நடைபெறும் வேளையில் சலம் கழிப்பதற்காக தங்களது வீடுகளுக்குச் சென்றே சலம் கழித்து மீண்டும் வகுப்புக்கு வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது வாகன வசதிகள் இல்லாத காரணத்தினால் ஆசிரியர்கள் தங்கி நின்றே வகுப்பு நடாத்துகின்றனர். இருந்தும் ஆசிரியர்களுக்கான தங்குமிட வசதி இல்லாமல் மாணவர்கள் கல்விகற்கும் வகுப்பறைகளில் தங்குவதைக் காணமுடிகின்றது. இதேவேளை விளையாட்டு மைதானம், விளையாட்டு உபகரணம், பாடசாலைத் தளபாட வசதிகள் இப்பாடசாலையில் பெரும் குறையாகவும் அத்துடன் கட்டட வசதி இல்லாமையினால் மரநிழல்களில் வகுப்புக்கள் நடாத்தவேண்டிய நிலையும் இருக்கின்றது. இவற்றுடன் இங்கே விசேடமாக மாணவர்கள் குண்டெறிதல் விளையாட்டு நிகழ்ச்சிக்கு கருங்கல்லைக் கொண்டு குண்டெறிவதையும், உயரம் பாய்தல் நிகழ்வுக்கு கம்புகளையும் பயன்படுத்தி உயரம் பாய்வதையும் காணமுடிந்தது. இருந்தும் இம்மாணவர்கள் வாகரைப்பிரதேச மட்டத்தில் விளையாட்டு நிகழ்வில் விசேட பெறுபேறுகளை பெற்று வருகிறார்கள்.

இது இவ்வாறிருக்க மாணவர்களுக்கான கட்டாய போசாக்கு வழங்கும் திட்டம் இப்பாடசாலையில் தேவையெனவும் தெரிவத்த அதிபர் ஆசிரியர்களுக்கான கஸ்டப்பிரதேசக் கொடுப்பனவும் இங்கு வழங்கப்படுவதில்லையெனவும் தெரிவித்தார்.
Reply
#2
வாழ்வின் அடிப்படை வசதிகளை வளர்த்துக்கொண்டவர்களாகத் தம்மை வளர்த்துக்கொண்டு அவற்றைத் தக்கவைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் சீரழிக்கப்பட்ட தமிழர் தாயகமான வட- கிழக்கின் பிரதேசம் தற்போது புனர்வாழ்வு புனரமைப்பு பணிகளினை எதிர்கொண்டு நிற்கின்றது.
யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படா விட்டாலும் ஓர் தற்காலிக நிறுத்தத்திற்கும், சாத்தியமான அரசியல் சுயாதிபத்திய தேடலுக்குமான காலமாகவே தற்போதைய காலத்தினைக் கொள்ள வேண்டியுள்ளது.
பேச்சுவார்த்தையின் கால நீட்டல்களின் போது மக்களின் வாழ்க்கையினை இயல்பு நிலைக்கு கொண்டுவந்து துன்பச் சுமைகளின் அழுத்தத்தினைக் குறைப்பதற்கான உடனடி முன் முயற்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது எடுக்கப்படும் உடனடி மனிதாபிமான மற்றும் புனர்வாழ்வுத் தேவைகளினை நிறைவு செய்யும் செயற்பாடானது ஓர் தற்குறியாக இல்லாமல் எதிர்காலத்தின் தொடக்கப் புள்ளியாக அமைய வேண்டியது அவசியமாகும்.
அத்தகைய அரசியல் தன்னாதிக்கம் மிக்க சமூகத்தின் எதிர்காலத்திற்கான ஆரம்ப நிலைக்களமாக கொள்ள வேண்டிய மீள்குடியமர்வு, புனர்வாழ்வு, அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது பலவிதமான நடைமுறைச்சவால்களினை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு சமூகம் உள்ளாகியுள்ளது.
அச் சவால்களினை எவ வாறு எதிர் கொள்வது என்பதுதான், தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய உறுதியான நம்பிக்கையினை உலக சமூகத்தின் மத்தியிலும், போராட்டத்திற்கான தங்களின் நலன்களினை இழந்துபோன மக்கள் மத்தியிலும் கட்டியெழுப்பும் முக்கிய காரணியாக அமையும்.
ரூஙூஸசூசி;
சமூகத்தின் தேவையினை உணர்ந்துகொள்ளல்
சுமார் கால்நூற்றாண்டுக்குமுன் விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலைக்கு மீளவும் செல்லல் அல்லது இடிந்து போனவற்றினை மீளக்கட்டியெழுப்புதல் தான் குறிக்கோளாக இருக்க முடியாது.
இவ இருபத்தைந்து வருடகாலத்தில் தமிழர் தாயகமும் வாழ்வியலும் கீழ் நோக்கி வீழ்த்தப்பட்ட அதே வேளையில், இத்தீவின் ஏனைய பகுதிகள் தம்மை சாதகமான அபிவிருத்திப் பாதையில் வளர்த்துக் கொண்டன, அல்லாது விரைவான அபிவிருத்திக்கான தளத்தினை இழக்காமல் தக்கவைத்துக் கொண்டன என்பதே உண்மையாகும்.
அத்துடன் அவை எதிர்வரும் காலங்களில் தம்மை எத்தகைய இலக்கு நோக்கி கொண்டு செல்லல் வேண்டும் என்பதில் தெளிவாக செயற்படுகின்றன என்பது உறுதியாகவும் உள்ளது.
இத்தகைய பின்னணில் தமிழர் தாயகத்தின் வளர்ச்சிக்கோடு எதிர் மறையான திசையினுள் அமிழ்ந்து கிடப்பதோடு, வடக்கு கிழக்கிற்கு தென்மேற்கு பகுதிக்குமான அபிவிருத்திக் குறிகாட்டியின் இடைவெளி மிகப்பெரிதாக உள்ளது. இத்தகைய இடைவெளியை நிரப்புதல் என்பது மிகவும் சிறப்பாகத் தெரிந்தெடுக்கப்பட்ட அபிவிருத்தி சார்ந்த புனரமைப்பு முன்னெடுக்க முடியும்.
நிலையாக இருக்கும் இலக்கிற்கும் அதனை நோக்கி நகரும் இலக்கிற்கும் இடையிலான வெளியினைக் குறைப்பதற்காக எடுக்கப்படும் முயற்சியினை விட, முன்நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இலக்கினை அடைவதற்காக முன்னிருந்து முன்நோக்கி நகர்தல் என்பது அதிக முயற்சியும், உறுதியானதாகத்தங்கியுள்ளது.
எதிர்வரும் பத்தாண்டுகளில் தென்னாசியாவின் முன்னணி நாடாக மாறும் இலக்குடன் இலங்கைத்தீவின் தென்மேற்குப் பகுதிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கும்போது யுத்த வடுக்களினால் நிரம்பியுள்ள வடக்கு- கிழக்கு சமூக பொருளாதாரம் வரையறுக்கப்பட்ட அக்கால எல்லைக்குள் தன்னை தென்மேற்கிற்கு சமனானதாகக் கொண்டு வரத்தவறின், அது மீண்டும் வளங்களுக்காகவும் வாய்ப்புகளுக்காகவும் போராடுதல் என்கின்ற நச்சு வட்டத்தினை உருவாக்குவதாகவே அமையும்.
இதனைத் தவிர்க்க வேண்டுமானால் வடக்குக் கிழக்கு தமிழர் தாயகம் தன்னை எவ வாறு ஒருமுகமாக விடுதலைப்போரில் ஈடுபடுத்தியதோ அதைவிட பன்மடங்கு உத்வேகத்துடனும், ஒருங்கிணைப்புடனும் அபிவிருத்தி நோக்கிய வெறியுடனும் ஈடுபட வேண்டியுள்ளது.
இது உலகத்திற்கு எவ விதத்திலும் புதுமையாக இருக்க முடியாது. 2ம் உலக மகாயுத்தத்தின் தோல்வியின் பின்னர் எவ வாறு யப்பானிய சமூகம் தன்னை ஒரு வேலையில் வெறிகொள்ளும் (றுழுசுமுயுர்ழுடுஐஊ) சமூகமாக மாற்றியதோ அதுபோல் வடக்கு கிழக்கில் வாழும் ஒவ வொருவரும் தம்மை மாற்ற வேண்டிய காலத்தின் தேவைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
சம்பிரதாயபுூர்வமான எட்டு மணித்தியால உழைப்பின் எல்லைக்குமப்பால் குறைந்தது 16 மணித்தியாலங்கள் குறிக்கோள் நோக்கி உழைக்கக் கூடியதாக எம்மை மாற்றக் கூடிய ஒரு மனநிலைக்கு எம்மை மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. அத்துடன் கூட்டுழைப்பின் மூலம் பெறும் மிகை விளைவு (ளுலநெசபல) பல உருவாக்கப்படவேண்டும்.
திட்டங்கள் தயாரிக்கப்படும் போது அவை அடுத்துவரும் பல தசாப்தங்களின் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக் கூடியதாக இருக்கும்படி உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.
அத்தகைய திட்டங்களினை உருவாக்கும் போது உயர் புலமைகள், ஆற்றலினை பயன்படுத்த வேண்டி ஏற்படுவதோ அப்புலமைகள், ஆற்றல் என்பன வெறுமனே தத்துவங்களின் பிரதியீடாக இல்லாமல் பயன்பாட்டுக்கான பிரயோகங்களாக இருக்க வேண்டும்.
இத்தகைய ஓர் நிலை தமிழர் தாயகத்தின் நலனிலும் அக்கறையிலும் ஈடுபடும் ஆர்வம் கொண்ட எல்லோரினையும் உள்வாங்குவதாகவும், அதேவேளை எல்லோரும் மற்றவர்களின் அழைப்புக்காகக் காத்திராமல் தாங்களாகவே தங்களினை ஈடுபடுத்த முன் வருதலிலுமே தங்கியுள்ளது.


மக்களின் புனர்வாழ்வும் சமூகக் கட்டமைப்பும்
யுத்தம் பௌதிக சொத்துக்களுக்கு ஏற்படுத்திய சேதம் அளவிடக்கூடியதாகவும், திட்டமிட்டு மீளப்பெறக்கூடியதாகவும் உள்ளது. ஆனால் மக்களின் உடல் உளவியல் நிலைகளில் ஏற்படுத்திய தாக்கமும், சமூகக்கட்டமைப்பில் ஏற்படுத்திய தாக்கமும் அளவிடும் எல்லைகளுக்கு அப்பாற்பட்டதாகவும், இலகுவில் கணித வாய்ப்பாடுகள் போல் கணிப்பிட்டுத் தீர்வு செய்ய முடியாதவைகளாகவும் உள்ளன.
மரபுகளும், பண்புகளும் நிறைந்த சமூகத்தின் இறுக்கமான பாதுகாப்பு வலையமைப்பினுள் (ளுழுஊஐயுடு Nநுவு) வாழ்ந்து கொண்டிருந்த சமூகம் யுத்த இடப் பெயர்வினால் சிதறடிக்கப்பட்ட போது சமூக பாதுகாப்பு வலையமைப்பு முற்றாக அறுக்கப்பட்டது. தனது அயலான் யார் என்பது மட்டுமல்ல. தனது அருகில் உறங்குபவனை அறியாத அளவுக்கு இடப்பெயர்வு மக்களை உதிரிகளாகவும், முகமற்றவர்களாகவும் ஆக்கியது.
இத்தகைய நிலை இலகுவில் தவறிழைக்கக்கூடிய பலவீனமான சமூகப்படையினை வளர்த்தெடுத்துள்ளது. இத்தகைய பலவிதமான சமூகப்படையில் மக்கள் எவ விதத்திலும் இணைப்புக் கொண்டிராதபடியினால் அவர்கள் முகமறியாதவர்கள் மட்டுமல்ல, முகமறிந்தவர்களினாலும் வன்முறைக்கும் சுரண்டல்களுக்கும் ஆளாகின றனர். குடும்பங்களின் உறவுகளின் இறுக்கங்கள் தளர்ந்த போது இலகுவில் பாதிப்புக்குள்ளாக்கப்படக்கூடிய குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள் என்ற புதிய தொகுதியினர் சமூகத்தின் சேவையினை வேண்டி நிற்கின்றனர்.
இவர்களுக்கான சமூகத்தின் பொறுப்பு மிகவும் வேண்டப்பட்டதோடு பல்வேறு சமூகநல அமைப்புக்களும் இல்லங்களும் கூட தம் ஆதரவுப்பணியினை விரிவாக்க வேண்டி ஏற்பட்டது. எனினும் ஆதரவு இல்லங்களும் சமூக நல அமைப்புக்களும் ஒரு நிரந்தர தீர்வாக இருக்க முடியாது.
எனவே மீளக்குடியமர்வின் போதும் புனர்வாழ்வின் போதும், மீளவும் சமூகப்பாதுகாப்பு வலை அமைப்பினை விரைவாக கட்டியெழுப்புதல் மூலம் அவ வலையமைப்புப் பின்னல்களுக்கிடையில் இந்நலிவுற்றவுர்கள், விசேட தேவைகளுக்கு உட்படுத்தபட்டவர்களாகவும் இணைத்து விடுதலே யதார்த்தமானதும் நீடித்த ஓர் பயன்பாட்டு முறையும் ஆகும்.


கட்டுமான அபிவிருத்தியும் வளப்பங்கீடும்
ஒரு சில எண்ணிக்கை தவிர்ந்த ஏனைய எல்லா வீடுகளும் முற்றாகவோ பகுதியாகவோ சேதமாகிய நிலையில் மீள்குடியமர்வு என்பது ஒவ வோர் குடும்பத்திலும் அதியுயர் முன்னுரிமையாக உள்ளது.
ஏக காலத்தில் எல்லா வீடுகளும் மீள்குடியமர்வுகளுக்கு தயார்ப்படுத்தபட வேண்டுமெனில் அதற்கான நிதிவளத்தினை நன்கொடையாளனிடம் இன்று பெற்றுக் கொள்வதாக இருந்தாலும் கூட புனரமைப்பிற்கான மூலப் பொருட்கள் தேடுதல் என்பது மற்றுமொரு பாரிய சவாலாக உள்ளது.
குடா நாட்டில் நீர்வளமும் மண் வளமும், விவசாய இரசாயனங்களும் யுத்த கருவிகளின் இரசாயனத்திலும் நிரப்பப்பட்டுள்ள நிலையில் மக்களின் குடிநீர் மற்றும் உணவுத் தேவைக்கான நீரின் தரம் என்பது எதிர்பார்க்கப்படும் நிலையிலும் மோசமாக உள்ளது. இந்நிலையில் கட்டுமானப் பணிக்கான மணல் அகழுதல் என்பது பாரிய சூழலியல் பிரச்ச}னையாகக் காட்டப்படுகின்றது. எனவே எதிர்கொள்ளும் பெருமளவிலான கட்டுமானப் பணிகள் என்பது மூலப் பொருட்களுக்காக அதியுயர் விலைகொடுத்தல் என்ற புதிய நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.
அத்துடன் 99 வீதமான பாதிக்கப்பட்ட வீடுகள் கூரைகளில் பாரிய சேதத்தினைக் கொண்டுள்ளதோடு அவற்றின் பாரம்பரிய கட்டடக் கலையமைப்பு பெருமளவு பனைமரங்களைக் கேள்வியாகவும் கொண்டுள்ளது.
இவற்றுக்கு மேலாக குண்டு வீச்சு, பீரங்கித் தாக்குதல் ஆகியவற்றினால் தாக்கப்பட்டுள்ள கட்டுமான அமைப்புக்களின் கட்டமைப்புப் பெரும் தளர்ச்சி கொண்டதாகவும், விசேட தொழில் நுட்பத்திறன் கொண்ட புனரமைப்பு முறையினை வேண்டி நிற்பதாகவும் உள்ளது.
மேற் குறிப்பிட்ட விடயங்களினை நோக்கும் போது கட்டடங்கள் வீடுகளைப் புனரமைத்தல் அல்லது புதிதாக அமைப்பதற்கு முன்பு ஒவ வொரு கட்டடமும் அதன் பலங்கள், பலவீனங்கள் பற்றிய தொழில் புலமைசார் ஆய்வுக்கும் உட்படுத்தபட வேண்டியுள்ளதோடு கட்டடங்களின் நிலைமைக்கும் வலுவுக்கும் ஏற்ப பொருத்தமான வலுவுூட்டல் கட்டமைப்பினை அங்கு அறிமுகப்படுத்த வேண்டியுமுள்ளது.
சேதமடைந்த கட்டடங்களை மிகக் குறைந்த உருமாற்றத்தின் ஊடாகவும், வலுவுூட்டல் கட்டமைப்பு ஊடாகவும் மக்களின் தேவைக்கேற்ப அமைப்புக்களாக மாற்றுதல், சேதமடைந்த மூலப் பொருட்களை மீளப்பாவனைக்கு உட்படுத்தல் மூலம் மூலப் பொருட்களுக்கான கேள்வியைக் குறைத்தல் மற்றும் புதிய பொருத்தமான மாற்றுத் தொழில் நுட்பங்கள்,
இரும்பு அலுமினிய, கண்ணாடி,
நாரிழை போன்ற மாற்று மூலப் பொருட்களின் பாவனையினை கட்டட அமைப்புக்களில் சேர்த்தல் மீள் கட்டமைப்பில் மேலும் அதிகளவில் பயன்படுத்தல் என்பன இன்றைய கட்டாயத் தேவையாக உள்ளது.
மேலும் குடியமர்தலின் மீளக்கட்டமைப்பு என்பதை பல்வேறு பல்பரிமாண கோணங்களில் அணுகவேண்டியுள்ளது. அதே போன்று ஏனைய சேவைக்கட்டமைப்புகளை பொறுத்தவரை அவைகளுக்கான கட்டுமானங்கள் கூட எதிர்காலத்தின் தேவைகளுக்கான தொழில் நுட்ப அபிவிருத்தி மக்களின் வாழ்க்கையில் விஞ்ஞான தொழில்நுட்ப சாதனங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் ஆகியவற்றுக்கு ஈடுசெய்யப்பட வேண்டியுள்ளது.


மனிதவளம்
மூடப்பட்ட பொருளாதார சூழலில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் போராட்டம், உலகமயமாதல், திறந்த பொருளாதாரம், எல்லைகள் தாண்டிய முதலீடுகளின் பாய்ச்சலும் மனித வளத்தின் நகர்வும் பெருகியுள்ள சூழலில் தற்போது பிரவேசித்துள்ளது. எனினும் வடக்கு கிழக்கின் மனிதவளம் இரண்டு எல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று யுத்தமும்
யுத்த அழுத்தமும் நாட்டின் மனிதவள அபிவிருத்தியில் எதிர் மறை விளைவினையும், சிதைவினையும் ஏற்படுத்தியுள்ளது. இடப்பெயர்வும், சமூகச்சிதைவும் வாழ்விடங்களில் ஏற்பட்ட பௌதீக மாற்றங்களும் தலைமுறை தலைமுறையாக பாரம்பரிய தொழில் திறனை இளைய தலைமுறைக்கு வழங்கிவந்த தொடர் சங்கிலியில் ஓர் இடை வெளியினை ஏற்படுத்தியுள்ளது.
பௌதீக வளங்களின் அழிவு, ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனமயமாக்கப்பட்ட அமைப்புக்களின் செயற்பாட்டிலும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியதோடு சமூகத்தின் மனித வளத்தின் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களையும் மட்டுப்படுத்தியுள்ளது. அல்லது இல்லாமல் செய்துள்ளது. அவற்றிற்கும் மேலாக பாடசாலைகளின் அழிவும் இடப்பெயர்வும் பல ஆயிரக்கணக்கான பிள்ளைகளின் கல்வியில் ஓர் தொடரறு நிலையினை தோற்றுவித்ததோடு இடைவிலகல்களின் அளவினையும் அதிகரித்துள்ளது.
யுத்தம் நேரடியாக குடும்பங்களில் உறவினர்களின் இழப்பிற்கும், இயலாமைக்கும் காரணமாக இருந்ததோடு குடும்பங்களில் தங்கிவாழ வேண்டிய விசேட தேவைகள் கொண்ட தொகுதியினை உருவாக்கியுள்ளது.
மறுபக்கத்தில் கொழும்பையும் மேற்கைத்தேய நாடுகளையும் நோக்கி நகர்ந்த தமிழ் மக்கள் நவீன தொழில்நுட்பத்தின் பிரயோகத்திற்கும் புதிய அபிவிருத்திக் குறிகாட்டிகளுக்கும் ஏற்பத் தங்களுள் அறிவுத்திறனையும் வாழ்க்கை முறையையும் வளப்படுத்தியுள்ளனர். அத்துடன் உலகெங்கும் தங்கள் மூளைவளத்திறனாலும் தொழில் ஆர்வத்தினாலும் உழைக்கும் பற்றுறுதியினாலும் புலம்பெயர்ந்து தேசங்கள் எங்கும் சென்ற தமிழ் மக்களின் மனிதவளம் மிகச்சிறந்த நிலையில் உள்ளது.
இவ வாறு இரண்டு எதிர்முனைகளில் உள்ள மனிதவளத்தினை ஒருங்கிணைப்பதன் மூலம் துரிதப்படுத்தப்பட்ட மனிதவள அபிவிருத்தியை அடைய வேண்டியதும் ஓர் புதிய தேவையாக உள்ளது.
தற்போது ஆரம்பிக்கப்படவுள்ள பாரிய புனரமைப்புப் பணிகளைத் தொடர்வாதாயின் தமிழர் தாயகத்தின் பெருமளவு கட்டுமானப்பணிகளுக்கான தேர்ச்சிபெற்ற மனிதவளம் தேவையாகவுள்ளது.
அத்துடன் துரிதப்படுத்தப்பட்ட புனரமைப்பு அபிவிருத்திக்கான கட்டுமானத்துறையில் கனரக தொழில்நுட்பங்களும் பாரியளவிலான முதலீடுகளைச் செய்யக் கூடிய தனியார் துறையும் உள்வாங்கப்பட வேண்டியுள்ளது.
மீளக்குடியமர்வு என்பது வெறுமனே சொந்தக்காணிகளுக்குத் திரும்புதல் அல்லது சொந்தவீட்டினை கட்டியெழுப்புதல் என்றில்லாமல், அதற்கும் மேலாக சுயமாகத் தங்கள் குடும்பத்தினையும் அபிவிருத்தி செய்யக்கூடிய ஓர் விரிந்து செல்லக் கூடிய பொருளாதாரப்பொறி முறையினுள் மக்கள் ஒவ வொருவரினையும் பொருத்த வேண்டியுள்ளது. இதற்கு அதிகளவு முதலீடுகள், தொழில் அபிவிருத்தி முனைப்புகள், தொழில் வாய்ப்புகள் என்பன உருவாக்கப்பட வேண்டியதோடு அதற்கு ஏற்றவகையில் வடக்கு கிழக்கின் சட்டநிர்வாக கட்டமைப்பிற்குள் பொருத்தமான தளர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக நோக்கும் போது வடக்குக் கிழக்கு தமிழர் தாயகத்தின் மீளக்கட்டமைப்பு என்பது தேசம்தழுவிய ஒரு முகம் நோக்கிய தயார்ப்படுத்தலிலும் அதற்காகத் தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழ்கின்ற, பணியாற்றுகின்ற எல்லாத் தமிழ் மக்களுடைய சுயஈடுபடுத்தலிலும்தான் தங்கியுள்ளது.
தனிப்பட்ட வேறுபாடுகள், சுயபுலமைப் பெருமிதங்கள் கடந்தகால கசப்புணர்வுகள் எல்லாவற்றையும் கடந்து தாயகத்தினை கட்டி எழுப்புவதற்கான அணியில் எல்லோரும் திரண்டெழவேண்டியுள்ளது. அதன் மூலமே தாயகம் எதிர்கொள்ளும் புனரமைப்பு அபிவிருத்தி சவால்களை வெற்றி கொண்டு உலக சமுதாயம் வலிந்து தருகின்ற வளத்துடன் எமது மக்களின் வாழ்க்கையினை வளம் பெறச்செய்ய முடியும். இது ஒருவகையில் காலத்திலும் விரைவான கடின உழைப்பில் ஈடுபடவேண்டிய புனிதப்பணியாகவே அமையமுடியும்.
-இரணியன்-
Reply
#3
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவுூர் பற்று பிரதேசத்திலுள்ள மாவடிவேம்பு மத்திய மருந்தகம் அமைக்கப்பட்டு பல வருடங்களாகியும் மக்களுக்குரிய வைத்தியசேவை இங்கு நடைபெறுவதில்லை. வாரத்தில் இரண்டு நாட்களாக செவ்வாய், வியாழன் போன்ற கிழமைகளில் மாத்திரமே மேற்படி மருந்தகத்தில் வைத்தியசேவை நடைபெறுகின்றது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான சந்தனமடு, பெரியவட்டவான், மயிலவட்டவான், பாலாமடு, ஈரளக்குளம் அடங்களாக பெரும்பாலான பகுதிகளும், இவற்றுடன் வந்தாறுமூலை களுவண்கேணி, பலாச்சோலை, சித்தான்டி, மாவடிவேம்பு, மொறக்கொட்டாஞ்சேனை, உதயன்மூலை போன்ற பல பகுதி மக்கள் மேற்படி வைத்திய சீர்கேட்டினால் பாதிக்கப்படுகின்றனர்.

இது இவ்வாறிருக்க மேற்படி மருந்தகத்திற்கு நிரந்தர வைத்தியர் இதுவரையில் நியமிக்கப்படவில்லை. இதுதொடர்பாக மாவட்ட சுகாதார அதிகாரி உட்பட சுகாதார அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருடைய கவனத்திற்கும் கிராமத்தின் பல அமைப்புக்கள் அறிவித்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மேற்படி மருந்தகத்தில் நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைபெறும் விடுதி, வைத்திய விடுதி போன்றவைகள் அமைக் கப்பட்டும் இதுவரையில் சுற்று வேலி அமைக்கப்படவில்லை.

இதனால் புல்வெளிகளில் மேய வேண்டிய மாடுகள் மருந்தகத்தின் உட்பகுதியில் மேய்கின்றது. இவற்றை கண்டும் காணாதவர்கள் போல் செயற்படுவது உண்மையில் மனவேதனைக்குரிய விடயமாகும்.

இம்மாவட்டத்தின் சுகாதார நடவடிக்கைகளை அபிவிருத்திப் பாதைக்கு எடுத்துச் செல்லவேண்டிய வைத்திய அதிகாரிகள், அபிவிருத்திப் பாதையில் எடுத்துச் செல்லவேண்டிய கிழக்கு புனர்வாழ்வு அமைச்சு தமிழர் தாயகப் பகுதிகளில் அபிவிருத்திக்காக மௌனம் சாதிப்பது தமிழர்கள் மத்தியில் இனப் பாகுபாட்டை எடுத்துக் காட்டுகின்றது. இனிமேலாவது உரியவர்கள் கண் திறப்பார்களா என பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Reply
#4
LTTE activist sentenced to death

Shanmugasundaram Ragupathy alias Tilakan, an LTTE activist who was found guilty of all charges against him including launching an attack on the Elara navy camp in Karainagar, was yesterday sentenced to death by High Court Judge of Colombo Sarath Ambepitiya . The verdict was on the basis of the confession made by the convict to the police under the provisions of the Prevention of Terrorism Act after a voir dire inquiry that proved that the convict made the confession voluntarily.

Shanmugasundaram was charged with launching an attack on Elara navy camp in Karainagar along with a group of 500 persons led by the LTTE leader Anjalian between August 1, 1990 and May 29, 1991 in Karainagar area.

Winyagamurthy appeared for the convict Shanmugasundaram while State Counsel Navaratne Marasinghe appeared for the prosecution.
Reply
#5
புக்காரா நரவெறி எடுத்த சென்பீற்றஸ் தேவலய சம்பவம் இண்று நினைவுதினம்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)